என் மலர்
நீங்கள் தேடியது "ஓய்வூதியர்கள்"
- அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதி யகளுக்கும் கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதிய மாக ரூ. 7,850 நிர்ணயம் செய்து அங்கன்வாடி, சத் துணவு, தலையாரிகள், ஊராட்சி செயலர்கள், வனத்துறை தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவுத் தொகை வழங்காமல் இருக் கும் அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக நட வடிக்கை எடுத்து செலவு தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித் தார். மாவட்டப் பொருளா ளர் முருகேசன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் புஷ்பராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சே கர், அரசு கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் ஜெனி ஸ்டா, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர பாபு, அரசு போக்குவரத்துக் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டலச் செய லாளர் பவுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சிரமத்தை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
- தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிக ளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமைப்படுத்த சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஒய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்தி லும், பணிக்கால ஓய்வூதியம் மற்றம் குடும்ப ஓய்வூதியம் பெறுவர்கள் தாங்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தி லும் நேர்காணல் செய்ய லாம்.
அவ்வாறு நேர்காணல் செய்ய இயலாத நிலையில் குறிப்பிட்ட மாதத்திற்கு அடுத்த மாதத்தில் நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் நேர்காணல் செய்யப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் 2023-24-ம் ஆண்டிற்கு சிறப்பு நேர்வாக இந்த மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்ற, குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ளலாம்.
எனவே ஓய்வூதியர்கள் தங்கள் மின்னணு வாழ் நாள் சான்றிதழை இந்திய தபால் துறை வங்கி சேவை, இ-சேவை, பொது சேவை நிறுவனம், ஓய்வூதியர் சங்கங்களின் சேவை, செல்போன் செயலி ஆகியவற்றில் மின்னணு வாழ்நாள் சான்றை பதிவு செய்து நேர்காணல் செய்து கொள்ளலாம்.
மேலும் வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம். நேரடியாக கருவூலத்திற்கு வந்தும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.
இருப்பினும் ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் அத்தகைய ஓய்வூதியர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ள லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளைத் தலைவர் பிலாவடியான் தலைமை தாங்கினார்.
கருப்பையா புஷ்பம், சிவயோகம், ராம சீனிவாசன், காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பூங்கொடி, ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் சி.ஐ.டி.யு. நகர கன்வீனர் வீர சதானந்தம் போன்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் சரசுவதி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறை ஊழியர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறியப்பட உள்ளது.
- கோவை மண்டல அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் டிசம்பர் மாதத்தில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மண்டல அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் டிசம்பர் மாதத்தில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.
கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறியப்பட உள்ளது. எனவே புகார்கள், கோரிக்கைகள், தொடர்பான மனுக்களை அஞ்சலக கண்காணிப்பாளர், என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மனு உறையின் மீது ஓய்வூதியர்கள் குறைகேட்பு நாள் மனு என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும். சட்டம் சார்ந்த குறைகள், வாரிசுகள் தொடர்பான குறைகள் இந்த கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
- பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
- சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
சென்னை:
ஓய்வூதியர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ.எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
அதேபோல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் மாநில பாடதிட்டத்தில் தமிழ் வழியில் 3 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித் தொகைகள், ஊக்கத்தொகைகள் பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகும்.
5-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு தபால் துறை கணக்கும், 6 முதல் பிளஸ்-2 வரை படிப்பவர்களுக்கு தபால் துறை வங்கி கணக்கும் தொடங்க தமிழக பள்ளிக்கல்வி துறையுடன் தபால் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே பள்ளிகளிலோ அல்லது தபால் நிலையங்களில் கணக்குகளை தொடங்கலாம் என்று முதன்மை தபால் துறை தலைவர் சுவாதி மதுரிமா தெரிவித்துள்ளார்.
- அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
- வருகிற நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் அரசு போகுவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி அதிகபட்சமாக 27 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல என்பது மட்டுமின்றி, இந்த உயர்வையும் தமிழக அரசு தானாக வழங்கவில்லை. 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக ரூ.19,000 வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு ரூ.4,000 மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு அகவிலைப்படி உயர்வு வழங்கும் வகையில், வருகிற நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று கூறி உள்ளார்.
- புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
- அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
மின்சார சட்ட திருத்த மசோதா-2022-ஐ கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த பணி காலத்தை 50 சதவீதம் கணக்கில் எடுத்து பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.
இதற்கு கிளை தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார்.
இந்த நூதன போராட்டத்தில் ஆண்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்தில் நின்று கோஷங்கள் எழுப்பினர்.
பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- முதுகுளத்தூர் வட்டார ஓய்வூதியர் மன்ற செயற்குழு கூட்டம் டி.இ.எல்.சி. பள்ளி வளாகத்தில் நடந்தது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார ஓய்வூதியர் மன்ற செயற்குழு கூட்டம் டி.இ.எல்.சி. பள்ளி வளாகத்தில் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர்
சிக்கந்தர்முன்னிலை வகித்தார். பொருளாளர் செந்தூரான் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 2022-23-க்கான வரவு- செலவு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ஓய்வூதியர் அனைவருக்கும் புதிய மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் வங்கியில் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
மருத்துவ சிகிச்சைக்குரிய செலவுகள் காப்பீடு நிறுவனங்கள் வழங்குவதில் ஏற்படுத்தும் தாமதத்தை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் செந்தூரான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளையும் செயலாளர் சிக்கந்தர் செய்திருந்தார்.
- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையா வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர்கள் ஹரிதாஸ், ஆறுமுகம், பிரசன்னா, சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1.1.2022 முதல் 30.6.2022 முடிய வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான சந்தா தொகை ரூ. 497 ஆக உயர்த்தப்பட்டதை கைவிட வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியின் படி 70 வயதினை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ெரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயண கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.
பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையா வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசு இ-சேவா மற்றும் பொதுசேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
- நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் வகையில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும்.
கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறாத நிலையில் தற்போது அரசாணை நிலை எண் படி ஓய்வூதியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்து கொள்ள வேண்டும்.
மின்னணு வாழ்நாள் சான்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
அரசு இ-சேவா மற்றும் பொதுசேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அல்லது ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். கருவூல முகாம் இலவச சேவையை பயன்படுத்தி இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
இணையதளத்தில் பதிவிறக்கம் மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண், பி.பி.ஒ. எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஓய்வூதியர் வங்கி கணக்கு உள்ள வங்கியின் கிளைமேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) தாசில்தார், துணை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர், மாஜிஸ்திரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம். குறைபாடுகள் இருப்பின்... மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணலில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் தொடர்புடைய மாவட்டக்கருவூல அலுவலர் அல்லது மண்டல இணை இயக்குனர் அல்லது சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையரகம், பேராசிரியர் அன்பழகன் மாளிகை, 3-வது தளம், சென்னை- 600036 என்ற முகவரிக்கோ, dta.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 044-24321761, 044-24321764, 044-24321765 என்ற தொலைபேசி எண்களுக்கோ அல்லது திருச்சி மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தை rjdtry@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 0431-2414046 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் அரியலூர் கருவூலத்தினை 04329-228910 என்ற தொலைபேசி எண்ணிலும், dtoari.tndta@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்காசி கிளையின் 5-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
- புதிய நிர்வாகிகள் தேர்வு அதிகாரி கணேசன் முன்னிலையில் நடந்தது.
தென்காசி:
தென்காசி மேலகரம் திரிகூடராசப்ப கவிராயர் திருமண மண்டபத்தில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் தென்காசி கிளையின் 5-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. துணைத்தலைவர் அஹமத் அலி தலைமை தாங்கினார். துரைராஜ் இறைவணக்கம் பாடினார்.
செயலாளர் செல்லப்பா வரவேற்றார். பொருளாளர் வேலாயுதம் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். விழாவில் சங்க மூத்த அதிகாரி கணபதி சுப்பிரமணியனுக்கு 80 - வயது நிறைவடைந்ததையடுத்து அவரை, அஹமத் அலி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் சுப்பிரமணியனின் கடந்த கால நிர்வாக திறமைகளையும், சேவைகளையும் நிர்வாகிகள் செல்லப்பா, வேலாயுதம், கணேசன், கிட்டு ஆகியோர் பாராட்டி பேசினர்.
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு அதிகாரி கணேசன் முன்னிலையில் நடந்தது. இதில் தலைவராக அஹமத் அலி, ஆலோசகராக வேலாயுதம், செயலாளராக செல்லப்பா, பொருளாளராக சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.விழாவில் ஏராளமான உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடையும் வகையில் கருவூல பணியாளர்கள் மூலம் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஓய்வூதியர்களுக்கு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நடப்பு ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நேர்காணல் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடையும் வகையில் கருவூல பணியாளர்கள் மூலம் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கருவூலம்: ராயபுரத்தில் உள்ள ஜெய்வாபாய் பள்ளியில் ஜூலை 1, 12,21 மற்றும் ஆகஸ்டு 1,11,24 தேதிகள். தேவாங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 4, 13, 22, ஆகஸ்டு 2,12, 25 தேதிகள். அனுப்பர்பாளையம் நடுநிலைப்பள்ளியில், ஜூலை 5, 14, 25, ஆகஸ்டு 3,16, 26. கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் பள்ளியில்ஜூலை 6,15,26, ஆகஸ்டு 4,17, 29 தேதிகள்.
மண்ணரை மனவளக்கலை மன்றத்தில் ஜூலை 7,18, 27, ஆகஸ்டு 5,18, 30. பெரிச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 8, 19,29, ஆகஸ்டு 8,22,மங்கலம் ரோடு கருவம்பாளையம் அரசு நடுநிலைப்பளியில் ஜூலை 11,20,29, ஆகஸ்டு 10,23ந் தேதிகள்.
அவிநாசியில் உள்ள அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு அலுவலகத்தில்ஜூலை 1,12, 21, ஆகஸ்டு 1,11,24ந் தேதிகள். ஓய்வூதிய ஆசிரியர் கூட்டமைப்பு அலுவலகத்தில் ஜூலை 4,13,22, ஆகஸ்டு 2,12,25 தேதிகள்.அன்னூரில் உள்ள அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு அலுவலகத்தில் ஜூலை 7, 18ந் தேதிகள். சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 8, 19, கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 14, 27, குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜூலை 15, 28ந்தேதிகளில் முகாம் நடக்கிறது.
பல்லடம் சார் நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு, ஜூலை 1,4,5,6,8,12,14,18,20,22,25,27,29 தேதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஜூலை 7,15,26,28 தேதிகளில் பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், அரசு மேல்நிலைப்பள்ளியில்ஜூலை 11,19 தேதிகளில் நடக்கிறது. சுல்தான்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் ஜூலை 13,21 தேதிகளில் நடைபெறும்.
திருப்பூர் சார்நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு திருப்பூர் குமரன் வணிக வளாகம் அருகில் ஜூலை 1 முதல் 7 மற்றும் 11,12 தேதிகள், நஞ்சப்பா பள்ளியில் ஆகஸ்டு 1 முதல் 5-ந் தேதி, கணக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு 10 முதல் 12ந்தேதி,
சூலூரில் செப்டம்பர் 1,2 தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை முகாம் நடைபெறும். நேர்காணலுக்கு வரும்போது, ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, மொபைல் உள்ளிட்டவற்றை உடன் எடுத்துவரவேண்டும். முகாமில் பங்கேற்போர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.