search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபகரணம்"

    • மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது.
    • மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவ மனைகளும் இங்கு ஏராளம். இருந்த போதிலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் நோயாளிகள் அதிக அளவில் வருகிறார்கள். திருவனந்தபுரம் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் ஆஸ்பத்திரிகளை போன்று நவீன மருத்துவ வசதிகள் இருக்கின்றன. இதனால் வசதி படைத்த வர்கள் கூட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற விரும்பு கின்றனர்.

    இப்படிப்பட்ட சூழலில் கேரள மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரு சிக்கலான நிலை உருவாகி இருக்கிறது. கேரள மாநில அரசு கடந்த சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இது இந்த மாத தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் எதிரொலித்தது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு நாட்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மாதம் அது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டது. பல துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிதி நெருக்கடி மருத்துவத் துறையையும் பாதித்துள்ளதாக தெரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருந்து விநியோகத்தில் ஏராளமான வினியோகஸ்தர்கள் ஈடுபடுகின்றனர்.

    அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை அரசு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வழங்கி வந்தபடி இருந்தது. இந்நிலையில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை பல மாதங்களாக மாநில அரசு வழங்காமல் உள்ளது.

    2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.143கோடி தொகையை விநியோகஸ்தர்களுக்கு மாநில அரசு வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவ னந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.50கோடி வரை பாக்கி வைத்துள்ளது.

    அதேபோல் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ17.55 கோடியும், கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரூ23.14 கோடியும், எர்ணாகுளம் பொது மருத்துவமனை ரூ10.97 கோடியும், கோழிக்கோடு பொது மருத்துவமனை ரூ3.21 கோடியும் பாக்கி வைத்துள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனைகளும் கொடுக்க வேண்டிய பணம் கோடிக்கணக்கில் பாக்கியாக உள்ளது.

    தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு அறுவை சிகிச்சை நிறுவன விநியோகஸ்தர்கள் மாநில அரசை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க அரசு நடவ டிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த அறுவை சிகிச்சை உபகரண நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் அந்தந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கிதொகையை வருகிற 31-ந்தேதிக்குள் கட்ட தவறி னால், உபகரணங்கள் சப்ளை நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதம் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை மருந்து நிறுவனங்கள் நிறுத்தியது. அதன் எதிரொலியாக அறுவை சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அங்கு இருதய அறுவை சிகிச்சைகள் ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. பின்பு இரண்டு மாத நிலுவை தொகையான 6 கோடி ரூபாயை அரசு செலுத்தியபிறகே விநியோ கஸ்தர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை உபகரணங்களை சப்ளை செய்தனர். பின்பு தான் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெற தொடங்கின.

    இந்தநிலையில் தற்போது அறுவை சிகிச்சை உபகரணங்கள் நிறுவன விநியோகஸ்தர்கள் சப்ளையை நிறுத்துவோம் என்று கூறி இருப்பதால் தற்போது மீண்டும் பிரச்சினை உருவாகி இருக்கிறது.

    அவர்கள் கூறியிருப்பது போல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் சப்ளையை நிறுத்தினால் மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி களில் ஏப்ரல் மாதம் முதல் அறுவை சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தட்டுப் பாடு ஏற்படும்.

    இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நோயா ளிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.

    தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு நோயாளிக்கும் தேதி குறிப்பிடப்பட்டே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வெகுநாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையே நிலவி வருகிறது.

    இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்வது முற்றிலும் தடைபடும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

    அறுவை சிகிச்சை நிறுவனங்களின் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முற்றிலுமாக வழங்கி, பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    • ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க ப்பட்டது.

    தஞ்சாவூர்:

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை செவித்திறன் குறைபா டுடையோர் மேல்நிலை ப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலை மையாசிரியர் சக்கரவர்த்தி, ஜோதி அறக்கட்டளை குழுவினரிடம் இருந்து கல்வி உபகரணங்களை பெற்றுக்கொண்டனர்.

    முன்னதாக செவித்திறன் குறைபாடுடைய மாணவ- மாணவிகள், தங்களது ஆசிரியர்களுக்கு மலர்கள், இனிப்புகள் கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும், அனைத்து ஆசிரி யர்களுக்கும், பணியா ளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாணவர்கள் அனைவரு க்கும் நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க ப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பா ர்வையாளர் கல்யாணசு ந்தரம் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உடுமலை தீயணைப்பு துறை உபகரணங்களுடன் தயாராக உள்ளது.
    • தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் படி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சென்னை இயக்குனர் உத்தரவின் படியும் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி இரா. அப்பாஸ் அறிவுறுத்தலின்படி உடுமலை தீயணைப்பு நிலைய அதிகாரி கோபால் தலைமையில் நேற்று அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் சோதனை செய்யப்பட்டது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உடுமலை தீயணைப்பு துறை உபகரணங்களுடன் தயாராக உள்ளதாக நிலைய அதிகாரி தெரிவித்தார்.

    • கவுசல்யா என்ற தடகள வீராங்கனைக்கு வழங்கினார்.
    • அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி முதி யோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டாக் கோருதல், விதவை உதவித் தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித் தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனு தவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 339 மனுக்களை பொதுமக்களிடமிருந்தும், 32 மனுக்களை மாற்றுத்திற னாளிகளிடம் இருந்தும் மொத்தம் 371 மனுக்களை பெற்றார்.

    மேலும் 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் 30- ந் தேதி வரை உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக் வாண்டோ சாம்பியன்சிப் போட்டிகளில் தமிழகம் சார்பில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சுதேஷ்னாவை மாவட்ட கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 5 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வறுமை யில் வாழும், தாகம் தீர்த்தபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கவுசல்யா என்ற தடகள வீராங்கனைக்கு தேவை யான விளையாட்டு உபகர ணங்கள், விளையாட்டு சீருடைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • கோடியக்–கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • மீன்பிடி உபகரணங்களை பறித்து கொண்டதுடன் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன், பாலசுப்பிரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்தி, முருகன் ஆகிய 6 பேரும் பைபர் படகில் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் அனைத்து மீன்பிடி உப–கரணங்களையும் பறித்துக் கொண்டதுடன், இரும்பு பைப்பால் கொடூ–ரமாக தாக்கியுள்ளனர்.

    இதில் 6 மீனவர்களும் காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    நேற்று கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின்பு மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கிருந்து மீனவர் முருகன் தவிர்த்த மற்ற 5 மீனவர்களும் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.

    அவர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, பேரூராட்சி தலைவர் சுகுண சுந்தரி ஆகியோர் சந்தித்து விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

    • பேரிடர் கால மீட்பு உபகரணங்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு.
    • கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைவர் பி.கே.ரவி கடலோரப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

    இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வருகை தந்த அவர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் பேரிடர் காலங்களில் உதவுவதற்காக தேவையான உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்த அவர் தேவையான கூடுதல் உபகரணங்களும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கடலோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை கடல்நீர் சூழ்ந்தது.
    • படகில் உள்ள மீன்பிடி உபகரண பொருட்களை நீரில் தத்தளித்தபடி சென்று எடுத்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி மீனவர் காலனி பகுதியிலிருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடி தொழிலுக்கு மீனவர்கள் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் சில தினங்களாக நிலவி வந்த புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.இந்நிலையில் திடீரென கடல் சீற்றம் அதிகரித்து கடல் நீர் மீனவ கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளது.

    மேலும் கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளை சுற்றியும் கடல் நீர் சூழ்ந்துள்ளது.

    மீனவர்கள் ஏற்கனவே நங்கூரமிட்டு கட்டப்பட்ட படங்களை மேலும் தற்பொழுது கடல் நீரில் அடித்து செல்லாத அளவிற்கு பாதுகாப்பாக கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக படகில் உள்ள மீன் பிடி உபகரண பொருட்களையும் இடுப்பளவு நீரில் தத்தளித்தபடி சென்று எடுத்து வருகின்றனர்.

    மேலும் இது போன்ற இயற்கை சீற்றங்களின் பொழுது கடல் நீர் உப்புகாமல் தடுக்க நிரந்தரமாக தடுப்பு அணை அமைத்து, பாலம் அமைத்து தரவேண்டும் விழுந்தமாவடி மீனவ காலனி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உபகரணங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாய களை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அனைத்து ஆராய்ச்சியாளர்கள், முன்னவர்கள், அலுவலர்கள், 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் காரையூர் ஊராட்சியில் கோர்டேவா அக்ரி சைன்ஸ் -ன் விவசாய களை பயிற்சி நடைப்பெற்றது.விவசாய புரட்சியில் பல ஆண்டுகளாக சேவை செய்து வரும் கோர்டேவா அக்ரி சைன்ஸ் நிறுவனம் சார்பில் காரையூர் கிராமத்தில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய களை மேலாண்மை பற்றியும், நோவ்லக்ட் களைகொல்லி பற்றியும், உபகரணங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விவசாய களை பயிற்சி விழா நடைப்பெற்றது.

    இதில் கோர்டேவாவின், அனைத்து ஆராய்ச்சியாளர்கள், முன்னவர்கள், அலுவலர்கள், 400 -க்கும் மேற்ற விவசாயிகள் பங்கேற்றனர். இதில் திருவாரூர் சந்தை தொடர்பாளர், வேளாண்மை அலுவலர், துணை வேளண்மை அலுவலர், ஆத்மா திட்ட மேலாளர், விவசாய சங்க தலைவர்கள், கொர்டெவா அமைப்பினர் பங்கேற்றனர். அனைவருக்கும் தென்னை மர கன்றுகள் வழங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் கோர்டேவா வின் திருவாரூர் அதிகாரிகள் ஶ்ரீதர், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • படித்துறையில் நின்று துணியை தண்ணீரில் அலசிக்கொண்டிருந்த பாபு திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தார்.
    • தஞ்சை இருபது கண் பாலம் அருகே பாபுவின் உடல் கரை ஒதுங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 46). தொழிலாளி. இவர் எம். கே. மூப்பனார் சாலை புது ஆற்றில் உள்ள படித்துறையில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த படித்துறையில் நின்று துணியை தண்ணீரில் அலசினார். அப்போது திடீரென பாபு ஆற்றுக்குள் தவறி விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த அவர் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கூக்குரலிட்டார். சிறிது நேரத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    தீயணைப்புவீரர்கள் பாதுகாப்பு உபகரண ங்களுடன் ஆற்றில் குதித்து பாபுவை தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தஞ்சை இருபது கண் பாலம் அருகே பாபுவின் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் புதுஆற்றில் மூழ்கி 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறுவை சிகிச்சை அரங்கு வசதிகளுடன் இயங்கி வரும் இம்மருத்துவமனை தேசிய தரச்சான்றிதழ் மற்றும் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்றுள்ளது.
    • அனைத்து உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    புனித அன்னை தெரசாவின் அன்பு வழியைப் பின்பற்றி தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் 2002ஆம் ஆண்டு முதல் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது.

    மதர் தெரசா பவுண்டே சன் 2016ஆம் ஆண்டு மதர் தெரசா ஹெல்த் சென்டர் என்ற மருத்துவமனையை நிறுவி மிகக்குறைந்த கட்டணத்தில் நவீன மருத்துவ சிகிச்சையை அனைத்துத் தரப்பினருக்கும் செய்து வருகிறது.

    இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இருதய நோய் மருத்துவம், மனநல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகியவை தலைசிறந்த மருத்துவர்களைக் கொண்டு பார்க்கப்படுகிறது.

    இம்மருத்துவமனை, மருந்தகம், ஆய்வுக்கூடம் , அல்ட்ரா சவுண்டு- எக்கோ ஸ்கேன், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு ஆகிய வசதிகளுடன் இயங்கி வரும் இம்மருத்துவமனை தேசிய தரச்சான்றிதழ் மற்றும் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதிநவீன வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ஆம்புலன்ஸ் மிகக் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

    பொதுமக்களின் வேண்டு கோளுக்கு இணங்க புனித அன்னை தெரசாவின் 112-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதர் தெரசா ஹெல்த் சென்டரின் முதல்தளம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    அதில் உள் நோயாளிகள் தங்குவதற்கான குளிரூ ட்டப்பட்ட அறைகளும், அனைத்து உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் புதிதாக தொடங்க ப்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சை அரங்கம் நவீனபடுத்தப்பட்டுள்ளது.

    இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய நிலையிலுள்ள இதனை தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டலமேலாளர் ஏ.ஆல்வின் மார்டின் ஜோசப் திறந்து வைத்து பவுண்டேசன் ஆற்றிவரும் சேவைப் பணிகளைக் குறித்தும் குறிப்பாக அதிந வீன முறையில் செய்துவரும் மருத்துவப் பணிகளை குறித்தும் பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சிக்கு பவு ண்டேசன் சேர்மென் சவரிமுத்து தலைமை தாங்கினார்.

    அறங்காவலர் சம்பத் ராகவன் முன்னிலை வகித்தார்.

    அறங்காவலர் கோவி ந்தராஜ் நன்றி கூறினார்.

    தஞ்சையைச் சார்ந்த பிரபல மருத்துவ ர்களும், தொழிலதிபர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி, ரேணுகா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ்வரன், சூசைராஜா, கிறிஸ்டி, வர்ஷினி, ஷர்மிளா, ஹெல்த் சென்டர் ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • முகாமில் பேரிடர் மேலாண்மை பற்றி விளக்கம், பேரிடர் தயார் நிலை, கதிரியக்க அணுசக்தி மற்றும் அவசர காலநிலை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
    • தீயணைப்பு துறையினர், பேரிடம் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் பேரிடர் மீட்பாளர்களுக்கான 12 நாட்கள் பயிற்சி ஆத்த மித்ரா திட்டத்தின் கீழ் இன்று முதல்வருகிற 2-ந்தேதிவரை ரெட்கிராஸ் பேரிடர் பயிற்சி அரங்கில் நடைபெறுகிறது.

    முகாமில் பேரிடர் மேலாண்மை பற்றி விளக்கம், பேரிடர் தயார் நிலை, நிலநடுக்கமும், நிலச்சரிவு, வெள்ளம், சுனாமி, ரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல், தசைக்கட்டு காயங்கள், அடிப்படை உயிர் காக்கும் மருத்துவ சேவை, நோயாளிகளை தூக்குதல் -நகர்த்துதல், பாம்பு கடி விலங்குகள் கடி, கயிறு மூலம் மீட்பு நடவடிக்கை, தீயிலிருந்து பாதுகாத்தல், காட்டுத்தீ, ரசாயன அவசர நிலை, உயிரியல் அவசர நிலை, கதிரியக்க அணுசக்தி மற்றும் அவசர காலநிலை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

    முகாமை தொடங்கி வைத்து காட்சிப்படுத்தப்ட்ட உபகரணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். இதில் தீயணைப்பு துறையினர், பேரிடம் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • தனியார் நிறுவனங்கள் இணைந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனியார் நிறுவனங்கள் இணைந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் கோவலகண்ணன் தலைமையில் நடந்தது.

    நிதி நிறுவன மண்டல மேலாளர் சீனிவாச பெருமாள், வட்டார மேலாளர் ஜெயபாண்டி, தொண்டி கிளை மேலாளர் அஜீத்குமார், சி.கே.மங்கலம் கிளை மேலாளர் கயல் விழி முன்னிலை வகித்தனர். தொண்டி அரசு மருத்துவர் அருண் வரவேற்றார்.

    குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம், ரத்த அழுத்த கருவி, ஸ்டெதாஸ்கோப், சர்க்கரை அளவை கண்டறியும் கருவி, கருவில் இருக்கும் குழந்தை களின் இதயத்துடிப்பை அறியும் கருவி, நுண் கதிர் ஒளி படம் பார்க்க உதவி உபகரணங்கள் என ரூ.இரண்டரை லட்சம் மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டன.

    ×