என் மலர்
நீங்கள் தேடியது "உழவர் சந்தை"
- விவசாயிகளின் நேரடி விற்பனை பொருட்களை வாங்குவோர் வருகை குறைந்து வந்ததால் நாளடைவில் வியாபாரம் இன்றி உழவர் சந்தை வீணானது.
- திருக்கழுகுன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் சந்தை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மைத்துறை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை துவங்கப்பட்டது. விவசாயிகளின் நேரடி விற்பனை பொருட்களை வாங்குவோர் வருகை குறைந்து வந்ததால் நாளடைவில் வியாபாரம் இன்றி உழவர் சந்தை வீணானது.
இந்நிலையில் மீண்டும் உழவர் சந்தையை ஊக்கப்படுத்தும் விதமாக 20 மகளிர் குழுவினரை ஒருங்கிணைத்து சந்தை வளாகத்தில் "உழவர் சந்தை மேளா" நடத்தப்பட்டது. திருக்கழுகுன்றம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்போர் பலர் கடை அமைத்து விற்பனை செய்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உழவர் சந்தையில் விவசாயிகள் கூடியதால் அப்பகுதி மக்கள் ஆர்வமாக வந்து காய்கறி, கீரைகள், மரச்செக்கு எண்ணெய், மாடிதோட்ட விதைகள், கிழங்குகள் உள்ளிட்டவைகளை வாங்கி சென்றனர்.
திருக்கழுகுன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சிறியதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் நாகராஜன், பொறுப்பு அலுவலர்கள் பரஞ்ஜோதி, விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது.
- தக்காளி கிலோ ரூ.10 முதல் 15, முள்ளங்கி ரூ.14-16வரையிலும் விற்பனையானது.
உடுமலை :
உடுமலை உழவர் சந்தைக்கு தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. தக்காளி விலை குறைந்தும் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தும் காணப்பட்டது.
தக்காளி கிலோ ரூ.10 முதல் 15 வரையிலும், உருளை ரூ. 45 முதல் 50 வரையிலும் ,சின்ன வெங்காயம்ரூ. 54 -90, கத்தரிக்காய் ரூ.30 -36, வெண்டைக்காய் ரூ.20 -24 ,முருங்கை ரூ.35-48 ,பீர்க்கங்காய் ரூ.20- 38 ,சுரைக்காய் ரூ.10 -15 ,புடலங்காய் ரூ.20 -24, பாகற்காய் ரூ.35 -40, தேங்காய் ரூ. 25- 30 ,முள்ளங்கி ரூ. 14-16 ,பீன்ஸ் ரூ.46- 48, அவரைக்காய் ரூ.50 -55 ,கேரட் ரூ. 60- 65க்கும் விற்பனையானது.
- சேலம் மாநகரில் 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன.
- இன்று கார்த்திகை மாத சர்வ மஹாளய முழு அமாவாசையை முன்னிட்டு அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
அதன்படி, இன்று கார்த்திகை மாத சர்வ மஹாளய முழு அமாவாசையை முன்னிட்டு அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.
பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது. இதே போல் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
11 உழவர் சந்தைகளிலும் இன்று விவசாயிகள் 1020 பேர் , காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 238.114 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 53,298 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.73,26,002 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட இருமடங்கு விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- கோவை மாநகராட்சி உழவர் சந்தையை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டது.
- 5 மாதங்களுக்கு முன்பாக விற்பனையும் தொடங்கப்பட்டது.
குனியமுத்தூர்,
கோவையை அடுத்த குறிச்சி காந்திஜி ரோட்டில் உழவர் சந்தை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பல வருடங்களாக செயல்படாமல் பூட்டிக் கிடக்கும் நிலையில் உள்ளது. சமீபத்தில் கோவை மாநகராட்சி உழவர் சந்தையை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டது.
இதனையடுத்து உழவர் சந்தை புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டது. சந்தையில் உள்ள 60 கடைகளுக்கும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் 5 மாதங்களுக்கு முன்பாக விற்பனையும் தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு சில கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் வெறிச்சோடி காணப்பட்ட து. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- சுந்தராபுரத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையை விட இந்த குறிச்சி காந்திஜி ரோட்டில் அமைந்துள்ள உழவர் சந்தை மிகவும் பரந்து விரிந்த இடம் மட்டுமன்றி வசதியான இடம் ஆகும். எத்தனை லோடு காய்கறிகள் வேண்டுமானாலும் இங்கு இறக்குவதற்கு இடவசதி உள்ளது. ஆனால் இந்த குறிச்சி காந்திஜி ரோடானது மிகவும் குண்டும், குழியுமாக சேதம் அடைந்த நிலையில் இருப்பதால், விவசாயிகள் இங்கு வர மறுப்பு தெரிவிக்கின்றனர்.
சரக்கு வாகனங்கள் கவிழ்ந்துவிடும் அளவுக்கு மோசமான நிலையில் சாலை உள்ளது. எனவே சாலை வசதி செய்து கொடுத்த பின்பு தான் நாங்கள் அங்கு வருவோம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த உழவர் சந்தையை மாலை நேரத்தில் செயல்பட வைத்தால் எங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். கோவை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த சாலையை சீரமைத்து உழவர் சந்தையை வழக்கம்போல் செயல்பட வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உழவர் சந்தையில் மொத்தம் உள்ள 60 கடைகளில் 30 கடைகளுக்கும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 30 கடைகளுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் தயாராக உள்ளோம். ஆனால் விவசாயிகள் வர மறுக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர், மேயர், துணை மேயர் ஆகியோர் வந்து உழவர் சந்தையை பார்வையிட்டு சென்றனர். மேலும் தார் சாலை அமைப்பதற்கும் பூமி பூஜை செய்யப்பட்டது என கூறினர்.
- கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
- பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் மக்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
பழனி:
பழனி உழவர் சந்தைக்கு தினந்தோறும் பல கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தினந்தோறும் 15 முதல் 20 டன் வரை இங்கு காய்கறிகள் விற்பனையாகிறது. தற்போது போகி பண்டிகை, பொங்கல் மற்றும் தொடர்விடுமுறை காரணமாக இன்று ஒரேநாளில் 30 டன் காய்கறிகள் விற்பனை யானது. தினந்தோறும் சுமார் 2000 பேர் உழவர்சந்தைக்கு வந்து சென்ற நிலையில் இன்று சுமார் 3500-க்கும் மேற்பட்டோர் சந்தைக்கு வந்துள்ளதாக நிர்வாக அலுவலர் வினோத்குமார் தெரிவித்தார்.
தற்போது பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் மக்களும் மகிழ்ச்சியுடன் அதனை வாங்கி சென்றனர். தாங்கள் கொண்டு வந்த காய்கறிகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சில காய்கறிகளின் விலை மட்டும் உயர்ந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் இன்று பழனி உழவர்சந்தையில் விற்பனை களைகட்டியது.
- கிராமங்க ளில் இருந்து விவசாயிகள் பஸ்கள் மூலம் கடலூர் நகர்பகுதிக்கு வந்து விற்பனை செய்கின்றனர்.
- உழவர் சந்தை தற்போது நவீன வசதியுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் இயற்கை வளம் நிறைந்த பகுதி யாகும். இங்கு ஆண்டு தோறும் மற்ற மாவட்டங் களைவிட பருவகாலங்க ளில் அதிகமழை பொழிவது வழக்கம். எனவே தான் இந்த மாவட்டத் தில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளது. விவசாயிகள் கரும்பு, வாழை, நெல் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.
இதுபோன்ற விளை பொருட்களை விற்பனை செய்வ தற்காக கிராமங்க ளில் இருந்து விவசாயிகள் பஸ்கள் மூலம் கடலூர் நகர்பகுதிக்கு வந்து விற்பனை செய்கின்றனர். விவ சாயிகள் நலன் கருதி கடலூர் திருப்பாதிரி புலியூர் பகுதியில் உழவர்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு இரவு நேரத்திலேயே விவசாயிகள் தங்களது விளை பொருட்க ளை கொண்டுவந்து விற்பனை செய்வதுண்டு.
இதனிடையே மழை காலங்களில் உழவர்சந்தை யில் தண்ணீர் அதிகம் தேங்கியது. இதனை கருத்தில் கொண்டு உழவர் சந்தை தற்போது நவீன வசதியுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. தனித்தனியாக வியாபாரம் செய்யும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த சந்தையில் பணிகள் முடிந்து கடந்த 12-ந் தேதி திறக்கப் பட்டது.
வழக்கமாக இந்த உழவர் சந்தையில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணிவரை செயல்பட்டு வந்தது. தற்போது விவசாயி கள் நலன்கருதி இரவு 8 மணிவரை செயல்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது விவசாயி களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் திருநாள்முதல் விவசாயிகள் இரவு 8 மணி வரை வியாபாரம் செய்கின்றனர். கடலூர் நகர் பகுதியை சேர்ந்த மக்களும், அலுவலகத்துக்கு செல்வோரும் இரவு 8 மணிக்கு முன்னதாகவே தங்களுக்கு தேவையான காய்கறி களை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.
- திருச்செங்கோடு மற்றும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தக்காளி செடி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
- இங்கு விளையும் தக்காளி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தக்காளி செடி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் தக்காளி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதைத்தவிர சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவில் இருந்து தக்காளி ேலாடு சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ.20 அதிகரித்–துள்ளதால் இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- தருமபுரி மாவட்டத்தில் 5 இடத்தில் உழவர்சந்தை இயங்கி வருகின்றன.
- ஏ.ஜெட்டி அள்ளி உழவர்சந்தையில், சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி,
உழவர் சந்தையில் விற்பனை ஆகாத காய்கறி, பழங்கள் 5 டன் ஒரே நேரத்தில் சேமித்து வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1999ம் ஆண்டு தி.மு.க. அரசால் உழவர் சந்தை கொண்டுவரப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும், 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. மேலும், புதிய உழவர் சந்தைகள் அமைக்க அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தருமபுரியில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் உழவர் சந்தை திறக்கப்பட்டது.
பின்னர் மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, அரூர், ஏ.ஜெட்டிஅள்ளி ஆகிய இடங்களில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 5 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.
புதியதாக காரிமங்கலத்தில் உழவர்சந்தை அமைக்கும் பணி நடக்கிறது. தருமபுரி உழவர் சந்தையில் தினசரி சராசரி 30 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம்.
120 விவசாயிகள் 60 வகையான காய்கறிகளை கொண்டு வருகின்றனர். தினசரி சுமார் 7300 நுகர்வோர் வந்து காய்கறி, பழங்கள் வாங்கி செல்கின்றனர். விஷேசம் மற்றும் பண்டிகை காலங்களில் கூடுதலாக காய்கறி விற்பனை நடக்கும்.
இதுபோல், ஏ.ஜெட்டி அள்ளியில் 9 டன் காய்கறியும், பாலக்கோட்டில் 8.40 டன்னும், பென்னாகரத்தில் 7.30 டன்னும், அரூரில் 8.20 டன் காய்கறி, பழங்கள் தினசரி விற்பனை செய்ய ப்படுகின்றன.
விற்பனை ஆகாத காய்கறி, பழங்கள் வீணாகாமல் இருக்க உழவர்சந்தையில் சூரியஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள உழவர்சந்தைகளில் இந்த சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் ஏ.ஜெட்டி அள்ளி உழவர்சந்தையில், சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் இந்த சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
விற்பனை ஆகாமல் உள்ள காய்கறி, பழங்களை, இந்த குளிர்பதன கிடங்களில் வைத்து விற்பனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் 5 டன் காய்கறி, பழங்கள் வைத்து பாதுகாக்கலாம்.
தருமபுரி ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் 31 கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினசரி 8 முதல் 10 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து காய்கறி, பழங்கள் வாங்கி செல்கின்றனர்.
சுழற்சி முறையில் விவசாயிகள் 50 வகையான காய்கறி, பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். விற்பனை ஆகாத காய்கறிகள், பழங்கள் உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் வைத்து பாதுகாக்கின்றனர்.
மறுநாள் விற்பனை ஆகாத காய்கறி, பழங்களை எடுத்து விற்பனை செய்கின்றனர். இதனால் காய்கறி, பழங்கள் வீணாவது தவிர்க்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் 5 இடத்தில் உழவர்சந்தை இயங்கி வருகின்றன. 6-வதாக காரிமங்கலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 5 உழவர்சந்தைகளில் தினசரி சுமார் 64 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மதிப்பு ரூ.20 லட்சம். தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளியில் இயங்கும் குளிர்சாதன வதியுடன் கூடிய கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் உழவர் சந்தையில் விற்பனை செய்த பின்னர் மீதமுள்ள காய்கறி, பழங்களை விவசாயிகள் இந்த குளிர்பதன கிடங்கில் வைத்து பாதுகாக்கின்றனர். இதனால் காய்கறி, பழங்கள் அழுகி வீணாவது குறைந்துள்ளது.
படிப்படியாக அனைத்து உழவர் சந்தையிலும், எதிர்காலத்தில் சோலார் குளிர்பதனக்கிடங்கு அமைக்கப்படும். ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் 5 டன் காய்கறி, பழங்கள் வைத்து சேமிக்கும் சூரிய ஒளியில் இயங்கும் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.
- உழவர் சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை.
உடுமலை :
உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மை துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய்,உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.இவை அனைத்தும் புத்தம் புதிதாய் கிடைப்பதால் பொதுமக்களும் நாள்தோறும் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த சூழலில் உழவர் சந்தையில் சேகரமாகும் காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை.அதன் வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் இட நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள்,விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.தற்போது மழை தொடங்கி உள்ளதால் கழிவுகள் தேங்காமல் தடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும்.எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர்.
- உழவர் சந்தை அருகில் சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் கயிறு பதித்தனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் உழவர் சந்தை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், கடலூர் - சிதம்பரம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடலூர் போக்குவரத்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர் சந்தை அருகில் சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் கயிறு பதித்தனர். இன்று காலை உழவர் சந்தைக்கு வந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வாகனங்களை சாலையில் மீண்டும் தாறுமாறாக நிறுத்தினர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, சாலையில் பதிக்கப்பட்டுள்ள கயிறை தாண்டி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் இரும்பு சங்கிலியால் பூட்டு போட்டனர்.
இதற்கிடையே காய்கறி வாங்கிக்கொண்டு வெளியே வந்த பொதுமக்கள், தங்கள் வாகனங்களுக்கு பூட்டு போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் தாங்கள் இனிமேல் வாகனங்களை தாறுமாறாக நிறுத்த மாட்டோம் என உறுதி அளித்தனர். அப்போது போலீசார், இனி இதுபோன்று போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறனர்.
- மூலிகை கீரைகள், கிழங்கு வகைகளை விற்பனை செய்கிறார். பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
உடுமலை:
உடுமலை உழவர் சந்தையில் தினமும் ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறனர். இந்த நிலையில் துங்காவியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகள் மற்றும் கிழங்குகளை விற்பனை செய்து வருகிறார். சோற்றுக்கற்றாழை, நாகதாளி, வல்லாரை, கண்டங்கத்திரிக்காய், ஆகாச கிழங்கு வேலிப்படை த்தாங்காய், பிரண்டை, பொதுவெளான், கோவக்காய் உள்ளிட்ட மூலிகை கீரைகள், கிழங்கு வகைகளை விற்பனை செய்கிறார். பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
- அடிப்படை தேவையான குடிநீர்,கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
- உழவர் சந்தைகளை புனரமைத்து சீரமைப்பதற்கு ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர் சந்தைகள் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரின்போது திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர், போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படை தேவையான குடிநீர்,கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதை செயல்படுத்தும் விதமாக இப்போது உழவர் சந்தைகளை புனரமைத்து சீரமைப்பதற்கு ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் செங்கல்பட்டு உழவர்சந்தைக்கு ரூ.32.10 லட்சம்,வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தைக்கு ரூ.42,72 லட்சம், செங்கம் உழவர் சந்தைக்கு ரூ.32.10 லட்சம், திருச்சி துறையூர் உழவர் சந்தைக்கு ரூ.35 லட்சம், சேலம் எடப்பாடி உழவர் சந்தைக்கு ரூ.43.30 லட்சம், அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு ரூ.4.06 லட்சம் என 25 உழவர் சந்தைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த தொகையை வைத்து அலுவலக அறை புதுப்பித்தல, கழிப்பறை அமைத்தல், மற்றும் குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் கட்டுதல், மின்னணு சாதனங்கள் பொருத்துதல், வடிகால் மறுசீரமைப்பு நடைபாதை அமைத்தல், சுவர்களில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.