என் மலர்
நீங்கள் தேடியது "வெற்றி"
- 19 வயதுடையவருக்கான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம்.
- 17 வயது பிரிவு ஆண்கள் கபடி போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம்.
பேராவூரணி:
பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு மாணவர் இன்பன் கார்த்தி, பாபநாசத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற, 19 வயதுடையவருக்கான சைக்கிள் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார்.
இதன் மூலம் இவர் மாநில அளவிலான போட்டிக்கு பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் இப்பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், 17 வயது பிரிவு ஆண்கள் கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளித் தலைமை ஆசிரியர் முதல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, சோலை, முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- 12-ம் வகுப்பு படித்து முடித்து நீட் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார்.
- பள்ளி சார்பிலும், கிராம மக்கள் சார்பிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார்- பவானி தம்பதியினர்.
விவசாயக் கூலிகளான இவரது மகள் ராஜேஸ்வரி.
இவர் ஆந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் வெற்றிப் பெற்றார்.
அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
அவருக்கு அவர் படித்த பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைப்பெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் துரைமுருகு தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் சார்பிலும் கிராம மக்களின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவி ராஜேஸ்வரியை வெகுவாக பாராட்டினர்.
- 3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
- குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்துவதற்கு தகுதியான 200 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. இது தென் தமிழகத்தில் மிகப்பெரிய மைதானம் ஆகும். இம்மைதானத்தில் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற தகுதியான போட்டியாளர்களை குமரி மாவட்ட அளவில் தேர்வு செய்யும் தகுதி சுற்று நடைபெற்றது.
சென்னை தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் -ம் இணைந்து குமரி மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் ஸ்கட்டிங் போட்டிகளை நடத்தின. குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வின்ஸ் பள்ளி மாணவர்களும் பங்கேற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். மாணவர்கள் பிபின்குமார், பபின்குமார், ஹாட்ரியல் வின்சென்ட் ஆகியோர் வயது அடிப்படையிலான போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் கோப்பை, பதக்கம் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். மேலும் அவர்கள் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.
போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் செயலாளர் குமார் ஜேசுராஜன் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- வெற்றிபெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டது
- நீரினைப்பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர்நிலைகளின் நீரினைப் பயன்படுத்துவோர் 34 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மொத்தமுள்ள 34 தலைவர் இதில் 8 தலைவர்கள் தவிர, மற்ற 26 தலைவர் பதவிகள் மற்றும் 91 உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 8 தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கு நேற்று காலை முதல் வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடைபெற்றது. இதில் கல்லாலங்குடி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தல் கடும் பரபரப்புக்கு இடையே இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாலை நான்கு மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.வாக்குகள் என்னப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் தலைவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
வெற்றி பெற்ற தலைவர்களான விஜயரெகுநாதபுரம் செல்வராசு, குளவாய்பட்டி பானுமதி, மேலாத்தூ ர் குமார், கல்லாலங்குடி பாண்டியன், கொத்தமங்கலம் முத்துத்துரை, மாங்காடு பாலசுப்பிரமணியன், வல்லாத்திராக்கோட்டை, வாண்டாக்கோட்டை, பூவரசகுடி, மணியம்பலம் இவைகளுக்கு கருப்பையா, நம்புகுழி முத்து ஆகிய 8 தலைவர்களாகவும் மற்றும் பத்து உறுப்பினர்கள் என வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருமான முருகேசன் மற்றும் ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி ஆகியோர் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
- கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி சுகாதார ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கல்.
வேதாரண்யம்:
தூய்மை பாரத இயக்கம் சார்பில் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தின சுகாதார ஓட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை வகித்து சுகாதார ஒட்டத்தை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், அஞ்சலக அலுவலர், மகளிர் குழுக்கள், தூய்மை பணியாளர்கள், சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியும், எடுத்துக்கொண்டனர்.
உலக கழிவறை தினம் நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்களை வழங்கினர்.
- தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது.
- மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.
தென்காசி:
தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.
நகர்மன்ற உறுப்பினர் காதர் மைதீன், ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் மாரியப்பன், தென்காசி கேன்சர் சென்டர் இயக்குநர் பாரதிராஜா, நிலா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பிரபுதேவகுமார், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், வாசகர் வட்ட துணைத்தலைவர் மைதீன், ஆசிரியர் ஆறுமுகம், ஓவிய பயிற்சியாளர் ஜெயசிங், அரவிந்த் யோகாலயா பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, செங்கோட்டை நகரச்செ யலாளர் வெங்கடேஷ், கோமதி நாயகம், சமீம், இஸ்மாயில், ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, வக்கீல் கண்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.
கிளை நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.விழா ஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதீஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தை ஜேசு, முருகேசன் செய்திருந்தனர்.
- மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம்.
- மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேய படையினரிடம் தோல்வி அடைந்தார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோரா சுற்றுலாத்தலத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வாரவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி மரபுச் சின்னங்களை கட்டணம் இன்றி பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம். வாட்டலூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேயப் படையினரிடம் தோல்வி அடைந்தார்.
நெப்போலியன் தோல்வியை வெளியுலகுக்கு தெரிவிக்கவும், ஆங்கிலேயரின் வெற்றியை கொண்டாடியும், 2-ம் சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்டது தான் இந்த மனோரா என்னும் நினைவுச்சின்னம். மாணவர்கள் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சத்தியநாதன், சாரண ஆசிரியர் முத்துச்சாமி, காரைக்குடி பட்டாலியன் ஹவில்தார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், சாரண இயக்க மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மனோராவில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
- 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
- வெற்றி பெற்ற 60 மாணவர்கள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 36 பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெறும் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி தொடங்கி வைத்தார்.
மேலும் மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன். போட்டியில் வெற்றி பெற்று 60 மாணவ-மாணவிகள், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர்.
- தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
- ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும்.
பேச்சுத்திறமை பெற்றவர்கள் மட்டுமே இன்று உள்ள சூழ்நிலையில் தொழிலை வெற்றிகரமாக நடத்தி செல்லமுடியும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விவரமானவர்களாக இருக்கின்றனர். எனவே, பேச்சுத்திறமை முக்கியத்துவம் பெறுகிறது. பேசத்தெரிந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கமுடியும். பொதுவாக பெரும்பாலான தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களிடம் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. அதே போல் வாடிக்கையாளர்களும் யாருடைய பேச்சையும் கேட்க அதிக நேரம் செலவிட தயாராக இல்லை. எனவே சாதுர்யமான பேச்சின் மூலமே பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியும்.
அண்மையில் நடத்திய ஒரு ஆய்வில் சொல்லக்கூடிய கருத்தில் 7 சதவீதம் மட்டுமே நேரடியாக கேட்பவர்களுக்கு சென்றடைவதாகவும், 55 சதவீதம் சொல்பவரின் அங்க அசைவுகளின் மூலமாகவும், மீதமுள்ள 38 சதவீதம் கருத்து சொல்பவரின் பேச்சு திறமைக்கு ஏற்றவாறு சென்றடைவதாகவும் தெரிய வருகிறது.
சரியான முறையில் திட்டமிட்டு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். புள்ளி விவரங்கள், மற்றவர்களின் அனுபவங்கள், தாம் பெற்ற அனுபவங்கள் இவைகளை கலந்து பேசும்போது பேச்சின் சுவை அதிகரிக்கும். கேட்பவர்களும் ஆர்வமாக கேட்பார்கள். தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
ஒரே நேரத்தில் இரண்டு ஆட்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். சில ஆட்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே எதிரில் உள்ளவர்களிடம் பேசுவார். தொழிலையும் கவனிப்பார். இம்மாதிரியான செயல்முறைகளை தவிர்க்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒருவரிடம் தான் பேசவேண்டும். ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும். தொடர்ந்து பேசிக்கொண்டே இல்லாமல் நாம் சொல்வதற்கு எந்த அளவிற்கு பதில் உள்ளது அல்லது நாம் சொல்வதில் கேட்பவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து பேசவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வாடிக்கையாளர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது. பேச்சில் கோபமூட்டும் சொற்களையோ, தன்மான உணர்வுகளை தூண்டும் சொற்களையோ பயன்படுத்தக்கூடாது.
பேச்சில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அந்த அளவுக்கு பேசுபவர்களின் மதிப்பு உயரும். கைகளை கட்டிக்கொண்டோ அல்லது கைகளை பிசைந்து கொண்டோ பேசக்கூடாது. வாடிக்கையாளர்கள் பெயர் தெரிந்தால் பெயரை குறிப்பிட்டு பேசுவதில் தவறில்லை. முடிந்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
- செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும் பெற்று வெற்றி பெற்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குட் சாமரிட்டன் பள்ளியில் மாநில அளவில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான
6 ஆம் ஆண்டு கூடைபந்து தொடர் போட்டிகள் கடந்த 3 ஆம் துவங்கியது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து தொடர் போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் சேர்ந்த 192 ஆண்கள் அணி, 104 பெண்கள் அணியும் என மொத்தம் 296 கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
சீர்காழி மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 5 விளையாட்டுமைதா னங்ளில் இரவுபகலாக நடைபெற்ற தொடர் போட்டிகள் நிறைவடை ந்தது.
மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும், கோபாலபுரம் டி.ஏ.வி.பி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் பொன்னேரி வேலம்மாள் பள்ளி முதலிடமும், ஏற்காடு எம்ரால்ட் வேலி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அணி களுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.வி ராதாகிருஷ்ணன், தலைமை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் பிரவீன் வசந்த் ஜபேஷ், அனுஷா மேரி, அலெக்சாண்டர், ரெனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிபிஎஸ்சி பப்ளிக் பள்ளி முதல்வர் ஆப்ரகாம் எனோக் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் வெற்றி கோப்பையை வழங்கி அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். நிறைவில் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் நன்றி கூறினார்.
- முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள்.
- பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், அலோசியஸ், தலைமை காவலர்கள் சீனிவாசன், ரஞ்சனி பிரியா, செந்தமிழ்ச்செல்வி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியை வெற்றி செல்வி அனைவரையும் வரவேற்றார். முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுகளும் வழங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபாவதி பேசுகையில் பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றார்.
முடிவில் ஆசிரியர் இன்பாலன் நன்றி கூறினார்.
- ஏழை, பாமரர்களுக்கு சலுகை வழங்குவது திராவிட மாடல்.
- பணக்காரர்களுக்கு சலுகைகள் செய்வது ஆரிய மாடல்.
நாகர்கோவில்:
நாகர் கோவில் மாநகர வடக்கு பகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நாகர் கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே நடந் தது. பொதுக்கூட்டத்திற்கு வடக்கு பகுதி செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் ஆனந்த் வரவேற்றார். மாந கர துணைச் செயலாளர் வேல்முருகன், கவுன்சிலர் கலா ராணி, பகுதி செயலாளர்கள் சேக் மீரான், ஜீவா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக டாக் டர் செந்தில்குமார் எம்.பி. கலந்து கொண்டு பேசிய தாவது:-
தி.மு.க. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து பேராசி ரியர், கருணாநிதி ஆகியோர் இணைந்து பாடுபட்டதன் காரணமாக 20 ஆண்டுகளில் தி.மு.க. அசைக்க முடியாத கட்சியாக உருவானது. பேராசிரியருக்கு பொதுக் கூட்டங்கள் நடத்தி வரு கின்றோம். மற்ற கட்சிகள் அவர்களது தலைவர்களை மறந்து விடுகின்றனர்.
ஜெயலலிதா இறந்த பிறகு அவருக்கு எந்த பொதுக்கூட்டமும் அ.தி.மு.க.வினர் நடத்தவில்லை.உலகம் நமது பண் பாட்டை பேச வேண்டும் என்று கன்னியாகுமரியில் கருணாநிதி திருவள்ளுவ ருக்கு 133 அடி திருவள்ளு வர் சிலையை அமைத்தார்.தமிழக முதல்-அமைச்சர் தமிழகத்திற்கு பல திட்டங் களை நிறைவேற்றி உள் ளார். அதில் மக்களை தேடி மருத்துவம், பெண்க ளுக்கு இலவச பஸ் பயணம் திட்டம், என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
உலக நாடுகள் வியக்கும் அளவில் தமிழகத்தில் கல்வி யையும், மருத்துவத்தையும் கொண்டு செல்லும் அள விற்கு தமிழக முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக பேச மாட்டார். ஆனால் செயலாக்கத்தில் தீவிரம் காட்டி வருகிறார். ஆரிய மாடல், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தி யாசம் பணக்காரர்களுக்கு சலுகைகள் செய்வது ஆரிய மாடல். ஏழை, பாமரர் களுக்கு சலுகை வழங்குவது திராவிட மாடல்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாகர்கோவில் மாநக ராட்சி மேயரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாள ருமான மகேஷ் பேசுகையில், இந்துக்கள் என்றால் பாரதியஜனதா என்று மக் களை திசை திருப்பி வருகிறார்கள்.
தி.மு.க. ஆட்சியில்தான் குமரியில் உள்ள கோவி லுக்கு கும்பாபிஷேம் நடத்த 48கோடி ரூபாய் ஒதுக்கியது. இதுபோல் பழுதடைந்த 100 கோவில்களை புணரமைப்பு செய்ய ரூ.5 கோடியே 83 லட் சத்தை தமிழக அரசு ஒதுக்கி யுள்ளது. அனைத்து மதத்தை யும் ஒன்று போல் நினைத்து வளர்ச்சி என்ற நோக்கில் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். வருகிற நாடாளுமன் றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் விஜயரத்தினம், மாநில மகளி ரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொரு ளாளர் கேட்சன், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், மாநில மீனவரணி துணை செயலாளர் நசரேத் பசலியான், மாநில கலை இலக்கிய பிரிவு செயலாளர் தில்லை செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், லிவிங்ஸ்டன், பாபு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என். சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.