என் மலர்
நீங்கள் தேடியது "நீர்"
- மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1135 கன அடியாக உள்ளது.
- 3 மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை கட்டப் பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1135 கன அடியாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டது. ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.
நடப்பு ஆண்டில் தென் மேற்கு பருவ மழை காலத்தில் ஜூலை 15-ந்தேதி அமராவதி அணை நிரம்பியது. தொடர்ந்து 3 மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது. அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை துவங்கி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் தலையாறு, மூணாறு, மறையூர், கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதி மற்றும் வால்பாறை மலைத்தொடரின் கிழக்குப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது அணைக்கு நீர்வரத்து ஆறுகளான, பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் பிற ஓடைகளின் மூலம் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது . இதனால் கடந்த 7 நாட்களில் அணை நீர்மட்டம் 8 அடி வரை உயர்ந்தது.
தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4.04 டிஎம்சி யில் 3.80 டிஎம்சியாக நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1135 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
பருவ மழை காலங்களில் அணையின் மொத்த நீர்மட்டத்தில் 85 அடியை எட்டியதும் வழியோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்படும். அதன் அடிப்படையில் கடந்த ஞாயிறு அன்று மாலை அணை நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்ததும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது .தற்போது அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், அணையின் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக வாய்க்காலில் கூடுதலாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
- நீர் பாசன சங்க தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
- மாலை முடிவுகள் அறிவிக்கப்படும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 58 பாசன குளங்கள் உள்ளது. இதனை நிர்வாக வசதிக்காக 16 பாசன சங்கங்களாக வைத்துள்ளனர். இந்த நீர்பாசன சங்கத்திற்கு அரசு தேர்தலை அறிவித்தது அதன்படி 15 பாசன சங்கங்களுக்கு போட்டியின்றி தலைவர் மற்றும் மண்டலக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் விவசாயிகள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 4 மணியளவில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.
- சத்தியமூர்த்தி சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 32). இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று சத்தியமூர்த்தி மது குடித்தார். பின்னர் குடிபோதையில் சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார்.
அங்கு கிணற்றில் குளித்து கொண்டு இருந்த போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் சிஞ்சுவாடிைய சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தெய்வானை (வயது 35). கூலி தொழிலாளி.
இவர் தனது கணவரை பிரிந்து அண்ணன் வீட்டில் இருந்து வந்தார். மேலும் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று தெய்வானை லஷ்மாபுரம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது திடீரென அவருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் சுருண்டு விழுந்தார். அதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் தெய்வானை நீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போ லீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.
- தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.
திருப்பூர் :
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.
திருமூர்த்தி அணையிலி ருந்து பாசனத்திற்கு நீர் செல்லும், 132 கி.மீ., நீளம் உள்ள பிரதான கால்வாய், ஆயிரம் கி.மீ., நீளம் உடைய கிளைக்கால்வாய்கள் மற்றும் பகிர்மான கால்வாய்களில், நேரடியாகவும், ஓஸ் அமைத்தும், கரையோரம் கிணறு அமைத்து, சைடு போர் முறை என, தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை கட்டுப்படுத்தவும், பாசன விவசாயிகளுக்கு முறையாக பயிர் சாகுபடிக்கு உரிய நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், திருப்பூர், கோவை மாவட்டங்களில், பி.ஏ.பி., கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த பிப்., 27ம் தேதி நிலவரப்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பி.ஏ.பி., பாசனம் உள்ள வருவாய் கிராமங்களில், மொத்தம், 2,069 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், பாசன கால்வாய்களுக்கு அருகில், 2,895 கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. விதி மீறி மின் இணைப்பு பெற்றதாக, 1,004 கிணற்றின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 884 கிணறுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், 780 கிணறுகளில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டது. அதோடு, 288 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்க நோட்டீஸ் வினியோகிக்க ப்பட்டுள்ளது. தற்போது வரை,21 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்ப ட்டுள்ளது. விதிமீறல் தொடர்பாக, 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 1,065 கோடி ரூபாய் செலவில் 4 வது குடிநீர் திட்டப்பணிகள் துவங்கி நடைபெற்று, நிறைவடையும் நிலையில் உள்ளது
- முதல் கட்டமாக சுத்திகரிப்பு மையத்தில் தண்ணீர் சுத்திகரிப்புசெய்து, திருப்பூர் கொண்டு வரப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு அம்ரூத் திட்டத்தில் 4 வது குடிநீர் திட்டத்தின் கீழ் ,குடிநீர் வழங்கப்ப டவுள்ளது.இதற்காக 1,065 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் துவங்கி நடைபெற்று, நிறைவடையும் நிலையில் உள்ளது.இதில் முதல் கட்டமாக சுத்திகரிப்பு மையத்தில் தண்ணீர் சுத்திகரிப்புசெய்து, திருப்பூர் கொண்டு வரப்ப ட்டது. மாநகராட்சி வடக்கு பகுதியில் உள்ள மேல்நிலை த்தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் பணி நடைபெற்றது. அவ்வகையில் 2வது வார்டு கவிதா நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் நீர் நிரப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது.அதிலிருந்து லட்சுமியம்மாள் நகர், சோழன்நகர், ஜெய் கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பதித்துள்ள குழாய் இணைப்புகளில் குடிநீர் வழங்கி முறையாக வருகிறதா என ஆய்வு நடந்தது.மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் அங்கு சென்று குடிநீர் சப்ளை சோதனை ஓட்ட த்தை ஆய்வு செய்தனர்.மேல்நிலைத் தொட்டி யிலிருந்து வீதிகளுக்கு செல்லும் வினியோக குழாய்கள், வீடுகளில் வழ ங்கியுள்ள இணைப்புகளில் குடிநீர் சப்ளை நிலை குறித்து அவர்கள் பார்வை யிட்டனர்.சோதனை யோட்டத்தின் போது, சப்ளை குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள், குழாய் இணைப்புகளில் உள்ள சேதம் போன்ற வற்றால் குடிநீர் கசிந்து பல இடங்களில் வெளியேறியது.
இது போன்ற உடைப்பு மற்றும் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளை முறையாக பார்வையிட்டு அவற்றை உடனுக்குடன் சரி செய்து, குடிநீர் வீணாகாமல் வழங்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
- தி.மு.க. சார்பில் இலவச நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நகர் தி.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நீர், மோர் பந்தல் நகர் தி.மு.க.தலைவர் இஸ்மத் நானா முன்னிலையில் திறக்கப்பட்டது.
இதில் 2-வது வார்டு கவுன்சிலர் தாஸ், மற்றும் நிர்வாகிகள் அப்பாஸ், மாலிக், ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
- காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்புகளின் படி உரிய நீரை வழங்க வேண்டும்.
- காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூதலூர்:
பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் பூதலூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரியில் தண்ணீரை திறந்து விட்டு கருகும் பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பூதலூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய தலைவர்கள் பாலு, காந்தி, ஆகியோர் தலைமை வகித்தனர்.
காவிரியின் குறுக்கே மேகதாதில் அணைக்கட்டு முயற்சிகளை கர்நாடக அரசு கைவிட வேண்டும், நீதிமன்ற மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்புகளின் படி உரிய நீரை வழங்க வேண்டும், சட்ட ரீதியான அழுத்தத்தை உருவாக்கி காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட விவசாய சங்க செயலாளர் என்.வி. கண்ணன் மாவட்ட துணை செயலாளர் ஞானமாணிக்கம், சமவெளி இயக்க நிர்வாகி பழனி ராஜன், பூதலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்கள் பாஸ்கர், ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டது
- 375 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
கரூர்
90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 63.32 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 375 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து ஆற்றுக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 1,936 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
உடுமலை:
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக ஜூலை 1 முதல் 15 வரை நீர் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 13ந் தேதி, சாமராயபட்டி அருகே 10.2 மைல் பகுதியில் அண்டர் டனல் பகுதியில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பிரதான கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் துவங்கின. இரு புறமும் இருந்த மண் அகற்றப்பட்டு தளம் மற்றும் கரை பகுதிகள் புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு வழக்கமாக ஆகஸ்டு 15-ந்தேதி நீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு ஜூலை 15ல் அணை நிரம்பியதால் ஆற்று மதகு பிரதான கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை ஏமாற்றிய நிலையில் தென்மேற்கு பருவமழையும் தீவிரமடையாமல் உள்ளது.
இந்நிலையில் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களிலுள்ள கரும்பு, தென்னை, காய்கறி உள்ளிட்ட நிலைப்பயிரை காப்பாற்றும் வகையிலும் வழக்கமான நெல் உள்ளிட்ட பயிர் சாகுபடியை துவக்கவும் நீர் திறக்க வேண்டும் என புதிய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில் வருகிற 8-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை நீர் நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விளக்கம் அளித்துள்ளார்
- சிலைகளுக்கு வாணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயனசாயம் எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை
கரூர்,
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP),பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோன் (பாலிஸ்டிரின்) கலனைய ற்றதுமான,சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நா நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உணர்ந்த மலர் கூறுகள், வைக்கோல்
போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்குமரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வனக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகத்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.சிலைகளுக்கு வாணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயனசாயம் எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புன்னம் சத்திரம் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரால் தொற்று நோய் அபாயம்
- இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் வடிகால் பணிகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், சிலர் வடிகாலின் இடையில் கான்கிரீட் மற்றும் மணல்களை கொட்டி வைத்து அடைத்து விடுவதாலும், கழிவுநீர் வெளியே செல்லாமல் நீண்ட நாட்களாக தேங்கி நிற்பதால் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல், மலேரியா ஆகிய தொற்றுநோய்களை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சுகாதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள்புன்னம் சத்திரம் பகுதிக்கு நேரில் சென்று சாக்கடை கழிவு நீர் கால்வாயில் அடைபட்டு கிடக்கும் சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது
- பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 74.33 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடி 1,534 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கா ல் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கரா யன் பாசனத்திற்கு 500 கனஅடி திறந்து விடப்பட்ட நிலையில் இன்று முதல் 550 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு உள்ளது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியா கவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 13.28 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.