என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண் சிகிச்சை முகாம்"

    • மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடி வழங்கினர்
    • டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன நாளையொட்டி வேலூர் லாங்கு பஜாரில் உள்ள சண்முகனடியார் மண்டபத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியுடன் இணைந்து சிஎம்சி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    பெங்களூர் மண்டல மேலாளர் எஸ்.பரணிதரன் மேற்பார்வையில் நடந்த முகாமிற்கு வேலூர் கிளை மேலாளர் புன்னைவாணன் தலைமை தாங்கினார். பெங்களூர் மண்டல துணை மேலாளர் ராம்நாத் விமல் முன்னிலை வகித்தார். சி.எம்.சி கண் மருத்துவமனை டாக்டர் ஹிட்லர் தலைமையில் மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்தனர். இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

    மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கண் கண்ணாடி வழங்க உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.நிகழ்ச்சியில் வேலூர் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
    • அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பல்லடம் : 

    பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் கணபதிபாளையத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

    ஊராட்சி துணைத்தலைவர் முத்துகுமார் முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

    அதில் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • பொதுமக்களுக்கு பலர் பயன் பெற்றனர்
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மணிமேகலைஜெயகுமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக ஆற்காடு எம். எல் .ஏ. ஈஸ்வரப்பன், கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.

    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு போக்குவரத்து காவல் நிலையம் அருகில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதனை பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம், திருப்பூர் தி ஐ பவுண்டேஷன் ஆகியன இணைந்து நடத்தியது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட காவல்துறை, அவிநாசி காவல் உட்கோட்டம், பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.

    • பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    புதியம்புத்தூர்:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேஷன் மற்றும் பசுவந்தனை தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கி கிளை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு சங்க நிதி உதவியுடன் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.

    முகாமை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் பாண்டி குமார் தொடங்கி வைத்தார். மருத்துவர் லோகேஷ் குமார், பசுவந்தனை பஞ்சாயத்து தலைவி லட்சுமி சிதம்பரம், பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர் சீதா ராம் ஆகியோர் கலந்து கொண்ட னர். கண் சிகிச்சை முகாமில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் கண் மருத்துவ மனை இனைந்து கொழுந்துரை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

    கொழுந்துரை ஒன்றிய கவுன்சிலர் சரண்யா செல்வராஜ் வரவேற்று கண்சிகிச்சைக்கு வந்த அனைவருக்கும் இலவச உணவு வழங்கினார். இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் முகாமை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இலவச கண்ணாடிகளை அணிவித்தார். முதுகு ளத்தூர் வட்டா வளர்ச்சி அலுவலர் ஜானகி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம் முகைதீன், ஜெய பால், மணலூர் ராமர், சத்தியேந்திரன், ரஞ்சித், கொழுந்துரை ஊராடசி மன்ற தலைவர் நஸ் ரீன்பானு, வாகைக் குளம் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனையில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர் சின்ன இளைஞன் ஆலோசனைகளை வழங்கினார்.

    மேலூர்

    மேலூர் அரசு மருத்துவ மனையில் கண் நீர் அழுத்த நோய் சிறப்பு கண் மருத்துவ முகாம் மேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த முகாமை மேலூர் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கண் மருத்துவர் தீபா வரவேற்றார். மதுரை ராஜாஜி மருத்துவமனை டாக்டர் சின்ன இளைஞன் ஆலோ சனைகளை வழங்கினார்.

    இந்த முகாமில் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கண் பற்றி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து கண்ணில் உள்ள புறை உள்ளவர் களுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆபரே ஷன் செய்வதற்கு பரிந்துரை செய்தனர். நிகழ்ச்சியில் மருத்து வர்களும், முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவிகளும், செவிலியர் கண்காணிப்பா ளர், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் கலாமணி நன்றி கூறினார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உப்பிலிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.
    • முகாமிற்கு வருபவர்கள் ஆதார் அட்டை, குடும்பஅட்டை, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.

    இந்த முகாமில் அனைத்து கண் நோய்களுக்கும் சிகிச்சை ஆலோசனையும் கண் ஆபரேசனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அன்றே திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்விழி லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, போக்குவரத்து மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், மேலும் முகாமிற்கு வருபவர்கள் ஆதார் அட்டை, குடும்பஅட்டை, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

    • விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • கண்புரை நோயாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டப் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் விவேகானந்தா சேவா அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பூர் தாராபுரம் சாலை கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் 28ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    முகாமில் கண்புரை நோய், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், மாறுகண்நோய்,சீழ் நீர்வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்களுக்களுக்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. முகாமுக்கு வருபவர்கள் தெளிவான வீட்டு முகவரியையும், போன் நம்பரையும் எழுதிக்கொண்டு வர வேண்டும். கண்புரை நோயாளிகளுக்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும். கிட்டப்பார்வை, தூரப்பார்வையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை முகாமிலேயே குறைந்த விலையில் கண்ணாடிகள் வழங்கப்படும். இந்த முகாமில் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு 96552 39828 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி வட்டார போக்குவரத்து கழகம், வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் பையாஸ் கமால் மருத்துவமனை ஆகியோர் இணைந்து ஓட்டுனர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி.குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.வி.பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். மோடார் வாகன ஆய்வாளர் வெங்கட் ராகவன் அனைவரையும் வரவேற்றார்.

    வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் கண் மருத்துவர் பரஹான் சவூத் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி பஸ், ஆட்டோ டிரைவர்கள் ஆகியோருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டார்.

    மேலும் கண்பார்வை குறைபாடு உள்ள டிரைவர்களுக்கு இலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    இதில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, இஸ்லாமிய கல்லூரி தமிழ் துறை தலைவர் ப.சிவராஜி, என். வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் ஏ.அருண்குமார் நன்றி கூறினார்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், தலைமையில் நடைபெற்றது.
    • முகாமில் 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சோம்பட்டு ஊராட்சியில் சங்கர நேத்ராலயா ஆக்குபேஷனல் ஆட்டோமெட்ரி சர்வீஸ் மற்றும் ஜான் டி நுல் ட்ரேடஜிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்தியசிறு மற்றும் ஒரு தொழிலாளர்களுக்கான நிறுவனம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், தலைமையில் நடைபெற்றது.

    இதில் துணை தலைவர் விஜயலட்சுமி ஒன்றிய கவுன்சிலர் வெற்றி (எ) ராஜேஷ் தொண்டு நிறுவனம் பத்மநாபன் ரகுநாத், வரதன், சசிபாபு, சோம்பட்டு ஊராட்சி மன்ற செயலாளர் தமிழரசன், தனியார் கண் மருத்துவமனை டாக்டர் ராஷிமா உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • சிறிய குறைபாடு உள்ளவர்களுக்கு நேற்று கண் கண்ணாடி, மருந்துகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ரெகுநாதபுரம் மெயின் சாலையில் உள்ள வல்லபை அய்யப்பன் கோவிலில் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வல்லபை அய்யனார் சேவை நிலையம் அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நேற்று நடத்தியது.

    முகாமில் ரெகுநாதபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கண் குறைபாடு உள்ளவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர் வீரஜா தலைமையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி குழுவினர்களால் பரிசோதனை செய்யப் பட்டது.

    சிறிய குறைபாடு உள்ளவர்களுக்கு நேற்று கண் கண்ணாடி, மருந்துகள் வழங்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்டோர் கண் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். முன்னதாக வல்லபை அய்யப்பன் கோவில் தலைமை குரு சுவாமி மோகன் வரவேற்றார். சந்தனகுமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் ரகுநாதபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஜெகத்ரட்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×