என் மலர்
நீங்கள் தேடியது "மதுபாட்டில்"
- சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்திருந்தது தெரிய வந்தது.
- மதுபாட்டில்களை திருடி செல்லப்பட்டது தெரிய வந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஊழியர்கள் விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.
இதனிடையே நேற்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது மர்ம நபர்கள் சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்திருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி செல்லப்பட்டது தெரிய வந்தது.
மதுக்கடையில் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ள மர்ம ஆசாமிகள் பணப்பெட்டியில் பணம் ஏதும் இ்ல்லாததால் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து, விற்பனையாளர் சுப்பிரமணி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
- 247 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மண்ணில் ஊற்றி அழித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் சார்பில் சட்டவிரோதமாக மற்றும் முறைகேடாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 247 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 2583 மது பாட்டில்களை மாநகர மதுவிலக்கு போலீசார் கலால் கோட்ட அலுவலர் ராகவி முன்னிலையில் மண்ணில் ஊற்றி அழித்தனர்.
- மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் மதுபான பாட்டில்களை சிலர் சட்டவிரோமாக பதுக்கிவைத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மதுபானம் பதுக்கி விற்ற சிலர் போலீசாரிடம் சிக்கினர்.
போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் போது பேரையூரை சேர்ந்த கண்ணன்(வயது42) என்பவரிடம் இருந்து 72 மதுபாட்டில்கள், ரூ.600, டி.குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(63) என்பவரிடம் இருந்து 36 மதுபாட்டில்கள் ரூ.1270, டி.கல்லுப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து பாண்டியன்(48) என்பவரிடம் இருந்து 23 மதுபாட்டில்கள் ரூ.1,610 ரொக்கம், அதேபகுதியை சேர்ந்த காசிபாண்டி(31) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களையும் ரூ.300 பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பேரையூர் மல்லபுரத்தை சேர்ந்த கேசரி(43) என்பவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள், ரூ.3 ஆயிரத்து 930, வில்லூர் பகுதியை சேர்ந்த பொன்னு சாமி(36) என்பவரிடம் இருந்து 148 மதுபாட்டில்கள், ரூ.1,260 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மதுபாட்டி ல்களுடன் சிக்கிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களில் தங்கபாண்டி என்பவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அண்ணா நகரை சேர்ந்த குகனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அண்ணா நகரை சேர்ந்த குகனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராய விற்பனை சட்ட விரோதமாக நடைபெற்று வந்தது.
- டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாரந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.
அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் வந்தனர்.
திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை கையில் எடுத்து மனு கொடுக்க புறப்பட்டனர். உடனடியாக பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்களோடு மனு கொடுக்க அனுமதி கிடையாது என எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
தமிழகத்தில் சமீபத்தில் கள்ள சாராயம் விற்பனை சட்ட விரோதமாக நடை பெற்று வந்தது. கள்ளச்சாராயம் குடித்ததில் 22-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மேலும் சில இடங்களில் போலி மதுபா னத்திற்கு அவ்வப்போது பலியாகி வரும் சம்பவம் நடந்து வருகிறது.
இதனால் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் கடைகளைகள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்குகள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர்.
- தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர்.
புதுச்சேரி:
திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு உணவு அருந்தி செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த தாம்பூல பையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், லட்டு, சாக்லேட், சாத்துக்குடி, மாம்பழம், போட்டு கொடுப்பார்கள். வசதி படைத்தவர்கள் சிலர் சில்வர் தட்டு, கிப்ட் பாக்ஸ்கள் வைத்து கொடுப்பார்கள்.
ஆனால் புதுச்சேரியில் மணமகள் வீட்டார் திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் சேர்த்து மது பாட்டிலையும் கொடுத்துள்ளனர். இது திருமணத்துக்கு வந்தவர்களை முகம் சுளிக்க வைத்தாலும் குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
சென்னையை சேர்ந்த மணமகன் ஒருவருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமகள் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுவை நகர பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர். அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர். திருமணத்திற்கு வந்த குடிமகன் விருந்தாளிகளை இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திருமண மண்டபத்தில் இருந்த சில குடிமகன்கள் ஓடோடி சென்று போட்டி போட்டுக்கொண்டு தாம்பூல பையுடன் மதுபாட்டிலையும் வாங்கினர். இதற்காக அவர்கள் பெட்டி பெட்டியாக மதுபாட்டில் வாங்கி வைத்திருந்தனர்.
ஆனால் சென்னையில் இருந்து வந்த மணமகன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். திருமணத்துக்கு வந்த பெண்கள் மற்றும் சிலர் முகம் சுளித்து சென்றனர்.
- சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது.
- உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28-ந் தேதி ஒரு திருமண வரவேற்பு நடந்தது.
இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையுடன் குவார்ட்டர் மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. திருமண வரவேற்பில் பங்கேற்ற பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மது விநியோகம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பொது இடத்தில் மது விநியோகம் செய்ததாக கலால்துறையினர் மணமகள் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது. இதன்பேரில் மதுபானம் விற்ற கடை உரிமையாளர், மண்டப உரிமையாளர், மணமகள் உறவினர் ராஜ்குமார் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கலால்துறை துணை ஆணையர் குமரன் எடுத்துள்ளார்.
- கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது.
- 3 பேரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா சேந்தமங்கலம்பாதூர், திருநாவலூர் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது சேந்தமகலத்தில் ஒரு வீட்டிற்கு பின்னால் லலிதா (வயது 47) என்பவர் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்தார்.
இதேபோல பாதூரில் பாக்கியலட்சுமி (39), என்பவரும், திருநாவலூரில் மங்கவரத்தாள் (55) என்பவரும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டிலை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இளையனார் குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வினிதா (வயது 28) என்பவர், அந்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர். இதேபோன்று, லாலா பேட்டையில் மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா (42) என்பவரையும், கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுபாட்டில்கள் கிடந்தன.
- அலுவலக வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி கல்வி துறை அலுவலகம், நீதிமன்றம், டி.ஐ.ஜி. அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், உள்ளிட்ட மாவட்டத்தின் தலைமை அலுவலகங்கள் அனைத்தும் செயல்படுகின்றன. ஆனால் இந்த வளாகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மறைவான பகுதிகளில் அமர்ந்து கஞ்சா, மது அருந்தி வருகின்றனர். அவர்கள் வீசி செல்லும் மதுபாட்டில்கள் அந்த பகுதியில் சிதறி கிடக்கின்றன. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே மதுபாட்டில்கள் சிதறி கிடப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கட்டுப்படுத்த போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் சமூக விரோதிகள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழியை்த தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்லவே அனுமதி இல்லை.
- மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.
டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு மது பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி மெட்ரோவில் மது குடிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழியைத் தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், "சிஐஎஸ்எஃப் மற்றும் டிஎம்ஆர்சி அதிகாரிகள் அடங்கிய குழு பட்டியலை மதிப்பாய்வு செய்தது. திருத்தப்பட்ட பட்டியலின்படி, ஒரு நபருக்கு சீல் செய்யப்பட்ட இரண்டு மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸில் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது" என்று கூறியது.
மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கேட்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மெட்ரோவில் பயணிகள் யாரேனும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் டெல்லி மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
- அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ் பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகில் மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த வடசிறு வள்ளூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (75), குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜோஸ்மின் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.