என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரசாயனம்"
- 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
போரூர்:
சென்னை கோயம்பேடு, பழ மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து செயற்கை முறையில் பழுக்க வைத்து வாழை மற்றும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தது.
இந்த நிலையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் கோயம்பேடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 5 மணி அளவில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 4 டன் மாம்பழம் மற்றும் 3 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- செங்கோட்டை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன.
- வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, இலஞ்சி, தேன்பொத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன. இவர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் களிமண்ணால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
இதில் செங்கோட்டை நகர் பகுதியில் மட்டும் சுமார் 50 முதல் 60 விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப 1 அடி முதல் 7 அடி வரை சுத்த களிமண்ணால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்வார்கள். இவற்றை செங்கோட்டை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ரூ. 1,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக ஆந்திரா, புதுச்சேரி, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ், ரசா யனங்கள் உள்ளிட்ட வை கொண்டு வரப்பட்டு அதன் மூலம் சிலைகள் தயாரித்து சிலர் விற்பனை செய்கின்றனர்.
இதனால் அந்த சிலைகள் பல வண்ணங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளதால், செங்கோட்டை மக்கள் களிமண்ணால் தயாரிக்கும் சிலைகளுக்கு மவுசு குறைந்துவிட்டது. நாகரீக வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, நீர்நிலைக ளை மாசுபடுத்தும் ரசா யனங்கள் கலந்த சிலைகளையே மக்கள் அதிகம் விரும்புவதால், களிமண் சிலை விற்பனை குறைந்து விட்டதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிப்ப டைந்துள்ளதாகவும் செங்கோட்டை சிலை தயாரிப்பாளர்கள் குமுறு கின்றனர்.
இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒரு பழத்தை ரூ. 5க்கு வாங்கிவிட முடியும்.
- வாழைப்பழங்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சல், வயிறு கோளாறு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
திருப்பூர் :
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பொதுமக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். அனைத்து முக்கிய சுபநிக ழ்ச்சிகள், மருத்துவத்தில் வாழைப்பழத்துக்கு முக்கிய இடமுண்டு. பொதுவாக அனைத்து பழங்களுமே சத்து நிறைந்ததுதான். ஆனால் மற்றவற்றை விட இதன் விலையை ஒப்பிடும்போது மிக மிக குறைவு. ஒரு பழத்தை ரூ. 5க்கு வாங்கிவிட முடியும். மேலும் இதில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளது. இது எல்லா காலங்களி லும், எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூ டியது. அதனாலேயே எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். சில மாதங்களாக திருப்பூர் நகரில் விற்கப்படும் வாழைப்பழங்கள் அத்தனை ருசியாக இல்லை எனவும் வாழைப்பழங்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சல், வயிறு கோளாறு போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவிக்க ப்படும் வாழைத்தார்களை நகரத்தில் கொண்டு சென்று விற்க வேண்டும் என்பதற்காக பழுப்பதற்கு முன் 10நாளைக்கு முன்பே வெட்டி விடுகிறார்கள். அதனை விவசாயிகளி டமிருந்து வாங்கும் மொத்த வியாபாரிகள் தங்களது குடோனுக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கி ன்றனர். மேலும் விரைந்து பழுக்க வைக்க போபாலின் என்ற ரசாயனத்தை நீரில் கலந்து தெளித்து விடுகிறார்கள். தெளித்த சில மணி நேரங்களில் பழங்கள் பழுத்து விடுகின்றன. முதலில் இந்த முறையில் தான் மோரீஸ் பழங்களை பழுக்க வைத்துக் கொண்டிரு ந்தனர். தற்போது நாட்டு பழ வகைகளையும் பழுக்க வைக்கின்றனர். இப்படி பழுக்க வைப்பதால் மருத்துவ குணம் கெட்டுப்போ வதோடு அதன் தனித்தன்மை யையும் இழந்துவிடுகிறது. ரசாயனம் கலக்கப்படும் பழங்கள் 7 நாட்கள் வரை கெடாமல் இருக்கின்றன. பழமும் புதிது போலவே இருப்பதால் நாமும் எளிதில் ஏமாந்து விடுகிறோம்.
இந்த பழங்கள் நம்முடைய சருமத்தில் தடிப்புகள் மற்றும் அரிப்புகளை ஏற்படுத்துமே தவிர நன்மையை தராது. மேலும் வயிற்றுக்குள் செல்லும் இந்த ரசாயனம் வயிற்றுப்புண், சைனஸ், ஆஸ்துமா, செரிமான கோளாறு, சிறுநீரக கோ ளாறு போன்றவைகளையும் ஏற்படுத்தும். மார்க்கெட்கள், மற்றும் பழ குடோன்களில் உணவுத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பலரக பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மொத்த மாகவும், சில்லரை யாகவும் விற்பனை நடைபெறுகிறது.
- ரசாயன ஸ்பிரே அடித்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலை யத்தில் ஏராளமான பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு நேரடியாக திருப்பத்தூரில் இருந்து பலரக பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மொத்த மாகவும், சில்லரை யாகவும் விற்பனை நடைபெறுகிறது.
இதனால் இங்கு சுற்றுவட்டாரங்களை சேர்ந்த வியாபாரிகள் பெருமளவு இங்கு பழங்களை வாங்கி செல்வது வழக்கம். இதனால் இங்கு பெரும் வர்த்தகமே வர்த்தகம் நடைபெறுகிறது. இந்நிலையில் இங்கு அதிகமாக வாழைப்பழத்தார் விற்பனைக்கு அனுப்பி வைப்பதால் நாள்தோறும் சுமார் 100 டன் வாழைப்பழத்தார் விற்பனை நடைபெறுகிறது.
மத்தூர் பேருந்து நிலையத்தில் வாழை த்தார்களை பழுக்க வைக்க திறந்த வெளியில் ரசாயன ஸ்பிரே அடிக்கும் ஊழியரின் செயல் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கைக்கு மாறாக வாழைத்தார்களை பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே அடித்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
இந்த பழங்களை உண்பதால் மனிதர்களுக்கு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன.
மேலும் பழங்களை பழுக்க வைக்க 'எத்தனால்' என்ற வேதிப்பொருளை பயன்படுத்துவது மத்தூர் போச்சம்பள்ளி பகுதியில் தொடர் கதையாக உள்ளது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோல் செயல்களில் ஈடுபவர்கள் மீது உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் வெங்கடேசன் அவர்களிடம் கேட்ட பொழுது ஸ்பிரே மூலம் ரசாயனம் கலந்து மருந்து தெளிப்பது மிகப்பெரிய தவறு. இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
- சிங்கம்புணரியில் ரசாயன கலப்பில்லாத பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது.
- கொல்கத்தாவில் இருந்து லாலாட் அரிசி முதல் ரகமும் கொள்முதல் செய்யப்படுகிறது.
சிங்கம்புணரி
ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை நாளன்று வீடுகள், தொழிற்சாலைகள் மெக்கானிக் கடைகள் வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் ஆயுதங்களை சுத்தம் செய்து சரஸ்வதிக்கு பூஜை செய்வது வழக்கம்.
அந்த வகையில். நாளை ஆயுதபூஜைக்கு தமிழகம் முழுவதும் பொரி உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 200 ஆண்டுகளாக பாரம்பரிய பொரிக்கு பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொரி உற்பத்தியாளர்கள் ஆயுத பூஜைக்கான பொரி
தயாரிப்பில் இரவு-பகலாக ஈடுபட்டுள்ளனர்.
பொரி தயாரிப்பிற்கு தேவையான அரிசி கர்நாடகத்தில் இருந்து ஐ.ஆர். 64 அரிசியும், கொல்கத்தாவில் இருந்து லாலாட் அரிசி முதல் ரகமும் கொள்முதல் செய்யப்படுகிறது. ரசாயன கலப்படம் இல்லாமல் அரிசியில் தண்ணீர், சீனி, உப்பு உள்ளிட்ட பொருட்களின் விகிதாச்சார கலவைகளால் 3 தினங்கள் ஊற வைக்கப்பட்டு எந்திரங்கள் மூலம் சரியான அளவு வெப்பத்துடன் மொரு மொரு தன்மையுடன் பொரி உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு தயார் செய்யப்படும் பொரி ஆயுதபூஜை மட்டுமின்றி விநாயகர்சதுர்த்தி, கோவில் திருவிழாக்கள் உள்பட வழிபாட்டிற்கும், தினசரி சாப்பிடும் உணவு பொருளாகவும் பயன்படுகிறது.
தற்போது ஆயுத பூஜைக்காக ஒரு நாளைக்கு சுமார் 200 மூடை முதல் 300 மூடைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு மூடையில் 120 லிட்டர் கொண்ட பொரி நிரப்பப்பட்டு அனுப்பப்படுகின்றன.
ஒரு மூடை பொரி ரூ 480 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2, 3 தலைமுறைகளாக பொரி உற்பத்தி செய்துவருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். பொரி உற்பத்தியாளா் சுந்தரசேகரன் கூறுகையில், சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் பொரி சிங்கப்பூர், அமெரிக்கா இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ''ஸ்டப் ரைஸ்'' என்ற பெயரில் அனுப்பப்படுகிறது.
திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, மதுரை, தேனி, விருதுநகர் மாவடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. முக்கிய நகரங்களில் சிங்கம்புணரி பொரி கிடைக்கும் என்ற பதாகைகளுடன் விற்பனைசெய்யப்படுவது எங்கள் பொரிக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறோம் என்றார்.
- சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்
- சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.
இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெற வில்லை.
தற்போது ரூ.1கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற உள்ளது. இந்தப்பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணி களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் இந்த பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஜூன் மாதம் 6 -ந்தேதி தொடங்கி வைத்தார்.முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை படகுகள் மூலம் திருவள்ளு வர் சிலை அமைந்துஉள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையயை சுற்றி ரசாயன கலவை பூசுவதற்காக இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது முதல் கட்டமாக திருவள்ளுவர் சிலையின் பீடத்தைச் சுற்றி இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 140அடி உயரத்துக்கு திருவள்ளுவர் சிலையின் வெளிப்புறத்தை சுற்றி சாரம் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. தற்போது திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் இருந்து கொண்டை பகுதி வரை சாரம் அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. அடுத்த கட்டமாக ரசாயனக் கலவை பூசுவதற்காக சிலை முழுவதும் நல்ல தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்படுகிறது.
அதற்கு அடுத்த கட்டமாக சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மையை அகற்றும் பணி நடக்கிறது. இறுதியாக சிலையின் மீது ரசாயன கலவை பூசப்படுகிறது.
- திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை
- படகு மூலம் இரும்பு பைப்புகள் கொண்டு செல்லப்படுகிறது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது.
இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்று லா பயணிகள் படகில் சென்று கண்டுகளித்து வரு கின்றனர்.
இநத் சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்ப டையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடை பெறவில்லை. இந்த ஆண்டு ரூ.1 கோடி செலவில் ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெறஉள்ளது. இந்தப்பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 2-ந்தேதி வரை 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் இந்த பணியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த 6 -ந்தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதற்காக சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரி வந்துஉள்ளது. இவை படகுகள் மூலம் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையயைசுற்றி ரசாயன கலவை பூசுவதற்காக இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
தற்போது முதல் கட்டமாக திருவள்ளுவர் சிலையின் பீடத்தைச் சுற்றி இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்