search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229948"

    • பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    • அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த பட்டம்பாளையம், காட்டுப்பாளையம், பருத்திக்காட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் பட்டம்பாளையத்தில் ஒரு தென்னை மரம் முறிந்து விழுந்தது. ஒரு பனை மரம் வேரோடு சாய்ந்தது. இதுபோல் பருத்திக்காட்டுப்பாளையம் பகுதியில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதுபோல் சுற்றுப்புற பகுதிகளில் வாழை மரங்களும் சேதமானதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

    சேவூர் அருகே பொங்கலூர் ஊராட்சியில் பகுதியில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்கள் மழை அவ்வப்போது பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் பொங்கலூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் தோட்டங்களில் வாழை மரங்கள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 5000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது.

    மேலும் பொங்கலூர் புது காலனியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. மேலும் அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200 -க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன. இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது சேதமடைந்துள்ள வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவிவசாயிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது.
    • குடியிருப்பில் மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., டிவி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பழுதாயின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது. பலத்த காற்றினால் அப்பகு தியில் உள்ள மரக்கிளையில் மின் கம்பி உரசியது. இத னால் அப்பகுதி குடியி ருப்பில் மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., டிவி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பழுதாயின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து, அங்கு வந்த மின்வாரிய ஊழி யர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின் கம்பியில் உரசிய மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். பேட்டை, நல்லியாம்பா ளையம் மற்றும் சக்ரா நகர் பகுதிகளில் மின் கம்பிகளில் மரக்கிளை உரசி வருவதால் அப்பகுதியில் உள்ள மரக்கி ளைகளை மின்வாரியத்தி னர் அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி ஊஞ்சபாளையம் பகுதியில் வசிப்பவர் சிவக்குமார்(வயது 42). இவர் அந்தப் பகுதியில் குடிசை வீட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லேசாக பற்றிய தீ குடிசை வீடு என்பதால் மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள், கட்டில் போன்றவை எரிந்து சாம்பலாகின. இதற்குள் அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.

    • மின்னல் தாக்கியதில் தென்னை மரம் சேதம் அடைந்தது.
    • மீன்சுருட்டி பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து பெய்த இந்த மழையின் போது காற்று, இடி, மின்னல் ஏற்பட்டது. இதில் காடுவெட்டி வடக்கு தெருவில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மனைவி அரசிளங்குமாரி (வயது 45) என்பவரின் வீட்டின் முன்பு இருந்த தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மீன்சுருட்டி, பாப்பாக்குடி, காடுவெட்டி, இறவாங்குடி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

    • காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வாைழ மரங்கள் சாய்ந்தன
    • பாதிக்கப்பட்ட விவசாயிளுக்கு நிவாரணம் வழங்கிட கோரிக்கை

    தொட்டியம்,

    திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகுளம், சித்தூர், சீனிவாசநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுருந்தனர். இந்நிலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் காற்றில் வேருடன் சாய்ந்து வாழை மரங்கள் பாதியாக உடைந்ததால் விவசாயிகளுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏராளமான மயில்கள் வந்து கொத்தி தின்பதால் பயிர்கள் நாசமடைகின்றன
    • மயில்கள் வராமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

    கரூர்,

    கரூர் நொய்யல், அத்திப்பாளையம், குப்பம், கோம்புப்பாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், ஒரம்புப்பாளையம் பேச்சிப்பாறை, நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, பழமாபுரம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்த பகுதிகளில் ஏராளமான மயில்கள் வருவதால் பயிர்களை மயில்கள் கொத்தி நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே மயில்கள் இப்பகுதிக்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முத்தாள், சங்கர் ஆகியோரது கூரை வீடு மின் கசிவின் காரணத்தால் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
    • மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு அரசு வழங்கிய 5 ஆயிரம் பணம், மற்றும் நிவாரணம் வழங்கிஆறுதல் கூறினார்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே கொடிமா கிராமத்தை சேர்ந்த முத்தாள், சங்கர் ஆகியோரது கூரை வீடு மின் கசிவின் காரணத்தால் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு அரசு வழங்கிய 5 ஆயிரம் பணம், மற்றும் அரிசி ,மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பு, பிளாஸ்டிக் குடம், பக்கெட் பாய், தலையணை, வேட்டி, சேலை பெட்ஷீட், காய்கறி கள், மற்றும் ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் ரூ. 3 ஆயிரம் பணம் நிவாரணமாக வழங்கி ஆறுதல் கூறினார்.

    நிகழ்ச்சியில் பா.ம.க. மயிலம் ஒன்றிய செயலாளர் சண்முகம் ஒன்றிய தலைவர் இளவழகி மற்றும் கட்சி நிர்வாகிகள் செங்கேணி, ஆட்டோ தேசிங்கு, ஜீவா, பாலு, தனசேகர் தன்ராஜ், ராஜா, முனுசாமி, ஜெய மூர்த்தி சரவணன், சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் காவிரி பாலம் மிகவும் பழமையான பாலம் ஆகும். இந்த பாலத்தின் வழியாக தான் ஆரம்ப காலத்தில் பஸ் போக்கு வரத்து மற்றும் கனரக போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பாலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்தது. இதனை அடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    கனரக வாகனங்கள், பஸ் உள்ளிட்டவை மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள புது பாலம் வழியாக சென்று, வருகிறது.

    இந்தப் பாலத்தின் இருபுறத்திலும் கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு சுற்றுலா வருப வர்கள் மற்றும் அந்த வழி யாக செல்பவர்கள், இந்த பாலத்தின் மீது நின்று காவிரி ஆற்றின் அழகினை ரசித்து செல்வர். இந்த நிலையில், பாலத்தின் தடுப்புகளில் உள்ள இரும்பு கம்பிகள் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் தடுப்பு களில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது.

    எனவே சிறுவர்கள், பாலத்தின் மீது நின்றி ருக்கும்போது தவறி ஆற்றில் விழ வாய்ப்புகள் உள்ளது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் இதில் தவறி விழ வாய்ப்புள்ளது.

    நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்களின் பாது காப்பினை உறுதி செய்ய வேண்டும் என, அந்த பகு தியைச் சேர்ந்தபொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு போதை ஆசாமிகள் அட்டகாசம் உள்ளது.
    • மர்ம நபர்கள் கல் மற்றும் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து உடைத்திருப்பது தெரிந்தது.

    உடுமலை:

    கோவை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் உடுமலை கிளை பசுபதி வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளவர்கள் நகை கடன் ,பயிர் கடன் பெறவும் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் ஏராளமான வாடிக்கையாளர் வந்து செல்கின்றனர்.

    நேற்று முன் தினம் வங்கி அலுவலர்கள்வங்கியை பூட்டி சென்றனர். நேற்று காலை வங்கியைத் திறக்க வந்த போது வங்கி முன் உள்ள ஏடிஎம். மையத்தின் கண்ணாடி உடைந்து கிடந்தது. மர்ம நபர்கள் கல் மற்றும் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து உடைத்திருப்பது தெரிந்தது. இது குறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

    வங்கிக்கு எதிரில் வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பிரதான ரோடான பசுபதி வீதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவிலும் மது விற்பனை முறைகேடாக நடந்து வருவதால் போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறி உள்ளது. பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு போதை ஆசாமிகள் அட்டகாசம் உள்ளது.

    எனவே இந்த கடையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது ஏடிஎம். மையத்தை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடையை உடனடியாக மாற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நான்கு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது

    அகரம்சீகூர்,

    அகரம்சீகூர் அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வசிஷ்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்திற்கும், அங்கனூர் கிராமத்திற்கும் இடையே ஓடும் சின்னாற்றில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் சில மாதங்களாக இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இரவு நேரங்களில் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்து விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை உடனடியாக இந்த பாலத்தின் சேதமடைந்த பகுதிகளை சரி செய்து தர இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இளங்கோவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென்று தீ பிடித்து எரிந்தது.
    • இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர், சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் இளங்கோவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர், சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீடு மற்றும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

    தீவிபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவியை சங்காரபுரம் தாசில்தார் சரவணன் வழங்கினார்.

    • இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார்.
    • கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார். இந்த நிலையில் இளையராஜா, கனகராஜை வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்திவிட்டார்.   சம்பவத்தன்று கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட இளையராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், அருள், வேல் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×