என் மலர்
நீங்கள் தேடியது "slug 229393"
- மையக்கட்டிடம், குழந்தைகள் பூங்கா, சிற்றுண்டியகம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
- மனோரா சுற்றுலாத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகுதியாக உள்ளது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலாத்தலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சிறுவர் பூங்கா, படகு குழாம், சிற்றுண்டியகம், பயிற்சி மையக்கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா வரவேற்றார்.
இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ரூ.49 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் படகு குழாம், ரூ.43 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பயிற்சி மையக்கட்டிடம், குழந்தைகள் பூங்கா, சிற்றுண்டியகம் உள்ளிட்ட ரூ.1 கோடியே 78 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- மனோரா சுற்றுலாத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகுதியாக உள்ளது. இங்கு நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் தமிழகம் அளவில் மக்கள் சுற்றுலா வந்து செல்லக்கூடிய வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மனோரா என்றால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நினைவுகள் வரும், ஆனால் எங்களுக்கெல்லாம் கருணாநிதி இங்கு வந்து தங்கி இருந்து புதையல் படத்திற்கு கதை வசனம் எழுதியது தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தி.மு.க. வரலாற்றில் மனோரா இடம் பெற்றுள்ளது.
இங்கு படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. படகில் சுற்றுலா செல்பவர்கள் பாதுகாப்பான முறையில் சென்று வர, மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனோராவை மேம்படுத்த அரசு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இப்பகுதி மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள் தவிர்க்க வேண்டும். மனோராவை பத்திரமாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், அண்ணாதுரை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா பேகம், ஒன்றியக் குழு உறுப்பினர் மீனவ ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர் நன்றி கூறினார்.
நாகர்கோவில், அக்.20-
நாகர்கோவில் பெரு விளை தெய்வி முருகன் கோவிலில் 53-வது கந்த சஷ்டி விழா வருகிற
25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல்நாள் சிறு வர் பக்த சங்கவிழாவாக காலை 6 மணிக்கு காப்பு கட் டுதல், சஷ்டி விரதம் ஆரம்பம், முருகன் பால முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய பூஜை நடக்கிறது.
26-ந்தேதி உழவர் விழாவாக முருகன் சுப்பிரமணிய அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு பஜனை, 27-ந்தேதி வியாபாரிகள் விழாவாக முருகன் வேடன் அலங் காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு ஓவியப் போட்டி, கோலப்போட்டி, பரிசு வழங்குதல், 28-ந்தேதி முருகன் ஆறுமுகன் அலங்கா ரத்தில் காட்சி அளித்தல், இரவு 8 மணிக்கு புத்தக வெளி யீட்டு விழா மற்றும் பாராட்டு நடக்கிறது.
நிகழ்ச்சியில் நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட திட்ட இயக்குனர் தனபதி பெற்றுக்கொள்கிறார். 29-ந்தேதி போர்கோல முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, மகளிர் மாநாடு நடக்கிறது.
30-ந்தேதி கந்த சஷ்டி விழாவான காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு சக்திவேல் வாங்க வருதல், மதியம் 1 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹா ரம் நடக் கிறது. சூரசம்ஹாரத்தில் யானை ஊர்வலம், சிங்காரி மேளம், மயிலாட்டம், கோலாட்டம், கதகளி ஆகி யவை நடக்கிறது. இரவு 8.30 மணிக்குராஜமன்னார் தலை மையில் சிலம்பம் போட்டி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை, கேடயம் வழங்கப் படுகிறது.
31-ந்தேதி பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம், அன்னதானம் மாலை 5 மணிக்கு சகஸ் ராம அர்ச்சனை, புஷ்பாபி ஷேகம், 6.30 மணிக்கு மணி கோல முருகன் அலங்காரத் தில் காட்சி அளித்தல், தீபா ராதனை ஆகியவை நடக் கிறது.
விழாவுக்கான ஏற்பாடு களை தெய்விமுருகன் கோவில் தலைவர் வெற்றிவே லன், கவுரவத்தலைவர் அருள் குமரன், மகளிர் மன்ற தலைவி ராஜாத்தி குமரன், லதா வேலன், லதா முருகதாஸ் மற் றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக் கள் செய்து வருகிறார்கள்.
- ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
- பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவி மற்றும் மூன்றாம் ஆண்டு பாதுகாப்பியல் மற்றும் போர் திறனியல் துறை சேர்ந்த சி.யு.ஓ சிந்துஜா இந்திய அளவில் நடைபெற்ற ஜிவி மௌலாங்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதற்கான பாராட்டுவிழா நடைபெற்றது.
விழாவிற்கு அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுசி முன்னிலை வகித்தார்.
அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் அன்வர் கபீர் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் ஹுமாயூன் கபீர், நிர்வாக அலுவலர் ரவி மற்றும் தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.
துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன் மற்றும் பேராசிரியர் ராஜா ஆகியோர் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நாத ஸுதா ரஸம் ரோகிணி நட்சத்திர இசை விழா நடக்க உள்ளது
- நாளை மாலை 6 ணிக்கு நடக்கிறது
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளு பாகல் மடத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நாத ஸுதா ரஸம் சங்கீத ஆராதனை ரோகிணி நட்சத்திர இசை விழா நடைபெறுகிறது.
இதில் வீணை இசைக் கலைஞர் சி.எஸ். ஹரிணி, மிருதங்க வித்வான் ஸ்ரேயஸ் ஸ்ரீமான், கடம்ப வித்வான் நவீன் ஆகியோர் இசை விழாவை வழங்குகிறார்கள்.
மேலும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் பரம்பரை மிராஸ் வீணை ஆர். ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.இது தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. சீனிவாசன் கூறும் போது, இன்னிசைக்கு மனதை ஆட்கொள்ளும் அபார ஆற்றல் இருக்கிறது.
அந்த வகையில் ஸ்ரீ முளு பாகல் மடத்தில் நடைபெறும் இந்த ரோகி ணி நட்சத்திர இசை விழாவுக்கு வருகை தந்து இசையுடன் ரங்கநாதர் அருளையும் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.
- அரசு பள்ளியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது
- மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி, வனிதா, சுகுணா, ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னதுரை, வார்டு உறுப்பினர் பூங்காவனம், பள்ளி ஆசிரியர்கள் தங்கபாண்டியன், தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா, ரம்யா, இளநிலை உதவியாளர் மணிகண்டன், உட்பட அனைத்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் தமிழரசி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தமிழரசன், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
- படத்திறப்பு விழா நடைபெற உள்ளது
- நாளை மறுநாள் நடைபெறுகிறது
புதுக்கோட்டை
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் முதன்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் தாயார் சந்திரா அம்மாள் படத்திறப்பு விழா குடுமியான்மலையில் நாளை மறுநாள் நடக்கிறது.
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஆன்மீக ரத்னா டாக்டர் ஏ.சி.ரவிச்சந்திரனின் தாயாரும், அருள்தாஸின் மனைவியுமான சந்திரா அம்மையார் சமீபத்தில் உயிர் நீத்தார்.
அம்மையாரது 30-வது நாள் நினைவு அனுசரிப்பும் , அம்மையாரின் படத்திறப்பு விழாவும் நாளை மறு நாள் (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகின்றது.
தொடர்ந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிகழ்வில் சர்வக்கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் செல்லர்கள், கோ- செல்லர்கள், அடிசனல் பண்டர்கள், பயனாளர்கள்ஏ ராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாண்மை
இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் குடுன்பத்தினரும், அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.
- சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- போலீசார் அணிவகுப்பு மரியாதை
கன்னியாகுமரி:
திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்க கடந்த 23-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதிதேவி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றன.
இதில் திருவனந்த புரத்தில் நடந்த நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடந்தது. நவராத்திரி விழா முடிவுற்ற பின்னர் 8-ந் தேதி அங்கிருந்து குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டது. அந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பளித்தனர்.
இந்நிலையில் நேற்று குமரி - கேரள எல்லைப்பகுதி யான களியக்காவிளையில் பக்தர்கள் மற்றும் தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் திரளாக கூடி நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் களியக்காவிளை, படந்தாலுமூடு, திருத்துவபு ரம், குழித்துறை, தபால் நிலைய சந்திப்பு வழியாக குழித்துறை மகா தேவர் ஆலயத்தை வந்த டைந்தது. அங்கு நேற்று தங்கலுக்கு பின்னர் இன்று அதிகாலையில் குழித்துறை மகாதேவர் ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி சிலைகள் வழி அனுப்பப்பட்டது.
இதில் தமிழக போலீஸ் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு அங்கிருந்து பத்மநாப புரத்திற்கு புறப்பட்டு சென்றது.இந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
பத்மநாபபுரத்திற்கு நேற்று வந்து சேர்ந்த சாமி சிலைகள் நாளை (10-ந் தேதி) அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்கு வந்து சேரும். சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சர்வதேச முதியோர் தின விழா நடைபெற்றது
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா தந்தை ரோவர் முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவன தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன நல மருத்துவர் டாக்டர் வினோத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் ரஞ்சித்குமார், வட்டார மருத்துவர் டாக்டர் சூரியகுமார் ஆகியோர் பேசினர்.
விழாவையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது, அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் மன நல ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில் முதியோர்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.
- கரூர் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா நடைபெற்றது
- மாணவ, மாணவிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்
கரூர்:
கரூர் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா நடைபெற்றது. இதில் முதலாமாண்டு மாணவி சகாய செல்வராணி லியோ சங்க தலைவராகவும், ரசியா சுல்தானா செயலாளராகவும், அய்னுல்மர்லியா பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டனர்.
விழாவின் சிறப்பு விருந்தினராக முதல் துணைநிலை ஆளுநர் லயன் இமயவரம்பன் கலந்து கொண்டு லியோ சங்க புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி சிறப்புரை வழங்கி, மரக்கன்றுகளை உறுப்பினர்களுக்கு வழங்கினார். விழாவில் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியின் தாளாளர் மோகனரங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரங்கன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பரணி பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் பயிற்சி ஆசிரியர்கள் அனைவரும் கற்பித்தல் பணியோடு, சேவை மனப்பான்மையுடன் நிகழ வேண்டும் என வாழ்த்தினார். விழாவில் சக்தி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் சசிகலா சுந்தர்ராஜன், செயலாளர் திலகவதி மோகன்ராஜ், பொருளாளர் ராணி செல்வராஜ், சாசன தலைவர் ஜெயா பொன்னுவேல், மாவட்ட தலைவர் கவிதா கார்த்தீசன், லியோ சங்கங்களின் மாவட்ட தலைவர் லயன் ரவிச்சந்திரன் மற்றும் கரூர் சக்தி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பாரத சாரணர் இயக்க மாநில தலைமையக பயிற்சியாளர்கள் சண்முக நாச்சியார், அய்யன் துரை, பூரண சந்திரன், கஸ்தூரி பாய், பிரபாவதி ஆகியோர் சிறந்த சாரணர் சேவைக்காக கௌரவிக்கப்பட்டனர். மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுசூழல் விழிப்புணர்வும், உடல் நலம் பேணி காப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் சாந்தி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- ஞாயிற்றுகிழமை மாலையுடன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.
நாகர்கோவில்:
திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழா வில் பங்கேற்க கடந்த மாதம் 23-ந் தேதி சுசீந்தி ரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகங் கள் ஊர்வலமாக சென்றன.
நவராத்திரி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கிய நிலையில் சுவாமி விக்ர கங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.
நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்துநேற்று முன்தினம் காலை கரமனை ஆரியசாலை கோயிலில் இருந்து வேளிமலை முருகன், வெள்ளிக்குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு பூஜைப்புரை மண்டபம் வந்து சேர்ந்தார்.
மாலை 4.30 மணிக்கு பள்ளி வேட்டைக்கு குமாரசாமி சரஸ்வதி மண்டபத்தில்எ ழுந்தருளினார். வேட்டைக் களத்தை மூன்று முறை சுற்றி வந்த அவர் வேட்டை முடிந்த பின்னர் மீண்டும் சரஸ்வதி மண்டபம் வந்து சேர்ந்தார். சில நிமிடங்கள் ஓய்வுக்கு பின்னர் ஸ்ரீ பத்ம நாபசுவாமி கோயிலுக்கு சென்றார்.பள்ளிவேட் டையை தரிசிக்க பூஜைப் புரை சரஸ்வதி மண்டபத் தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
மாலையில் செந் திட்டை பகவதி கோயிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனையும், குமாரசாமி யையும் கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத் தில் முன்னே எழுந்தருள செய்தனர். அங்கு மன்னர் குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் விக்கரங்கள் மீண்டும் கோயில்களுக்கு சென்றன.
நவராத்திரி விக்ரகங் களுக்கு நேற்று நல்லிருப்பு எனப்படும் ஓய்வு அளிக் கப்பட்டது. தொடர்ந்து வேளிமலை குமாரசாமி, முன்னுதித்த நங்கை அம் மன், சரஸ்வதி தேவி விக்ரகங்கள் இன்று மீண்டும் பத்மநாப புரம் புறப்பபட்டன. வழி நெடுக சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை மாலையு டன் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடைகிறது.
- முத்துமாரியம்மன் கோவிலில் உற்சவ விழா நடந்தது
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் 50ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தினந்தோறும் அம்மன் ராஜராஜேஸ்வரி, மீனாட்சி, சிவலிங்க பூஜை, ஆண்டாள், அன்னபூரணி,. சந்தானலெட்சுமி, கஜலெட்சுமி, மஹிசாசுரமர்த்தினி, சரஸ்வகி என பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு போடும் நிகழ்ச்சி விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது. விழாவில் மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. கொடையாளர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் த.ஜெயலலிதா மற்றும் கோயில் பூஜகர்கள் செய்திருந்தனர்.
- குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 60 கர்ப்பிணி பெண்க ளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
- விழாவில் புளி சதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், கீரை சாதம், காய் சாதம், தயிர் சாதம், உள்ளிட்ட பலவகை உணவு வழங்கப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 60 கர்ப்பிணி பெண்க ளுக்கு வளைகாப்பு விழா குமாரபாளையம் நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடை பெற்றது. திட்ட அலுவ லர் வித்யலட்சுமி முன்னி லையில் நடைபெற்ற விழா வில் தாய்மார்களுக்கு மாலை கள், வளையல், மஞ்சள், குங்குமம், தட்டு உள்ளிட்ட பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் புடவை இல்லாதது கண்ட சேர்மன் விஜய்கண்ணன் உடனடியாக 60 சேலைகள் வாங்கி வர சொல்லி, குத்துவிளக்கேற்றி வைத்து அனைவருக்கும் சீர்வரிசை தட்டுடன் புடைவையும் கொடுத்து வாழ்த்தினார். இதில் பெண் கவுன்சிலர்கள் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, மஞ்சள் அரிசியால் கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைத்தனர்.
விழாவில் புளி சதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், கீரை சாதம், காய் சாதம், தயிர் சாதம், உள்ளிட்ட பலவகை உணவு வழங்கப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், கனக லட்சுமி, வள்ளியம்மாள், பரிமளம், மகேஸ்வரி, சியாமளா, கிருஷ்ணவேணி, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.