என் மலர்
நீங்கள் தேடியது "தாலுகா அலுவலகம்"
- அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் கால தாமதம் ஆனதையொட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
- கோர்ட் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர்.
ராசிபும்:
சேலம்-கரூர் அகல ரெயில் பாதை திட்டத்திற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த கீரனூர், நெ.3 குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.10 கோடி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அரசு இழப்பீடு தொகை வழங்குவதில் கால தாமதம் ஆனதையொட்டி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுவரையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாத நிலையில், ரெயில்வே துறைக்கு நிலம் எடுத்துக் கொடுத்த தாசில்தார் அலுவலக வாகனங்கள், தளவாடப் பொருட்களை ஜப்தி செய்ய ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று கோர்ட் ஊழியர்கள் மற்றும் விவசாயிகள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய சென்றனர். அங்கிருந்த துணை தாசில்தாரிடம் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்திருப்பதை தெரிவித்தனர். ஆனால் தாசில்தார் அங்கு இல்லாததால் கோர்ட் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.
இதேபோல் ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கும் சென்ற கோர்ட் ஊழியர்கள், அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் ஜப்தி செய்ய வந்திருப்பது குறித்து எடுத்து கூறினர். அப்போது அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள், சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறினர். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர்.
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் ஊழியர்கள் தாலுகா ஆபீஸ் மற்றும் ரெயில்வே நிலையத்தை ஜப்தி செய்ய சென்ற சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை, நீதிமன்றம், பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் அமைந்துள்ள தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை,நீதிமன்றம்,பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.இந்தநிலையில் பல்வேறு சேவைகளை பெறுவதற்காக இங்கு வருபவர்கள் மட்டுமல்லாமல், வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாதவர்கள் கூட தாலுகா அலுவலக வளாகத்துக்குள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திச் செல்கின்றனர்.இதனால் இங்கு வரும் பொதுமக்கள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதவிர தாசில்தார்,நீதிபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.அத்துடன் கிளைச்சிறைக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிறை வளாகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே தாலுகா அலுவலகத்துக்கு எதிரில் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- அல்லாளபுரத்தில் ஒரு தரப்பினர் அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர்.
- 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு ட்பட்ட அல்லாளபுரத்தில் ஒரு தரப்பினர் அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், இவர்களது குடியிருப்பின் அருகில் வசித்து வரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அத்து மீறி இடத்தை ஆக்கிரமித்து முள் கம்பி வேலி அமைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வர்களிடம் மிரட்டல் விடு த்ததாகவும் கூறப்படு கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இடம் சம்பந்தமான பிரச்சனையை வருவாய்த்துறையில் புகார் அளியுங்கள் என தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்படுவதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் வக்கீல் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.
மேலூர் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் மற்றும் பட்டா, சிட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல் ஆகியவற்றிற்காக பொதுமக்களை அலைகழிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் மெய்யர், தாலுகா குழு உறுப்பினர் பெரியவர், மாவட்ட குழு உறுப்பினர் திலகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் நடைபெறவுள்ளது.
- பொதுமக்கள் அரசு இ- சேவை மையத்தின் இணையதளம் மூலம் மனுக்களை பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பல்லடம் உள் வட்டம், கரடிவாவி உள் வட்டம், சாமளாபுரம் உள் வட்டம், பொங்கலூர் உள் வட்டம் ஆகிய கிராம பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது. ஜமாபந்தி தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் அரசு இ- சேவை மையத்தின் இணையதளம் மூலம் மனுக்களை பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்.
மனுக்கள் மீது ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று பல்லடம் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் தலைமையில் டவுன் தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டவுன் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-க்கு விண்ணப்பித்து காலதாமதத்தை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செந்தில், புஷ்பா, சுப்பையா, சண்முகத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தாலுகா அலுவலகம் முன்பு புளியமரம் சாய்ந்தது.
- தற்போது அந்த புளியமரம் அருகில் அகற்றி வைக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீரானது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மதுரை -திண்டுக்கல் நகர்புற சாலையில் புளியமரம் இன்று காலை 6 மணிக்கு திடீரென்று சாலையின் நடுவே சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா மற்றும் தீயணைப்பு வீரர்கள் மரத்தினை அகற்ற வந்தனர். அப்போது அங்கிருந்த சாலை பணியாளர் ஜே.சி.பி. மூலம் மரத்தினை அகற்றுவதாக கூறியதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர். ஆனால் 10 மணியாகியும் மரம் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தது.
இதனால் போக்குவரத்து பாதித்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மதுரை செல்லும் நகர் புறவழிச்சாலை வழியாக எதிரும் புதிருமாக வந்தது செயற்கையான விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்தது. தற்போது அந்த புளியமரம் அருகில் அகற்றி வைக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து சீரானது.
- குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்
- இன்று அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாகர்கோவில், அக்.11-
குமரி மாவட்டத்தில் தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக இருந்த ராஜேஷ், நெடுஞ்சாலைத்துறை தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார். சமூக பாதுகாப்புத்துறை தனித் துணை வட்டாட்சியர் ராஜா சிங், அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன.
- கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் கடந்த 1989 -ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி தாலுகா அலுவலகம் தொடங்கப் பட்டது. அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தாலுகா அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, முதியோர், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற இந்த அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து பயன் அடைந்து வருகிறார்கள். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
2 அடுக்கு மாடியில் செயல்படும் இந்த தாலுகா அலுவலகத்தின் கட்டிட சுவர்களில் பல இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன. மாடிகளின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மழை பெய்தால் ஒழுகி தண்ணீர் அலுவலகத்தின் உள்ளே வருகிறது. இதனால் கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கம்ப்யூட்டர் அறையில் உள்ள மின் விசிறிகள் உடைந்து காணப்படுகின்றன. கம்ப்யூட்டர் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சின்னாபின்னமாக அகற்றப்படாமல் அலங்கோலமாக கிடக்கின்றன.
மேலும் இங்கு செயல்படும் இ-சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி அனுப்புவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

இதனால் அருகில் உள்ள தனியார் இ -ேசவை மையங்களில் பணம் கொடுத்து மனுக்களை பதிவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் அறை மேல்தளத்தில் உள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மேல்தளத்திற்கு நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே ஆதார் பதிவு மையத்தை கீழ்தளத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாலுகா அலுவலக வளாகத்தில் எங்கு பார்த்தாலும் முள்செடிகள், புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.
அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலம் முறையாக பாராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. அங்கு சென்றால் அரசு அலுவலகத்துக்கு சென்றது போன்ற உணர்வு இல்லை. இதனை பராமரிக்க வேண்டும்.
மேலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். போதுமான கிராம நிர்வாகம், மற்றும் வருவாய் அலுவலர்கள் இல்லாததால் கோப்புகள் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மழை பெய்யும் போது தண்ணீர் செல்ல வழியில்லாததால் வளாகம் முழுவதும் தேங்கி நிற்கிறது. தாலுகா அலுவலகத்தை சுற்றிலும் முட்புதர்கள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் 18 தாசில்தார்கள் இங்கு பணியாற்றிவிட்டு இடம்மாறுதல் பெற்று சென்று உள்ளனர். எனவே ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கல்குவாரியை தற்காலிகமாக மூடக்கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
- மேல்முறையீடு செய்து தடையை நீக்கி கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த குவாரி இயக்கப்பட்டு வருகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்பட்டுவரும் தனியார் கல்குவாரி நிறுவனம் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். இதையடுத்து கல்குவாரியை தற்காலிகமாக மூடக்கோரி கடந்த செப்.8ந்தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். இந்நிலையில் மேல்முறையீடு செய்து தடையை நீக்கி கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த குவாரி இயக்கப்பட்டு வருகிறது எனவும், அபராதம் விதிக்கப்பட்டதாகவும், விசாரணையின்முழுவிபர நகலை கேட்டு பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் நந்தகோபால், கலெக்டர் அலுவலக கூட்டத்திற்கு சென்றுவிட்டதால், துணை தாசில்தார் பானுமதி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன்ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உத்தரவு நகலை எங்களிடம் தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.
- தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள்.
பல்லடம் :
பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்படும் கல்குவாரி நிர்வாகத்தை கண்டித்து செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பல்லடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்றுகாலையும் போராட்டம் நீடித்தது. அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு முகாம்களில் இந்த திட்டத்தில் கடன் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர் களுக்கான கடன் ஆகிய திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை சிறுபான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெற்று வாழ்க்கை தரத்தை முன் னேற்றும் வகையில் கடன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 11-ந்தேதியும், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் 12-ந்தேதியும், விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் 16-ந்தேதியும், கல்குளம் தாலுகா அலுவலகத்தில் 17-ந்தேதியும், அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் 18-ந்தேதியும், தோவாளை தாலுகா அலுவலகத்தில் 22-ந்தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. சிறப்பு முகாம்களில் இந்த திட்டத்தில் கடன் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.