என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உரிமையாளர்"
- கட்டிட கட்டுமான பொருட்கள் மொத்தவிலைக்கு விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஜாகீர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது35). இவர் அதேபகுதியில் கட்டிட கட்டுமான பொருட்கள் மொத்தவிலைக்கு விற்பனை செய்யும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் கட்டுமான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்குவதற்காக இணையதளம் மூலம் தேடிபார்த்தார். அப்போது இந்தியா மார்ட் என்ற நிறுவனத்தின் இணையதள முகவரியில் குறைந்த விலைக்கு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அந்த இணையதளத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு குறைந்த விலைக்கு கட்டுமான பொருட்கள் வேண்டும் என்று கூறியுள்ளார்.
உடனே அதற்காக ரூ.5 லட்சத்து 66 ஆயிரத்தை வங்கியில் செலுத்தினால், உடடினயாக பொருட்களை அனுப்பிவைத்ததாக செல்போனில் பேசிய மர்ம நபர் கூறினார். அதனை நம்பிய குமரேசன் ரூ.5.66 லட்சத்தை மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமரேசன் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பால்பண்ணை உரிமையாளரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்துள்ளனர்.
- ரூ.10½ லட்சம் மோசடி செய்ததாக நிசார் சுக்கன், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்்த்தி (வயது45). இவர் அதே பகுதியில் பால்பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீட்டை சேர்ந்த நிசார்சுக்கன், தனது கம்பெனிக்கு ஒப்பந்த அடிப்படையில் பாைல கொள்முதல் செய்து வந்தார்.
அதன்படி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் பாலை சுந்தரமூர்த்தி சப்ளை செய்தார். கடந்த 6 மாதத்தில் பாலை சப்ளை செய்ததில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பெற வேண்டியுள்ளது. ஆனால் பணத்தை தராமல் நிசார்சுக்கன், அவரது கம்பெனி மேலாளர் சுப்பிரணமணியன் ஆகியோர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுந்தரமூர்த்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு நடவடிக்கை எடுக்குமாறு ேபாலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்அடிப்படையில் கிருஷ்ணன்கோவில் போலீசார் ரூ.10½ லட்சம் மோசடி செய்ததாக நிசார் சுக்கன், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
- கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
பசும்பொன்
கமுதியில் புறவழிச்சாலை அமைக்க கமுதி வருவாய் கிராமத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலம் வழங்கியவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து இழப்பீட்டுத் தொகை பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜானகி தலைமை யில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 12 பட்டாதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். 12 பேருக்கும் இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், தலைமை நில அளவையர் நாகவள்ளி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
- 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடை உரிமையாளரை கைது செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி மேலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தஜோதி, கேசவன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் செக்கடி காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ரவிச்சந்திரன் என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
- பெரியசாமி மளிகை கடைக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
- சீனிவாசன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் பெரியசாமி என்பவர் மளிகை கடை நடத்தி வருகி றார். இந்த நிலையில் திருப்பூர் அருகே உள்ள மங்கலம் சின்னாண்டிபாளையத்தில் காரைக்குடியை சேர்ந்த சீனிவாசன்(வயது 48) என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் பெரியசாமி மளிகை கடைக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
அந்த அரிசி மூட்டைகளுக்கு பணம் தராமல் பெரியசாமி தவணை சொல்லி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணத்தை வசூல் செய்வதற்காக வந்த சீனிவாசனை, பெரியசாமி தரப்பினர் தாக்கியுள்ளனர். அவர் வந்த காரையும் அடித்து நொறுக்கினர். இது குறித்து சீனிவாசன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை தாக்கியவர்களை தேடி வந்த நிலையில், பெரியசாமியின் மளிகை கடையில் வேலை பார்க்கும் சின்னத்துரை(24) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.
- மைக்செட் உரிமையாளர் மீது தாக்குதல் நடந்தது.
- மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கட்டைய தேவன் பட்டி ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்(32). மைக்செட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று ஊத்துப்பட்டியில் உள்ள சூசையப்பர் ஆலய திருவிழாவிற்காக மைக்செட், சீரியல் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சோலைபட்டியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் மின்விளக்குகளை அணைத்துள்ளார். சரவணகுமார் அதனை தட்டிகேட்டார்.
இதைத்தொடர்ந்து அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 11 பேர் சரவணகுமாருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் சரவணகுமார், அவருடைய சகோதரர் ரமேஷ்குமார்,உறவினர் வேல்முருகன் ஆகியோரை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிற்காமல் சென்ற வாகனத்தை கண்காணிப்பு காமிராக்கள் மூலம் போலீசார் தேடுகிறார்கள்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே உள்ள வாளோடு பகுதியை சேர்ந்தவர் வேல்தாஸ் (வயது 45). இவர் ஒலி, ஒளி சவுண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் வேல்தாஸ், மோட்டார் சைக்கிளில் செம்பொன் விளை-திங்கள்நகர் சாலை யில் சென்றார். பெத்தேல்பு ரம் பகுதியில் செல்லும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிள், வேல்தாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வேல்தாஸ் பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று வேல்தாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி அமுதா, குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
- சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.
- வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவருக்கு குமார், அரவிந்தன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சக்தி அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் வசித்து வருகிறார். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார் பெங்களூரில் வசிக்கும் மூத்த மகளை பார்ப்பதற்கு நேற்று மாலை அரவிந்தன் மற்றும் அவரது மனைவி ரமணி மற்றும் இளைய மகள் ஆகியோர் குடும்பத்துடன் பெங்களூ ருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அரவிந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்று தங்கராசு பார்த்துள்ளார் அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 65 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.மாவட்டம் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு குமார், அரவிந்தன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சக்தி அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் வசித்து வருகிறார். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார் பெங்களூரில் வசிக்கும் மூத்த மகளை பார்ப்பதற்கு நேற்று மாலை அரவிந்தன் மற்றும் அவரது மனைவி ரமணி மற்றும் இளைய மகள் ஆகியோர் குடும்பத்துடன் பெங்களூ ருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அரவிந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்று தங்கராசு பார்த்துள்ளார் அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 65 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.உரிமையாளர்உரிமையாளர்
- மாயமான 159 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
மதுரை
மதுரை மாநகரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் மீனாட்சி கோவில் சரகம்-12, தெற்கு வாசல்-2, திடீர் நகர்- 19, தல்லாகுளம்- 50, செல்லூர்- 26, அண்ணாநகர்-36 உள்பட 159 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும்.
மதுரை மாநகரில் தொலைந்து போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), வனிதா (தலைமையிடம்), ஆறுமுகசாமி (போக்கு வரத்து) மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- காரில் குழந்தைகளை அடைத்து வைத்து விட்டு விஷம் குடித்தனர்
- ஆரல்வாய்மொழி போலீசார் 2 பேர் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் புகழ்பெற்ற தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் கார் மற்றும் வாகனங்களில் குடும்பத்தினருடன் வந்தும் பலர் பிரார்த்தனை செய்து செல்வார்கள்.
எனவே தேவாலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்றும் வழக்கம் போல தேவாலயத்திற்கு ஏராள மானோர் வந்திருந்தனர். இதனால் கார்களும் அங்கு அதிகமாக நின்றன.
இதில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றது. இருப்பினும் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தவழியே சென்றவர்கள், கார் அங்கேயே நிற்பதை பார்த்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், காருக்குள் பார்த்தபோது, 2 குழந்தைகள் மட்டும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. வேறு யாரும் இருக்கிறார்களா? என காரை சுற்றி வந்து பார்த்த போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் காருக்கு வெளியே பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த 2 பேர் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பிணமாக கிடந்த ஆணின் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்தபோது, அதில் அவரது டிரைவிங் லைசென்சு இருந்தது. அதன் மூலம் அவரது பெயர் ஆேராக்கிய சூசைநாதன் (வயது 35) என்பதும் கடிய பட்டணத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து, அதில் இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்த போது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் மாயமான தகவல் கிடைத்தது. எனவே பிணமாக கிடந்த பெண் அவரது கள்ளக்காதலி என தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் கடியபட்டணத்தைச் சேர்ந்த சகாய சாமினி (30) என்பது உறுதியானது. 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேர் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து விட்டு, காரில் இருந்த 2 குழந்தைகளையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர்கள் சகாய சாமினியின் மகன்கள் என தெரியவந்தது.
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
ஆேராக்கிய சூசைநாதன், சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி உள்ளார். மேலும் அவரே கார் டிரைவராகவும் செயல்பட்டுள்ளார். அவருக்கு வின்சா என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் தான், ஆேராக்கிய சூசைநாதனுக்கு அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி சகாய சாமினியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காத லாக மாறியுள்ளது. மீன் பிடி தொழிலாளியான ராஜேஷ் கடலுக்குச் சென்றதும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதுபற்றி தெரிய வந்ததும் இரு வீட்டா ரும் கண்டித்து உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் சகாய சாமினி தனது 2 மகன்களுடன் மாயமாகி விட்டார். இது தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சகாய சாமினி மற்றும் அவரது மகன்களை தேடி வந்தனர்.
இந்த சூழலில் தான் கள்ளக்காதல் ஜோடியினர், ஆரல்வாய்மொழி பகுதியில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் தென்னை மரத்திற்கு வைக்கும் குருணை மருந்தை குடித்து தற்கொலை செய்து உள்ளனர்.
- சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டத்தை அடுத்த முளங்குழி, முள்ளஞ்சேரியை சேர்ந்தவர் வினு (வயது 35). நகை கடை நடத்தி வருகிறார்.
வினுவின் மனைவி அனுஷா (30). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றார். அப்போது அங்கே மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென அனுஷா அருகே வந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் அனுஷா கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலி செயினை பறித்தார்.
அனுஷா திருடன்...திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி யோடி தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஷாவிடம் நகைபறித்த வாலிபரை தேடி வருகிறார்கள்.மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்