search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடக்கப்பள்ளி"

    • நரிக்குடி ஒன்றியம் வேளானூரணி கிராமத்தில் தொடக்கப்பள்ளி இல்லாததால் 3 கி.மீ. தூரம் சென்று குழந்தைகள் கல்வி கற்கிறார்கள்.
    • போராட்டத்தில் ஈடுபட போவதா கவும் வேளானூரணி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    திருச்சுழிசு

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட வேளானூ ரணி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்ற னர். இந்த கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக்கல்வி பயின்று வருகின்றனர்.

    ஆனாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேளானூரணி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியே இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலுப்பையூர் பகுதிக்கு சென்று தான் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவ லமான சூழ்நிலை ஏற்பட்டுள் ளது.

    மேலும் இலுப்பையூர் பகுதியிலும் அரசுப்பள்ளி இல்லையென்பதால் அரசு உதவிபெறும் தனியார் பள் ளியிலேயே தங்களது குழந் தைகளை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதா கவும் வேளானூரணி கிராம மக்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.

    மழைக்காலங்களின் போது தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற் றோர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் ஆதங்கத்து டன் தெரிவித்தனர். இந்த நிலையில் இலுப்பையூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு செல்வதற்காக வேளானூரணி கிராம மக் கள் தங்களது குழந்தைகளை பள்ளி வாகனத்திற்கென தனியாக பேருந்து கட்டணம் செலுத்தி பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கும் கஷ்டமான சூழ்நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகி றது.

    மேலும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் வேன் கட்டணம் செலுத்த முடியாமல் தங்கள் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்ப இயலாமல் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும் சூழ் நிலையும் உருவாக்கியுள்ள தாக பெற்றோர்கள் வருத்த முடன் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக வேளா ணூரணி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு உள்ளதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகத் திற்கு பலமுறை மனு அனுப் பியும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை யென புகார் எழுந்துள்ளது.

    மேலும், தங்கள் கிராமத் தில் அரசு தொடக்கப்பள் ளியை உடனடியாக கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தொடர் போராட் டத்தில் ஈடுபட போவதா கவும் வேளானூரணி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • விடுமுறை அளிக்காமல் உள்ள பள்ளிகளின் மீது நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

    தொடர் மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.

    பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று இரவு முதல் காலை ஏழு மணி வரை லேசான தூரல் மழை பொழிந்தது.

    இதன் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட பின்பும் விடுமுறை அளிக்காமல் உள்ள பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளித்ததை நடைமுறைப்படுத்தாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்பு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் 9, மேல் ஆலத்தூரில் 104.20, ஒடுகத்தூரில் 18, விரிஞ்சிபுரத்தில் 3, காட்பாடியில் 27, வேலூரில் 15.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவும் திடீரென மழை பெய்தது. இரவு முழுவதும் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்தது.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

    ராணிப்பேட்டையில் 27.6, பாலாறு அணைக்கட்டு 4.8, வாலாஜாவில் 15, அம்மூரில் 20, ஆற்காட்டில் 24.8, அரக்கோணத்தில் 14, மின்னலில் 24.4, காவேரிப்பாக்கத்தில் 33, பனப்பாக்கத்தில் 34.4, சோளிங்கரில் 8.2, கலவையில் 38.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.

    இதில் திருவண்ணாமலை யில் 15 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 1.40, போளூரில் 17.40, ஜமுனா மரத்தூரில் 10, கலசபாக்கத்தில் 62, தண்டராம்பட்டில் 4, ஆரணியில் 18.80, செய்யாறில் 60, வந்தவாசியில் 17, கீழ்பெண்ணாத்தூரில் 63.40, வெம்பாக்கத்தில் 27, சேத்துப்பட்டு 7.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    திருப்பத்தூரில் நேற்று மாலை முதல் லேசான மழை பெய்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாட்டறம்பள்ளியில் 1.20, வாணியம்பாடியில் 5, ஆம்பூரில் 24.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • விடுபட்ட குழந்தைகள் கணக்கெடுப்பில் 759 குழந்தைகள் மற்றும் 32 கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்த வில்லை

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    போலியோ, டிப்தீரியா, கக்குவான் இருமல், இரண ஜன்னி, தட்டம்மை, குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர காச நோய், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    போதிய விழிப்புணர்வின்மை, பெற்றோரின் நேரமின்மை, சுகாதார பணியாளர்களின் காலிப்பணியிடங்கள், தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சில குழந்தைகளுக்கு ஒரு சில தடுப்பூசி மருந்துகள் கிடைக்கப்பெறாமல் இருக்கலாம். இதன் மூலம் விடுபட்ட குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகள் பெறுவதற்காக இந்திய அரசு தீவிர மிஷன் இந்திர தனுஷ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இந்த ஆண்டு இத்திட்டம் 3 சுற்றுகளாக (ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர்) மாதங்களில் நடைபெறுகிறது.விடுபட்ட குழந்தைகள் கணக்கெடுப்பில் மாவட்டத்தில் 759 குழந்தைகள் மற்றும் 32 கர்ப்பிணிகள் இதுவரை தடுப்பூசி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வாரம் தவணையில் உள்ள 72 கர்ப்பிணிகள் மற்றும் 1980 குழந்தைகள் முதல் சுற்றில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.முதல் சுற்று தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்டத்தி ற்குட்பட்ட அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், குருந்தன்கோடு, மேல்புறம், தோவாளை, முன்சிறை, ராஜாக்க மங்கலம், தக்கலை, திருவட்டார், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மையங்களில் இன்று முதல் 12-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது.

    2-ம் சுற்று செப்டம்பர் மாதம் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மற்றும் 3-ம் சுற்று அக்டோபர் 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பொது சுகாதார பணி துணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, மாநகர் நல அலுவலர் ராம்குமார், வடிவீஸ்வரம் நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ராகினி, மருத்துவ ஆய்வாளர் சூரிய நாராயணன், டாக்டர்கள், செவிலியர்கள், பயனா ளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அரசு தொடக்கப்பள்ளியில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாணவர் சேர்க்கை நடப்பதாக சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கையில் பார்வைத் திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 5 முதல் 15 வயது வரை உள்ள பார்வையற்ற, குறைபார்வையுடைய மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கலாம். விடுதி சார்ந்த இப்பள்ளியில் உணவு, உடை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

    இந்த பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்க ளால் பிரெய்லி முறையில் கல்வியுடன் உடற்கல்வி மற்றம் கணினி பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. விடுதியில் பார்வையற்ற மாணவர்களை கனிவுடன் கவனிக்க விடுதி பணியா ளர்கள் உள்ளனர். இப்பள்ளியில் சேர தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விபரங்களுக்கு இளையான்குடி சாலை அம்பேத்கர் சிலை அருகில் உள்ள பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப் பள்ளியை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைக்குடி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 87-வது ஆண்டு விழா கிராமத்தலைவர் தமிழ்கண்ணன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார வள மைய அலுவலர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜூ வரவேற்றார். யூனியன் தலைவர் ராதிகாபிரபு, பேரூராட்சி தலைவர் மவுசூர்யா கேசர்ஹான், ரோட்டரி கிளப் மாவட்டத்தலைவர் பார்த்திபன், செயலாளர் கூரிதாஸ், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி ஆகியோர் பேசினர்.

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.ஒன்றிய கவுன்சிலர் காளியம்மாள், கிராமச்செயலாளர் அதிரை மன்னன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தலைவர் சசி கனி,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி, ஆலோசனைக்குழு தலைவர் சின்னராஜா, முன்னாள் மாணவர் சங்கம் பால்கனி, உதயவேல் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அன்பின் அமலன் நன்றி கூறினார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் ,

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களு க்கான ஊதிய முரண்பாடு களை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் , மத்திய அரசு அறிவித்த அகவிலை ப்படியினை நிலுவையின்றி அறிவித்த தேதியிலிருந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமை ப்பினர் உண்ணாவிரதப் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் திருப்பூர் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷ ங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்.

    முத்துப்பேட்டை:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.

    தேர்தல் ஆணையராக திருத்துறைப்பூண்டி வட்டார செயலாளர் ஹரிகிருஷ்ணன், துணை ஆணையராக வேதரெத்தினம் ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் வட்டார தலைவராக சரவணன், வட்டார செயலாளராக செல்வசிதம்பரம், பொருளாளராக சுரேஷ், துணை தலைவர்களாக சீனிவாசன், பழனித்துரை, வாசுகி துணை செயலாளர்களாக செந்தில்குமரன், ராஜசேகரன், உஷா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக சிங்காரவேலன், ஆறுமுகம், பாரதி, சசிகலா, ராணி ஆகியோரும், வட்டார செயற்குழு உறுப்பினர்களாக சிங்காரவேலன், முரளி, சாமிநாதன், சீனிவாசன், இந்திரா, விஜயராணி, அன்புச்செல்வி, அறிவழகன், பன்னீர்செல்வம், சாகுல் ஹமீது, சோமசுந்தரம், மாரிமுத்து, மகாதேவன், பொதுவுடை, முருகானந்தம், பாலகிருஷ்ணன், முருகேசன், பாஸ்கரன், வீரமணி, கார்த்திகை செல்வன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் சுபாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்.

    இதில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர பெற்றோர் ஆசிரியர் கழகம், பொது மக்கள் போன்றோர் கோரிக்கை வைத்ததனர்.
    • அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.68.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடம் ஆக மொத்தம் 8 வகுப்பறை கட்டிடங்கள் இந்த நிதியில் கட்டப்பட உள்ளன

    நாகர்கோவில் :

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல்வாய்மொழி தாணுமாலையன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், குமாரபுரம் தோப்பூர் அரசு தொடக்கப் பள்ளி, ஒற்றையால்விளை அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் மாணவர்களின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர பெற்றோர் ஆசிரியர் கழகம், பொது மக்கள் போன்றோர் கோரிக்கை வைத்ததனர்.

    இதன் அடிப்படையில் இப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி தர நிதி ஒதுக்கீடு செய்திட அரசிடம் பரிந்து ரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஊராட்சிப் பள்ளிகளில் புதிய வகுறை கட்டிடம் கட்டுவதற்கு அரசு ரூ.1 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தர விடப்பட்டுள்ளது.

    ஆரல்வாய் மொழி தாணுமாலை யன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடம், குமாரபுரம் தோப்பூர் அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடம், ஒற்றையால்விளை அரசு தொடக்கப்பள்ளி யில் ரூ.68.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடம் ஆக மொத்தம் 8 வகுப்பறை கட்டிடங்கள் இந்த நிதியில் கட்டப்பட உள்ளன. பணிகள் விரை வில் தொடங்கப்பட உள் ளது. இதற்காக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து பழைய நிலையிலான பதவி உயர்வு வழி பள்ளிக் கல்வி இயக்குனர் பணியிடத்தை தொடரச்செய்ய வேண்டும். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இதற்கான நிதியை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவரும், மாவட்ட செயலாளருமான எழில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் மார்ட்டின் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    • ஆதிநாதபுரம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவர்கள் பயின்று வந்தனர்.
    • ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஆதிநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டு வருவதால் 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    பள்ளி கட்டிடம்

    இந்நிலையில் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து காணப்பட்டதால் ஆதிநாதபுரம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவர்கள் பயின்று வந்தனர். ஆதிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் மூலம் ரூ.13 லட்சத்து 67 ஆயிரம் பங்களிப்புடன் ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் - புது வாழ்வு சங்கம், நிறுவனர் மோகன் சி. லாசரஸ் பள்ளி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் முன்னிலை வகித்தார். ஆதிநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துமாலை, ஆழ்வார் திருநகரி பேரூராட்சி மன்றத் தலைவர் சாரதா பொன்இசக்கி, ஆழ்வார்திருநகரி சேகரகுரு அருமைத் துரை, தலைமையாசிரியை சித்ரா, ஆதிநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கரும்பன், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் வெள்ள பாண்டியன், காங்கிரஸ் தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் இசை சங்கர், ஆழ்வார் திருநகரி காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் நகர தலைவர் கருப்பசாமி, ஆழ்வார் திருநகரி நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், ஆழ்வை மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் நவீன வசதிகளுடன் பாடம் நடத்தப்பட்டது.
    • நடத்தும் பாடங்களை கவனச்சிதறல் இல்லாமல் அனைத்து மாணவ, மாணவிகளுமே கவனித்து பாடத்தை கற்றுக்கொள்கின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் புரொஜக்டர் மூலம் ஒளிபரப்பி திரையில் பாடங்கள் நடத்தப்பட்டது. இப்பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்விச்சீர் வழங்கும் விழாவில் மக்கள் சட்ட பாதுகாப்பு அமைப்பினர் புரொஜக்டர் வழங்கினர். அதில் பள்ளி தலைமை ஆசிரியை நல்லாசிரியர் சாந்தி பாடங்களை நடத்தினார்.

    இது குறித்து தலைமை ஆசிரியை சாந்தி கூறும்போது, புரொஜக்டரில் பாடம் நடத்தும் போது மாணவர்களுக்கு ஒளி மற்றும் ஒலியுடன் படத்துடன் காட்சிப்படுத்தும் வசதி உள்ளது. இதனால் பாடம் மாணவர்கள் மனதில் எளிதாக பதிவாகிறது. கரும்பலகையில் நடத்துவதைவிட இதில் நடத்தும் பாடங்களை கவனச்சிதறல் இல்லாமல் அனைத்து மாணவ, மாணவிகளுமே கவனித்து பாடத்தை கற்றுக்கொள்கின்றனர். மேலும் கற்பித்தலில் புதிய முயற்சியாக இது உள்ளது என்றார்.

    • தொடக்க பள்ளி கட்டிடம் மாணவர்கள் வகுப்பறைக்கு தகுதியில்லை என இடிக்கப்பட்டது.
    • பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் மரத்தின் கீழ் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர்.

    தென்காசி:

    நெல்லை சாப்டர் பள்ளி கழிவறை கட்டிட தடுப்பு சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தமிழக அரசு பலவீனமான அரசு பள்ளி கட்டிடங்களை இடித்து மீண்டும் புதிய கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது.

    இதன்படி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மகிழ்வண்ணநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடம் இனி மாணவர்கள் வகுப்பறைக்கு தகுதியில்லை என இடிக்கப்பட்டது. மற்றொரு வகுப்பறை கட்டிட சுவர்கள் மற்றும் மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதை பயன்படுத்தவில்லை . இதனால் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் மரத்தின் கீழ் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர். இந்த இடத்தில் அருகே பாழடைந்த கட்டிடம், திறந்தவெளி கிணறு உள்ளது. மேலும் மர கிளைகள் முறிந்து விழும் அபாயம் உள்ளது.

    இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை கட்டவேண்டும் என மாணவ, மாணவிகள் 2 நாட்களுக்கு முன்பு 40 -க்கும் மேற்பட்டோர் தங்களது பெற்றோர்களுடன் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×