என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேராசிரியர்"
- பேராசிரியர் ரங்கநாதன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் மாணவர்களிடம் பேசி வந்துள்ளார்.
- மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார்.
திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலை பல்கலைகழக மாணவர்களிடம் சமஸ்கிருதம் படிக்க சொல்வதாகவும், திராவிடம் குறித்து இழிவாக பேசுவதாகவும் பேராசிரியர் ரங்கநாதன் மீது மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
சுகாதார ஆய்வாளருக்கான பயிற்சி வழங்கும் பேராசிரியர் ரங்கநாதன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் மாணவர்களிடம் பேசி வந்துள்ளார் என்றும் அவர் ஒரு வாட்சப் குழுவை ஆரம்பித்து மாணவர்களை அதில் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவான பதிவுகளை பகிர்ந்து வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார். அதில் புகாரில் உண்மை இருந்ததால் பேராசிரியர் ரங்கநாதனை ஆறு மாதம் விருப்ப ஓய்வில் செல்ல துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.
- மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர்.
- குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்ட மாணவ-மாணவிகள் என பலர் படித்து வருகிறார்கள்.
இந்த கல்லூரியில் வணிகவியல் துறை தற்காலிக கவுரவ விரிவுரையாளராக பிரேம்குமார் (40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் விசாரணை நடத்தினார். மேலும் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து குழுவினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் பிரேம்குமார் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியது உண்மை என தெரிய வந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பாரதியார் பல்கலைக்கழத்தில் உள்ள அதிகாரிகளிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பாராதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து மாணவர்கள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்ன்ர் கல்லூரி முதல்வரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.
மேலும் புகார் அளிக்கப்பட்ட பேராசிரியர் பிரேம்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மாணவ-மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியதும், தரக்குறைவாக பேசியதும் தெரிய வந்தது.
இதையடுத்து பேராசிரியர் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து அவரை உயர் அதிகாரிகள் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டனர்.
- பாதிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.
- பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை:
கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் கோவில்பாளையம் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு எங்களது கல்லூரியில் சிங்காநல்லூரை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பணியில் சேர்ந்தார். அவர் தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் தவறான கண்ணோட்டத்தில் நடந்து வருகிறார். மேலும் அவர் கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியைகளின் செல்போன் எண்களை அவர்களுக்கு தெரியாமல் பெற்று இரவு நேரங்களில் ஆபாச குறுந்தகவல் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார்.
இதேபோல பேராசிரியர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களையும் வாங்கி அவர்களுக்கு இரவு நேரங்களில் ஆபாச தகவல் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் என்னிடம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். நான் அவரை நேரில் அழைத்து கண்டித்தும் அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். எனவே பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் என்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு இரவு நேரங்களில் ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வரும் பேராசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காருக்குள் பேராசிரியர் இறந்து கிடந்தார்.
- கிழக்கு போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் கொடுத்தார்.
விருதுநகர்
விருதுநகர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கண்ணன்(வயது44). இவர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தார். இவரது மனைவி சசிகலா மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கிறார். கண்ணனுக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்வத்தன்று காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றார். மனைவி 10 மணியளிவில் செல் போனில் அழைத்தபோது உடல்நிலை சரியில்லை எனவும், அதனால் விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்து கொண்டிருப்ப தாகவும் கூறி உள்ளார். மாலையில் மனைவி மற்றும் மகன் வீட்டிற்கு வந்தபோது கணவர் வீட்டில் இல்லை.
ஆனால் செட்டில் கார் நின்றுகொண்டிருந்தது. சந்தேகமடைந்த மனைவி அருகில் சென்று பார்த்தபோது முன்கதவு பூட்டப்படாமல் சாத்தி யிருந்தது. கண்ணன் ஸ்டேரிங்கில் சாய்ந்தபடி கிடந்தார். சாவி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. ஏ.சி.யும் ஓடிக்கொண்டு இருந்தது. பதட்டமடைந்த மனைவி கணவரை எழுப்பி பார்த்தார். ஆனால் அவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
உடனடியாக அவரை ஆம்புலன்சு மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைத்தனர். அங்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேராசிரியரின் இந்த செயல் எனக்கு மிகுந்த மன அழுத்தை ஏற்படுத்தி என்னால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- துடியலூர் போலீசார் பேராசிரியர் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் 35 வயது வாலிபர்.
இவர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எச்.டி. முழு நேரமாக படித்து வருகிறேன். எனது கல்லூரியில் 50 வயது பேராசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் அடிக்கடி நான் உணவறை மற்றும் கழிவறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் போது பின் தொடர்ந்து வந்து தொடக்கூடாத இடங்களில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
படிப்பு சம்பந்தமாக கருத்தரங்கு ஆகியவற்றிக்கு செல்லும் போது கூட நான் ஆண் என்று தெரிந்தும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனை மனவேதனை அடைந்த நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பேராசிரியரின் இந்த செயல் எனக்கு மிகுந்த மன அழுத்தை ஏற்படுத்தி என்னால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு செல்லவே எனக்கு அச்சமாக உள்ளது.எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.கல்லூரி மாணவரின் புகாரின் பேரில் துடியலூர் போலீசார் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி:
புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.
நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.
இந்த ரெயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனே கோட்டை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.
பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ரெயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டவர்.
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாலிபர், நான் கூப்பிட்டால் நூறு பேர் வருவார்கள் என உளறி ரகளையில் ஈடுபட்டிருந்தார்.
- போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சூலூர்,
மது குடிப்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு என என்னதான் பாட்டிலில் வாசகம் எழுதி இருந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் மது வாங்கி குடிப்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
அப்படி குடிப்பவர்களில் சிலர் போதை தலைக்கேறிய நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல், அவ்வழியாக வருவோர், போவோரிடம் ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த மாதிரியான ஒரு சம்பவம் கோவை சூலூர் பகுதியில் நடந்துள்ளது. கோவை சூலூர் போலீசார், போலீஸ் நிலையம் அருகே சம்பவத்தன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரின் மோட்டார் சைக்கிள் சாலையில் அங்குமிங்கும் சென்றபடியே வந்தது.
இதனை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அந்த வாலிபரிடம் எதற்காக இப்படி வருகிறீர்கள் என விசாரித்தனர். அவர் போலீசாரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தனது வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லி உளறி கொண்டிருந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருப்பதை போலீசார் அறிந்தனர்.
இதையடுத்து போலீசார் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து, அவரையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அப்போது அந்த நபர், பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் நான் யார் தெரியுமா என கேட்டதுடன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார்.
இருந்த போதிலும் போலீசார் அவரிடம் மென்மையாக நடந்து கொண்டனர். உங்களது நண்பர் யாராவது இருந்தால் வந்து வாகனத்தை எடுத்து கொண்டு அவருடன் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.ஆனால் அவர் நான் கூப்பிட்டால் நூறு பேர் வருவார்கள் என உளறி ரகளையில் ஈடுபட்டிருந்தார். உடனே போலீசார் அவரது நண்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
அவர் போலீஸ் நிலையம் வந்து, நண்பரை தன்னுடன் வந்து விடுமாறு அழைத்தார்.
ஆனால் அந்த நபரோ தான் வரமாட்டேன். வண்டியை தரச்சொல். அப்படி தரவில்லை என்றால் நான் 100 பேரை கூட்டி கொண்டு வந்து வண்டியை எடுத்து செல்வேன் என கூறினார். அவரது நண்பரும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தார்.
தான் ஒரு கல்லூரி பேராசிரியர். அதனால் எனக்கு எல்லாமே தெரியும். உங்களுக்கு தெரியாதது கூட எனக்கு தெரியும் என கூறி கொண்டே இருந்தார்.
மேலும் அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் இதனை படம் எடுத்து யூடியூப்பில் போடுங்கள் எனவும் தெரிவித்து ரகளையில் ஈடுபட்டார்.
சில மணி நேரங்களுக்கு பிறகு அவர் போதை தெளிந்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது வாலிபர் என்பதும், கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
மேலும் கல்லூரிக்கும் குடிபோதையில் சென்றதால் அவரை கல்லூரி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியதும் தெரியவந்தது.
இவர் மீது அவரது மனைவி ஏதோ வழக்கு கொடுத்துள்ளதாகவும், அதில் ஆஜராவதற்காக வந்த போது குடிபோதையில் வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த நபருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அவரது நண்பருடன் அனுப்பி வைத்தனர்.
மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சூலூர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- போலீசார் மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அருளப்பன்(வயது53). இவர் கல்லூரி காம்பவுண்டு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருளப்பன் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய அருளப்பன் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித் தனர். கொள்ளை தொடர் பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
- பேராசிரியர் வீட்டில் 35½ பவுன் நகைகள் திருட்டு நடந்தது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சின்னக்கடை வீதி எழுத்தாணி கார தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தேவக்கோட்டை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று தற்போது மதுரையில் உள்ள ஒரு வேறு கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாம்பிகை (வயது54).
சம்பவத்தன்று இவர் வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து வேலைக்கார பெண் வந்தால் கொடுக்குமாறு கூறி சென்றார். வேலைக்கார பெண் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சாவியை திருப்பி கொடுத்துவிட்டு சென்றார்.
அதன்பின்னர் மீனாம்பிகை வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் பீரோவில் பார்த்த போது 35½ பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் மீனாம்பிகை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
- முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
சென்னை:
பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்து முறை கேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் 8 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த 8 பேரில் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மண்டல மையங்களில் உள்ள ஆசிரியர்கள், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர்.
மேலும் மூத்த பேராசிரியர்கள் 3 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓய்வு பெறும்போது பேராசிரியர்களாக மட்டுமே ஓய்வு பெறுவார்கள்.
முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதுடன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- சம்பந்தப்பட்ட மாணவன் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
நாகர்கோவில்
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந் தார்.
அந்த கல்லூரியில் ரவிக்குமார் என்பவர் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கல்லூரியில் இருந்து கன்னி யாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது லாட்ஜில் வைத்து பேராசிரியர் ரவிக்குமார் மாணவரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதுடன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவன் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இந்த நிலையில் கும்பகோணம் சுவாமிமலை போலீசிலும் புகார் செய்தார். இது தொடர்பாக ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த இடம் கன்னியாகுமரி என்பதால் இந்த வழக்கை கன்னியாகுமரியில் விசாரிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாணவன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், பேராசிரியர் ரவிக்குமார் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- பேராசிரியர் கீதாநாச்சியார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவிற்கான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று தமிழ் மொழி யின் சிறப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன் பெறும் வகையில் நகரில் முக்கிய வீதியின் வழியாக பேரணி சென்று, நிறைவாக நகரின் முக்கிய பகுதியான அரண்மனை பகுதியை வந்தடைந்தன.
அப்போது கலெக்டர் பேசுகையில், முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை பாதுகாக்கும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் கோப்புகள் பராமரிப்பிலும் முழுமையாக தமிழ் மொழியில் பராமரித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதை எடுத்துரைக்கும் வண்ணம் மேலும் வணிகர்கள் தங்கள் நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழ் மொழியில் வைத்திட வேண்டும், என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு, அரசு மகளிர் கலை கல்லூரி பேராசிரியர் கீதாநாச்சியார் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்