என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பேச்சு"

    • பால் உற்பத்தியை பெருக்குவது கிராமங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பி னர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    பால் உற்பத்தியாளர் களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு லிட்டருக்கு ரூ.33 என்று உச்சகட்ட விலையை நிர்ணயம் செய்யப்பட்டு, கூடுதல் லாபம் கிடைப்ப தற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தி யாளர்கள், பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் சமமான அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது.

    பால் உற்பத்தியை பெருக்குவது கிராமப் புறங்களின் வருவாய் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றி யத்தின் சார்பில் ஆண்டு வருமான லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.0.50 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் கடந்த 01.01.1983 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்க ளை எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியத்தின் மூலம் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட லாபத்தில் இரு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 547 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 11,832 உறுப்பினர்களுக்கு ரூ.1,35,35, 653.80 மதிப் பீட்டில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று இந்த ஆண்டிலும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 411 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த 8,936 உறுப்பினர்களுக்கு ரூ.1,06,07,911 மதிப்பீட்டில் ஊக்கத்தொகை வழங்கப்பட வுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மானாமதுரை துணை பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர் ஆவின் (காரைக்குடி) ராஜசேகர் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய சாந்தாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் உரிமைத்தொகை வழங்கும் விழா நடந்தது.
    • விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் 2-ம் கட்ட மகளிர் உரிமைதொகை விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து ெகாண்டு புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு 17,417 புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசிய தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சத்து 6 ஆயிரத்து 919 பெண்களுக்கும், இன்று 2-ம் கட்டமாக 17 ஆயிரத்து 417 பெண்களுக்கும் என மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 336 பெண்களுக்கு இந்த கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வா தாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்க மாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில்2-வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
    • நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசித்து பழக வேண்டும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விழாவில் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகரில்2-வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    பின்னர் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் பரதநாட்டியம், சிலம்பம், தப்பாட்டம், ஓவியம், நாதஸ்வரம், கரகாட்டம், தெருக்கூத்து, வாய்ப்பாட்டு, நாடகம், கிராமிய பாடல், மரக்கால் ஆட்டம், தவில், ராஜா ராணி ஆட்டம், தவில், வில்லிசை, எருது கட்டும் மேளம் உள்ளிட்ட கலை களில் சிறந்து விளங்கிய மொத்தம் 30 கலை ஞர்களுக்கு 2022-23-ம் ஆண்டு மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி ஆகிய விருதுகள், பொற்கிழிகளை அமைச்சர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 2-வது முறையாக கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட் காட்சி மைதானத்தில் 16.11.2023 முதல் 27.11.2023 வரை 12 நாட்களுக்கு மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. நமக்கு பொது அறிவு, பழைய நினைவுகள், நிகழ்ச்சிகள், புதிய கவிதைகள் இதெல்லாம் கிடைப்பதற்கு புத்தகங்கள் தான் சரியான ஒரு தேர்வு ஆகும். பய ணங்களின் போதும், நேரம் கிடைக்கும் போதெல் லாம் புத்தகங்கள் வாசித்து பழக வேண்டும்.இப்புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்கள், போட்டித்தேர்வு வழிகாட்டி புத்தகங்கள், பாடநூல் புத்தகங்கள் என, லட்சக் கணக்கான புத்த கங்கள் குவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாரம்பரிய இசைப் பொருட்கள் கண் காட்சி, அறிவோம் பயில் வோம் பயிலரங்கம், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட தொல் பொருட்களின் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. அனைவரும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு, புத்த கங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், திட்ட இயக்குநர் தண்டபாணி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருது நகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ராஜ சேகர், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக அமைச்சர் மூர்த்தி புல்லட்டில் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
    • வைகை அைண நீர்மட்டத்தை பொறுத்து மேலூர் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மேலூர்

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் 17ந்தேதி நடக்கிறது. இதற்காக மேலூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி புல்லட்டில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்திற்கு ஜூன் 1-ந்தேதி இரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், 3 மாதம் கழித்து தற்போது தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதே நிலையில் மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளை சேர்ந்த ஒரு போக பாசன விவசாயிகள் கேட்டுக் கொண்டதின் பேரில், தற்போது குடி நீருக்காக வைகை அணையில் இருந்து 14 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலூர் பகுதி களைச் சேர்ந்த ஒரு போக பாசன விவசாயிகள் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற னர்.

    தற்போது வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிக்கு தரவேண்டிய தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து பகுதிக்கும் ஏக போகமாக தண்ணீர் திறந்தால் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

    அதனால், வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய தண்ணீர் வழங்கப்பட்ட பின்னர் பருவமழை மற்றும் அணையின் தண்ணீர் அளவை பொருத்து மேலூர் பகுதி ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகளின் ஆய்விற்கு பிறகு அரசு உரிய நடவடிக்கையாக முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபேதா அப்பாஸ் ஒன்றிய கழக செயலாளர்கள் குமரன், பாலகிருஷ்ணன், ராஜேந்திர பிரபு, ராஜ ராஜன், கிருஷ்ணமூர்த்தி, பழனி, மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், வல்லாளப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் கலைவாணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், கர்ப்பிணி பெண்களை அவரது தாய், தந்தையர், மாமியார் கணவர் 10 மாத காலம் பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

    அதன் பின்னர் 150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர் மற்றும் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விருந்து வழங்கப்பட்டது.

    கர்ப்பிணி பெண்கள், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • அடிப்படை எழுத்தறிவு பயிற்சியை அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
    • ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை தொடக்க விழா முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் மூலம் அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை தொடக்க விழா கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், ஒரு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்தரத்தில் மிகவும் குறைந்து இருந்தது. இப்பொழுது மாவட்டத்தின் வளர்ச்சி, கல்வியறிவு என அனைத்திலும் முதலிடம் பெறுவதற்கு முதலமைச்சர் வேண்டிய வசதிகளை செய்து தருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அதை நிவர்த்தி செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு என ரூ.587 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தவர்கள், அப்படி என்றால் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பிலாமல் வேலைக்கு செல்பவர்கள், கிராமப்பகுதிகளில் உள்ள எழுத படிக்க தெரியாத பெரியவர்கள் என உள்ள அனைவருக்கும் எழுத படிக்க சொல்லி கொடுத்து அவர்களது பெயரை கூட கையொப்பம் இடும் அளவிற்கு படிக்க சொல்லி கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    கடந்த ஆண்டு சுமார் 3.10 லட்சம் பேருக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் என இலக்கும் அதற்கான பயிற்சியையும் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். இன்றைக்கு எங்களது முழு முயற்சியின் காரணமாக 3.10 லட்சம் பேரில் இருந்து 3.19 லட்சம் பேருக்கு எழுத படிக்க சொல்லி கொடுத்து உயர்த்திக் காட்டி உள்ளோம்.

    இதுபோன்ற தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிசாரா குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கான இந்த பயிற்சியை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வேண்டும். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் குப்புசாமி, இணை இயக்குநர் அமுதவல்லி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திசைவீரன், திருப்புல்லாணி ஒன்றியக் குழுத்தலைவர் புல்லாணி, மாயாகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தமிழ் மொழியை தொட்டுப்பார்க்க வேண்டாம் என்றார்.
    • தமிழ் மொழிக்கு செம்மொழி என்று அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கலைஞர்


    திருச்சி:

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தாராநல்லூர் கீரைக்கொல்லை பகுதியில், பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டலம் 3-ன் தலைவருமான எம்.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. வட்டச் செயலாளர்கள் பாண்டியன், மனோகரன், சிலம்பரசன், சுப்ரமணி ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள். ராவணன், சிவக்குமார், ஜெயசந்திரன், சங்கர், சந்திரன், முகம்மது முபாரக் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசியதாவது:-

    தமிழ் மொழிக்கு செம்மொழி என்று அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கலைஞர். ஒன்றிய அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நாம் எடுத்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். பழமையான மொழிகளில் தமிழ் மொழி தான் முதல் இடம் அதை தொட்டு பார்க்க வேண்டும் என நினைக்கின்றனர்.

    தற்போது தமிழகத்தில் கலைஞரின் வாரிசு ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார். எனவே தமிழ் மொழியை தொட்டு பார்க்க வேண்டும் என நினைத்து கூட பார்க்க வேண்டாம் என பேசினார்.

    கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.


    ×