என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பிரசாரம்"

    • நாட்டுப்புற கலைஞர்கள் பாடல், தப்பாட்டம், நாடகங்கள் நடத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி தக்கான்குளம் அருகே நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நகராட்சி 24-வது வார்டு உறுப்பினர் அருண் ஆதி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சோளிங்கர் அரசு மருத்துவமனை எச்.ஐ.வி. ஆலோசகர் சித்ரகலா கலந்துகொண்டு எய்ட்ஸ் பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறை, எய்ட்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருவில் உள்ள குழந்தைக்கு நோய் வராமல் தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்ட நபரை சக மனிதனாக பார்க்க வேண்டும், பாலியல் நோய் குறித்தும், பாதுகாப்பான உடலுறவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் பாடல், தப்பாட்டம், நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் துறைசார்ந்த பணியா ளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசி, பரிசோதிக்கப்படாத ரத்தம், தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பரவ வாய்ப்பு என நான்கு வழிகளில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுகிறது
    • கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தை எச்.ஐ.வி. பாதிப்பில்லாமல் பிறக்க அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்.

    நாகர்கோவில் :

    எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந்தேதி "உலக எய்ட்ஸ் தினம்" அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் எச்.ஐ.வி.,எய்ட்ஸ் குறித்து கிராமிய கலை குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி வடசேரி பஸ் நிலையத்தில் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் டாக்டர் பெடலிக்ஸ் ஷமிலா தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பாதுகாப்பற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசி, பரிசோதிக்கப்படாத ரத்தம், தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பரவ வாய்ப்பு என நான்கு வழிகளில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுகிறது. பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தால் எச்.ஐ.வி. பரவாது. கர்ப்பிணி பெண்கள் தவறாமல் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தை எச்.ஐ.வி. பாதிப்பில்லாமல் பிறக்க அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். அதற்கான மருந்து எடுத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தை எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் ஆரோக்கி யமாக பிறக்கும்.

    அனை வரும் அனைத்து அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏ.ஆர்.டி. எடுத்துக்கொண்டால் வைரசை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம். இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் பொதுமக்க ளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மேற்பார்வையாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த கலைக்குழுவினர் மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொண்டு கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய பாடல்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் எச்.ஐ.வி.,எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

    • நம் நலம் நம் கையில் என்ற விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • நோய்கள் பரவும் விதம் குறித்தும் அதை தடுப்பது எவ்வாறு எனவும் விளக்கினார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் நம் நலம் நம் கையில் என்ற விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஆலோசகர் ஜெயா தலைமை வகித்தார். லேப் டெக்னீசியன் முருகன் முன்னிலை வகித்தார்.

    நோய்கள் பரவும் விதம் குறித்தும் அதை தடுப்பது எவ்வாறு எனவும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அன்பரசு விளக்கினார். நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு லேப் டெக்னீசியன் நீலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

    மாரண்ட‌அள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாரண்ட‌அள்ளி பேரூராட்சித் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் எய்ட்ஸ் குறித்த பல்வேறு தகவல்களை நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி, கவுன்சிலர் வெங்கடேசன் மணிவண்ணன் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊழியர்கள், பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

    • கடந்த மாதம் 25-ந்தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பாலியல் ரீதியான அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், ‘போதும்... நிறுத்துங்கள்...’ என்று குறிப்பிடுவது போல தனது கையை நீட்டி பிரியா இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை:

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    கடந்த மாதம் 25-ந்தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. விழிப்புணர்வு பிரசார திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதன் ஒருகட்டமாக மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டு இருக்கிறது. இதேபோல நேப்பியர் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்து வருகின்றன.

    இதுதவிர மாநகராட்சி சார்பில் பெண்கள் அதிகம் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொதுவான பகுதிகளிலும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இந்த பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் பிரியா சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பாலியல் ரீதியான அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், 'போதும்... நிறுத்துங்கள்...' என்று குறிப்பிடுவது போல தனது கையை நீட்டி பிரியா இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    அவரது இந்த நூதன விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • நெமிலி ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரத்திற்கான பேரணி, நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

    இப்பேரணியை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர்ச.தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வேதமுத்து, சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள், மாணவிகள் என திரளானோர் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

    • ஏற்காட்டில் வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் அறிவுறுத்தல்படி, கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட வலியுறுத்தியும், போலி மருத்துவர்கள் குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • முன்னதாக தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு சுவ ரொட்டிகளை பஸ்களில் ஒட்டினார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் அறிவுறுத்தல்படி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார், கர்ப்பி

    ணிகள், குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட வலியுறுத்தியும், போலி மருத்துவர்கள் குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதன் ஒரு பகுதியாக பஸ்களில் ஏறி, அதில் பயணம் செய்த பொதுமக்களிடம் சுகாதாரம், குழந்தைகளுக்கு செலுத்தபட வேண்டிய தடுப்பூசிகள், கர்ப்பிணி களுக்கான மருத்துவம் போன்றவை குறித்து எடுத்துக்கூறினார்.

    அவர் மேலும் பேசும்போது, ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மக்களை ஏமாற்றும் விதமாக போலி மருத்துவர்கள் வலம் வருவதாகவும், அவர்களிடம் யாரும் மருத்துவம் பார்க்க வேண்டாம் என்றும், அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் உள்ளதால், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று மருத்துவம் பார்க்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு சுவ ரொட்டிகளை பஸ்களில் ஒட்டினார்.

    • ஏப்ரல் மாதம் ஒரு வார காலம் தீயணைப்பு தொண்டு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
    • பள்ளி மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு கருத்துக்களை பேசினர்.

    கன்னியாகுமரி :

    தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் தியாகத்தினை போற்றும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் ஒரு வார காலம் தீயணைப்பு தொண்டு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு வார விழாவையொட்டி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தென்தாமரைகுளத்தில் நேற்று மாலை கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜவகர் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் தீயணைக்கும் படை வீரர்கள் ஸ்ரீனிவாசன், விவேகானந்தன், முருகன் அந்தோணி ராஜ் அசோக் குமார் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு கருத்துக்களை பேசினர்.

    • பொத்தனூர் பெரியார் படிப்பதத்தின் சார்பாக, பாண்டமங்கலம் கடைவீதியில் சமூக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வக்கீல் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பெரியார் படிப்பதத்தின் சார்பாக, பாண்டமங்கலம் கடைவீதியில் சமூக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் சோமசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பெருமாள் என்கிற முருகவேல், பொத்தனூர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வக்கீல் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் அசேன் மற்றும் அன்பு செல்வகுமார், பகுத்தறிவாளர்கள், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளங்கோ, செயலாளர் வீர முருகன், திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • குமாரபாளையம் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • நகரில் சந்தேகப்படும் வகையில் அந்நிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    குமாரபாளையம்:

    பொதுமக்களிடையே அச்ச உணர்வை போக்கும் விதத்தில் குமாரபாளையம் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    குப்பாண்டபாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இன்ஸ்பெக்டர் தவமணி விழிப்புணர்வு வழங்கினார்.

    அப்போது நகரில் சந்தேகப்படும் வகையில் அந்நிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்க நகைகளை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இரவு நேரங்களில் உங்கள் பகுதிகளில் சந்தேகப் படும்படியான வாகனங்கள் இருந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். புதிதாக வாடகைக்கு வரும் நபர்களிடம், வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்கு வரும் நபர்களின் ஆதார் அட்டை நகல், போன் நம்பர் ஆகிய வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

    • குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.
    • அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.

    நாமக்கல்:

    குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாமக்கல் கொடை பவுண்டேசன் சார்பாக வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் வளையப்பட்டி தலைமை ஆசிரியர் மகேஷ்குமார் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி தமிழ்செல்வன், புதுப்பட்டி தலைமை ஆசிரியர்ஆண்ட்ரூஸ் மற்றும் கொடை பவுண்டேசன் நிர்வாகி பூங்கோதை ஜெயக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    • சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக கலைவாணர் கலைக்குழுவினரின் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    • ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக சங்கரன்கோவில் கலைவாணர் கலைக் குழு வினரின் மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் பிலோமினா, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், தலையாரி அழகராஜா, தலைமை காவலர் ஸ்ரீதர கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதுபோன்று ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் இந்திரா பூசைப்பாண்டியன், செயல் அலுவலர் சுதா, துணைத் தலைவர் குறிஞ்சி மகேஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×