என் மலர்
நீங்கள் தேடியது "நூலகம்"
- செங்கோட்டை நூலகத்தில் நடைபெற்ற கவிதை போட்டியில் 78 பேர் கலந்து கொண்டனர்.
- நகராட்சி தலைவர் ராமலட்சுமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நூலகத்தில் நூலக வார விழா நிறைவு நாளில் கவிதை போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் 78 பேர் கலந்து கொண்டனர்.
வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணை செய லாளர் செண்பக குற்றாலம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக நகராட்சி தலைவர் ராமலட்சுமி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு வாழ்த்தி பேசினார். நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.
- நூலக வார விழாவில் யோகா போட்டி இரு பிரிகளாக நடைபெற்றது.
- பள்ளி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
தென்காசி:
தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் நூலக வார விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் யோகா போட்டி ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிகளாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் தென்காசி வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
ஏற்பாடுகளை த.மு.எ.க.ச. மாவட்ட செய லாளர் பக்ருதீன் அலி அகமது, போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆறுமுகம்,யோகா பயிற்சியாளர் அரவிந்த் யோகாலயா, மருது சுபாஷ், வட்டார நூலகர் பிரம்ம நாயகம், கிளைநூலகர் சுந்தர், நூலகர்கள் ஜூலியாராஜ செல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதிஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தைஜேசு, முருகேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.
- நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
- வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.
சீர்காழி:
சீர்காழி கிளை நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய தேசிய நூலக வார நிறைவு விழா இரண்டாம் நிலை நூலகர் ஜெ.ஜோதி தலைமையில் நடைபெற்றது.
காழிகம்பன் வெங்கடேசபாரதி, ச.மு.இ.மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் எம்.தங்கவேலு, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சு.வீழிநாதன், ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் வரவேற்றார்.
தொடர்ந்து மாணவ-மாணவிகளின் நூலகம் குறித்து பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவில் நூலக பணியாளர் க.ரகு நன்றிக்கூறினார்.
- தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது.
- மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.
தென்காசி:
தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.
நகர்மன்ற உறுப்பினர் காதர் மைதீன், ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் மாரியப்பன், தென்காசி கேன்சர் சென்டர் இயக்குநர் பாரதிராஜா, நிலா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பிரபுதேவகுமார், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், வாசகர் வட்ட துணைத்தலைவர் மைதீன், ஆசிரியர் ஆறுமுகம், ஓவிய பயிற்சியாளர் ஜெயசிங், அரவிந்த் யோகாலயா பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, செங்கோட்டை நகரச்செ யலாளர் வெங்கடேஷ், கோமதி நாயகம், சமீம், இஸ்மாயில், ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, வக்கீல் கண்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.
கிளை நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.விழா ஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதீஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தை ஜேசு, முருகேசன் செய்திருந்தனர்.
- மாணவர்கள் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கை குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.
- நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
உடுமலை :
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நூலகத்தில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கிளை நூலகம் எண் 2 மகளிர் வாசகர் வட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா வழிகாட்டுதலுடன் நூலகத்திற்கு களப்பயணம் வந்தனர்.
மாணவிகள் சைக்கிளில் ஊர்வலமாக நூலகத்திற்கு வந்தனர் .நூலகத்தில் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் நூலகம் எவ்வாறு பயன்படுகிறது என நூலகர் கலாவதி விளக்கினார் .வாசிப்பின் அவசியம் குறித்தும் நூலகம் செல்வதால் ஏற்படும் வளர்ச்சி பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார். எந்த வகையான நூல்கள்நூலகத்தில் உள்ளது. மாணவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என நூலகர் மகேந்திரன், பிரமோத் அஷ்ரப் சித்திகா ஆகியோர் விளக்கினர் .மாணவர்கள் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கை குறித்தும். பல்வேறுநூல்கள்குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனர் .
இதை தொடர்ந்து நூலகத்தில் உறுப்பினராகாத மாணவிகள் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டனர் .அவர்களுக்கான உறுப்பினர் காப்பு தொகையை நூலக மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி செலுத்திஅவரும் ரூ .1000 செலுத்தி நூலகப் புரவலராகசேர்ந்தார்.தொடர்ந்து நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுடன் மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்த்தினர். பணி நிறைவு நூலகர் கணேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
- காலை 8 மணிக்கு நூலகம் திறக்கும் போது வரும் மாணவர்கள் இரவு 8 மணி வரை படித்து வருகின்றனர்.
- குரூப் 2 தேர்வில் 11 பேர் வெற்றி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
உடுமலை :
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேரகிளை நூலகம் எண் இரண்டில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் போட்டி தேர்வு நூல்களும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தியும் அவர்கள் கொண்டுவரும் நூல்களையும் மாணவர்கள் அனுதினமும் படித்து வருகின்றனர்.
இதில் அனுதினமும் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு படித்து வருகின்றனர். காலை 8 மணிக்கு நூலகம் திறக்கும் போது வரும் மாணவர்கள் இரவு 8 மணி வரை உணவு கொண்டு வந்து அங்கேயே உணவருந்தி படித்து வருகின்றனர். குரூப் 2 தேர்வில் 11 பேர் வெற்றி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் விடுமுறை நாட்களிலும் நூலகத்தை பயன்படுத்தும் வகையில் நூலகர்கள் நூலகத்தை திறந்து மாணவர்கள் நூலக போட்டித் தேர்வு அறைகளை பயன்படுத்த அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- வல்லத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
- வாலிபர்கள் நூலகங்களை பயன்படுத்தி தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள அறிவுறுத்தினார்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பேரூராட்சி அலுவல–கத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக வல்லம் பேரூராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டார். பின்னர புயல் மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைக்கு தேவையான உபகரணங்களை பார்வையிட்டார்.
இதனையடுத்து பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண–சுந்தரம், செயல் அலுவலர் பிரகந்தநாயகி மற்றும் வல்லம் பேரூராட்சியை சேர்ந்த 15 வார்டு கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வார்டு கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையானவைகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-
ஆங்கிலேயர்கள் காலத்தில் வல்லத்தில் தான் கலெக்டர் பங்களா இருந்து வந்துள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதியாகும். வல்லத்தில் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் முடிவடைந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
வார்டு கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகளின்படி சில வார்டுகளில் புதிய ரேஷன் கடை, சுடுகாடு வசதி ஏற்பாடு செய்து தரப்படும். வல்லத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய தார்சாலை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து வல்லம் அய்யனார் கோவில் பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொள்ள செல்லும் போது அங்கு வாலிபர்கள் சிலர் கைப்பந்து விளையாடி கொண்டிருந்தனர்.
கலெக்டர் வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் விளையாடுவதை நிறுத்தினர்.
இதனை பார்த்த கலெக்டர் வாலிபர்–களிடம் விளையாட்டை தொடருமாறு புன்னகைத்து விட்டு சென்றார்.
வாலிபர்கள் நூலகங்களை பயன்படுத்தி தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள அறிவுறுத்தினார்.
பின்னர் வளம் மீட்பு பூங்கா, திருவள்ளூவர் பூங்காக்களை பார்வையிட்டார்.
இதில் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் கனகராஜ், உதவி செயற்–பொறியாளர் மாதவன், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்ட கட்டிடம் நீர்க்கசிவு ஏற்பட்டு வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
- நூலகத்திற்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
உடுமலை :
உடுமலை குரல் குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிபட்டினத்தில் ஊர்புற நூலகம் செயல் பட்டு வருகிறது.இந்த நூலகத்தின் நூலக வாசகர் வட்ட ஆலோசனைக்கூட்டம் தலைவர் (பணி நிறைவு) தலைமையாசிரியர் சிவராஜ் தலைமையில் நடந்தது. உறுப்பினர்கள் தங்கவேலு, லட்சுமிபதிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மலையாண்டிபட்டினம்ஊர் புற நூலகத்திற்கு நன்கொடையாளர்கள் மூலம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்பு பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்ட கட்டிடம் நீர்க்கசிவு ஏற்பட்டு வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால் நீர்க்கசிவு அதிகமாக ஏற்பட்டு சுவற்றில் வடிந்து வாசகர்கள் கால் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தகங்களும் வீணாகிறது. கிராமப்புற நூலகமான இதனை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி மாணவர்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலகத்திற்கு 82 புரவலர்கள் உள்ளனர். தினசரி 30க்கும் மேற்பட்ட வாசகர்கள் நூல்கள் எடுக்கவும் வாசிக்கவும் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து நன்கொடையாளர்கள் மூலமாகவே பராமரிக்கப்பட்ட இக்கட்டிடத்தை நூலக ஆணை குழு மூலம் சீரமைத்து தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த நூலகத்திற்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே காம்பவுண்ட் சுவர் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- வேப்பந்தட்டை முழு நேர கிளை நூலகத்தில் வார விழா நடந்தது.
- மாவட்ட நூலக அலுவலர் சந்திரசேகரன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை முழு நேர கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. விழாவையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் புதிதாக இணைந்த நூலக புரவலர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் சந்திரசேகரன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் கூத்தரசன் வரவேற்று பேசினார். முடிவில் நூலகர் சித்ரா நன்றி கூறினார்.- உடன்குடி அரசு கிளை நூலகத்தை சுற்றி ஏராளமான காட்டு செடிகள் வளர்ந்து கிடந்தன.
- நூலகம் முழுவதும் இருந்த புல்,புதர்களை மாணவர்கள் அகற்றினர்.
உடன்குடி:
உடன்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள அரசுகிளை நூலகத்தை சுற்றி ஏராளமான காட்டு செடிகள் வளர்ந்துகிடந்தன.இதனால் நூலகத்திற்கு புத்தகம் படிக்க வரும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது.
இதையடுத்து கிறிஸ்டியா நகரம் றி.டி.றி.ஏ பள்ளி மாணவர்கள் விளையாட்டு ஆசிரியர் கிருபாகரன் மற்றும் நூலகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைமையில் கிளை நூலகம் முழுவதும் உள்ள புல், புதர்கள் அகற்றப்பட்டது. நூலகம் உள்ளேயும் வெளியேயும் அனைத்து பகுதிகளிலும் தூய்மை செய்யபட்டது. பள்ளிமாணவர்களின் செயலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டும், நன்றியையும் தெரிவித்தனர்.
- ஆலங்குடி நூலகத்தில் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்
- ஆசிரியர் சசிகுமார் கலந்து கொண்டு கதைகள் கூறி மாணவர்களுக்கு மேலும் ஆர்வமூட்டினார்
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி- கலிபுல்லா நகர் கிளை நூலகத்தில் மாணவர்களுக்கு கதை சொல்லுதல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மூலம் மாணவர்கள் மத்தியில் நூலத்தில் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலங்குடி கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் கருணாகரன் ஆசிரியர் மாணவர்களை நூலகத்திற்கு அழைத்துச் சென்று, நூலகத்தில் புதிய உறுப்பினர்களாக இணைத்தும் மாணவர்கள் மத்தியில் நூலத்தில் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். நிகழ்வில் ஆசிரியர் சசிகுமார் கலந்து கொண்டு கதைகள் கூறி மாணவர்களுக்கு மேலும் ஆர்வமூட்டினார். முடிவில் நூலகர் ரெங்கசாமி நன்றி கூறினார்.
- நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் தேசிய கொடி ஏற்றினார்.
- முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு குடியரசு தின விழா குறித்து பேசினர்.
உடுமலை :
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் 74 -வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நூலகர் மகேந்திரன் வரவேற்றார் .
நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் தேசிய கொடி ஏற்றினார். இதில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நல சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவக்குமார், நாயப்சுபேதார் நடராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு குடியரசு தின விழா குறித்து பேசினர்.
நிகழ்ச்சிகளை மகளிர் வாசகர் வட்ட தலைவர்- பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் கலாவதி ,பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.