என் மலர்
நீங்கள் தேடியது "நடைபயணம்"
- உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.
- இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.
இந்த நடை பயணத்தை வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் மாதவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது.
குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அலவாய்ப்பட்டி ஊராட்சி வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
- கடைக்கு செல்லும் போது துணிப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கட்டி மேடு ஊராட்சியில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின் படி உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு தூய்மை நடைபயணம் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி, சமூக ஆர்வலர்கள்,ஞாண சேகரன், கல்வி மேலா ண்மைக் குழு உறுப்பினரும் கல்வியாளருமான ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) சிவக்குமார் பேரணியை தொடக்கிவைத்து திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது, அனைவரும் கழிப்பறையை பயன்படுத்தவும், மக்கும் குப்பை, மக்கா குப்பையை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுக்கவும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தவும் தீங்கு விளைவிக்க கூடிய குப்பைகளை பாதுகாப்பாக கையாள்வது, நீர் நிலைகளில் குப்பைகளைக் கொட்டக் கூடாது, நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது, கடைக்கு செல்லும் போது துணிப்பைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேணடும் என வலியுறுத்தினார்.
முன்னதாக முழு சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் தூய்மைக் காவலர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.
பேரணியில் மாணவர்கள் பதாகை ஏந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து புறப்பட்டு கடைத்தெரு, பள்ளிவாசல் தெரு, சாலைத் தெருவழியாக பள்ளி வளாகம் சென்றடைந்தனர்.
நிகழ்வில் துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் செல்வம், ரகமத்துல்லா மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆசிரியர்கள் சந்திரசேகரன், ராஜேஸ் குட்டி, அய்யப்பன், ராஜா, முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
- கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தை குப்பை இல்லா பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் விதமாக குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம் இன்று களியக்காவிளையில் தொடங்கியது.
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு 95 சதவீதம் நடைபெற்றுள்ளது. அதனை 100 சதவீதமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அதில் பங்களித்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது அதன் 2-ம் கட்டமாக குப்பை இல்லா குமரி எனும் திட்டத்தை அறிவித்து அதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என செயல்படுத்தி வருகிறோம். மக்கள் பங்களிப்பு இருந்தால் தான் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்பதற்காக கல்லூரி மாணவர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், இளைஞர்கள் அழைத்து வாக்கத்தான் நிகழ்வை தொடங்கி உள்ளோம். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இது நடைபெற இருக்கிறது.
பிளாஸ்டிக் ஒழிப்பில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பொதுமக்கள் தாங்களாக பிரித்து வழங்கி வருகிறார்கள்.
உறிஞ்சி குழி அமைத்து சுமார் 60 சதவீதம் வீடுகளில் கழிவுகள் வெளியில் விடவில்லை. குமரி மாவட்டமானது சுமார் 6 மாதத்திற்குள் குப்பையில்லா மாவட்டமாக மாறும் சூழல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு நடைபய ணத்திற்கு மார்த்தாண்டம் லிஸ்டர் சந்திப்பில் லிஸ்டர் ஹார்ட் மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
மேலும் நடந்து வந்தவர்களுக்கு குளிர்பா னம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இயக்குநர் டாக்டர் அரவிந்த் மற்றும் லிஸ்டர் குழந்தையின்மை சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் ஆனந்தி விஜயன் ஆகியோர் அமைச்சர் மனோதங்கராஜிக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த விழிப்புணர்வு நடை பயணமானது குழித்துறை வரை சென்றது.
- உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. பள்ளி மாணவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
- இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கைச் சீமை சிலம்பக் குழுவால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 20 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்யும் சாகசம் நடந்தது. காரைக்குடி சூடாமணிபுரம் 120 அடி சாலையில் இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 190 பள்ளி மாணவ- மாணவிகள் இதில் கலந்துகொண்டு தேவர் சிலை, ராஜீவ்காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சென்று அழகப்பா கல்வி குழும மைதானத்தில் சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சோழன் உலக சாதனை புத்தக தலைவர் சண்முகநாதன் வழஙகிய சாதனை பட்டயத்தை அழகப்பா கல்வி குழும மேலாளர் காசி விசுவநாதன் மாணவர்களுக்கு வழங்கினார். சிலம்பாட்டக்குழு தலைவர் முனியாண்டி நன்றி கூறினார்.
- நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனம் உள்ளது.
- வானதிராயபுரத்தில் இருந்து இன்று நண்பகல் நடைபயணத்தை தொடங்கினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்க பணியினை தொடங்கி உள்ளது. இதற்காக புதிய அலகு அமைக்கப்பட உள்ளது. அதன்படி என்.எல்.சி. நிறுவனம் அந்த பகுதியில் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது,
எனவே மாவட்ட அதிகாரிகள் என்.எல்.சி.க்கு நிலத்தை கையககப்படுத்த வந்தனர். ஆனால் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு தங்களுக்கு குடும்பத்துக்கு நிரந்தர வேலைவழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் இதற்கு அரசு செவிமடுக்கவில்லை.
எனவே கிராம மக்களுக்கு ஆதரவாகவும், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த கோரியும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, இன்றும் , நாளையும் நடைபயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வானதிராயபுரத்தில் இருந்து இன்று நண்பகல் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆவேசமாக பேசினார். இதனை தொடர்ந்து அவர் கங்கைகொண்டான், ,வடக்குவெல்லூர், தென்குத்து, அம்மேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்றார். அவருடன் பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் சென்றனர்.
- 36 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணம் நிர்ணயம்.
- முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் நிர்ணயம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்னர் வீல் சங்கமும், வீ.கே.சி. பிரைடு நிறுவனமும் இணைந்து வருகிற 18-ந்தேதி காலை 7 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலிருந்து அனைத்து மகளிருக்கான "புடவையில் ஓர் நடைப்பயணம்", பாரம்பரிய உடைகளுக்கான கவுரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக நடத்த இருக்கிறது.
நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைக்கிறார்.
மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மேயர் சண். இராமநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டின் குழுத்தலைவர் டாக்டர். உஷா நந்தினி, தலைவர் டாக்டர். சோபியா மற்றும் இன்னர் வீல் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
இதில் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 4 கி.மீ நடைபயணமும், 36 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுவர்களுக்கு முதல்பரிசாக ரூ. 7 ஆயிரத்து 500-ம், 2-ம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரத்து 500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கி.மீ தூரம் நிர்ணயம் செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆதார் அட்டையுடன் ரூ. 100 பதிவு கட்டணத்தை இன்று மாலைக்குள் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
போட்டியன்று பதிவு செய்பவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ. 200 ஆகும்.
மேலும், கல்லூரி மாணவிகளுக்கு பதிவுக்கட்டணம் இல்லை. ஆனால், கல்லூரி அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக புடவை அணிந்து வர வேண்டும்.
இதுகுறித்த விபரங்களுக்கு நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகவடிவு தொலைபேசி எண். 9730669869 மற்றும் புவனா தொலைபேசி எண். 9894866277 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
- 500 கிலோ மீட்டர் தூரத்தை 15 நாட்களில் கடந்து வந்தனர்
- தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் தேசம் காப்போம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த மேக் இந்தியா நம்பர் 1 என்ற திட்டத்தை வலியுறுத்தி நடத்தப்பட்டது
கன்னியாகுமரி:
தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த மேக் இந்தியா நம்பர் 1 என்ற திட்டத்தை வலியுறுத்தி திருச்சி முதல் கன்னியாகுமரி வரை புரட்சி நடைபயணம் நடத்து முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 5-ந்தேதி திருச்சியில் இருந்து கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் தலைமையில் புரட்சி நடைபயணம் புறப்பட்டது. இந்த நடை பயணத்தை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா தொடங்கி வைத்தார். இந்த புரட்சி நடைபயணத்தின் நிறைவு விழா இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடந்தது. அதன்பின்னர் மாதவபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் புரட்சி நடை பயணத்தின் நிறைவு விழாகூட்டம் நடந்தது. திருச்சியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான 500 கிலோ மீட்டர் தூரத்தை இவர்கள் 15 நாட்களில் கடந்து வந்துஉள்ளனர்.
- இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது.
- நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது. அத்தியூரில் தொடங்கிய நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார். இந்த பிரசார நடைபயணம் சின்னகொள்ளியூர், சிவபுரம், ஓடியந்தல் கிராமங்கள் வழியாக வாணாபுரம் பகண்டை கூட்டுரோட்டை வந்தடைந்தது. இதையடுத்து அங்கு நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமாலை, ஆட்டோ சங்கத் தலைவர் செந்தில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் உத்தரக்கோட்டி, பாலமுருகன், அம்பிகா, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். வேளாண் விளைபொருள்களுக்கு கூடுதல் ஆதார விலை வேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின்சார சட்டத்தை திரும்பப் பெறுதல், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துத வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
- எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.
- அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டமருதூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பத்தியநாதன் மனைவி சம்மனசுமேரி (வயது 57). இவர் தனது சொந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று இருக்கிறார். திருக்கோவிலூர் செவலை ரோட்டின் வழியாக வீரட்டகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டி ருந்தபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.
இதில் சம்மன சுமேரிக்கு பின் தலையில் அடிபட்டது. உடன் அவரை திருக்கோ விலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு தி.மு.க. துணை நிற்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்
- கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார்
திருச்சி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் பா.ஜ.க.வை அகற்றுவோம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உறையூர் குறத்தெருவில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இதனை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்கு நடைபெ்றற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சிவா வரவேற்றுப் பேசினார். பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் சுரேஷ் முத்துசாமி, முருகன், பார்வதி, அஞ்சுகம். சையது அபுதாகிர், ராஜா, ராஜலிங்கம், அண்ணாதுரை. திராவிட மணி. இப்ராஹிம், முத்துலட்சுமி, கருணாகரன், சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி, மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர், கவுன்சிலர் பைஸ் அகமது, விடுதலை சிறுத்தை கட்சி அருள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஹபிபுர் ரஹ்மான், சி.பி.ஐ. மாநில குழு உறுப்பினர் ஞானதேசிகன், தி.க. மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், சி.பி.ஐ. மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் சொக்கி சண்முகம், செல்வகுமார், சிவசூரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேற்கு பகுதி துணை செயலாளர் முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், பகுதி செயலாளர்கள் நாகராஜன், இளங்கோ, தில்லைநகர் கண்ணன், காங்கிரஸ் எத்திராஜ், ம.தி.மு.க., பெல் ராஜமாணிக்கம், ஆசிரியர் முருகன், கோபாலகிருஷ்ணன், ம.ம.க. இப்ராஹிம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாற்றத்தை நோக்கி என்ற புத்தகத்தை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.
அதனை முத்தரசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-கம்யூனிஸ்ட் கட்சிகள் தைரியமாக பா.ஜ.க.வை அகற்றுவோம் என்று எதிர்த்து வருகிறது. இதற்கு தி.மு.க.வும் முழு ஆதரவை தரும். மேற்கு தொகுதியில் ஆறு நாட்கள் நடை பயணமாக சென்று மக்கள் மத்தியில் இயக்கத்தை நடத்துகிறார்கள். இதில் எங்கள் கட்சியினர் உறுதுணையாக இருப்பார்கள். இது பயணம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். சமதர்ம சமுதாயம் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே திராவிடமாடல் ஆட்சியின் நோக்கம். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய இந்த நடைபயண இயக்கத்திற்கு தி.மு.க. துணை நிற்கும்.இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
- நடைப்பயணத்தால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு களைப் பற்றி விழிப்பு ணர்வை ஏற்படுத்துவ தற்காக உலக இரத்த அழுத்த தினம் ஆண்டு தோறும் மே 17-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பாக ரத்த அழுத்த விழிப்புணர்வு நடைபயணம் இன்று நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே.இனியன், மருத்துவமனையின் மூத்த நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.ரமேஷ்பாபு, டாக்டர் அக்சயா இனியன், டாக்டர் கே.மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு இருந்து தொடங்கிய நடைபயணத்மாதை நகராட்சி மேயர் சண்.ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பொதுமக்கள், மாணவர்கள், டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடைப்பயணமாக புறப்பட்டனர்.
அப்போது நடைப்பயணத்தின் அவசியம் குறித்தும், நடைப்பயணத்தால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும், உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், அதை எவ்வாறு குணப்படுத்துவது (அல்லது) வாழ்கை முறையினால் கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து பொது மக்களுக்கு தெளிவாக விளக்கி கூறப்பட்டது.
இந்த நடைப்பயண மானது தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் வழியாக சுமார் 3 கி.மீ. சென்று மீண்டும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி நுழைவு வாயிலில் முடிவடைந்தது.
நடைப்பயணத்தில் பங்கேற்ற அனைவரும் உயர் இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாடாக வைக்கப்படும் என்ற எடுத்துக் கொண்டனர்.
நடைப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேயர் சண்.ராமநாதனுக்கு, ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே. இனியன் நினைவு பரிசு வழங்கினார்.
- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்குசி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நடைபயணம் நடத்தினர்.
- 7 குழுவினர் 2700 கி.மீ. தூரம் நடைபயணம் செய்கிறார்கள்.
மானாமதுரை
உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 7 குழுவினர் 2700 கி.மீ. தூரம் நடைபயணம் செய்கிறார்கள். இதன் ஒரு குழுவிற்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் மாவட்டத் தலைவர் வீரையா தலைமையில், செயலாளர் சேதுராமன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார், மாநில செயலாளர்கள் தங்கமோகன், சிவாஜி, மாநிலக்குழு உறுப்பினர் சிங்காரம் ஆகியோர் தலைமையில் வந்த நடைபயணக்குழுவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, துணைத் தலைவர் லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்க பூபதி, ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நடைபயண நோக்கங்களை விளக்கி மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார் பேசினார்.