search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டுகள்"

    • கொலைமுயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி ரதீஷ் மற்றும் சமீர் மீது வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் லாலூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரதீஷ் (வயது33), சமீர்(30). இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர்கள் ஆவர். ரதீஷ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ.வில் இருக்கிறார்.

    இவர்களுக்கு திருவனந்தபுரம் அம்பலத்தாரா பகுதியை சேர்ந்த அவர்களது கட்சி பிரமுகர்கள் சிலருடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அம்பலத்தாரா இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு பகுதி செயலாளரான அருண் என்பரை ரதீஷ் தாக்கியுள்ளார்.

    இது தொடர்பாக ரதீசிடம் விசாரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உள்ளூர் செயலாளர்கள் அனூப், பாபுராஜ், கட்சி தொண்டர்கள் பாலகிருஷ்ணன், அருண் ஆகியோர் சென்றனர். சமீரின் வீட்டில் ரதீஷ் இருப்பதை அறிந்து அங்கே சென்றனர். அப்போது அவர்களை நோக்கி ரதீஷ் மற்றும் சமீர் ஆகிய இருவரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

    அந்த குண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகளின் அருகில் விழுந்து வெடித்தது. அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதுகுறித்து அம்பலத்தாரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ரதீஷ் மற்றும் சமீர் மீது வழக்கு பதிந்தனர்.

    அவர்களின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. சமீரை போலீசார் கைது செய்தனர். ரதீஷ் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு நிர்வாகியை தாக்கியது தொடர்பாக விசாரிக்க வந்த கட்சி நிர்வாகிகள் மீது அதே கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து வாளிகளில் இருந்த குண்டுகளை கைப்பற்றினர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தலின் 2-வது கட்ட வாக்குப்பதிவு கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெற உள்ளது. இதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் தனியார் தோட்டத்தில் இருந்து இரும்பு வெடிகுண்டுகள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு இன்று காலை ஒரு பெண் புல் வெட்டச் சென்றுள்ளார். அப்போது அங்கு 2 வாளிகளில் 9 இரும்பு வெடிகுண்டுகள் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை அவர் பார்த்துள்ளார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து வாளிகளில் இருந்த குண்டுகளை கைப்பற்றினர். அவை இரும்பு குண்டுகள் என தெரியவந்தது.

    அதனை அங்கு பதுக்கியது யார்? எதற்காக பதுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் பானூர் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர்.

    கடலூர்:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் போலீசார் கடலோர பகுதிகளில் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடல் பகுதிக்கு விசை படகில் மத்திய, மாநில அதிரடி படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அவர்கள், கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் வெடிகுண்டு வைப்பதற்காக வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை துறைமுகம் பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கீழவடகரையில் உள்ள ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.
    • மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் விலங்குகளை இவர்கள் குழி தோண்டி புதைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே பத்மநேரி பீட் கீழவடகரையில் உள்ள ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.

    இதனை சிலர் குழி தோண்டி புதைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசா ரணையில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு கும்பல் சட்டவிரோத மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, உடும்பு, முயல் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடியதும், அதன் கறிகளை பங்கு போட்டதும் அம்பலமானது.

    மேலும் மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் கரடி போன்ற விலங்குகளை இவர்கள் குழி தோண்டி புதைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இந்த வேட்டை கும்பலில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தோட்டக் காவலாளியான நாகன்குளத்தை சேர்ந்த கணேசன் (54) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் கறியை முக்கிய பிரமுகர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பங்கு போட்டதும் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. விசா ரணைக்கு பின் கணேசனை வனத் துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள கீழவடகரையை சேர்ந்த கசாலி கண்ணன், ஜெயராஜ், பாலன் உள்பட 20க்கும்.மேற்பட்டவர்களை கைது செய்ய களக்காடு துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம், வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ள்ளனர். தலைமறைவாகி உள்ளவர்கள் பிடிபட்டால் மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று வனத்துறையினர் நம்புகின்றனர்.

    இதற்கிடையே கீழவட கரை மலையடி வாரத்தில் வேறு எங்காவது வன விலங்குகள் புதைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளையும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் வனத்துறையினர் கருதுகின்றனர்.

    எனவே மலையடிவார தோட் டங்களில் வெடிகுண்டு தயார் செய்ததற்கான அறிகுறிகள் தென்படுகிறதா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    • ஆரோவில் போலீசார் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று இன்று அதிகாலை அரிடி சோதனை செய்தனர்.
    • வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை .

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 27). இவருக்கும் புதுவையை சேர்ந்த காத்த வராயன் (29) என்பவருக்கும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வேலைவாங்கி கொடுப்பது தொடர்பாக முன் விரோதம் உள்ளது.

    இது தொடர்பாக இவர்கள் 2 பேரும் அடிக்கடி மோதி உள்ளனர். எனவே எந்த நேரத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ஆரோவில் போலீசார் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று இன்று அதிகாலை அரிடி சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்தனர். இதேபோல காத்தவராயன் வீட்டில் நடந்த சோதனையிலும் 4 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது.

    இதனைத்தொடர்ந்து காத்தவராயனை போலீசார் கைது செய்தனர். போலீசில் சிக்கிய 2 பேரும் எதற்காக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்? எங்கிருந்து வாங்கி வந்தனர் என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×