என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி சாவு"

    • நேருக்கு நேர் மோதிக்கொண்டது
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள பண்டபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30) கூலி வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் பண்டப்பல்லியில் இருந்து பரதராமி செல்ல பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமிரெட்டிபல்லி கிராமம் தனியார் கல்லூரி அருகே வரும்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து தாதுமணல் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற லாரியும்-பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் விரைந்து வந்து சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரூர் பெரிய ஏரி பகுதிக்கு சென்ற நிரோஜ் சர்மா தடுமாறி ஏரிக்குள் தவறி விழுந்துள்ளார்
    • நிரோஜ் சர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மத்தூர்,

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நிரோஜ் சர்மா (வயது 45).மரவேலைகள் செய்பவர். இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள பனங்காட்டூரில் சின்னசாமி என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வேலையைமுடித்துவிட்டு மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் பாரூர் பெரிய ஏரி பகுதிக்கு சென்ற நிரோஜ் சர்மா தடுமாறி ஏரிக்குள் தவறி விழுந்துள்ளார்.இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்று நிரோஜ் சர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலாயுதம். இவரது மகன் சிவக்குமார் (வயது 33), வெள்ளித் தொழிலாளி.
    • குடும்ப தகராறு காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் சத்யா நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சிவக்குமார் (வயது 33), வெள்ளித் தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உடலில் தீ பற்றி எரிந்தபோது வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் நேற்று மாலை பரிதமாக இறந்தார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொருட்கள் வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • மடம் பகுதியில் வந்த போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் அங்கமுத்து படுகாயம் அடைந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள புதுக்கரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது50). ஒேகனக்கல் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை தங்கி இருந்து மேய்த்து வந்தார்.

    சமையல் பொருட்கள் வாங்குவதற்காக இவர் நேற்றுமாலை பென்னாகரம் வந்தார். பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மடம் பகுதியில் வந்த போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் அங்கமுத்து படுகாயம் அடைந்தார். இதனால் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக அங்கமுத்து உயிரிழந்தார்.

    இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னறர்.

    • மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.
    • அப்போது அவர் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.

    கோபி:

    கோபி செட்டி பாளையம் அருகே உள்ள பொலவக்காளி காளி பாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (49). இவரது மனைவி அலமேலு. கூலி தொழிலாளியான மூர்த்திக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று காலை மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.

    அப்போது அவர் பழையூர் பாட்டப்பமடை பள்ளம் பகுதியில் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தெரியவந்ததும் அலமேலு மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று மூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • நேற்று முன்தினம் வேலைக்கு வந்தவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி(50). கள்ளிக்குடியில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்தார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு வந்த மணி, பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    இந்தநிலையில் கள்ளிக்குடி-டி.கல்லுப்பட்டி மெயின்ரோட்டில் அகத்தாபட்டி கண்மாய் கரையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக பொதுமக்கள் கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சென்று பார்த்த போது இறந்து கிடந்தது மணி என்பது தெரியவந்தது.

    • தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செகுடன்தாளியை சேர்ந்தவர் தனபால் (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தனபாக்கியம் (34).

    தனபால் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.சம்பவத்தன்று தனபால் மது போதையில் வீட்டிற்கு வந்தார்.

    இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனையடுத்து அவர் தனது மனைவியை மிரட்டுவதற்காக விஷத்தை குடித்தார்.

    சிறிது நேரத்தில் அவருக்கு வயிறு வலி அதிகமானது. இதனையடுத்து தனபால் தனது நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் உடனடியாக விரைந்து சென்று தனபாலை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தனபால் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருமத்தப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 53). தொழி லாளியான இவர் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

    தனக்கன்குளம் 4 வழிச்சாலையை கடக்க முற்பட்டபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கணேசன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரதீப் (23) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். பிரதீப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம், ஆஸ்டின் பட்டி, தனக்கன்குளம், கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் உயிர் பலியும் ஏற்படுகிறது எனவே போலீசார் உரிய கவனம் செலுத்தி மேற்கண்ட பகுதிகளில் விபத்து நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் பெருமாள் வயது 43 தொழிலாளி. இவருடைய நண்பர் சத்யராஜ் என்பவருடன் வேலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு நேற்று வந்தனர். அப்போது பெருமாள் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் கொட்டகையில் இரவில் முருகவேல் தூங்குவது வழக்கம்.
    • திடீரென முருகவேல் வலது கையில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.

    ஈரோடு:

    விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் புதுநகர், மாசியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகவேல் (48). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் வேலை சம்மந்தமாக ஒவ்வொரு ஊராக சென்று வருவது வழக்கம்.

    அதன்படி தற்போது முருகவேல் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மாரங்காட்டூர், சிலுவம்பாளையம் பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் தங்கி கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

    அங்குள்ள மோட்டார் கொட்டகையில் இரவில் முருகவேல் தூங்குவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்றும் இரவில் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென முருகவேல் வலது கையில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ளவர்கள் முருகவேலை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற இருந்த முருகவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர்கள் சிலருடன் அமர்ந்து கணேசன் மது அருந்தியுள்ளார்.
    • தாக்கப்பட்ட கணேசன் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மடம் கீழ் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). நேற்று தனது வீட்டில் உறவினர்கள் சிலருடன் அமர்ந்து கணேசன் மது அருந்தியுள்ளார்.

    அப்போது அவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உறவினர்களால் தாக்கப்பட்ட கணேசன் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

    இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கணேசன் உயிரிழக்க தாக்கப்பட்டதுதான் காரணமா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரகாஷ் மது குடித்து விட்டு ரோட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.
    • இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பு.புளியம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 55). இவர் பு.புளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் தொழி லாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையயடுத்து அந்த பகுதியில் தனது தாயாருடன் தங்கி வந்தார். மேலும் இவ ருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும் கூற ப்படுகிறது.

    இந்த நிலையில் பிரகாஷ் பு.புளியம்பட்டி- பவானி சாகர் ரோட்டில் மது குடித்து விட்டு ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பு.புளியம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து மேல் கிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×