என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233572"

    • மணிகண்டன்அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய–தாக புகார்கள் வந்தன.
    • இதை தொடர்ந்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

     புதுக்கோட்டை

    ஆலங்குடி கல்லுக்குண்டு கரையைச் சேர்ந்தவர் துப்பாக்கி முருகன் மகன் மணிகண்டன் (வயது 23). இவர் தற்போது ஆலங்குடி கே.வி.எஸ். தெருவில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் ஆய்வாளர் அழகம்மை விசாரித்து வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் நேற்று அடைத்தனர். தீபாவளி அன்று கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் கைதான மணிகண்டன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை வெட்டியதில் படுகாயமடைந்தார்
    • சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகேமுன்வி ரோதம் காரணமாக ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு; படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவம னையில் அனுமதி

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அகிலா.

    இவரவது கணவர் சரவணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்றத் தலைவாரன இவருக்கும் அதே பகுதி திமுகவைச் சேர்ந்த ராமாயி, மணிக்கண்டன், சிவானந்தம், கரிகாலன் ஆகியோருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதலில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஆதமங்கலம் ஊராட்சி மாவிலங்கை பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் சூர்யா தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மணிக்கண்டன் என்பவர் அரிவாளால் அவர்களை வெட்ட வந்துள்ளார். அவர்கள் தெருவுக்குள் ஓடிய நிலையில் அவர்களை ராமாயி, அவரது மகன் சிவானந்தம், உறவினர்களான மணிக்கண்டன், கரிகலாலன் ஆகியோர் வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர்.

    அப்போது சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை பிளேடு, கத்தி, அரிவாள் கொண்டு வெட்டியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வலிவலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வலிவலம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்தவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதி

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணத்தை அடுத்த பனங்காலமுக்கு பகுதியை சேர்ந்த அல்போ ன்ஸ் மகன் பிரபு (வயது 36). கடல் தொழில் செய்து வரு கிறார்.

    இவரது மனைவி சுபலதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களாக கருத்து வேறுபாடு காரண மாக கணவன்- மனைவி இடையே பிரச்சினை உள்ளது. இதனால் அடிக்கடி சண்டைகள் நடப்பது உண்டு.

    சம்பவத்தன்று வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்ப்பட்டது. பிரபு குறைவாக பணம் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த சுபலதா வெட்டுக்கதியால் வெட்டியுள்ளார்.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரபு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி பெற்று, ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
    • காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார்.

    கோவை 

    கோவை ஆவாரம்பாளையம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 22). இவர் காந்தி மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது நண்பர்களுடன் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    இதேபோன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஜித் குமார் வேலைக்கு சென்றபோது காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார். இதனை பார்த்த அஜித் குமார் அந்த வாலிபரை கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக அஜித்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவரை புகார் அளிக்க விடாமல் அந்த வாலிபர் மிரட்டினார். இதனை அடுத்து அவரின் நடவடிக்கை குறித்து தந்தையிடம் தெரிவிப்பதற்காக நேற்று அஜித்குமார் தனது நண்பர் கார்த்திக் (21) என்பவருடன் கணபதி வீ. ராவ் நகரில் உள்ள அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது அவர்களுக்கி டையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அஜித்குமார் மற்றும் கார்த்திகை கத்தியால் குத்தினார். பின்னர் இருவரையும் மிரட்டிவிட்டு அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி சென்றார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஜித்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேரையும் கத்தியால் குத்தியது கோபால் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கோபாலை தேடி வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அன்பழகன்.

    மதுரை

    மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அன்பழகன். சம்பவத்தன்று காலை இவர் செக்கானூரணி- திருமங்கலம் ரோட்டில் ரோந்து சென்றார்.

    மாவிலிப்பட்டி சந்திப்பு அருகே 2 பேர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் அன்பழகன் விசாரித்தார். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். 2பேரிடமும் கத்திகள் இருந்தது தெரிய வந்தது.

    எனவே சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும், காவல் நிலையத்துக்கு வாருங்கள் என்று அழைத்தார்.இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அன்பழகனை கத்தியால் குத்த பாய்ந்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து பன்னியான் மேலத்தெருவை சேர்ந்த காசி விஸ்வநாதன் (25), செக்கானூரணி சிவப்பிரகாஷ் (27) ஆகியோரை கைது செய்தார்.

    • வியாபாரியை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • செல்லூர் முத்துக்குமார், வில்லாபுரம் சதீஷ், சிம்மக்கல் கார்த்திகேயன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர், 50 அடி ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 31). இவர் அந்த பகுதியில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் வசிக்கும் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். அப்போது இவருக்கும், அங்கிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து வைத்தனர். இந்த நிலையில் அசோக்குமார் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விஷேச நிகழ்ச்சியில் தகராறு செய்த 5 பேர் கும்பல் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இதுகுறித்து அசோக்குமார் செல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்மக்கல் எல்.எம்.பி. அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த முருகன், கவுதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய செல்லூர் முத்துக்குமார், வில்லாபுரம் சதீஷ், சிம்மக்கல் கார்த்திகேயன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதால் தீர்த்துக்கட்டியதாக போலீசில் வாக்குமூலம்
    • ரதீஷ்குமாரின் மனைவி கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். அவர் தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பெருமா ள்புரத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்ப த்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு உதவியாளராக பணி யாற்றி வந்தவர் ரதீஷ்குமார் (வயது 35).

    இவர் நேற்று வழக்க ம்போல் ஆஸ்பத்திரிக்கு பணிக்கு வந்தார். இந்த ஆஸ்பத்திரி காலை 7 மணி முதல் 10.30 மணி வரை யும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் செயல் படும். ஒய்வு நேரத்தில் ரதீஷ்குமார், ஆஸ்பத்திரி பதிவேட்டு அறையிலேயே தங்கி இருப்பார்.

    நேற்று மதியம் 3 மணி அளவில் அறையில் தங்கி இருந்த அவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரை குத்திக் கொன்ற பெண்ணே, இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவாகரத்தில் இந்தப் படுகொலை நடந்திருப்பது தெரியவந்தது. கொலை செய்ய ப்பட்ட ரதீஷ்குமார் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த திருமணமான ஷிபா என்ற பெண்ணுடன் நட்பாக பழகி உள்ளார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    திருமணம் செய்து கொள்வதாக ரதீஷ்குமார் அளித்த உறுதிமொழியால் ஷிபா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து உள்ளார். ஆனால் அவரிடம் உல்லாசம் அனுப வித்த ரதீஷ்குமார் அவரை ஏமாற்றி விட்டு, கடந்த ஆண்டு வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தன் வாழ்க்கையை சீரழித்த ரதீஷ்குமாரை கத்தியால் குத்தி, ஷிபா கொலை செய்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஷிபாவை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    நான் எம்.எஸ்.சி., பி.எட்., எம்.பில்., படித்துவிட்டு பேராசிரியையாக வேலை பார்த்து வந்தேன். எனது கணவர் மேக்சன், மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்தார். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    2 பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகை பெற நான் முயற்சித்தேன். அப்போது தான் ரதீஷ்குமார் எனக்கு அறிமுகமானார். உதவித் தொகை பெற அவர் உதவினார்.

    அதனால் நட்பாக பழக ஆரம்பித்த எங்களது பழக்கம் சில நாட்களில் கள்ளக்காதலாக மாறியது. ரதீஷ்குமாருடன் பல இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்தேன். ரதீஷ்குமாரின் வசீகர பேச்சால் கணவர்-குழந்தைகளை மறந்தேன்.

    அப்போது என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்த ரதீஷ்குமார், உனது கணவரை விவாகரத்து செய்து விட்டு வா. நாம் திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கலாம் என்றார்.

    கள்ளக்காதல் மோகத்தில் கணவரை நான் விவாகரத்து செய்தேன். அதன்பிறகு தனிமையில் வசித்த நான் கடந்த 13 ஆண்டுகளாக ரதீஷ்குமாருடன் பழக்கத்தில் இருந்தேன். அவர் வேலை பார்க்கும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஒய்வு நேரத்தில் நான் அங்கு செல்வேன். அப்போது அவருக்கு உணவு சமைத்து கொண்டு செல்வேன்.

    அங்கு உணவருந்தி விட்டு நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம்.இப்படியே காலம் கடத்தினால் எப்படி? என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என ரதீஷ்குமாரிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் அளித்தார்.

    மேலும் கடந்த சில நாட்களாக அவர் என்னிடம் நெருக்கமாக இல்லாதது போன்று தோன்றியது.இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    ரதீஷ்குமார் பற்றி விசாரித்த போது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் மீனாட்சி புரம் பகுதியில் வசிப்பது தெரியவந்தது.இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து அவரிடம் கேட்டபோது, விரைவில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்கிறேன் எனக் கூறினார். ஆனால் அவரது பதில் எனக்கு பிடிக்கவில்லை. மேலும் அவரால் நான் வேலைைய இழந்ததும் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து விட்டு தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய ரதீஷ்குமார் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    என் வாழ்க்கையை நாசமாக்கியதோடு மற்றொரு பெண்ணின் வாழ்க்கையையும் சீரழித்த ரதீஷ்குமாரை தீர்த்துக் கட்டுவது என முடிவு செய்தேன். இதற்கான நேரத்திற்கு காத்திருந்த போது, ரதீஷ்குமார் என்னை தொலைபேசியில் அழைத்தார்.

    நம் விவகாரம் குறித்து பேசி முடிவு எடுக்கலாம், நீ இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு வா என்றார். இது தான் சரியான நேரம் என நினைத்த நான், தூக்கமாத்திரை கலந்து சாப்பாடு தயாரித்து கொண்டு சென்றேன். வீட்டில் இருந்து செல்லும் போதே கொலை திட்டத்தை செயல்படுத்துவதற்காக கத்தி மற்றும் குத்தூசியை எடுத்துச் சென்றேன்.

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பதிவேட்டு அறையில் ஒய்வு நேரத்தில் ரதீஷ்குமார் மட்டுமே இருந்தார். அவருக்கு உணவு பரிமாறி னேன். அதனை சாப்பிட்ட அவர், சிறிது நேரத்தில் மயக்க நிலைக்குச் சென்றார்.

    இதற்காக காத்திருந்த நான், தயாராக வைத்திருந்த கத்தி மற்றும் குத்தூசியால் ரதீஷ்குமார் உடலில் ஆத்திரம் தீர குத்தினேன். சுமார் 30 முறை சரமாரியாக குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    ரதீஷ்குமாரை கொலை செய்து விட்டு, அறையை விட்டு வெளியே வந்த நான், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அடி-தடி பிரச்சினை உடனே வாருங்கள் என கூறினேன். போலீசார் வந்ததும் ரதீஷ்குமாரை கொலை செய்தது பற்றி தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி ,ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி, பிரான்சிஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஷிபாவிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர். அவர் வைத்திருந்த பையில் பல்வேறு மாத்திரைகள் இருந்தன.

    எனவே கொலை செயலை முடித்துவிட்டு அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கலாம். பின்னர் முடிவை மாற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ரதீஷ்குமாரின் மனைவி கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். அவர் தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெவ்வேறு சம்பவங்களில் 3 பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், ஹரி, திலீப் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நெல்பேட்டை, காயிதே மில்லத் நகரை சேர்ந்த சுல்தான் சையது இப்ராஹிம் மகன் அன்வர் முகமது (வயது 21). இவர் நேற்றிரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒரு சிறுவனை மிரட்டிக் கொண்டிருந்தது. இதனை அன்வர் முகமது தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது.

    இதுகுறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் ரஹமத்துல்லா (46), அப்துல்லா, முஹம்மது இஸ்மாயில் மற்றும் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அவனியாபுரம், காமராஜர்நகரைச் சேர்ந்தவர் முத்துக்காளை (26). இவரது சகோதரர் வல்லரசு (22). இவரும், அதே பகுதியில் வசிக்கும் விக்னேஸ்வரன் என்பவரும் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் வியாபாரம் செய்து வந்தனர். இதில் அவர்களுக்கு முன் விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இவர்க ளுக்குள் பிரச்சினைஏற்பட வல்லரசுவை விக்னேஸ்வ ரன் மற்றும் அவரது ஆதர வாளர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

    இது தொடர்பாக முத்துக்காளை அவனியா புரம் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன், மாரி ச்செல்வம், பெருங்குடி, வாஞ்சிநாதன் தெரு தங்கராஜ் மகன் சதீஸ்வரன் (18) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கீரைத்துறை, காமராஜபுரம், ஜார்ஜ் ஜோசப் தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் விஜயகுமார் (23). சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இதுகுறித்து கீரைத்துறை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், ஹரி, திலீப் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • மூதாட்டியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கோவில் அருகே அமர்ந்திருந்த வாலிபரிடம் கேள்வி கேட்டதற்கு ஆத்திரமடைந்த அவர் நிர்மலாவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அருகே உள்ள வீராணம் கொய்யாத்தோப்பு பகுதிகள் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த பச்சையப்பன் மனைவி நிர்மலா (வயது 60) என்பவர்தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் அல்லிக்குட்டை கணபதி நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 22).

    இந்த கோவிலில் வெகுநேரமாக அங்கேயே அமர்ந்து இருந்துள்ளார்.இதைக்கண்ட நிர்மலா ஏன் இங்கே அதிக நேரமாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிர்மலாவின் கழுத்தில் குத்தி உள்ளார்.

    நிர்மலாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நிர்மலாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசோக்குமாரை பிடித்து வீராணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி, ரூ.210-ஐ பறித்து சென்றார்.

    மதுரை

    மதுரை சோலை அழகுபுரம், திருப்பதி நகரச் சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (வயது 39). இவர் நேற்று கருப்பாயூரணி, பாரதிபுரம் தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தி முனையில் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக செண்பகமூர்த்தி, மாட்டுத்தாவணி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பாயூரணி சீமான் நகர், நூல் பட்டறை தெரு ஜான் பிரிட்டோ, கே.புதூர் சங்கர் நகர் சதாம் உசேன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மதுரை அழகப்பன் நகர், காந்திஜி தெருவை சேர்ந்தவர் முருகன் (51). இவர் நேற்று ஜெய்ஹிந்த்புரம் எல்.எல். ரோடு சந்திப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் என்ற பிரதர்ஸ் சதீஷ், கத்தியை காட்டி மிரட்டி, ரூ.210-ஐ பறித்து சென்றார். இது தொடர்பாக முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெய்ஹிந்த்புறம் போலீசார், சதீஷ்குமாரை கைது செய்தனர்.

    • வியாபாரியை கத்தியால் குத்திய அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார்

    மதுரை

    ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் விமல் ஆனந்த் (வயது 30). இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் சோழவந்தானை சேர்ந்த நவீன் ரூ.10ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிளை விற்றார்.

    இந்தநிலையில் அச்ச ம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன்கள் ஜெயபால்(22), கோபால் (26) ஆகியோர் விமல் ஆனந்தை தேடி வந்தனர்.

    அவர்கள், சோழவந்தான் நவீன் விற்ற மோட்டார் சைக்கிள் எங்களுக்கு சொந்தமானது என்றுகூறி அதை தந்துவிடுமாறு கேட்டனர். அதற்கு விமல் ஆனந்த், "என்னிடம் அவர் ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார். அந்த பணத்தைப் பெற்றுத்தந்தால் மோட்டார் சைக்கிளை தருவதாக கூறினார்.

    இதனை தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த 2 பேரும் விமல் ஆனந்தை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பி ஜெயபால்,கோபால் ஆகியோரை கைது செய்தனர்.

    • 4 மளிகை கடைகளில் அடுத்தடுத்து திருட்டு நடந்ததால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 ஆயிரம் மதிப்புடைய சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர்.

    வடவள்ளி:

    கோைவ தொண்டாமுத்தூரில் கோவை வடவள்ளி -சிறுவாணி சாலையில் ஏராளமான மளிகை கடைகள், குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில 2 நாட்களாக இந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சிறுவாணி சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 ஆயிரம் மதிப்புடைய சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள சுரேஷ், செந்தில்குமார் ஆகியோரின் மளிகை கடைகளில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களையும் அள்ளி சென்றுள்ளனர். நேற்று காலை கடைக்கு வந்த உரிமையாளர்கள் திருட்டு போன சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதற்கிடையே இடையர்பாளையம் ரோட்டில் உதயகுமார் என்பவரின் கடையை உடைத்து ரூ.7 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை பார்வையிட்டார்.

    அப்போது, நள்ளிரவு நேரத்தில் 3 நபர்கள் கையில் கத்தி, கடப்பாரையுடன் சுற்றி திரிகின்றனர். பின்னர் ஆட்கள் யாராவது வருகிறார்களா என நோட்டமிடும் அவர்கள், ஆட்கள் வராததை உறுதி செய்து கொண்டு, கடையின் அருகே சென்று கடை பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகளை தனது செல்போனில் ஏற்றிய அவர், வியாபாரிகள் குழுவில் பகிர்ந்தார். தற்போது இந்த காட்சிகள் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்த காட்சிகளை பார்த்த வியாபாரிகள், தொடர்ந்து நடந்து வரும் திருட்டு சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கவும் வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    ெதாண்டாமுத்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மளிகை கடையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×