என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிவாரண பொருட்கள்"
- வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது தண்ணீர் வடிந்து வருவதால் மக்கள் மின்சார இணைப்பு, நெட்வொர்க் வசதியை பெற்றுள்ளனர்.
- தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கன மழையால் வெள்ளை பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது தண்ணீர் வடிந்து வருவதால் மக்கள் மின்சார இணைப்பு, நெட்வொர்க் வசதியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் மாவட்ட கலெக்டர்கள் மூலமாக செய்யப்பட்டு வருகின்றன. தன்னார்வ நிறுவனங்களும், மக்களுக்கு உதவி செய்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் கட்டணம் இல்லாமல் நிவாரணப் பொருட்களை அனுப்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தலின்படி நெல்லை, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரண பொருட்கள் கட்டணமின்றி இலவசமாக அனுப்பப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பொதுமக்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்ப இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தூத்துக்குடி மாவட்டத்துக்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
- நிவாரண பொருட்களை வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் அலுவலர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
கனமழை, வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்களை வழங்க பலர் முன்வந்துள்ளனர். இந்த பணியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்படுகி றார். அவரது செல்போன் எண் 7397770020 ஆகும். பாதுகாப்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள்விளையாட்டரங்கம் செயல்படும்.
தூத்துக்குடியில் உள்ள இந்த கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்களாக கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா (செல்போன் எண்-8973743830), தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம் (9943744803), கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா (9445008155) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இந்த பணிகளை ஒருங்கிணைக்க நெல்லை மாவட்ட நகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் (9442218000) நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை உதவி கலெக்டர் (பயிற்சி) கிஷன் குமார் (9123575120), நெல்லை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ரேவதி (9940440659) ஆகியோர் இந்த பணியை ஒருங்கிணைப்பார்கள்.
இந்த பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா செயல்படுவார். நிவாரண பொருட்களை வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 10,77,000 குடிநீர் பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
- சமையலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10,77,000 குடிநீர் பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கெட்டுகள், 13,08,847 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 73.4 டன் பால் பவுடர் வழங்கப்பட்டது.
மேலும், 4,35,000 கிலோ அரிசி, 23,220 கிலோ உளுந்து மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாக தமிழ் அரசு அறிவித்துள்ளது.
- தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள்.
கோவை:
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. 1 அரை லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
1.045 டன் பால் பவுடர், 1.5 டன் அரிசி, 1 டன் காய்கறிகள், 25 ஆயிரம் நாப்கின்கள், 1090 படுக்கை விரிப்புகள், 3 ஆயிரம் மெழுகுவர்த்தி, 13 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 2,700 பிரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டது.
இவை அனைத்தும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருந்து நிவாரண பொருட்கள் லாரி மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.
பேரிடர் ஏற்படும் போதெல்லாம் கோவை மாவட்ட மக்கள் உதவி வருகிறார்கள். தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை கொண்ட தனி விமானம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை சென்றதும் அங்கு மண்டலவாரியாக பிரித்து சரியான முறையில் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, படகு மூலம் நிவராண பொருட்கள் அனுப்பி வைப்பு.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்குள்ள குக்ஸ் சாலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, படகு மூலம் நிவராண பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் மிச்சாங் புயல் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன்.
வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.
மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.
- பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். அங்கு மீட்புப்பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தானில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது.
பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு உலக நாடுகளை தலிபான் அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்பி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உறுதியளித்து உள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அன்வாருல் ஹக்கக்கர் அத்தியாவசிய உதவிகளுடன் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதாக அறிவித்தார். அவர்கள் காபூல் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தா னுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து இரு நாட்டு தரப்பில் இருந்தும் அதிகார பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் பதற்றம்தான் பாகிஸ்தானின் உதவியை தலிபான் அரசு நிராகரித்ததற்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.
சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த அனைவரையும் நாடு கடத்துவது, ஆப்கானியர்களுக்கான விசா கொள்கை மற்றும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.
- 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு காய்கறிகள், வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட கரும்பாலம் பகுதி அ.தி.மு.க வார்டு உறுப்பினர் நிரோஷா 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு காய்கறிகள், போர்வைகள் வழங்க ஏற்பாடு செய்து இருந்தார். நலத்திட்ட உதவிகளை கேத்தி பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி வழங்கினார்.
மேலும் கரும்பாலம் பகுதியில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் பல்வேறு தேவைகளை வார்டு உறுப்பினர் நிரோஷாவிடம் கூறினர்.
அப்போது அவர்கள் மக்களுக்கு கழிப்பிடமோ குடிநீர், தெருவிளக்கு ஏதுவும் இல்லாமல் வாழ்க்கை நடத்தி வருவதாகவும், பலமுறை வீடு வசதி கேட்டு மனு வழங்கி இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.இது குறித்து வார்டு உறுப்பினர் நிரோஷா கூறும்போது, கரும்பால பகுதி மக்களின் அனைத்து அத்தியாவசிய அடிபடை தேவைகளும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.
- தூத்துக்குடியில் அரிசி, பால்பவுடர் உள்ளிட்ட பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது
- அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தூத்துக்குடி:
இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி முதல் கட்டமாக சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்கட்டமாக நிவாரண பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 21-ந் தேதி 2-வது கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து வி.டி.சி.சன் என்ற சரக்கு கப்பல் மூலம் ரூ.48 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 14 ஆயிரத்து 712 டன் அரிசி, ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்து பொருட்கள் என மொத்தம் ரூ.67 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 15 ஆயிரம் டன் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 2-வது கட்டமாக இலங்கைக்கு 16,650 டன் அரிசி, 250 டன் பால்பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் என சுமார் 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.
அதன்படி வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கின்றனர்.
இதற்காக தூத்துக்குடியில் அரிசி, பால்பவுடர் உள்ளிட்ட பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அதனை நாளை மறுநாள் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. பார்வையிட உள்ளனர்.
+2
- தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 2-ம் கட்டமாக ரூ.67.7 கோடி மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் இன்று புறப்பட்டு சென்றது.
- இந்த கப்பலில் 14 ஆயித்து 700 டன் அரிசி, 250 டன் பால்பவுடர், 50 டன் மருத்துவ பொருட்கள் ஏற்றி அனுப்பப்பட்டது.
தூத்துக்குடி:
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் தமிழக அரசு சார்பில் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த மாதம் 18-ந்தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் 10 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 30 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கு பொருட்கள் சேகரிக்கப்பட்டு பொட்டலமிடும் பணி முடிவடைந்தது.
இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 2-ம் கட்டமாக ரூ.67.7 கோடி மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் இன்று புறப்பட்டு சென்றது. இந்த கப்பலில் 14 ஆயித்து 700 டன் அரிசி, 250 டன் பால்பவுடர், 50 டன் மருத்துவ பொருட்கள் ஏற்றி அனுப்பப்பட்டது.
இந்த கப்பலை அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், கீதாஜீவன், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். இதில் கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்கண்டேயன், சண்முகையா, துறைமுக தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில நாட்களில் மற்றொரு கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்