என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொடுமை"
- தனது 4 வயது குழந்தையையும் 5 வயது குழந்தையையும் ஆற்றில் மூழ்கடித்து தாய் பிரியங்கா கொன்றுள்ளார்.
- காணாமல் போன ஒன்றரை வயதாகும் நான்காவது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்.
உத்தரப் பிரதேசத்தில் பசியால் அழுத தனது குழந்தைகளை தாய் ஆற்றில் மூழ்கடித்து கொன்ற நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள பராவுயா கிராமத்தில் பிரியங்கா என்று பெண் தனது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 4 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் வாழ்வாதாரத்துக்கு மிகுந்த சிரமப்பட்டுள்ளார் பிரியங்கா.
இந்நிலையில்தான் நேற்று [ஜூன் 27] வியாழக்கிழமை காலை கிராமத்தின் அருகில் உள்ள கேசம்பூர் காட் நதிக்கு குழந்தைகளை குளிக்க அழைத்துச்சென்று தனது 4 வயது குழந்தையையும் 5 வயது குழந்தையையும் ஆற்றில் மூழ்கடித்து தாய் பிரியங்கா கொன்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டனர். மொத்தம் உள்ள 4 குழந்தைகளில் இரண்டு உயிரிழந்த நிலையில் மற்ற இரண்டு குழந்தைகளில் 6 வயது சிறுவன் ஆற்றில் அருகில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். மேலும் காணாமல் போன ஒன்றரை வயதாகும் நான்காவது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்.
இதற்கிடையில் தாய் பிரியங்காவை போலீசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் காரணம் வெளியாகியுள்ளது. அதாவது, தனது குழந்தைகள் சதா பசியால் அழுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் அவரகள் படும் கஷ்டத்தைப் போக்கவே அவர்களை கொன்றதாக பிரியங்கா வாக்குமூலம் அளித்துள்ளார்.
- மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த அரசு ஊழியர் மீது போலீசில் புகார் செய்தார்.
- அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்
மதுரை
மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 25). இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-
எனக்கும் துருண் குமாருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர்.
மதுரை பாலமேடு அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் துருண்குமார் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என தெரியவந்தது. இருந்தபோதிலும் வேறு வழி யின்றி அவருடன் குடித்த னம் நடத்தி வந்தேன்.
இந்த நிலையில் துருண் குமாரின் அண்ணன் அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி திவ்யா, அவரது தாய் தனலட்சுமி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.
எனவே நான் இது தொடர்பாக கணவரிடம் புகார் செய்தேன். அப்போது அவர் என் சகோதரரை அனுசரித்து நடந்து கொள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் துருண்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டி னார்கள். இதற்கு நான் மறுத்தேன்.
எனவே அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இந்த புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
- இந்த வாலிபர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி குடும்பத்திற்கு கண்ணீர் மல்க வீடியோ அனுப்பி உள்ளனர்.
சுவாமிமலை:
மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐ.டி நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்களை எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இது போன்ற நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில்வெளி யான தகவலின்அடிப்படை யில் 60-க்கும்மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பி த்தனர்.
தற்போது வேலைவாங்கி தருவதாக கூறியதை நம்பி சென்ற இந்தியர்கள், தாய்லா ந்து அழைத்து செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்ப ட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்த ராமல் பணத்தை பெற்று க்கொண்டு மோசடி செய்து ள்ளனர். தற்போது தென்கிழக்கு மியான்மரின் கயின்மாகாணம், மியாவடி பகுதியில் அங்குள்ள இந்தியர்கள் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.
இது மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதி என்றும், பூர்வகுடியை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கீழக்கோட்டையூர் மேலதெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஹரிஹரன் (21) மற்றும் கும்பகோணம் பாணாதுறை கள்ளர் தெருவை சேர்ந்த கருப்பையன் மகன் விக்னேஷ் (22) ஆகிய 3 பேர் மியான்மரில் சிக்கி தவிப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து இந்த வாலிபர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி குடும்பத்திற்கு கண்ணீர் மல்க வீடியோ அனுப்பி உள்ளனர். அதில் எங்களை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள். இங்கு நடக்கும் கொடுமைகளை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. தினம் தினம் அதிக நேரத்துக்கு வேலை வாங்கி சித்ரவதை செய்கின்றனர். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எங்களை போல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் சித்ரவதைக்கு உள்ளாகி உள்ளனர் என்று குறிப்பிடப்ப ட்டிருந்தது.இந்த வீடியோவை பார்த்த அவர்களது பெற்றோர் உடனடியாக தங்களது பிள்ளைகளை மீட்டு பத்திரமாக கொண்டு வர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து மியான்மர் நாட்டில் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழக வாலிபர்கள் சிக்கி சித்ரவதை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருவதால் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது,
- வரதட்சணை கேட்டு மனைவியை வங்கி ஊழியர் கொடுமைப்படுத்தினார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காமராஜர் வாசகசாலை தெருவைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 21). இவருக்கும், சென்னையில் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் மாரியப்பன் (33) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர் தனது மனைவியுடன் 7 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியுள்ளார். பின்னர் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.
அவர் நீண்ட நாட்களாக மனைவியை அழைத்துச் செல்ல வராததால் வந்து அழைத்துச் செல்லும்படி பவித்ராவின் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது மேலும் 10 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் கொடுத்தால் தான் மனைவியை அழைத்துச் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கடந்த 4.7.2021 அன்று ராஜபாளையம் மகளிர் போலீசில் பவித்ரா புகார் செய்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மாரியப்பன் தனது மனைவியை ஒரு மாதத்தில் அழைத்துச் செல்வதாக கூறினார். ஆனால் அதன் பிறகு அவர் மனைவியை அழைத்துச் செல்லவில்லை.
இதைத்தொடர்ந்து பவித்ரா ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
அதன்படி ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம், பவித்ராவின் கணவர் மாரியப்பன், அவரது பெற்றோர் சுப்பையா, பொன்னுத்தாய் மற்றும் உறவினர் மஞ்சுளா தேவி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.
ஈரோடு:
கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்