என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி பலி"

    • அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் முருகன் மீது மோதியது.
    • உயிரிழந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த கிளார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 64). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு குமரகோட்டம் முருகன் கோவில் அருகே மேற்கு ராஜ வீதியில் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் முருகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார். உயிரிழந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவரான அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆனந்த் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

    • பால வாடியை சேர்ந்த முத்து (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் கொளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே மாமரத்து காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்த மோட்டார் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து அதன் பழுதை நீக்கி, சரி செய்வ தற்காக கோவிந்த பாடியை சேர்ந்த மெக்கானிக் ராமசாமி (40) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு மாமரத்துகாடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    இதே போல பால வாடியை சேர்ந்த முத்து (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் கொளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கொளத்தூர் அருகே கோவிந்தபாடியை அடுத்த விநாயகபுரம் என்ற இடத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்தவிபத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம், ராமசாமி ஆகியோர் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாப மாக உயிரிழந்தார். தொடர்ந்து ராமசாமி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் சிகிச்ைச பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார்.
    • அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும் என்றார்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கோணங்கிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 35). பட்டதாரியான இவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முனுசாமி தன்னுடைய விவசாய நிலத்திற்கு விவசாயத்திற்கான பூந்தோட்ட மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி மாதா மாதம் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கடந்த மூன்று மாத காலமாக மின் மோட்டாரை அதிகளவில் பயன்படுத்தாமல் பூந்தோட்ட மின் இணைப்பிற்கு மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

    அதனால் மின்வாரிய ஊழியர்கள் முனுசாமியின் தோட்டத்தில் இருந்த மின் இணைப்பினை கடந்த 20 நாட்களுக்கு முன் துண்டித்துள்ளனர். பின்னர் தன்னுடைய மின் இணைப்பிற்கான கட்டணம் மற்றும் அபராத தொகை உள்ளிட்ட அனைத்தையும் செலுத்தியுள்ளார்.

    மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும் என்றார்.

    இதனால் விவசாயி முனுசாமி மின்சார டிரான்ஸ்பார்மர் இயக்கத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பினை கொடுக்க முயற்சித்துள்ளார்.

    அப்போது அந்த மின் இணைப்புக்கு மேலே உள்ள எச்.டி. இணைப்பை கவனிக்காததால் முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்து அவர் காயம் அடைந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் முன்பு இருந்த மாமரத்தின் கிளைகள் அதிகளவில் படர்ந்து இருந்ததை பார்த்தார்.
    • திடீரென எதிர்பாராத விதமாக கிருஷ்ணசாமி மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    கோவை,

    மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 42). விவசாயி.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டின் முன்பு இருந்த மாமரத்தின் கிளைகள் அதிகளவில் படர்ந்து இருந்ததை பார்த்தார். அவற்றை வெட்ட முடிவு செய்தார்.உடனே மரத்தின் மீது ஏறி மரகிளைகளை வெட்டினார்.

    அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கிருஷ்ணசாமி மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கிருஷ்ணசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    • இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார்.

    வேப்பூர், நவ. 16-

    வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 54. இவரது வயலில் மின் அழுத்த கம்பி தாழ்வாக செல்வதாக, 2 நாட்களுக்கு முன் வேப்பூர் துணை மின் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வயலில் சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிரை பார்வையிட ராமசாமி சென்றார். ராமசாமி, வயலுக்கு சென்று பல மணிநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் செல்வகுமார், இரவு 7:30 மணியளவில் வயலுக்கு சென்று அவரை தேடினார்.

    அப்போது, அறுந்து விழுந்த மின்கம்பியை ராமசாமி மிதித்து, மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த அப்பகுதி கிராம மக்கள் சிலர், இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார். பின்னர், 10:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

    • தோட்டத்தில் யானை மற்றும் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பால்பாண்டி தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.
    • சூர்ய பிரகாஷ் தனது தோட்டத்துக்கு தண்ணீர் திறந்து விட சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வேலியில் அவரது கால் பட்டு தூக்கி வீசப்பட்டார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் மல்லிங்கர் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் சூர்ய பிரகாஷ் (வயது 30). இவருக்கு தேவாரம் மேற்கு மலையடிவாரத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இதற்கு அருகே பால்பாண்டி என்பவருக்கும் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் யானை மற்றும் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பால்பாண்டி தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.

    நேற்று இரவு சூர்ய பிரகாஷ் தனது தோட்டத்துக்கு தண்ணீர் திறந்து விட சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வேலியில் அவரது கால் பட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சூரிய பிரகாசுக்கு பிரியங்கா என்ற மனைவியும் 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

    • செல்வராஜ் (வயது 50). விவசாயியான இவர், கடந்த 26-ந் தேதி நாமக்கல் அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஏத்தாபாளையம் தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). விவசாயியான இவர், கடந்த 26-ந் தேதி நாமக்கல் அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் காயமடைந்த அவரை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்த விவசாயி பலியானார்.
    • மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கீழே இறங்க இவரைப் பார்த்து வேகமாக வந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55) விவசாயி . இவர் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள புளிய மர கிளைகளை வெட்ட மரத்தில் ஏறினார். இந்நிலையில் மரத்தில் இருந்த குரங்கு ஒன்று கீழே இறங்க இவரைப் பார்த்து வேகமாக வந்தது. அப்போது தண்டபாணி குரங்கு தன்னை கடிக்க வருகிறது என்று மரத்திலிருந்து கீழே குதித்தார்.

    இதில் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் தண்டபாணி யைமீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தண்டபாணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று மோதியது.
    • மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள சிக்கதிம்மன அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 67).

    இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை சென்ற போது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த மாரியப்பனை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராசாம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது
    • மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியில் இறந்ததாக கூறினர்

    கொடுமுடி,

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (58). விவசாயி. இவர் நேற்று தனது தோட்டத்தில் உள்ள மாடுகளில் இருந்து பாலை கறந்து சாலைப்புதூரில் உள்ள பால் சொசைட்டிக்கு 2 சக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் சந்திரசேகர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியில் இறந்ததாக கூறினர்.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வரதராஜன் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி, நஞ்சையில் உழவு ஓட்டி கொண்டிருந்தார்.
    • வரத ராஜன் கேஜ்வீல் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கச்சி மயிலூர் கிராம த்தை சேர்ந்தவர் வரதராஜன்,(வயது 41.) இவர் நேற்று தனது வயலில் டிராக்டரில் கேஜ்வீல் மாட்டி, நஞ்சையில் உழவு ஓட்டி கொண்டிருந்தார். இந்நிலையில், மாலை வயலில் உழவு ஓட்டி க்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் முன் பகுதி தூக்கிக்கொண்டு தலை கீழாக கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வரத ராஜன் கேஜ்வீல் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வரதராஜன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மீன் வாங்கிக் கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் கபிலர்மலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • பால் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே

    உள்ள வி.புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் சோம சுந்தரம் (வயது 45) விவசாயி. இவர் ஜேடர்பாளையம் பகுதியில் மீன் வாங்கிக் கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் கபிலர்மலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு‌ பகுதி யில் சென்றபோது, கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சோம சுந்தரத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். அதிவேகமாக வந்துவிபத்தை ஏற்படுத்திய மினி ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததில் பால்‌ கேன்கள் சாலையில் விழுந்து, பால் அனைத்தும் சாலையில் ஆறாக ஓடி வீணானது. மேலும் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவி னுள் சிக்கி இருந்த ஓட்டுநர் குணசேகரனை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டனர். குணசேகரன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் ஜேடர்பாளையம் போலீ சாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் இறந்த சோமசுந்தரத்தின் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மது போதையில் மினி ஆட்டோவை ஒட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சோழசிராமணியைச் சேர்ந்த குணசேகரனை (30) போலீசார் கைது செய்து, மினி ஆட்டோவை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    ×