search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிய உணவு"

    • உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது.
    • மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது.

    மதிய உணவுக்கு பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை உணவு கோமா என்று அழைப்பார்கள். மதிய வேளையில் தூக்கம் ஏன் வருகிறது என்பதற்கான காரணங்களில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


    மதியம் உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதை போன்ற உணர்வு ஏற்படும். அதோடு செரிமான அமைப்பிற்கு உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. மதிய உணவுக்கு பிறகு நாம் மந்தமாக இருக்கவும், தூக்கம் வரவும் இது தான் காரணம்.

    உணவு உட்கொண்ட உடனேயே செரிமான செயல்முறைகளால் ரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.


    மேலும் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை உண்பவர்களுக்கு தான் அதிக அளவில் இந்த மந்தமான உணர்வு ஏற்படும். அளவுக்கு அதிகமான உணவை உண்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். எனவே மதிய உணவுக்கு பிறகு உடலில் சோர்வு ஏற்படும்.

    ஆகவே காலை நேரத்தில் முழு தானியப்பொருட்கள், ஓட்ஸ், பிரவுன் ரொட்டி, முட்டை மற்றும் பழங்களை சாப்பிடுவது உடலில் சோர்வு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மட்டும் காலை உணவுத் திட்டம் தற்போது அமலில் உள்ளது.
    • பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாளில் இனிப்பு பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுத் திட்டம் வாயிலாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மட்டும் காலை உணவுத் திட்டமும் தற்போது அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இனி வரக்கூடிய நாட்களில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளன்று மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் கூடுதலாக வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளி தரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாளில் இனிப்பு பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது. வழக்கமான மதிய உணவு வழங்கப்படுவதில்லை. இதை மாற்றி இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் அளிக்கலாம் என்று சமூக நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு மாணவருக்கு ரூ2 ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் 42 லட்சத்து 71 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்கான செலவீனத்துக்காக 4 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் மதியம் முட்டை கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி மாணவ-மாணவிகளின் பசியை போக்கும் வகையில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் மதியம் முட்டை கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகவும் இருந்து வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரந்தோறும் 92 ஆயிரம் முட்டைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மொடக்குறிச்சி தாலுகாவில் 126 பள்ளிகளும், கொடுமுடி தாலுகாவில் 90 பள்ளிகளும் வாரந்தோறும் முட்டை பெறுகின்றன.

    இதில் பல பள்ளிகளில் உள்ள மதிய உணவு மையங்களில் உள்ள சமையலர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கடந்த புதன்கிழமை மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி போய் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரச்சனையை எடுத்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட முட்டைகளும் அழுகிய நிலையில் காணப்பட்டன.

    இதனால் கடந்த 3 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை. மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள 27 பள்ளிகளில் ஆயிரத்து 348 முட்டைகளும், கொடுமுடி தாலுகாவில் 13 பள்ளிகளில் 767 முட்டைகளும் அழுகிய நிலையில் காணப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மேலும் இச்சம்பவம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    அவரது உத்தரவின் பேரில் முட்டைகளின் மாதிரிகளை துறையினர் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். பின்னர் முட்டையை சப்ளை செய்த நிறுவனத்திடம் நல்ல முட்டைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • காந்தி திடலில் வைத்து கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட கூடலூர் நகர தி.மு.க சார்பில் கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் காந்தி திடலில் வைத்து கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூடலூர் நகர கழகத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கழகக் கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கினர். பின்னர் மாக்கமூலவில் உள்ள மனம் நலம் குன்றிய மானவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. விழாவில் கூடலூர் நகர துணை செயலாளர்கள் ஜபருல்லா, ஜெயக்குமார், நாகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், மணிகண்டன் பொருளாளர் தமிழழகன், தலைமை கழக பேச்சாளர் தங்கராஜ், மாவட்ட அமைப்பாளர் ரெனால்ட், முன்னாள் தொண்டரணி அமைப்பாளர் சகாயநாதன், நகர மன்ற தலைவி பரிமளா, வார்டு கழக செயலாளர் சுப்பையா, சிவசாமி, அசைனர், ராஜகோபால், சின்னையன், ராஜு, கிருஷ்ணமூர்த்தி, மல்லிகராஜ், பிரகாஷ், ராஜா, கருணாநிதி, சடைய பிள்ளை, இஸ்மாயில், கனகராஜ், தாகீர், பரசுராமன், நகரமன்ற உறுப்பினர்கள் வெண்ணிலா, சத்தியசீலன், தனலட்சுமி, ஆபித பேகம், கௌசல்யா, மும்தாஜ், சகுந்தலா, நிர்மல், உஷா, முன்னாள் நகர மன்ற தலைவர் அன்னபுவனேஸ்வரி, இளைஞர் அணி விஜயகுமார், ராமன், அபுதாகிர், புட்ராஜ், நாகேஷ், செல்வபாரதி, செல்லதுரை, நடராஜ், சந்தோஷ், மதிவாணன், இஸ்மாயில், சிங்கப்பூர், கணேசன், ஜெகநாதன், ஆசாத், செல்வநாதன், மணிவண்ணன், தொ.மு.ச நிர்வாகிகள் ரகுபதி, சிவக்குமார், சரவணகுமார், மாணிக்கம், ராஜேந்திரன், அந்தோணிகுருசு, ஜெயக்குமார், கலைக்குமார், விஜயகுமார், கண்ணன், ஜோசப், அசரப் சக்திவேல், புஷ்பராஜ், மூசா, செல்லதுரை, சாமிநாதன், சாமுவேல், லோகநாதன், குமார், தம்பிராஜ், பிரகாஷ், ராமச்சந்திரன், தர்மராஜ், சிவராமன், பரமன், செல்வராஜ், சிவன், ஜோசப், பெர்னாட், ராணி, செல்லம், ருக்மணி, சசிகலா, கலைமலர், சாரா, நூர்ஜகான், லட்சுமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • பள்ளியில் 53 மாணவர்களில் 20 பேர் அந்த மதிய உணவை சாப்பிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிழக்கு டெல்லியின் ஷாதாரா மாவட்டத்தில் உள்ள டெல்லி அரசுப் பள்ளியில் நேற்று மதியம், மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.

    வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.

    கடந்த ஜனவரி 12ம் தேதி மேற்கு வங்காளத்தின் பிர்பும் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மதிய உணவோடு சிறிய பாம்பு ஒன்றையும் சேர்த்து சமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மாணவர்கள் அனைவரும் உடனடியாக ராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    பள்ளியில் 53 மாணவர்களில் 20 பேர் அந்த மதிய உணவை சாப்பிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதிய உணவை சமைத்த பள்ளி ஊழியர் ஒருவர், பருப்பு இருந்த பாத்திரத்தில் பாம்பு இருப்பதாக கூறியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    • சமையலுக்கு வைத்திருந்த பருப்பில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சாப்பாட்டில் பாம்பு இருந்ததை அறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பிர்பூம்:

    மேற்குவங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பாம்பு விழுந்த உணவை உட்கொண்ட 30 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியில் உள்ள உணவு கிடங்கை அதிகாரிகள் சோதனை செய்த போது சமையலுக்கு வைத்திருந்த பருப்பில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சாப்பாட்டில் பாம்பு இருந்ததை அறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • புதுவை லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ருசித்து பார்த்து ஆய்வு செய்தார்.

    புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது. அரசு, தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    புதுவை லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

    அந்த தனியார் நிறுவனம் வழங்கும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாமல் ருசியின்றி வழங்கப்படுவதாக பொது நலஅமைப்பினர் அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை புதுவை சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வரவழைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அதன் தரத்தை ருசித்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் ஆலோசனைகளையும் கூறினார்.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் மாதிரியை முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து, அதை சாப்பிட்டு பார்த்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ×