என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரத யாத்திரை"
- 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 30 ஆவது ஆண்டாக மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பிப் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருநெல்வேலியில் இன்று (16-02-2024) நடைபெற்றது. இதில் ஈஷாவின் தன்னார்வலரான திரு.பிரேம் பங்கேற்று பேசுகையில்:
"கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 14 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை தூத்துக்குடி, கூடங்குளம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை, நட்டாலம், புதுக்கடை, மார்த்தண்டம், மேலப்புறம் ஆகிய பகுதிகளிலும் வலம் வர இருக்கிறது. முன்னதாக இந்த ரதம் பிப் 8 ஆம் தேதி முதல் பிப் 13 ஆம் தேதி வரை தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளுக்கு வருகை தந்த பின்னர் இறுதியாக மார்ச் 8 ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் சென்றடைய உள்ளன.
ரதம் பயணிக்கின்ற ஊர்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷாவின் மஹாசிவராத்திரி நேரலை செய்யப்பட உள்ளது.
அந்த வகையில் திருநெல்வேலியில் சேரன்மகா தேவி ரோட்டில் அமைந்துள்ள ஜெயம் மஹால், தூத்துக்குடியில் வி.இ ரோட்டில் அமைந்துள்ள அழகர் மஹால், கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, காரைக்குடி, கூடங்குளம், நாகர்கோவில், சாத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு நடக்கும் அனைத்து இடங்களிலும் பங்கேற்கும் மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்
- கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.
- ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப் 11 ஆம் தேதி முதல் பிப்19 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சேலத்தில் இன்று (10-02-2024) நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. பாலாஜி ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:
"கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 11 அன்று தர்மபுரி மாவட்டத்தை வந்தடைய இருக்கிறது. பின்னர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலக்கோடு, காவேரிப்பட்டிணம் பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் பிப் 19 ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. முன்னதாக, சேலம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
ரதம் பயணிக்கின்ற ஊர்களில் இருக்கும் பெருமக்கள் இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இதோடு, சிவ யாத்திரை என்னும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய 7 தேர்களை இழுத்தபடி மொத்தம் 7 குழுக்களாக, வருகின்றனர். இந்த யாத்திரை பிப் 23 அன்று சேலத்தை வந்தடைகிறது.
மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம், கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. மேலும் அன்றைய நாள் இரவு முழுவதும் லிங்க பைரவி கோவில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது.
இதை போலவே, தர்மபுரியில் பாரதி புரம், சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மதுரபாய் திருமண மண்டபத்திலும், ஓசூரில் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, சப் ஜெயில் எதிரில் உள்ள மீரா மஹாலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அகர்தலா:
திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டம் குமார்காட் நகரில் இன்று ஜெகன்னாதர் ரத யாத்திரை நடைபெற்றது. இரும்பினால் செய்யப்பட்ட ரதத்தை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் சவுமுகானி பகுதியில் சென்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் ரதம் உரசியது. அப்போது ரதத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் ரதம் இழுத்த பக்தர்கள் பலத்த மின் தாக்குதலுக்கு உள்ளாகி தூக்கி வீசப்பட்டனர். அத்துடன் ரதமும் தீப்பற்றியது.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குமார்காட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். அத்துடன், நேரில் பார்வையிடுவதற்காக குமார்காட் சென்றுகொண்டிருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் ‘நொய்யல் பெருவிழா’ என்ற ஒரு விழாவை ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பேரூரில் நடத்த உள்ளது.
- நொய்யல் நதியின் நீராதாரத்தை அதிகரிக்க விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறுவது மிகவும் அவசியம்.
கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் நொய்யல் நதியை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரையை ஈஷாவில் உள்ள ஆதியோகியில் இருந்து தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்திலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் நேற்று (ஜூன் 23) தொடங்கி வைத்தார்.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் மதுரை ஆதீனம், துழாவூர் ஆதீனம், பாதரகுடி ஆதீனம், திருப்பாதரிப்புலியூர் ஆதீனம், கொங்கு மண்டல ஜீயர் உட்பட ஏராளமான ஆன்மீக தலைவர்கள் மற்றும் சந்நியாசிகள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேரூர் ஆதீனம் அவர்கள் பேசுகையில், "காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் நதி தென் கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் உற்பத்தி ஆகி கரூர் மாவட்டத்தில் காவிரியுடன் கலக்கிறது. 4 மாவட்டங்களுக்கு வளம் சேர்க்கும் நதியாக நொய்யல் திகழ்கின்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த நதியின் குறுக்கே 38 அணைகள் கட்டப்பட்டு, ஏராளமான குளங்களுடன் இந்தப் பகுதியை வளப்படுத்தி வந்தது. ஆனால், தற்போது நொய்யல் ஆற்றின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நதி பெரும் மாசடைந்துள்ளது.
அதை மீட்டெடுக்கும் வகையில், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் 'நொய்யல் பெருவிழா' என்ற ஒரு விழாவை ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பேரூரில் நடத்த உள்ளது. அதற்கு முன்னதாக, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ரத யாத்திரை ஈஷாவில் உள்ள ஆதியோகியில் இருந்து துவக்கப்பட்டுள்ளது" என்றார்.
மதுரை ஆதீனம் அவர்கள் பேசுகையில், "மக்களிடம் தூய்மை குறித்து விழிப்புணர்வு போதிய அளவு இல்லாமல் உள்ளது. அந்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், நதிகளை புனிதமாக பார்க்கும் கலாச்சாரத்தை மேம்படுத்தவும் இந்த நொய்யல் ரத யாத்திரை உதவும்" என கூறினார்.
ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் பேசுகையில், "நொய்யல் நதியின் நீராதாரத்தை அதிகரிக்க விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறுவது மிகவும் அவசியம். நொய்யல் வடிநிலப் பகுதியில் சுமார் 12 லட்சம் விவசாய நிலங்கள் உள்ளன. ஒரு ஏக்கரில் 100 மரங்கள் நட்டாலே 12 கோடி மரங்களை நட்டு விட முடியும். அந்த வகையில், காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் நொய்யல் வடிநிலப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இந்தாண்டு 12 லட்சம் மரக்கன்றுகளையும் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
மேலும், "பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சண்முக சுந்தரம் அவர்களின் தலைமையில் நொய்யல் நதிக்கு புத்துயிரூட்டும் ஒரு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் சங்கம், சிறுதுளி, கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற உள்ளன.
குறிப்பாக, நொய்யல் நதியில் நிரந்தர நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்துவது, நதியில் கழிவுநீர் கலக்காமல் தூய்மையாக பராமரிப்பது, பிளாஸ்டிக் கழிவுகள் சேராமல் தடுப்பது ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கங்கள் ஆகும்.
மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சுமார் 180 கி.மீ தூரம் பயணிக்கும் நொய்யல் நதியில் ஒவ்வொரு குறிப்பிட்ட கி.மீ தூரப் பகுதிகள் வெவ்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் 4 கி.மீ ஈஷாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பே காவேரி கூக்குரல் இயக்கம் தொண்டாமுத்தூர் பகுதியில் சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி அவர்களின் தோட்டங்களில் நட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.
இவ்விழாவின் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்களின் வள்ளி கும்மி நிகழ்ச்சியில், ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- ராமர் கோவில் வடிவமைப்பு கொண்ட ராம ரத யாத்திரை வாகனத்தை, திருவனந்தபுரம் ஸ்ரீ ராம ஆசிரமம் ஏற்பாடு செய்தது.
- ராமர், சீதை கோவிலின் மகிமைகளை பற்றி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
பரமத்தி வேலூர்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் வடிவமைப்பு கொண்ட ராம ரத யாத்திரை வாகனத்தை, திருவனந்தபுரம் ஸ்ரீ ராம ஆசிரமம் ஏற்பாடு செய்தது. கடந்த அக்டோபர் 5-ந் தேதி அயோத்தியில் இருந்து ராமர், சீதை சிலையுடன் கிளம்பிய இந்த பக்தர் தரிசன வாகனம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிக்கு வந்தது.
அப்போது ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மடத்தை சேர்ந்த சத்குருக்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் ராம ரத யாத்திரைக்கு மலர் தூவி வரவேற்றனர். பின்னர் ராமர் சீதைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ராமர் சீதையை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து ரதம் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் ராம ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி சந்தான மகரிஷி சுவாமிகள் கூறுகையில், ராமர் ரத யாத்திரை வாகனம் அக்டோபர் 5-ந் தேதி அயோத்தியில் தொடங்கி பீகார், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ், ஒடிசா, வெஸ்ட் பெங்கால், ஜார்கண்ட் உட்பட 27 மாநிலங்களுக்கு சென்று ராமர், சீதை கோவிலின் மகிமைகளை பற்றி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் டிசம்பர் 3-ந் தேதி அயோத்தி சென்றடைகிறது. இந்த வாகனம் 60 நாட்களில் இந்தியா முழுவதும் செல்ல இருக்கிறது என்றார்.
- அனைத்து தன்னார்வ அமைப்பினரையும் இணைத்து, நொய்யல் நதி பாதுகாப்பு என்பதை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
- தினமும் மாலை, நொய்யல் நதிக்கு ஆங்காங்கே ஆரத்தி எடுக்கப்படும்.
திருப்பூர்:
நொய்யல் சீரமைப்பு பெரு விழா-2023 குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், கொங்கு மண்டல மக்கள் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பேரூா் சாந்தலிங்க மருதசால அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி ஆகியோா் தலைமை வகித்தனா். அஜீத் சைதன்யா, திருமுருகன்பூண்டி சுந்தரராஜ அடிகளாா், செஞ்சேரிமலை சுவாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகளாவிய ஆன்மிக கூட்டமைப்பு பொறுப்பாளா் கோவை சாய் சுரேஷ், உலகளாவிய ஓம் நவசிவாய அறக்கட்டளை பொறுப்பாளா் சிவ வெற்றிவேல் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு:-
நொய்யல் நதியை புனிதப்படுத்தும் விதமாக கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களில் 2023 மே, ஜூன் மாதத்தில் ரத யாத்திரை நடத்துவது, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சியாக ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்துவது, முக்கிய நிகழ்ச்சியாக 2023 ஆகஸ்ட் 25 முதல் 31ந்தேதி வரை 7 நாட்கள் பேரூா் தமிழ்க் கல்லூரியில் கருத்தரங்கங்கள், ஆன்மிக கண்காட்சிகள் நடத்துவது, நொய்யல் மறுசீரமைப்பு பவுன்டேஷன் அமைப்பை ஏற்படுத்தி தொழில் துறையினா், கல்வித் துறையினா், தொண்டு நிறுவனத்தினா், சமூக அமைப்பினா் உள்ளிட்டோரை ஒருங்கிணைந்து 150 கிலோ மீட்டருக்கும் அதிகமாக உள்ள நொய்யல் நதியை புனிதப்படுத்தும் பணியை தொடங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் ஒருங்கிணைப்புக்கு 9940737262, 9943433880 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:-
காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற ஆறுகளில் கழிவுகள் கலந்தாலும், அந்த நீரை தொட்டு பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால், நொய்யல் ஆறு அத்தகைய நிலையில் இல்லை. மாசுபட்டுள்ளது.
நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 'நொய்யல் பெருவிழா' நடத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்தாண்டு ஜூலையில் நொய்யல் நதிக்கரையோரம் யாத்திரையும், ஆகஸ்டு 25ல் இருந்து, 7 நாட்களுக்கு, 'நொய்யல் பெருவிழா'வும் நடத்தப்படும்.
இதில் துறவியர் மாநாடு, சைவ, வைணவ மாநாடு, மகளிர் மாநாடு, சித்தர்கள் மாநாடு, பசு பாதுகாப்பு, நில மற்றும் நீர் மேலாண்மை, முத்தமிழ் கருத்தரங்கம் என ஆன்மிக, சுற்றுச்சூழல் மாநாடு, கருத்தரங்கு, கண்காட்சி ஆகியன இடம்பெறும். தினமும் மாலை, நொய்யல் நதிக்கு ஆங்காங்கே ஆரத்தி எடுக்கப்படும்.
நொய்யல் பாதுகாப்பு என்பது வெறும் விழாவாக முடிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், நொய்யல் நதி பயணிக்கும், 150 கி.மீ.,க்கு அதிகமான நீர்வழித்தடங்கள், நல்லாறு, கவுசிகா போன்ற ஏராளமான கிளை நதிகள், இடையிடையே உள்ள குளம், குட்டைகளை சுத்தப்படுத்தி, அதில் கழிவுகள் தேங்காதவாறு மாற்ற வேண்டும்.
அனைத்து தன்னார்வ அமைப்பினரையும் இணைத்து, நொய்யல் நதி பாதுகாப்பு என்பதை, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஊர்வலங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருச்சியில் வருகிற 1-ந்தேதி இஸ்கான் பக்தி இயக்கம் சார்பில் பூரி ஜெகந்நாதர் பிரமாண்ட ரத யாத்திரை நடைபெறுகிறது
- பாரம்பரியத் தோற்றம் இருந்த போதிலும் ஏர் பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் என்பது உள்ளிட்ட அதி நவீன அம்சங்களை கொண்டிருக்கும்
திருச்சி:
திருச்சியில் முதல் முறையாக வருகிற 1-ந்தேதி புரி ஸ்ரீ ஜெகநாத் ரதயாத்திரை விழா நடைபெற உள்ளது.
ஒடிசா மாநிலம் புரியில் நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற ஜெகந்நாத் ரத யாத்திரை போல நடத்தப்படும் யாத்திரை குறித்து ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) திருச்சி ஸ்ரீரங்கம் மேலாளர் நந்தபுரத்தாஸா கூறியதாவது:-
திருச்சியில் முதன் முறையாக வருகிற ஜூலை 1-ந்தேதி ஸ்ரீ புரிஜெகந்நாத் ரதயாத்திரையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணியளவில் மேலசிந்தாமணி அண்ணா சிலையில் இருந்து தொடங்கும் யாத்திரை மாரீஸ் தியேட்டர் பாலம் வழியாக தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நிறைவடைய உள்ளது.
புராணத்தின்படி கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்களை வைத்து நடைபெற உள்ள ரத யாத்திரையில் சாதி, மத பேதமின்றி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று ரதத்தை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். நவீன தொழில் நுட்பம் மற்றும் பழங்கால பாரம்பரியத்தின் கலவையாக இந்த ரதம் இருக்கும்.
பாரம்பரியத் தோற்றம் இருந்த போதிலும் ஏர் பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் என்பது உள்ளிட்ட அதி நவீன அம்சங்களை கொண்டிருக்கும். 18 அடி உயரம் கொண்ட இந்த ரதத்தை 12 அடி வரை குறைத்தும் ேதவையென்றால் கூட்டவும் செய்யலாம். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வடம் பிடித்து இழுக்கலாம். ரத யாத்திரையின் போது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தில்லை நகர் மக்கள் மன்றத்தில் கீர்த்தனைகள், நாடகங்கள் நடைபெற உள்ளன.
யாத்திரை செல்லும் சாலைகளில் பிரசாதங்கள் வழங்கப்படும். விழா நிறைவு பெறும் மக்கள் மன்றத்திலும் பக்தி நாடகம் முடிந்தவுடன் ஆயிரக்கணக்கானோருக்கு பிரசாதம் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது செயலர் தத்லவித் நிமைதாஸ், ஒருங்கிணைப்பாளர் காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்