search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார்"

    • பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.
    • சந்தேகப்படும்படியாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.

    ஊட்டி

    தமிழகத்தில் பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்வேறு தரப்பினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் உள்ள கேரள எல்லைகளான நாடுகாணி, பாட்ட வயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும்படியாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.

    ஒரு பஸ்சில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர் இதுகுறித்து போலீசார் கூறும்போது, கூடலூர் பகுதியில் 3 தாசில்தார்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுழற்சி முறையில் வருகிற 30-ந் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாகன சோதனையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

    • குளச்சலில் துணை சூப்பிரண்டு தங்கராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • குளச்சல் சப்-டிவிசன் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்ட னர்.

    கன்னியாகுமரி:

    மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளிடையே போதை எதிர்ப்பு பிரசாரமும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவுப்படி குளச்சல் சப் - டிவிசன் சார்பில் போதை எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணி நேற்று மாலை குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் முன்பு நடந்தது. குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணி உடையார்விளை, லட்சுமிபுரம், செட்டியார் மடம், திங்கள்நகர் வழியாக இரணியல் போலீஸ் நிலையம் சென்றடைந்தது.இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியன் பெஞ்சமின், சப் - இன்ஸ் பெக்டர்கள் சுரேஷ்குமார், பாலசெல்வன், குருநாதன் மற்றும் மகளிர் போலீசார் உள்பட குளச்சல் சப்-டிவி சன் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்ட னர்.

    • உறவினர் ஒருவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
    • சிறுமி கொடுத்த புகாரில் வாழப்பாடி போலீசார், சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் (வயது44). இவருக்கும் இவரது உறவினர் ஒருவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், வாழப்பாடி அருகே தனியார் கல்லுாரியில் படித்து வரும் சிறுமியிடம் சிவக்குமார், அத்துமீறி பேசியுள்ளார். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஆடு திருடிய கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சேடப்பட்டி போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து வந்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

    மதுரை

    மதுரை அ.பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பாண்டீஸ்வரி (வயது36). இவர் சம்பவத்தன்று காலை வீட்டின் முன்பாக ஆட்டை கட்டி போட்டு விட்டு சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் ஆட்டை திருடி சென்று விட்டனர். இதுபற்றி பாண்டீஸ்வரி சேடபட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து சேடப்பட்டி போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து வந்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் வடக்குப்பட்டி மணிகண்டன் மகன் வினோத் பாண்டி (வயது 22), மேக்கிளார்பட்டி பாண்டி (30), அவரது மனைவி கவிதா (29) என்பது தெரியவந்தது. அவர்கள் ஆடு திருடியதை ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து பாண்டீஸ்வரி வீட்டில் ஆடு திருடிய 3 பேரையும் சேடப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    ×