என் மலர்
நீங்கள் தேடியது "வழக்குகள்"
- கடந்த 10 ஆண்டில் மொத்தம் 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- இந்த 193 பேரில் 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ரஹீம் பாராளுமன்றத்தில் அமலாக்கத்துறை பற்றி கேள்வி எழுப்பினார்.
அதில், கடந்த பத்து ஆண்டுகளில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? சமீப ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் அதிகரித்துள்ளனவா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பாக இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 193 நபர்களில் மொத்தமாக 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.
இதில் 01.04.2016 முதல் 31.03.2017 மற்றும் 01.04.2019 முதல் 31.03.2020 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தலா ஒரு நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், அமலாக்கத்துறை விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த அரசாங்கம் ஏதேனும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதா என்ற கேள்விக்கு போதிய தகவல்கள் இல்லை என பதில் அளித்துள்ளார்.
- மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.
- நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
- மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.
நாகர்கோவில், அக்.27-
புதிய சட்டத்திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் செட்டிகுளம் கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார், வடசேரி பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். நாகர்கோவில் நகரில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 64 பேருக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் அபராதம் விதித்துள்ளனர் .இதன் மூலமாகரூ. 64 ஆயிரம் வசூல் ஆகியுள்ளது. இதே போல் கோட்டார், வடசேரி போலீசாரும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் பலரும் சிக்கினார்கள் . பெண்களும் சிக்கி தவித்தனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இன்று காலையிலும் ஹெல்மெட் சோதனை நடந்தது. ஹெல்மெட் அணியாமல் பின்னால் இருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
- திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், குற்றங்கள் குறைய செய்ய வேண்டிய நடவடிக்கை.
- குற்ற வழக்குகள் மட்டும் 23 ஆயிரத்து 134 நிலுவையில் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வழக்குகளை விரைவுபடுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக்கூட்டம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, மாவட்ட நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வக்கீல் கனகசபாபதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டக்னர்.
திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், குற்றங்கள் குறைய செய்ய வேண்டிய நடவடிக்கைகள், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது குறித்த ஆலோசனை மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் குற்ற வழக்குகள் மட்டும் 23 ஆயிரத்து 134 நிலுவையில் உள்ளது.அவற்றை விரைந்து தீர்வு காணக்கோரியும், நிலுவையில் உள்ள பிடியாணையை நிறைவேற்றவும் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.
- ஆடு திருட்டு, சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
- போலீசாரை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம்வேதா ரண்யம் அடுத்த கோடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 47).
இவர் மீது ஆடு திருட்டு, சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் சிலிண்டர் திருட்டு வழக்கில் செல்லத்துரையை கைது செய்ய கோடியக்காட்டில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார். இருந்தாலும் போலீசார் அவரை பிடித்தனர்.
அந்த நேரத்தில் திடீரென செல்லத்துரை மற்றும் அவரது மகன் வீரக்குமார் (24) ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்கள் ராஜ்ஐயப்பன், சக்திவேல் ஆகியோரை குத்தினர்.
மேலும் இன்ஸ்பெக்டர் குணசேகரனை தாக்கி விட்டு வீரக்குமார் தப்பி ஓடி விட்டார். செல்லத்துரையை சக போலீசார் மடக்கி பிடித்தனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த போலீசா ர்கள் ராஜ்ஐயப்பன், சக்திவேல் ஆகியோர் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியிலும், இன்ஸ்பெக்டர் குணசேகரன் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாரை பார்த்தார்.
மேலும் தப்பி ஓடிய வீரக்குமாரை உடனே பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 4,069 வழக்குகள் பதிவு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
- பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்த வழக்கில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் காவல் துறையினரின் சீரிய முயற்சி மற்றும் நடவடிக்கையால் குற்றங்கள் மற்றும் ஓரளவிற்கு விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் இதர பிரிவு மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வழிப்பறி, திருட்டு போன்ற வகையில் 286 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 105 வழக்குகள் கண்டுபிடிப்பு குற்றவாளிகளிடமிருந்த நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பெண்குழந்தைகள் பாலியல் தொடர்பான 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 549 சாலை விபத்துக்கள் நடந்தது. இதில் 204 இறப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 224 பேர் இறந்துள்ளனர். காயம் ஏற்பட்டதாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 723 பேர் காயமடைந்துள்ளனர்.அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற வகையில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 9 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. குட்கா விற்றதாக 272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறையை மீறியதாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக 166 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்ற செயலில் ஈடுப்பட்டு வந்த 42 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்த வழக்கில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 128 ரவுடிகளில் 14 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 43 திருந்தி வாழ்ந்து வருகின்றனர். 15 பேர் சிறையில் உள்ளனர். திருந்தி வாழும் பட்டியலில் 6 பேர் உள்ளனர். பல்வேறு காரணங்களால் 379 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது விலக்கு அமலாக்கப்பிரிவு மூலம் 925 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
- பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 6 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படியும் தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா வழிகாட்டுதலின் படியும் சிவகங்கை மாவட்டத்தில் 3 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நீதிமன்றங்களில் போக்சோ நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதிகள் சுந்தரராஜ், கீதா, வக்கீல்கள் ராமலிங்கம், சவுந்திரபாண்டியன், குருமூர்த்தி. சேது ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 102 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 6 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை வழக்கா டிகளுக்கு கிடைத்தது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.
- தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நீதித்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.
- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கலைப்போட்டிகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கொறடா கோவி .செழியன் பேசியதாவது:-
இக்கூட்டத்தில் உண்மை க்கு புறம்பானவழக்குகள், முந்தைய கூட்டத்தில் உறுதி செய்யப்படாதவை, புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணை முடிவுற்ற வழக்குகள், தீருதவித்தொகை நிலுவை, வட்டாட்சியரிடமிருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு பொருள் அடக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் கல்வித்தரம், பயிற்றுநிலை, வசதிகள் மேம்பாட்டிற்கான அறிவுரைகள் நல்குதல், விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலக மேம்பாடு, தேர்வு ஆயத்தப் பயிற்சிகள் அளிக்க உறுதுணை நல்குதல், பொங்கல் திருநாள், அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள், ஆதிதிராவிடர் நலப்பள்ளி களின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கலைப்போட்டிகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் அரசுப் பணியிடங்களில் ஒதுக்கீடு நடைமுறையை ஆய்விடல், கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு நடைமுறையை ஆய்விடல், சிறப்பு உள்ளடக்கத் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சிறப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் ஆய்விடுதல், புதிதாக அறிவுரைகள் வழங்கல், இத்திட்டங்களை பரப்பும் வகை செய்தல், தாட்கோ திட்டங்களை பரப்பும் வகை செய்தல், ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு மனை, பயிர் நிலம் வழங்குதலையும், வழங்கியதை பேணுதலையும் ஆய்விடல், நில உச்சவரம்பு நிலங்கள், பூமிதான நிலங்கள் இவற்றை ஆதி திராவிடர்களுக்கு அளித்தலையும், நிலங்களை பேணுதலையும் ஆய்விடல், ஆதிதிராவிடர் மேம்பாடு குறித்த பொதுவான ஆலோசனை வழங்கல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து பொருள் விவாதிக்கப்பட்ட அனைத்து பணிகளும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்ட அளவிலான லோக் அதாலத்தில் 1,583 வழக்குள் முடித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 59 ஆயிரம் வழங்கப்பட்டது.
- ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
சிவகங்கை
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் (ேலாக் அதாலத்) அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்தியதாரா, போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேஸ்வரி, குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், வக்கீல் ராஜாராம் ராமலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
125 குற்றவியல் வழக்குகள், 150 காசோலை மோசடி வழக்குகள், 117 வங்கிக்கடன் வழக்குகள், 131 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், 85 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், 215 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 1,574 மற்ற குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 2 ஆயிரத்து 397 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 1,564 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.95லட்சத்து 64ஆயிரத்து 692 வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதுபோல் வங்கிக்கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 550 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 19 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.18 லட்சத்து 95 ஆயிரம் வரை வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதில் வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்காடிகளும் ஏராளமானோர் பங்கேற்று தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர்.
- குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 411 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
- இந்த நீதிமன்றத்தில் ரூ.6 லட்சத்து 93 ஆயிரத்து 800 வசூல் செய்யப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் கோர்ட்டில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள் குற்ற வழக்குகள் உட்பட மொத்தம் 411 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் 206 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் இந்த நீதிமன்றத்தில் ரூ 6 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
இதில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் போலீசார்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்டச் சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
- போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
- குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கலெக்டரிடம், எஸ்.பி. பரிந்துரை.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 20).
இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
இதனையடுத்து சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் தீபக் ஜேக்கபிடம், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தார்.
இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவுப்படி சூர்யாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் 66 வழக்குகள் முடித்து வைத்து 6 பயனாளிகளுக்கு ரூ.1,42,78,84 வரை கிடைத்தது.
- வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிவகங்கை
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்டத்தில் 2 மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி ஆகியோர் வழக்குகளை விசாரித்தார்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 2 குற்ற வியல் வழக்குகள், 65 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், அதே போல் 19 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் 16 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 20 வங்கிக்கடன் வழக்குகள் என மொத்தம் 122 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 19 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.86,28,346 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.
அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத (Prelitigation) வழக்குகளில் 305 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 47 வழக்கு தீர்வு காணப்பட்டு ரூ.56,50,500 வரையில் வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணி யாளர்கள் செய்திருந்தனர்.
- மக்கள் நீதிமன்றம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக் குமரன், சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
மக்கள் நீதிமன்றத்தில் 13 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 7 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 34 காசோலைகள் வழக்கு களும் என மொத்தம் 54 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 8 வழக்குகள் சமர சமாக தீர்க்கப்பட்டு ரூ.38 லட்சத்து75ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.
அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட 405 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 63 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.