என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் கூட்டம்"

    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் 269 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த 269 மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

    மனுதாரரின் முன்னி லையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்பு டைய அலுவலர்களிடம் மனு க்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

    மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன. ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும், அப்பொழுதுதான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது.

    எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பயிற்சி உதவி ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 2 நாட்கள் நடக்கிறது.
    • அனைத்து விதமான உதவிகளுக்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெற உள்ளது.

    வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 26-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றாத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும்,

    மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபக ரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில்நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவ ட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது.

    இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியினையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சாமிநாதன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கி ழமை) மாைல 4 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோசியேசன், எரிவாயு நுகர்வோர்கள், ஆயில் மார்கெட்டிங் நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 30-ந் தேதி நடக்கிறது.
    • சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.

    வருகிற 30-ந் தேதி(புதன்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வளா்ச்சி மன்ற கூட்ட அரங்கில் (தரைதளத்தில்) மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், UDID பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமை ச்சாின் விரிவான மருத்துவ க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிறதுறைகளில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழ ங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 18-வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகிய வற்றுடன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 12-ந்தேதி நடக்கிறது
    • வருங்கால வைப்புநிதி நாகர்கோவில் மண்டல ஆணையர் தகவல்

    நாகர்கோவில்:

    வருங்கால வைப்புநிதி நாகர்கோவில் மண்டல ஆணையர் பங்கஜ்வர்மா வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களுக்கும், தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந்தேதி நாகர்கோவிலில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி அன்று காலை 10 மணிக்கு நடை பெறும் கூட்டத்தில் மண்டல ஆணையர் ஓய்வூதி யர்கள் மற்றும் தொழிலா ளர்கள், தொழில் நிறுவ னர்களின் குறைகளை கேட்டு நிவாரணம் அளிக் கிறார். அனைத்து ஓய்வூதிய தாரர்களுக்கும், ஓய்வூதியம் வழங்குதலில் ஏதே னும் குறைகள் இருப்பின் மண்டல அலுவலகத்தை அணுக லாம். வருங்கால வைப்பு நிதி சந்தாதாரராக சேர தகுதியிருந்தும் சேர்க் கப்படாமல் இருப்பவர்கள், செயலிழந்த உறுப்பி னர் கணக்கை முடிக்க விரும்பு பவர்கள், மாத சந்தா செலுத்துவது தொடர்பான குறையுள்ளவர்கள், விண் ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்புநிதி கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வருகிற 3 மாதத்திற்குள் 58 வயது முடிவடைகிற உறுப்பினர் களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓய்வூதியம் விண்ணப்பத்தை சமர்ப்பித் தலில் உள்ள சந்தேகங்க ளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மேலும், தொழில் நிறுவ னங்கள் பணம் செலுத் துவது, உலகளாவிய கணக்கு எண் ஒதுக்கீடு செய்வது, புதிய உறுப்பி னர்களை வருங்கால வைப்பு நிதியில் சேர்த்துக்கொள்வது தொடர் பான நவீன தொழில் நுட்பங்கள் குறித்த தங்களது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் மின் அஞ்சல் முகவ ரியில் இருந்து ro.nagercoil@epfindia.gov.in என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தியாகிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் 22 மனுக்கள் பெறப்பட்டன.
    • தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்களிடமிருந்து 22 கோரிக்கை மனுக்க ளை பெற்று அதனை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், வாரிசு சான்று மற்றும் குடிநீர் இணைப்பு வேண்டுதல் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு இதற்குரிய தீர்வுகள் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. மண்டல வைப்பு நிதி ஆணையாளர்-2 சிசுபாலன் தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்களது குறைகளை அது குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள், இ-மெயில் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர்-2 சிசுபாலன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மனுக்களை பெற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் 263 கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்க ளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், பட்டா பெயர் மாற்றம், குடும்ப பிரச்சனைகள் தீர்த்து வைத்தல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.

    பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராமநாதபுரம் மாவட்ட பிரிவு விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 38-வது மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட பாரதியார் தின குழு ஹாக்கி விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையொட்டி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சண்முகையா எம்.எல்.ஏ, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் ஆகியோர் மின் நுகர்வோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
    • 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என முதல் -அமைச்சர் அறிவித்துள்ளதாக எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ, மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் ஆகியோர் மின் நுகர்வோரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது சண்முகையா எம்.எல்.ஏ பேசியதாவது:-

    தமிழக அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் உருவாக்கி அதற்கென விவசாயத் துறையும் உருவாக்கி விவசாயத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் விண்ணப்பித்து காத்திருந்தனர். விவசாயம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டன.

    தற்போது மீண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் முதல் -அமைச்சர் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ரூ.4.50 கோடி செலவில் மின்சாரத்துறை உள் கட்டமைப்பை ஊக்குவிக்கும் விதத்தில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆரைக்குளம், குலசேகரநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு தனியாக மின் தொடர் அமைப்பு விரைவில் உருவாக்கப்பட உள்ளது. இதனால் இப்பகுதிகளில் தங்கு தடையின்றி மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

    வருகிற 31-ந் தேதிக்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். ஓட்டப்பிடாரம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் தங்கு தடையின்றி தொடர் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சண்முகையா எம்.எல்.ஏ. பேசினார்.

    கூட்டத்தில் போது மின்வாரிய மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகம், உதவி செய்ய பொறியாளர்கள் ஜெயக்குமார், முனியசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் வேலாயுதசாமி, இளையராஜா, சின்னத்துரை, உதவி பொறியாளர்கள் மணிசேகர், செந்தில்ராஜ், பால்முனியசாமி, ஜெயசுதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி உட்பட பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • விவசாயி ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் வீரபத்திரன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் வனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாண்டிய கீர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் பெரியார் பாசன கால்வா யில் இருந்து கிளை கால் வாய் அமைத்து சாத்தியார் அணையுடன் இணைக்க வேண்டும், அணையை தூர்வாரி ஆழப்படுத்தி விரிவு படுத்த வேண்டும், வெளியூர் பஸ்கள் வாடிப்பட்டி பஸ் நிலையத்தை புறக்கணித்து புறவழிச்சாலையில் செல்லும் ஓட்டுநர், நடத்து னர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வாடிப்பட்டி பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரியும், குலசேகரன் கோட்டை பிரிவிலிருந்து மீனாட்சி அம்மன் கோவில் வரை சாலையை சீரமைக்க கோரியும் மனுக்கள் கொடுக்கப்பட்டது. முடிவில் விவசாயி ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

    • உசிலம்பட்டியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டியில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (20-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலந்து கொள்கிறார்.

    எனவே உசிலம்பட்டி மின் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம். இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    ×