என் மலர்
நீங்கள் தேடியது "காட்டுத் தீ"
- நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.
- லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
இஸ்ரேலின் ஜெருசலேமில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. ஜெருசலேமின் புறநகரில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை.
காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவுகிறது.
லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. தீ மேவோ ஹோரோன், பர்மா சாலை மற்றும் மெசிலாட் சியோன் போன்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தேசிய அவசரநிலையை அறிவித்தார்.
- பொதுமக்கள் குளச்சல் பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- இரவென்றும் பாராமல் அடர்ந்த காட்டுக்குள் சென்று காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
கன்னியாகுமரி:
கருங்கல் அருகேயுள்ள சிந்தன்விளை பகுதியில் உள்ளது கருங்கல் மலை. இம்மலை கப்பி யறை பேரூராட்சி மற்றும் திப்பிரமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பரந்து விரிந்து உள்ளது. இதன் அடிவாரப் பகுதிகளில் சிந்தன்விளை, வாழவிளை, ஓலவிளை, கருக்கி என பல குக்கிராமங்களில் ஏராளமான குடியிருப்புகளும், வழிபாட்டு தலங்களும் உள்ளன. குடியிருப்புகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சிந்தன்விளை பகுதியில் கருங்கல் மலை உச்சியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் குளச்சல் பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீணைப்பு வீரர்கள் வருவதற்குள் காட்டுத்தீ மளமளவென பரவத் தொடங்கியது.
தகவலறிந்து வந்த குளச்சல் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு முதலில் காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுத்ததோடு அடர்ந்த காட்டிற்குள் இரவு 10 மணிவரை சுமார் 3 மணி நேரம் போராடி காட்டுத்தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பினர். இரவென்றும் பாராமல் அடர்ந்த காட்டுக்குள் சென்று காட்டுத்தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த் (28). சம்பவத்தன்று இரவு ஆசனூர் வனசரகத்திற்கு உட்பட்ட மாவல்லரம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர். தீயை அணைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் கால் தவறி கீழே பாறையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடன் இருந்த மற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ஆனந்த் சுயநினைவை இழந்தார். தொடர்ந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
- காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு துறையினர் தீவிரம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பள்ளத்தாக்கு பகுதிகளில் தீயை அணைக்க வீரர்கள் போராடிக்கொண்டிருந்தபோது விமானம் மூலம் வானில் இருந்து தீ தடுப்பு மருந்து வீசிப்பட்டது.
இது குறித்து ஃபெடரல் அவசர கால மேலாண்மை ஆணைய தலைவர் கூறும் போது, "காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அபாயகரமாகவும், தீவிரமாகவும் மாறியுள்ளது. இதில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய விஷயம் இது இன்னும் அதி பயங்கரமாக இருப்பது தான்," என்றார்.
முன்னதாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர்கள் வேகத்திற்கு வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
- லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
- காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு துறையினர் தீவிரம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7-ந்தேதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ மளமளவென அங்கிருந்த மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் சுமார் 12 ஆயிரம் பேரின் வீடுகள் தீக்கிரையாகின. வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 15 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் கூறும் போது, "லாஸ் ஏஞ்சல்ஸ்-ஐ சுற்றி பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய இயற்கை பேரழிவு. இந்த பேரழிவு ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துவிட்டது," என்று தெரிவித்தார்.
- சொக்கம்பட்டி பீட் மலையில் திடீரனெ காட்டுத் தீ ஏற்பட்டது
- இலை சருகுகளில் பரவிய காட்டுத்தீ பயங்கரமாக பற்றி எரிய தொடங்கியது
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி பீட் மலையில் திடீரனெ காட்டுத் தீ ஏற்பட்டு பற்றி எரிகிறது.
நேற்று காலை புளியங்குடி வனச்சரகம் டி.என். புதுக்குடி பீட்டில் பற்றி எரிந்த இந்த காட்டுத்தீ காற்றின் வேகத்தால் மாலைநேரத்தில் கடையநல்லூர் வனச்சரகம் சொக்கம்பட்டி பீட் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பரவியது. கோடை வெயிலால் இலையுதிர் காலத்தில் காய்ந்து கருகி கிடந்த இலை சருகுகளில் பரவிய காட்டுத்தீ பயங்கர மாக பற்றி எரிய தொடங்கியது.
கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், பொதுமக்களின் உதவியுடன் செடி,கொடிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
எனினும் இரவு நேரமாகி விட்டதால் அதில் தொய்வு ஏற்பட்டது. இன்றும் 2-வது நாளாக அதிகாலை முதலே தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதி நத்தம், சின்னாளப்பட்டி, கொடைரோடு, வாடிப்பட்டி வரை தொடர்கிறது. இந்த வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இந்த காற்றை சுவாசித்தாலே பல்வேறு நோய்கள் தீர்வதாக அப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.
சிறுமலை அடிவாரத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மானாவாரி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறுமலையில் இருந்து வரும் தண்ணீரே ஆதாரமாக உள்ளது. மேலும் இப்பகுதியில் அரிய வகை மரங்கள், ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
வனத்தை பாதுகாப்பதற்காக ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் மர விதைகளை ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்டது. அவை அனைத்தும் தற்போது மரங்களாக காட்சியளிக்கிறது. ஆனால் சமூக விரோதிகள் சிலர் மரங்களை வெட்டி கடத்துவது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு மரம் கடத்தும் கும்பல் தீ வைத்து செல்வது வழக்கம். 2 முதல் 5 நாட்கள் வரை எரியும் இந்த தீ தானாக அணைந்து வருகிறது. தற்போது சின்னாளப்பட்டி அமலிநகர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சில விஷமிகள் தீ வைத்து சென்றனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் 4 ஏக்கர் வரை மரங்கள் எரிந்து நாசமானதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லாததால் காட்டுத் தீயை அணைக்க முடியவில்லை.
இன்றும் தொடர்ந்து தீ எரிந்து கொண்டு இருப்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இந்த காட்டுத் தீயில் சிக்கி அரிய வகை மரங்கள் பல நாசமாகியுள்ளது.
எனவே வனத்துறையினருக்கு போதுமான உபகரணங்கள் வழங்க வேண்டும். வனப்பகுதியில் தீ வைக்கும் சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனப்பகுதியில் ஆங்காங்கே தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவத் தொடங்கியது. இவ்வாறு நான்கு மாவட்டங்களில் 5 நாட்களாக பற்றி எரியும் தீயினால் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஐந்து நாட்களாக தீ கொழுந்துவிட்டு எரிவதால், ஏராளமான வனவிலங்குகள் தீயில் கருகி இறந்துள்ளன. இதனால் மின்கம்பங்கள் மற்றும் செல்போன் டவர்கள் சேதமடைந்தன. கடும் புகை மூட்டம் காரணமாக பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் போதிய வன ஊழியர்கள் இல்லாத காரணத்தால், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக ஆங்காங்கே போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். #Uttarakhandforestfire