search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229919"

    • மதுரையில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • உலக மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி மதுரை மாவட்ட குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்கம் சார்பில் நடந்தது.

    வாடிப்பட்டி

    உலக மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி மதுரை மாவட்ட குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்கம், மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல் அறக்கட்டளையுடன் இணைந்து பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளம் சமுதாய கூடத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு அறக்கட்டளை தொழில் மேலாளர் நாகராஜ பாண்டியன் தலைமை தாங்கினார். சமூக பொறுப்பாளர் சுஜின் முன்னிலை வைத்தார். குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்க மேலாளர் டாக்டர் பிரதீபன், திட்ட அலுவலர் ஆஷீபா ஆகியோர் மாதவிடாய் சுகாதார மேலாண்மை பற்றி விளக்கிப் பேசினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • இந்தியா - ரஷ்யா தொழில் மேம்பாடு குறித்த கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் நடந்தது.
    • சென்னை அருகே கடல்வழி பயணத்திற்கு புதிதாக ஒரு முனையத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    திருப்பூர்:

    இந்தியா - ரஷ்யா தொழில் மேம்பாடு குறித்த கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் நடந்தது. கருத்தரங்கில் தென்னிந்தியாவின் ரஷ்ய துணை தூதர் ஓலேக் அவ்தீவ் பேசுகையில், இந்தியா - ரஷ்யா இடையே வர்த்தகம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பொருட்கள் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அது போல ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கும் இறக்குமதி செய்யப்படுகிறது.தொழில் வர்த்தகத்தில் போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி, பண பரிமாற்றம் உள்ளிட்டவைகளில் உள்ள இடர்பாடுகளை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை அருகே கடல்வழி பயணத்திற்கு புதிதாக ஒரு முனையத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த துறைமுகம் செயல்பாட்டிற்கு வந்தால் செலவினங்கள் குறைந்து ஏற்றுமதி - இறக்குமதி வேகமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் அடையும் என்றார்.

    • எஸ்.புதூரில் காய்கறி, மிளகாய் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் காய்கறி மற்றும் மிளகாய் உழவர் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் காய்கறி மற்றும் பப்பாளி பழங்கள் வெகுவாக விளைகின்றன. அதனை முறையாக தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    விவசாயிகளுக்கு பய னுள்ள வகையில், பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து, திறன்மிக்க வல்லுநர்களை கொண்டு இந்த கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படவுள்ளது. இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு மற்ற விவசாயிகளுக்கும் இது குறித்து எடுத்துரைத்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த கருத்தரங்கில் பல்வேறு வகையான விதைகளை விவசாயி களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் டாக்டர்கள் செந்தில்குமார், சங்கர், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, போஸ், மண்டல ஒருங்கி ணைப்பாளர் (விதைகள்) ஜீவானந்தம், வேளாண்மை அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழி மரகதம், புவனேசுவரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாணவர்கள் சிறந்த நிர்வாகியாக ஆளுமை பண்புகளை மேம்படுத்த வேண்டும்
    • சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி ஸ்ரீ பிரவீன் ராஜ் பேச்சு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் பொறியியல் கல்லூரியில் முதுநிலை வணிக மேலாண்மை துறையினரின் "வி- உற்ஸவம் 2K23" நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாணவி பெர்வின் மனோ வரவேற்று பேசினார். முதல்வர் டாக்டர் டயானா க்றிஸ்டில்ட்டா தொடக்க உரையாற்றினார்.

    இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் விஞ்ஞானி ஸ்ரீ பிரவீன் ராஜ் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், மாணவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆக வேண்டும். அதற்கு அவர்கள் தங்களுடைய ஆளுமை பண்புகளை மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த நிர்வாகியாக ஒரு சிறந்த தலைவனாக விரும்புகிறவர் தம்முடைய ஆளுமை அதிகாரத்தை பயன்படுத்துவதை விட பிற மனங்களை வசீகரித்து செயல்படுபவராக, செயல்படுத்தும் ஆற்றல் படைத்தவராக இருப்பது அவசியம் என்றார்.

    விழாவில் 15 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பொருட்களை விளம்பரப்படுத்துதல், புதிதாக ஒரு பொருளை அறிமுகம் செய்தல், கருத்து விளக்க காட்சி, நடனம் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெறுவது குறித்த கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சலாவுதீன் தொடங்கி வைத்தார்.துணைமுதல்வர் சேக் முன்னிலை வகித்தார். எந்திரவியல் துறைத்தலைர் கணேஷ் வரவேற்றார். பன்னாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் திறமை மேம்பாட்டுதுறை மேலாளர் வேலு, பயிற்சி மேலாளர் பிரபு, தொழில்துறைப்பிரிவு மேலாளர் பழனி திருவேங்கடம், தொழில்துறைப்பிரிவு மேலாளர் ஹரி ஆகியோர் பேசினர். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் முகம்மது சதக் ஐ.டி.ஐ., ராமேசுவரம் உதயம் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து கலந்துகொண்ட 180 மாணவர்கள் வேலை வாய்ப்பு நேர்முக தேர்வு எழுதினர். இதில் 126 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.19 ஆயிரத்து 500-டன் தங்குமிடம் வழங்கப்படும் என பன்னாட்டு நிறுவனத்தின் திறமை மேம்பாட்டுத்துறை மேலாளர் வேலு தெரிவித்தார். முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

    • நமது நாட்டின் பொருளாதாரம் தற்சார்பு நிறைந்ததாக வளர பாடுபட வேண்டும்.
    • தொழில் சார்ந்த கல்வியை மாணவர்கள் கற்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூயில் கணினி மென்பொருள் உருவாக்கம் என்னும் தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.

    இதற்கு கல்லூரியின் தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்லூரியின் முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.

    கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்தன் அனைவரையும் வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

    திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி கணினி துறை பேராசிரியர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தாளாளர் பெருமாள் பேசுகையில் மாணவர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பம், சர்வதேச சந்தைப்படுத்தும் திறன் ஆகியவற்றை பயன்படுத்தி நமது நாட்டின் பொருளாதாரம் தற்சார்பு நிறைந்ததாக வளர பாடுபட வேண்டும். தொழில் சார்ந்த கல்வியை மாணவர்கள் கற்க வேண்டும் என வாழ்த்தினார்.

    பேராசிரியர் பிரபாகரன் பேசும் போது தகவல் தொழில் நுட்ப துறையே இந்தியாவில் பிற துறைகளை விட மிகவும் வேகமாக முன்னேற்றங்களை கண்டு வருகிறது.

    இந்தியாவில் உருவாக்கப் படும் மென்பொருட்களே சர்வதேச அளவில் கல்வி துறையிலும், தொழில் துறையிலு தகவல் தொழில் நுட்ப பரிமாற்றத்திலும் பயன்பட்டு வருகிறது. நமது மாணவர்களின் நுண்ணறிவு திறனை பலர் புதிய மென்பொருட்களை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைகிறது. எனவே தான் பன்னாட்டு அறிவியல் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இன்று இந்தியர்களே பதவி வகிக்கிறார்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தொடக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 450 மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கணினி பேராசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நெல்லை இந்துக்கல்லூரி உதவி பேராசிரியர் வேல்மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • ‘டிஜிட்டல் சிந்தனை திறனுடனான பெருந்தரவு பகுப்பாய்வு’ பற்றி செல்வக்குமார் சாமுவேல் உரையாற்றினார்.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) கணினி பயன்பாட்டு துறையில் வயர்லெஸ் மற்றும் மொபைல் நெட்வொர்க் பாதுகாப்பு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவண பிரியா அம்பா ஏற்பாட்டில், கல்லூரி இயக்குனர் மேஜர் சந்திரசேகவன் வழிகாட்டுதலுன் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கமலா, கணினி பயன்பாட்டுத்துறை உதவி பேராசிரியர் பார்வதி தேவி ஆகியோர் வரவேற்று பேசினர். சிறப்பு விருந்தினராக நெல்லை இந்துக்கல்லூரி அறிவியல் துறை உதவி பேராசிரியர் வேல்மணி கலந்து கொண்டு சுற்றுப் புற நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். 2-வது அமர்வில் ஆசிய பசிபிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக இணை பேராசிரியர் செல்வக்குமார் சாமுவேல், 'டிஜிட்டல் சிந்தனை திறனுடனான பெருந்தரவு பகுப்பாய்வு' பற்றி உரையாற்றினார். 3-வது அமர்வில் சுஜாதா கிருஷ்ணமூர்த்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சீனா 'கம்பியில்லா தொலைத்தொடர்பில் நிகழ் ஆராய்ச்சிகள்' பற்றி உரையாற்றினார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 55 மாணவிகள், ஆராய்ச்சி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டதுடன் ஆராய்ச்சி கட்டுரைகளையும் வழங்கினர். முடிவில் கணினி பயன்பாட்டுத்துறை உதவி பேராசிரியர் சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார்.

    • டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது ஒரு பணம் செலுத்தும் முறையாகும்.
    • இது பணம் செலுத்துவதற்கான உடனடி மற்றும் வசதியான வழியாகும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் சென்னையை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கீர்த்தனா தங்கவேல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் டிஜிட்டல் பண பரிவர்த்த னையால் பணத்தை இழந்துபாதிக்க ப்பட்டவர்களுக்கு ஆலோ சனைகளும், வழிகாட்டு தல்களும் செய்யப்பட்டது.

    கருத்தரங்கில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்தியாவில் ஒவ்வொரு நபரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வெவ்வேறு வழிகளை பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது.

    டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது ஒரு பணம் செலுத்தும் முறையாகும்.

    இதில் பணம் செலுத்துபவர் மற்றும் பெறுபவர் இருவரும் டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணத்தை அனுப்பவும், பெறவும் செய்கின்றனர்.

    இது பணம் செலுத்துவதற்கான உடனடி மற்றும் வசதியான வழியாகும்.

    இது தவிர, மோசடி பேர்வழிகளால் பொதுமக்கள் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையில் ஏமாற்றப்படும்போது, சைபர் கிரைம் தடுப்பு அமைப்புகள் வழியாகவும் கண்டறிந்து பொதுமக்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது.

    இதனை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இந்த கருத்தரங்கில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்தால் செய்வதோடு நடவடிக்கை எடுக்க பரிந்து ரையும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    • குளித்தலையில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லுாரியில் எக்ஸ்னோரா, பொதுப்பணித்துறை, நீர் வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் குழுமம் சார்பில், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீர் வளத்துறை பொறியாளர் ராஜகோபால் கருத்துரை வழங்கி பேசினார். தொடர்ந்து நீர் நிலைகள் பராமரிப்பில் இளையோரின் பங்கு என்ற தலைப்பில் நீர்வளத்துறை முன்னாள் பொறியாளர் சேகர், தமிழாய்வு துறை தலைவர் ஜெகதீசன், திருச்சி எக்ஸ்னோரா மண்டல தலைவர் விமல் ராஜ் கருத்துரை வழங்கினர். இதில் கல்லுாரி எக்ஸ்னோரா மாணவர்கள், பிற துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


    • இவ்விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
    • 25 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    மொரப்பூர், 

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மற்றும் பண்னாட்டு வாணிகத்தின் புதுமையான யுக்திகள் என்ற தலைப்பில் பண்னாட்டு தேசிய கருத்தரங்கு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகனராசு தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சாமிக்கண்ணு, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் பொன் வரதராஜன், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளியின் தாளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் குணசேகரன் வரவேற்று பேசினார். பண்னாட்டு தேசிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கிழக்கு ஆப்பிரிக்கா எத்தியோபியாவில் உள்ள சமரா யுனிவர்சிட்டியில் அக்கவுண்டிங் மற்றும் பைனான்சிஸ் துறை பேராசிரியர் சின்னையா அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.

    இவ்விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.இதில் 25 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக் கருத்தரங்கில் கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் ராமு, வெற்றி செல்வன், குணசீலன், நாகராஜன், கணேசன், தமிழரசு, பரமசிவம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    • விருதுநகரில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • மாணவர்களின் சந்தேகங்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதிலளித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர்- நுகர்வோர் நீதிபதி சேகர் தலைமையில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் மாவட்ட நுகர்வோர் ஆைணயத்தில் நடந்தது.

    மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர்கள் சவுந்தரராஜன், சாந்தி ஆண்டியப்பன், கிருஷ்ணப்பேளளரி காமாக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அலுவலக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டடத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை விளக்கினார். நுகர்வோர் ஆணையத்தில் எவ்வாறு நுகர்வோர் பயனடையலாம்? என்பதை பற்றியும் விளக்கமளித்தார்.

    மாணவர்களின் சந்தேகங்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதிலளித்தனர். எந்த ஒரு நுகர்வோரும் எளிமையாக வழக்கு தொடரலாம் என்றும் கூறினர்.

    • இயற்பியல் துறை சார்பாக கருத்தரங்கு நடந்தது.
    • தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் கதிரவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    தருமபுரி, 

    தருமபுரியை அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.

    இதன் தொடக்க விழாவில் பெரியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் கொச்சின் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராஜப்பன், சென்னை செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக புலமையர் பேராசிரியர் குணசேகரன், தெலுங்கானா மாநில வாரங்கல், கக்காட்டியா பல்கலைக்கழக பேராசிரியர் ரமணா ராவ், பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வ பாண்டியன், பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து சென்னை ஐ.எஸ்.பி.ஏ. அறிவியல் கழகத்தின் சார்பாக ஆந்திர பிரதேச செஞ்சூரியன் பல்கலைக்கழக பேராசிரியர் சாந்தம்மாவுக்கு சிறந்த பெண் விஞ்ஞானி விருதும், கொச்சின் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜப்பனுக்கு சிறந்த விஞ்ஞானி விருதும், கோவை என்.ஜி.பி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத்துக்கு டாக்டர் குணசேகரன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் துறை தலைவருமான பேராசிரியர் செல்வ பாண்டியன் வரவேற்புரை வழங்கினார். இறுதியாக இக்கருத்தரங்கின் துணைத் தலைவர் முனைவர் பிரசாத் நன்றி உரை வழங்கினார். 

    ×