என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளூர் விடுமுறை"

    • மகா மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி விடுமுறை அறிவிப்பு.
    • அடுத்த மாதம் (ஜூன்) 14ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு.

    கரூர் மகா மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி வரும் 28ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் (ஜூன்) 14ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார்.

    • மதுரை சித்திரை திருவிழாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
    • மே 12-ந்தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் வங்கிகள் மற்றும் அவசர அலுவல்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அன்றைய தினம் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் மாதம் 14-ந்தேதி (சனிக்கிழமை) விடுமுறை தினத்தை வேலை தினமாக ஈடுசெய்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    எனவே மே மாதம் 12-ந்தேதி அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் வங்கிகள் மற்றும் அவசர அலுவல்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • 2 வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    மதுரை:

    மதுரையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியது.

    இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என 2 வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதேபோல் அழகர் கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமா வடியில் எதிர்சேவை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். முன்னதாக சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை நேற்று அமைச்சர்கள் ஏ.வ.வேலு, சேகர் பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மே 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • சமயபுரம் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரகுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வருகிற 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 3-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிப்பு.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை (04.04.2025) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நாளைய விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
    • 2 சனிக்கிழமைகள் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசியில் காசிவிசுவ நாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) அன்றும், பங்குனி உத்திர திருவிழா 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு 7 மற்றும் 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.

    இந்த நாட்களில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

    மேலும், இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 26-ந் தேதி மற்றும் மே 3-ந்தேதி ஆகிய 2 சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்துடன் இணைந்த தினம்
    • கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற 12-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

    தமிழகத்துடன் குமரி இணைந்த தினத்துக்கு உள்ளூர் விடுமுறை செலாவணிமுறி சட்டத்தின்படி அறிவிக்கப்பட வில்லை என்பதால் 1-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜனவரி 4-வது சனிக்கிழமை (28.01.2023) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
    • 3-ந்தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவை யான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோட்டார் சவேரியார் பேராலய திரு தூய விழாவினை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி (சனிக்கிழ மை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவ னங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தர விடப்படுகிறது.

    3-ந்தேதி அன்று அறி விக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 ஜனவரி 4-வது சனிக்கிழமை (28.01.2023) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

    3-ந்தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவை யான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்தார்.
    • 21.1.2023 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருஉத்திர கோசமங்கை கிராமத்தில் உள்ள மங்கள நாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக இருக்கும். அதனை ஈடு செய்யும் பொருட்டு 21.1.2023 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களும் 21.1.2023 அன்று வழக்கம்போல் இயங்கும். மேலும் 6.1.2023 வெள்ளிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்தி லுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடைபெறுகிறது.
    • திண்டுக்கல் மாவட்டத்திற்கு 27-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியிருந்தார்.

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வர இருப்பதால் 27-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு அந்த மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை அரசு ஏற்று, 27-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறையை அறிவிக்க கலெக்டருக்கு அதிகாரத்தை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

    • மாணவ-மாணவிகளுக்கு 24-ந்தேதி அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும்.
    • உள்ளூர் விடுமுறை 24-ந்தேதிக்கு பதிலாக 4.3.2023 (சனிக்கிழமை) அன்று அறிவிக்கப்பட்டுள்ள (சனிக்கிழமை) பணிநாள் ஆகும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வருகிற 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

    மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூல மும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும்,

    மேலும் மாணவ-மாணவிகளுக்கு 24-ந்தேதி அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும்.

    உள்ளூர் விடுமுறை 24-ந்தேதிக்கு பதிலாக 4.3.2023 (சனிக்கிழமை) அன்று அறிவிக்கப்பட்டுள்ள (சனிக்கிழமை) பணிநாள் ஆகும்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்து உள்ளார்.

    • மாசிப்பெருந்திருவிழா 21.03.2023 தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது.
    • விடுமுறையை ஈடு செய்ய ஏப்.1-ம் தேதி பணிநாளாக செயல்படும் என கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்தாண்டுக்கான மாசி பெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்து மாரியம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ம் நாள் (12.03.2023) அன்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். 9-ம் நாள் திருவிழா அன்று (13.03.2023) மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள்.

    இதையடுத்து மாசிப்பெருந்திருவிழா 21.03.2023 தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 13-ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அன்று அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

    விடுமுறையை ஈடு செய்ய ஏப்.1-ம் தேதி பணி நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.

    ×