என் மலர்
நீங்கள் தேடியது "ஊழியர் கைது"
- ஜீவா என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
- இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகேசன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீ. மேட்டூர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் பெண்கள் பலரை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த ஜீவா என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள் தலைமையில் நேற்று இரவு குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டு குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகேசன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- என்.எஸ்.சி. போஸ் சாலையில் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் கலாம் அசாத்தை கைது செய்தனர்.
ராயபுரம்:
பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை உள்ளது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மத் அப்துல் கலாம் அசாக் (38) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 14-ந்தேதி முகமது அப்துல் கலாம் அசாக் நகைக்கடைக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் பேசினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
சிறிது நரம் கழித்து கடையின் மேலாளர் பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 9 லட்சம் மாயமாகி இருந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கமது அப்துல் கலாம் அசாக் பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து பூக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் கலாம் அசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிகிச்சைக்கு வந்த சிறுவனை கழிவறைக்கு அழைத்துச்சென்று, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமீஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளான். இதையடுத்து அவனை அவனது தாய், தலச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருந்தார்.
அங்கு புறநோயாளிகள் பிரிவில் சிறுவனை அமர வைத்துவிட்டு, ஆதார் தொடர்பான விவரங்கள் கொடுக்க சென்றிருந்தார். அப்போது சிறுவனை, அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ரமீஸ் என்பவர் கழிவறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது அவர், சிறுவனுக்கு கழிவறையில் வைத்து பாலியல்தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார். ஆனால் கழிவறையை விட்டு வெளியே வந்த சிறுவன், ஆஸ்பத்திரி ஊழியர் ரமீஸ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அழுதபடியே தனது தாயிடம் தெரிவித்தார்.
இதனை சிறுவனின் தாய் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தவர்கள் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் குற்றம் சுமத்திய ஊழியர் ரமீசை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்பு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமீஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரமீஸ் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
சிகிச்சைக்கு வந்த சிறுவனை கழிவறைக்கு அழைத்துச்சென்று, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நள்ளிரவில் நகை கடைக்குள் நுழைந்த சூரஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.
- மும்பையில் பதுங்கி இருந்த சூரஜ்குமார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி:
மகாராஷ்டிரா மாநிலம், சாங்வி நகரை சேர்ந்தவர் ராம்தேவ். இவர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகுவில் தங்கத்தை உருக்கி நகை செய்தல், அடகு கடை மற்றும் பைனான்ஸ் நடத்தி வந்தார்.
ராம்தேவ் நகை கடையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் குமார் என்பவர் வேலை செய்து வந்தார்.
சூரஜ் குமார், ராம்தேவ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் நட்பாக பழகினார். இதனால் ராம்தேவ் குடும்பத்தினர் சூரஜ் குமாரை தனது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வீட்டுக்குள் அனுமதித்தனர்.
இதனால் சூரஜ்குமார் ராம்தேவ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். வீட்டில் எவ்வளவு நகை, பணம் உள்ளது எந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் சூரஜ் குமாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து சூரஜ் குமார் சமீபத்தில் சொந்த ஊரான சாங்லிக்கு சென்றார். தனது நண்பர்களான நிதின் பாண்டுரங்க ஜாதவ், ஓம்கார் ஜாதவ் ஆகியோருடன் சேர்ந்து முதலாளி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
சூரஜ்குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் தனுகுவிற்கு வந்தார். நள்ளிரவில் நகை கடைக்குள் நுழைந்த சூரஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.
பின்னர் முகமூடி அணிந்து முதலாளி வீட்டிற்கு சென்ற சூரஜ் குமார் கும்பல், ராம்தேவ் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை சரமாரியாக தாக்கினர்.
பீரோவை உடைத்து அதிலிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். மொத்தம் 8 கிலோ தங்கம் கொள்ளை போனது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சூரஜ் குமார் தலைமையிலான கும்பல் நகைக்கொள்ளையில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மும்பையில் பதுங்கி இருந்த சூரஜ்குமார் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோ தங்க நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.
- நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரபு உட்பட சிலர் சேர்ந்து சுமார் ரூ.1 கோடி கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
- குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
சென்னை:
குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகை குமார் (வயது 42) என்பவர் தி.நகர், கிரியப்பா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிறுவனம் தனது ஊழியர்கள் மூலம் சென்னையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது, மேற்கண்ட நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரபு உட்பட சிலர் சேர்ந்து சுமார் ரூ.1 கோடி கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேற்படி தனியார் நிறுவனத்தின் மேலாளர் கார்த்திகை குமார் சவுந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இது தொடர்பாக ஆர்.ஏ. புரத்தைசேர்ந்த பிரபு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.63 லட்சத்து 69 ஆயிரம் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
- ஸ்ரீகாந்த் சமீபகாலமாக பணத்தை கட்டாமல் பணத்தை முறைகேடாக சூதாட்டத்திற்கு பயன்படுத்தினார்.
- அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
பெங்களூரு:
பெங்களூரு கடுபீசனஹள்ளியில் உள்ள தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக மாவள்ளி பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 23) என்பவர் பணியாற்றி வருகிறார்.
உதவி கணக்காளராக இருந்த ஸ்ரீகாந்த், அந்த நிறுவனத்தின் மின்கட்டணத்தை செலுத்தும் பொறுப்பில் இருந்தார். அவர் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை செலுத்தி வந்தார்.
இந்தநிலையில் ஸ்ரீகாந்த் சமீபகாலமாக பணத்தை கட்டாமல் பணத்தை முறைகேடாக சூதாட்டத்திற்கு பயன்படுத்தினார். இந்த விஷயம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனால் நிறுவனத்தில் தணிக்கை ஆய்வு நடத்த உத்தரவிட்டனர். தணிக்கை ஆய்வில் 7 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஆன்லைன் சூதாட்ட செயலியில் ஸ்ரீகாந்த் உணவு நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் ரூ.7 கோடி செலுத்தி அந்த பணத்தை இழந்துள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ரூ.7 கோடியை முறைகேடாக பயன்படுத்தி ஸ்ரீகாந்த் நிறுவனத்தை ஏமாற்றி விட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
- தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- சோதனையில் சூரியநாராயணன் கையில் இருந்த பையில் நன்கு பதப்படுத்தப்பட்ட சிறுத்தையின் தோல் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பகுதியில் சிறுத்தை தோலை சிலர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்து வைத்திருப்பதாக சென்னை வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த சூரியநாராயணன் (வயது 42) என்பதும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து வனத்துறையினர், சூரியநாராயணன் கையில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் நன்கு பதப்படுத்தப்பட்ட சிறுத்தையின் தோல் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தோல் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தையை வேட்டையாடி கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை கைது செய்து, சிறுத்தை தோலை பறிமுதல் செய்தனர். சிறுத்தை தோலை நண்பர் ஒருவரிடம் இருந்து வாங்கி வைத்து இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வனத்துறையினர் சூரியநாராயணனை, தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோல் எந்த பகுதியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது, அது யாரிடம் விற்கப்பட இருந்தது என்பதை கண்டறிய வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊழியர் கைது
- நிறுவனத்தின் காவலாளி, ஊழியரை பரிசோதனை செய்தார்.
கோவை
கோவை செட்டிப்பா ளையத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பெர்னாண்டஸ் (வயது 32). இவர் ஒரட்டுகுப்பை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இங்கு சேலத்தை சேர்ந்த சங்கர் பரத் (20) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சங்கர் பரத் வழக்கம் போல வேலைக்கு வந்தார். அங்கு வினியோகம் செய்ய இருந்த பொருட்களை பார்சல் செய்து கொண்டு இருந்தார்.
பின்னர் அவர் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். நிறுவனத்தின் காவலாளி சங்கர் பரத்தை பரிசோதனை செய்தார். அப்போது அவர் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மறைத்து திருடி செல்வது தெரியவந்தது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி உடனே மேலாளர் கிறிஸ்டோபர் பெர்னாண்டசிடம் தெரிவித்தார். அவர் அங்கு வந்து சங்கர் பரத்தை கண்டித்து விசாரித்தார். அதில் அவர் ஏற்கனவே ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மேலாளர், ஊழியர் சங்கர் பரத்தை பிடித்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் பரத் கைது செய்தனர். பின்னர் அவர் திருடிய செல்போனை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வழிபாட்டுத்தல ஊழியர், உள்ளே சென்ற இளம்பெண் மீது தண்ணீரை தெளித்து, தொட்டு துடைப்பது போல் கபட நாடகமாடி அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
- அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது குழந்தையை தூக்கி கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து தனக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தை கணவரிடம் கூறினார்.
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பல்லாவரம் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.
அவர்கள் தங்களின் குழந்தைக்கு தண்ணீர் மந்திரித்து தெளிப்பதற்காக, அருகில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்துக்கு நேற்று முன்தினம் குழந்தையைத் தூக்கி சென்றனர். அங்கு, தண்ணீர் மந்திரித்துத் தெளிக்கும் ஊழியரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த இளம்பெண்ணிடம் உனது கணவரை வெளியே இருக்கச் சொல்லி விட்டு நீ மட்டும் உள்ளே வா என்றார்.
அதன்படி இளம்பெண் கணவரை வெளியே இருக்கச் சொல்லி விட்டு தனது குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு வழிபாட்டுத்தலத்துக்குள் சென்றார்.
அப்போது வழிபாட்டுத்தல ஊழியர், உள்ளே சென்ற இளம்பெண் மீது தண்ணீரை தெளித்து, தொட்டு துடைப்பது போல் கபட நாடகமாடி அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது குழந்தையை தூக்கி கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து தனக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தை கணவரிடம் கூறினார்.
இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் தூசி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, வழிபாட்டுத்தல ஊழியரை கைது செய்தார்.
- திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவர் திண்டிவனம் தாலுகா அலுவலகம் வந்தார். அப்போது அங்கு இருந்த பதிவறை எழுத்தர் சிவஞான வேலு என்பவரிடம் தனது தாயார் கலைமணி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப் பட்டாவில் தன் தாயின் பெயர் கிராம, வட்ட கணக்கில் திருத்தம் செய்வதற்காக 2007 பதிவேடுகளை எடுத்து தர கூறினார்.இதற்கு பதிவறை எழுத்தர் சிவஞானவேலு ரூ. 5 ஆயிரம் யுவராஜிடம் கேட்டார்.
அதிர்ச்சி அடைந்த யுவராஜ்இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து இன்று காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை யுவராஜிடம் கொடுத்தனர்.இந்த ரூபாய் நோட்டுகளை அவர் பதிவறை எழுத்தர் ஞானவேலுவிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவஞான வேலுவை கையும் களவுமாக பிடித்தனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர் லஞ்சமாக கேட்டது உண்மை என தெரிய வந்ததையடுத்து அவர் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.