என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலைமை"
- ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
- ரா ஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இந்த கோவிலில் ராஜ கோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது. அஸ்திவாரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டதில் கும்பாபிஷேகம் நடத்தி விட்டு பணியை தொடங்க வேண்டும் என்று அருள்வாக்கு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. சமீபத்தில் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டிய ஸ்தபதியின் மகன் ஆனந்த் ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையினர், இந்து சமய அறநிலையத்துறை வடி வமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும் மிரு திஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. ராஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக இந்து சமய அற நிலையத் துறையின் தலைமை ஸ்தபதியும் மகா பலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமை யிலான வல்லுனர் குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபாராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.
- முகிலன்குடியிருப்பு ஊர்த்தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமை தாங்கினார்
நாகர்கோவில் :
குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு முகிலன்குடியிருப்பு ஊர்த்தலைவர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சங்க தலைவர் சிந்து நல்லபெருமாள், செயலர் சவுதாமினி, உறுப்பினர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முகிலன்குடியிருப்பு ஊர் செயலர் செல்லசிவலிங்கம், பொருளாளர் கிருஷ்ணகோபால், அறங்காவலர்கள் முத்துமாலை, அப்பாத்துரை, சுயம்பு, துணைத்தலைவர் மல்லிகா, வார்டு கவுன்சிலர்கள் பாமா, அமுதா, கோம்பவிளை ஊர்த்தலைவர் நாகமணி, தி.மு.க. நிர்வாகி தாமரை பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- பரமத்தி நகருக்குள் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாந்தி மீது மோதியூள்ளது.
- இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்த சாந்தியை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பரமத்தி வேலூர்:
கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள செம்படாபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி (52 ) பைனான்ஸ் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (47) இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி பரமத்தி அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி நகருக்குள் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாந்தி மீது மோதியூள்ளது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்த சாந்தியை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர் சுப்பிரமணி (50) என்பவரை கைது செய்தனர்.இந்த விபத்து குறித்த வழக்கு பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலருக்கு பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி கண்ணன் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை காவலர் கடைசியாக வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
- சேலம் தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
- பதிவு தபால், விரைவு தபால் சேவை, அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகள் (பணம் செலுத்துதல், பணம் எடுத்தல்), அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகளை பெறலாம்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சேலம் தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பதிவு தபால், விரைவு தபால் சேவை, அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகள் (பணம் செலுத்துதல், பணம் எடுத்தல்), அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகளை பெறலாம்.
இதுதவிர, தற்பொழுது புதிதாக பெண்களுக்கு என மட்டுமே சிறப்பாக தொடங்கப்பட்டு உள்ள மகிலா சம்மான் சேமிப்பு பத்திரக்கணக்கும் (வட்டி விகிதம் 7.5 சதவீதம், இரண்டு ஆண்டுகள் வரை) தொடங்கும் வசதியும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் உள்ளது.
இதுபோன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தபால் சேவைகளை சேலம் மாநகரில் இயங்கி வரும் முக்கிய தபால் அலுவலகங்களிலும் கொண்டு வருவதற்கான முயற்சி பரிசீலனையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி க்கொள்ளுமாறு சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
- சேலம் மாவட்டத்தில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
- இப்பணியை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் பல்வேறு சாலை திட்டப்ப ணிகள் நடைப்பெற்று வருகிறது. இப்பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத்துறை மூலம் சேலம் மாவட்டத்தில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒப்பந்த தாரர்க ளிடம் சாலை பணிகளையும், புறவழிச் சாலை பணிகளை யும், பாலப் பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுரை வழங்கி னார்.
இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர் தாரகேஸ்வ ரன், உதவி பொறியாளர் மற்றும் சாலை பணியின் ஒப்பந்ததாரர்கள் மேற்பார்வை ஆலோசகர்க ளும் உடன் இருந்தனர்.
- விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் தொண்டூர் ஊராட்சியில் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் தொண்டூர் ஊராட்சியில் நடைபெற்றது கூட்டத்திற்கு வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னையா, ஒன்றியகவுன்சிலர்கள் கோமதி பிரபாகரன், இந்து மதி வெற்றிவேல், மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் அமிர்தம் அரி கிருஷ்ணன் அனை வரை யும் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தொடக்க உரை யாற்றினார். கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செய லாளரும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான்கலந்து கொண்டு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், அவைத்தலைவர் ஏழுமலை, பொருளாளர்பெருமாள், துணை செயலாளர்கள் ராஜலிங்கம், மணிமேகலை ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள்துரை திரு நாவுக்கரசு, ரவிச்சந்திரன், முன்னாள் பொருளாளர் தமிழரசன், பிரபாகரன், நீர் பெருத்தகரம் கோபால கிருஷ்ணன் மற்றும்ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் அனைத்து அணி பொறுப் பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒன்றிய துணை செய லாளர் ஞானமூர்த்தி நன்றி கூறினார்.
- தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது.
- சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்..
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் நகர தி.மு.க. சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது. 11-வது வார்டு பகுதிகளில் நகர்மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. அவை தலைவர் குணா, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், தொ.மு.ச நிர்வாகி சரவணன், மண்ணெண்ணை கடை செல்வம், பட்டறை சரவணன், இளைஞர் அணி நிர்வாகி கார்த்தி மற்றும் டிரைவர் சிவா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் போது திமுகவில் இணைந்த அனைவருக்கும் நகர திமுகவைத் தலைவர் குணா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகம், இலவச சேலை மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.
- மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளருமாகிய செஞ்சி மஸ்தான் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
- புதியதாக சேர்ந்தவர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மலர் கொத்துக் கொடுத்தும், சால்வை அறிவித்தும் தங்களை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் தனியார் மஹாலில் மரக்காணம் மேற்கு ஒன்றியம் கீழ் எடையாளம் ஊராட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி சிவரஞ்சனி பாலகிருஷ்ணன் தலைமையில் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளருமாகிய செஞ்சி மஸ்தான் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர். அப்பொழுது கட்சியில் புதியதாக சேர்ந்தவர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மலர் கொத்துக் கொடுத்தும், சால்வை அறிவித்தும் தங்களை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து கட்சியில் புதியதாக சேர்ந்த அனைவருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தி.மு.க கட்சியின் துண்டு அணிவித்து அவர்களை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், மறுக்காணம் ஒன்றியக் குழு துணைப் பெருந் தலைவருமாகிய பழனி ,ஒன்றிய அவைத்தலைவர் குமார். ஒன்றிய துணை செயலாளர்கள் சரவணன், மீனாகுமாரி, மாவட்ட பிரதிநிதிகள் தேவதாஸ், ராமமூர்த்தி, மாவட்ட நிர்வாகி திருமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்,
- ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக தாலுகா பிரித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தார்.
- புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரத்துக்கு அதே ஊரிலேயே தாலுகா தலைநகரமும் செயல்படும். வரும்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக தாலுகா பிரித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தார். அதன்படி புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரத்துக்கு அதே ஊரிலேயே தாலுகா தலைநகரமும் செயல்படும். வரும் மே மாதத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அதனை தொடங்கி வைக்கவும் உள்ளார்கள். அதேபோல் புதிய தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகப் பணிகளுக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான திட்ட அறிக்கையும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அளிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. மேலும் புதிய தாலுக்கா அமைப்பதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஆனால் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சில விஷமிகள் வாணாபுரம் தாலுகாவின் தலைநகர் வேறெங்கோ செல்வதாக தவறான தகவல்களை பொதுமக்களிடத்தில் பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கி றேன். தவறான தகவல் பரப்புவோர் மீது மாவட்ட காவல்துறையின் வாயிலாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.
- ராஜபாளையத்தில் ம.தி.மு.க. கூட்டம் நடந்தது.
- அவை தலைவர் சேது.இன்பமணி தலைமை தாங்கினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகர ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.அவை தலைவர் சேது.இன்பமணி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் லிங்கம், அக்பர்அலி, பூபதி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பவேல், ஞானசேகரன், குருமூர்த்தி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மதியழகன் வரவேற்றார். விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ரகுராமன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் தமிழ்மணி, துணை பொது செயலாளர் காதர்மைதீன், பொதுக்குழு உறுப்பினர் ஞானகுரு, தலைமைக் கழக சொற்பொழிவாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன் ஆகியோரும் பேசினர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், சேத்துர் அய்யனப்பன், இளைஞரணி அமைப்பாளர் அழகர்சாமி, முருகானந்தம், மாணவரணி அமைப்பாளர் ஜெயக்குமார், முகம்மது இத்ரிஸ், தொண்டரணி தர்மலிங்கம், கண்ணன், வேலுசாமி, கருத்தப்பாண்டி, மகளிரணி முனீசுவரி, மீனா, ரதிபிரியா இசக்கியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி அமைப்பாளர் நிஜாமுதீன் நன்றி கூறினார்.
- ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
- மக்களின் கோரிக்கைகள் குறித்த போராட்டங்களை முன்னெடுத்து செல்வது குறித்து முக்கிய தீர்மானம்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஓன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி இன்றைய அரசியல் பற்றி விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் கேவி.ராஜேந்திரன் ஆகியோர் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் நகர மக்களின் கோரிக்கைகள் குறித்து போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்வது குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வீரசேகரன், முத்துகிருஷ்ணன், வீரமணி, பெரியசாமி, ராஜேந்திரன், கவிதா, நகர குழு உறுப்பினர்கள் ரமேஷ், மந்திரமூர்த்தி, இந்திராணி, சரவணன், கவிதா உட்பட ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.
- தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிரார்த்தனை செய்து 31-வது மாவட்டமாக மயிலாடுதுறைக்கு வருகைதந்துள்ளேன்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்தார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த மேலசாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில், மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க இடைகால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைந்திடவேண்டும் என அவை தலைவரும், முன்னாள் தமிழ்நாடு வக்புவாரிய தலைவருமான தமிழ்மகன்உசேன் ஆன்மிக பயனமாக சிறப்பு பிரதாத்தனை செய்து வழிபட்டார்.
அதில் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைதலைவர் பி.வி.பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏகே.சந்திரசேகரன், ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், சிவக்குமார், நகரசெயலாளர் வினோத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் தமிழ்மகன்உசேன் பேசுகையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிராத்தனை செய்து வருகிறேன். 31வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் வருகைதந்துள்ளேன்.
எம்ஜிஆர்.ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி எப்படி வழிநடத்தபோகிறார் என நினைத்தபோது எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்து தன்னை ஆயப்படுத்திக்கொண்டு வழிநடத்தினார்.
இதுதொடரவேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்