என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 228242"
- குழுமியானந்த சுவாமி கோவிலுக்கு காவிரியில் இருந்து புனித நீர் ஊர்வலம் நடைபெற்றது
- 123-வது குருபூஜை விழாவையொட்டி நடைபெற்றது
திருச்சி,
திருச்சி வரகனேரியில் பிரசித்தி பெற்ற பிரம்மரிஷி ஸ்ரீகுழுமியானந்த சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடை–பெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 123-வது குருபூஜை விழா இன்று (8-ந்தேதி, வியாழக்கிழமை) வெகு விமரிசையாக நடை–பெற்றது.விழாவையொட்டி இன்று காலை 6 மணிக்கு காவிரியில் இருந்து திருமஞ்ச–னம் கொண்டு வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் குடங்களில் புனிதநீர் எடுத்து ஊர்வல–மாக வநதனர்.9 மணிக்கு ஸ்ரீ குழுமி–யானந்த சுவாமிகள் வார வழிபாட்டு குழுவினர் நிகழ்த்திய பன்னிரு திரு–முறை, திருப்புகழ், திரு–அருட்பா பாராயணமும், 11 மணிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை, 12 மணிய–ளவில் மகா அன்னதானமும் நடைபெற்றது. இதில் திர–ளான பக்தர்கள் கலந்து–கொண்டனர்.நாளை (9-ந்தேதி, வெள் ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சுந்தரர் தேவாரம் முற்றோதுதல், மதியம் 12 மணிக்கு மகா அன்னதானம், 10-ந்தேதி காலை 9 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல், 12 மணிக்கு மகா அன்ன–தானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு–களை கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள், குரு பக் தர்கள் சிறப்பாக செய்திருந் தனர்.
- காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
- இக்கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம், காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. எடப்பாடி சுற்று வட்டார பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இக்கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக கல்வடங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடிய திரளான முருக பக்தர்கள், கும்பாபிஷேக விழாவிற்காக குடங்களில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
நகரின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக மேள தாளம் முழங்க நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம், பால தண்டாயுதபாணி சாமி கோவில் வளாகத்தில் நிறைவுற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை மறுநாள் காலை, இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- பெரம்பலூரில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
- ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு
பெரம்பலூர்,
பெரம்பலூரில் உள்ள கிறிஸ்டியன் கல்விக்குழுமத்தினர், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத பெரம்பலூரை உருவாக்குவது, பிளாஸ்டிக் பைகள்-பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து பிரச்சார இயக்கத்தை நேற்று நடத்தினர். நிகழ்ச்சிக்கு கிறிஸ்டியன் கல்விக்குழுமத்தின் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாக குறைத்து அடுத்த தலைமுறையினருக்கு தூய்மையான சுற்றுச்சூழல் அமையும் வகையிலான புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியது நமது தலையாய கடமை என்று தெரிவித்தார்.இந்தநிகழ்ச்சியில் கிறிஸ்டியன் கல்விக்குழும செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். இதில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராதா, நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர், கல்வியியல் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு மூலிகை தாவரம்-மரக்கன்றுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழிப்புணர்வு ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி, பாலக்கரை ரவுண்டானா வரை நடந்தது.
- குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
- எட்டுப் பட்டி கிராம மக்கள் ஒன்றுகூடி, புனித நீராடி, தீர்த்தக் குடங்களில் புனித நீர் நிரப்பி காவிரி அன்னைக்கு பூஜை செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, எட்டுப்பட்டி கிராமம், குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
விழாவையொட்டி, நேற்று காவிரிக் கரையில் எட்டுப் பட்டி கிராம மக்கள் ஒன்றுகூடி, புனித நீராடி, தீர்த்தக் குடங்களில் புனித நீர் நிரப்பி காவிரி அன்னைக்கு பூஜை செய்தனர்.
பின்னர் புனிதநீர் நிரம்பிய சுமார் 700 தீர்த்தக் குடங்களையும் மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக குன்னத்தூர் மகா மாரியம்மன் சன்னதிக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்தனர்.
முன்னதாக குடமுழுக்கு விழாவையொட்டி கணபதி ஹோமத்துடன் பூஜை நடந்தது.
- திருவிழா கடந்த 15-ந்தேதி காலையில் கணபதி ஹோமமும், சக்தி பூஜையுடன் தொடங்கியது.
- பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா கோடுகிழி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெறும் கோயில் திருவிழா கடந்த 15-ந்தேதி காலையில் கணபதி ஹோமமும், சக்தி பூஜையுடன் தொடங்கியது .
தீ மிதி விழாவை முன்னிட்டு நேற்று இரவு வெட்டாற்றின் கரையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஆண், பெண் பக்தர்கள் ஏராளமானோர் பக்தி பரவத்துடன் தீக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அம்பாள் ஊர்வலம் நடைபெற்றது. தீமிதி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோடுகிளி கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- நொண்டி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
- காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் நொண்டி கோவில்பட்டியில் அமைந்துள்ள நொண்டி கோவில் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று நொண்டி கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை மேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து கிராம அம்பலகர்கள் முன்னிலையில் ஊர்வமாய் சேனல் ரோடு, ஆற்றுக்கால் வழியாக கோவிலை சென்றடைந்தனர். அங்கு சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
- ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- காலை 8 மணிக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து காப்பு கட்டி பண்டாரம், தினமும் இரவு 7 மணிக்கு மேல் தீச்சட்டியை ஏந்தி கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சியும், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்று வந்தது.
நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இன்று மாலை பொங்கல், மாவிளக்கு திருவிழா நடைபெறுகிறது.
முன்னதாக காலை 8 மணிக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அருகில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில் பால்குடங்களை வைத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அங்கிருந்து புறப்பட்ட பால்குடம் ஊர்வலம், மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.
பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை, மாரியம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவி யங்களால் அபிஷேகமும், பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 5 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்தும் பூஜை செய்வர். இரவு வான வேடிக்கையும் நடைபெறுகிறது.
நாளை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.
- குற்றாலத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
- நள்ளிரவில் அம்பாள் சப்பர வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா கடந்த 25-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, தீபாராதனைகள் மற்றும் கும்மியாட்டம், கோலாட்டம், திருவிளக்கு பூஜைகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான கொடை விழாவையொட்டி காலை குற்றாலத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், 6 மணிக்கு முளைப்பாரி, பூந்தட்டு ஊர்வலமும் அதனை தொடர்ந்து விநாயகர் கோவிலில் இருந்து சுப்புரமணியதெரு பகுதியை சேர்ந்த ராம்தாஸ் என்பவர் 2-ம் ஆண்டாக பறவை காவடியை எடுத்து ஊர் முழுவதும் ஊர்வலமாக வந்தார். இரவு தீச்சட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவில் அம்பாள் சப்பர வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு முளைப்பாரி எடுத்து ஆற்றில் கொண்டு கரைத்தல், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை யாதவர் சமுதாய மக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செயதிருந்தனர்.
- காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராட்டையை சுற்றியும் தேசபக்தி பாடல்களை பாடி உபவாசம் மேற்கொண்டனர்.
- அகஸ்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளினர்.
வேதாரண்யம்:
இந்திய சுதந்திரத்திற்கு முக்கிய பங்கு வகித்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் 93-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவினர் கடந்த 14-ந் தேதி திருச்சி ராஜன் மாளிகையில் இருந்து புறப்பட்டு தஞ்சை, கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரணியம் வந்தடைந்தனர்.
நேற்று வேதாரண்யம் வடக்கு வீதியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதாரத்தினத்தின் பேரன் கயிலைமணி வேதாரத்தினம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராட்டையை சுற்றியும் தேசபக்தி பாடல்களை பாடி உபவாசம் மேற்கொண்டனர்.
காலை 6 மணி அளவில் வேதாரண்யம் உப்புசத்திய கிரக நினைவு கட்டிடத்தில் இருந்து ஊர்வலமாக 3 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு அகஸ்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளினர். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் போஸ், மாவட்ட வர்த்தக அணி பொதுசெயலர் அப்துல் உசேன், இளைஞர் காங்கிரஸ் ஆப்கான், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், மகளிர் அணி
சத்யகலா, செல்வராணி, நகரத் தலைவர் மெய்யா ரபீக், துணைத்தலைவர் வெங்கட்ராஜ், துணைச்செயலாளர் செல்வகுமார், ஐ.என்.டி.யூசி சங்க தங்கமணி, பாதயாத்திரை குழு சக்தி செல்வம் உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.
- பள்ளிக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் சார்பில் வழங்கபடுவது வழக்கம்.
- தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருக்கண்ணங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளிக்கு தேவையான பொருள்களை கிராம மக்கள் சார்பாக வழங்கபடுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இப்பள்ளிக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் சார்பில் வாங்கப்பட்டு இன்று பள்ளிக்கு வழங்கப்பட்டது,
பள்ளியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது, இதில் பள்ளிக்கு தேவையான இருக்கைகள், எல்.இ.டி. டிவி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் ஆர்வோ வாட்டர் மெசின், பீரோ, குடம், பாய்கள், மின் விசிறிகள், இருக்கைகள், சாக்பீஸ், உள்ளிட்ட 1லட்சம் மதிப்பீலான பொருள்களை தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- அரசின் திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
- ஊர்வலத்தை தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துவக்கி வைத்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி மாணவிகள் பதாகைகள் ஏந்தியபடி பள்ளியில் இருந்து புறப்பட்டு தடப்பெரும்பாக்கம், திருவேங்கடபுரம், வெண்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். அப்போது அரசின் திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
ஊர்வலத்தை தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துவக்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தீஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், மகேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செல்வம், அர்ச்சனா, உமையாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- மாலையில் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. தொடர்ந்து பல்சுவை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம்,காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மகா மாரியம்மன் கோவிலை வந்து அடைந்தனர்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்சுவை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கோவில் தேவராயன்பேட்டை நாட்டாமைகள், கிராம வாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்