என் மலர்
நீங்கள் தேடியது "ஆடித்திருவிழா"
- திருவிழா 20-ந் தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
- 26-ந்தேதி மாற்றும் வைபவம் நடைபெறும்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர் வாக்கின்படி விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவின் தொடக்கமாக அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.
அன்றைய தினத்தில் இருந்து விழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
விழாவில் 3-ம் நாளான 22-ந் தேதி ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும், 7-ம் நாளான 26-ந் தேதி இரவு வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சந்நதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 13-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.
- ஆடிப்பூர விழா 22-ந்தேதி நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடிப்பூர விழா தொடங்குகிறது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதியில் நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள வாத்தியங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து வருகிற 13-ந்தேதி கொடியேற்றப்பட்டதும், தினசரி காலை, மாலை நேரத்தில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. முக்கிய விழாவான ஆடிப்பூர விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- 15-ந் தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது.
- 21-ந் தேதி ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
4-ம் திருவிழாவான 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வீதி உலா வருதல் நடக்கின்றது.
21-ந் தேதி மாலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் அம்பாள் சன்னதி முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அன்று அம்பாள் கர்ப்பிணி போல் அலங்கரிக்கப்பட்டு வயிற்றில் முளைகட்டிய பாசிபயிற்றை கட்டி வைத்து அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சீமந்தம் சீர்வரிசைகள் செய்து அனைத்து வகை பலகாரங்களும் படைக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
இதில் கலந்து கொண்டு அம்பாள் மடியில் கட்டப்பட்ட முளைகட்டிய பாசிப்பயிரை வாங்கி சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
- 23-ந் தேதி வரை ஆடிப்பூர உற்சவம் நடைபெறும்.
- 19-ந் தேதி திருத்தேரில் வீதி உலா நடக்கிறது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆடிப்பூர உற்சவம் வருகிற 12-ந் தேதி இரவு தொடங்குகிறது. மறுநாள் காலையில் கொடியேற்றி 23-ந் தேதி வரை ஆடிப்பூர உற்சவம் நடைபெறும். முக்கிய நிகழ்வாக வருகிற 15-ந் தேதி நந்தி வாகனத்தில் திரிபுரசுந்தரி அம்பாள், வேதகிரீஸ்வரர் கோவில் மலைக்குன்று வழியாக கிரிவலம் செல்கிறார்.
19-ந் தேதி திருத்தேரில் வீதி உலா நடக்கிறது. உத்திர நட்சத்திர நாளான 23-ந்தேதி மூலவருக்கு முழு அபிஷேகத்துடன் வழிபாடு, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
- தேரோட்டம் ஆகஸ்டு 1-ந்தேதி நடக்கிறது.
- 3-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது.
மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ விழா தனி சிறப்புடையது. இந்த ஆடி பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.
25-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கு, இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 26-ந் தேதி காலையில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமார் வாகனத்திலும், 27-ந் தேதி இரவு கருட வாகனத்திலும், 28-ந் தேதி காலை பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி, மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
மேலும் 29-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந் தேதி காலையில் சூர்ணோத்சவம், இரவு புஷ்ப சப்பரமும் நடைபெறும். 31-ந் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். பின்னர் காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தேர் வடம் பிடித்தல், இரவு புஷ்ப பல்லக்கு, 2-ந் தேதி சப்தவர்ணம், புஷ்ப சப்பரம், 3-ந் தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. அதை தொடர்ந்து 16-ந் தேதி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இத்துடன் ஆடி பெருந்திருவிழா முடிவடையும்.
திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.
- உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது. உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு காலை திருமஞ்சனம், மாலை ஆஸ்தானம் நடக்கிறது.
22-ந்தேதி ஆண்டாள் சாத்துமுறை, காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஆண்டாளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கோவிந்தராஜசாமி, ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக அலிபிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஆஸ்தானமும், சிறப்புப்பூஜைகளும் நடத்தப்படுகிறது.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்டு ராம் நகர் குடியிருப்பு, கீதா மந்திரம், ஆர்.எஸ்.மாட வீதியில் உள்ள விக்னசாச்சாரியார் கோவில், சின்னஜீயர் மடம் வழியாக கோவிலுக்கு திரும்புகிறார்கள்.
மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.
- 21-ந்தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
- 24-ந்தேதி ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை மறுநாள் 13-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை 16 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான 13-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோவிலின் அம்பாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது.
இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் ரத வீதிகளில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 14-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு மேல் அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு மேல் அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
17-ந்தேதி அன்று ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு ராமர் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 29-ந் தேதி அன்று சுவாமி அம்பாள் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- ராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழாவில் ஜோதிடர் கரு.கருப்பையாவின் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.
- சிவகிரி பேராசிரியர் ராமராஜ், தூத்துக்குடி வக்கீல் சாந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
மதுரை
பிரசித்தி பெற்ற ராமேசு–வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா நாளை (13-ந்தேதி, வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
விழாவையொட்டி கோவில் தெற்குவாசல் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிக–ளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழா–வின் சிறப்பு நிகழ்ச்சியாக நாளை (13-ந்தேதி) மாலை 6 மணிக்கு முதலாம் நாள் நிகழ்ச்சியாக கோவை சூலூர் ஏரோ சித்த மருத்து–வமனை கரு.கருப்பையா வழங்கும் உலகம் சிவமயம் என்ற தலைப்பில் ஆன்மீக் சொற்பொழிவு நடைபெறு–கிறது.
இதையடுத்து பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா–வின் நடுவர் பொறுப்பில் நகைக்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் சிவகிரி பேராசிரியர் முனைவர் ராமராஜ், தூத்துக்குடி வக்கீல் சாந்தா ஆகியோர் கலந்துகொண்ட பேசுகி–றார்கள். முடிவில் பட்டி–மன்ற நடுவர் கரு.கருப் பையா தீர்ப்பு வழங்கு–கிறார்.
- ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
- 20-ந்தேதி பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்தாண்டிற்கான உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடி மரம் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு விதமான பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவ கொடியேற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 20-ந்தேதி(வியாழக்கிழமை) பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
- 15-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நடக்கிறது.
- 21-ந் தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 5.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது.
விழாவின் 4-ம் திருநாளான வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, இரவில் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.
வருகிற 21-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
- அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம்.
- இந்த கோவிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம். நான்கு வேதங்களும் பூஜித்த தலம். இங்குள்ள வேதநாயகி அம்மனின் குரல் இனிமையானதா? சரஸ்வதியின் வீணையின் ஒலி இனிமையானதா? என்ற போட்டி ஏற்பட்டது.
அப்போது வீணையின் ஒலியை விட அம்மனின் குரல் இனிமையானதாக இருந்தது. இதனால் இந்த கோவிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதற்கான கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.
முன்னதாக அம்மன் எழுந்தருளி கொடிமரத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள், வேத மந்திரங்கள், தேவார பாடல்கள் பாடி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. இதில் யாழ்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம் மற்றும் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தினசரி இரவில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.
- ஆடிப்பூர விழா 22-ந் தேதி நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அப்போது பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழாவையொட்டி கடந்த 5-ந் தேதி பெரியநாயகி அம்மன் சன்னதியில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பெரியநாயகி அம்மன் சன்னதி கொடி மரம் முன்பு, விழாக்கான கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தினசரி காலை, மாலை நேரத்தில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. மேலும் இரவில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூர விழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.