search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமை"

    • தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் வாதம்.
    • இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

    இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.

    அதனால், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது.

    மேலும், இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் தார்மீக உரிமை வரும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை.

    ஆனால், இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கிவிட்டார் என எக்கோ நிறுவனம் கூறியுள்ளது.

    இந்நிலையில், இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • நிகழ்ச்சியில் 7 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டது.
    • பயனாளிகளுக்கு கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தலைமை தாங்கி சபரி நகர், மேட்டூர், ஸ்டாலின் நகர், கானாவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேருக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். கிராம நிர்வாக அதிகாரி அரிகரன் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.
    • மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

     காங்கயம்:

    காங்கயம் போலீஸ் நிலையம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் காவல் உட்கோட்டத்திற்குப்பட்ட காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    வழக்குகள் தொடர்பாக மொத்தம் 79 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவை காங்கயம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற மே 17-ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.

    ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம். காங்கயம் போலீஸ் நிலையத்தில் 62 வாகனங்களும், வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் 17 வாகனங்களும் என மொத்தம் 79 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் அடுத்த மாதம் மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும்.
    • 30 நாட்களில் நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமை வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது;-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு நீர் மேலாண்மை தேசிய கொள்கையின் படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மல கசடு கழிவுநீரைவாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் ட்ரெய்லர்களின் செயல்பா டுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் படிவம் பெறபட்ட 30 நாட்களில்நகராட்சி மூலம் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க உரிமை வழங்கப்படும்.

    இதற்கான கட்டணம் ரூ. 2000 உரிமம் பெற்ற வாகனங்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும். செப்டிக் டேங்க் அகற்றும் வாகன உரிமையா ளர்கள் உடனடியாக உரிமம் பெற்று கொண்டு இயக்க வேண்டும். உரிமை இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பு இன்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும் .மேலும் நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்
    • மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலா தலங்களில் மாத்தூர் தொட்டிப் பாலமும் ஒன்று.

    இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிகாலத்தில் இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டது.

    1240 அடி நீளம், 103 அடி உயரம் கொண்ட இந்த பாலம் கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    மாத்தூர் தொட்டிப்பா லத்தைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    தொட்டிப்பாலத்தின் முகப்பு பகுதி அருவிக்கரை ஊராட்சியில் உள்ளது. அருவிக்கரை ஊராட்சிக்கு வருமானம் தரும் ஒன்றாக மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. ஆண்டு தோறும் சுற்றுலாபயணிகள் தொட்டிப்பாலத்திற்கு வரும்போது கார்கள் மற்றும் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது ஏலம் விடப்படுகிறது.

    கடந்த ஆண்டுக்கான குத்தகை காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைவதால் 2023-ம் ஆண்டுக்கான ஏலம் அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஏலத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் கார்பார்க்கிங் ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்து 900,-க்கும், நுழைவு கட்டணம், வீடியோ கேமரா கட்டணம் ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்திற்கும், என மொத்தம் ரூ.41 லட்சத்து 50 ஆயிரத்து 900-க்கும் ஏலம் போனது.

    கடந்த ஆண்டு இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு இந்த ஆண்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    மாத்தூர் தொட்டி பாலத்தின் மேல் சென்று தொட்டிப்பாலத்தை சுற்றிப்பார்த்து வர ரூ.5 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதுபோல மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5, ஆட்டோவுக்கு ரூ.15, கார்களுக்கு ரூ.40, மினி வேன், வேன்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.75, வீடியோ கேமராவுக்கு ரூ.25, புகைப்பட கேமராவுக்கு ரூ5 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

    • இன மொழி உரிமைக்காக குரல் கொடுத்தவர்.
    • அமைச்சராக இருந்து மக்களுக்கான திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் தி.மு.க சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில்,

    தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவைப் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தத்துவத் தலைமையாக தன் வாழ்நாள் முழுவதும் கொள்கைக் கோபுரமாக உயர்ந்து நின்றவர், இன உணர்வும், மொழி உணர்வும், பண்பாட்டுப் பெருமையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அவருடைய எழுத்தாற்றலில் விளைந்த படைப்புகள் அனைத்துமே திராவிட இயக்கத்தின் கருவூலங்கள் நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக இருந்து, இன மொழி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்.

    சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர். கழக ஆட்சிக்காலங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, நிதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக இருந்து மக்களுக்கானத் திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.

    பேராசிரியர் என்ற சொல்லுக்கேற்ப கழகத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் கொள்கை வகுப்பு போல உரைகளை வழங்கி, இனஉணர்வையும் மொழி உணர்வையும் விதைத்து வளர்த்தவர்.

    தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு 'பெரியப்பா' எனும் கொள்கை உறவாக இருந்து, அவர்தம் பொதுவாழ்வுப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லாசிரியராக வழிகாட்டி, நல்ல மதிப்பெண் அளித்துப் பாராட்டியவர் பேராசிரியரின் நூற்றாண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து நடத்தி அவரது பெருமைமிகு பொதுவாழ்வுக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. தலைமை கழக பேச்சாளர் அரங்கநாதன் மாவட்ட அவைத் தலைவர் நசீர் முகம்மது மாவட்ட துணை செயலாளர் கோவி அய்யாராசு மாநகர செயலாளர் சு.ப தமிழழகன் ஒன்றிய செயலாளர்கள் முத்துசெல்வம் கணேசன் சுதாகர் கோ.க அண்ணாதுரை கூகுர் அம்பிகாபதி உதயச்சந்திரன் தாமரைச்செல்வன் நாசர் தியாக சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தையை பராமரிக்க, ஈரோட்டில் உள்ள 'ஹல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தத்து மையத்தில் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.
    • குழந்தையை யாரும் உரிமை கோராதபட்சத்தில், தத்து கொடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரியாண்டிபாளைய–த்தில், ஆதரவற்ற நிலையில் இருந்த, மூன்று வயது ஆண் குழந்தையை, சென்ட்ரல் போலீசார் மீட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    குழந்தையை பராமரிக்க, ஈரோட்டில் உள்ள 'ஹல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தத்து மையத்தில் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.குழந்தைக்கு உரிமை கோருவோர், உரிய ஆவணங்களுடன், நான்கு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். யாரும் உரிமை கோராதபட்சத்தில், தத்து கொடுக்கப்படும். விவரங்களுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 0421 2971198, ஈரோடு தத்து மையத்தை, 97906 13262, 99448 39573 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • பொது இடத்தில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது? என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
    • திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதி.மு.க. உள்ளது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதி.மு.க. உள்ளது. ஏழைகளுக்காக 1972 -ம் ஆண்டு இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அவர் இருக்கும் வரை தி.மு.க. கோட்டை பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை. அதனைத்தொடர்ந்து அம்மா அதி.மு.க.வை நாட்டின் 3-வது பெரிய இயக்கமாக உருவாக்கினார்.

    தி.மு.க.வினர் எங்களை வழிநடத்திச் செல்லும் ஜெயலலிதா காலில் விழுவதை கேலி-நையாண்டி செய்தனர்.

    இன்றைக்கு தி.மு.க.வின் தன்மானம், சுயமரியாதை எங்கே போனது? தஞ்சையில் முதல்-அமைச்சரின் மகன் உதயநிதி வந்தபோது தஞ்சை மேயர் அங்கியுடன் சென்று உதயநிதியின் காலில் விழுந்துள்ளார்.

    இதனை உதயநிதி கண்டிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டுள்ளார். காலில் விழுவதை விமர்சித்த தி.மு.க. இதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறது?

    மேயர் அங்கியுடன் பொது இடத்தில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது? மூத்தோர் காலில் இளையோர் விழுவது தான் தமிழர் பண்பாடு, கலாச்சாரம்.

    இன்றைக்கு வயது குறைந்தவர் காலில் மூத்தோர் விழுந்து சுயமரியாதையை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

    இந்த புது கலாச்சாரம் தான் தி.மு.க. அரசின் திராவிட மாடலா? என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×