search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா ெபாதுக்கூட்டம்
    X

    விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பேசினார்.

    பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா ெபாதுக்கூட்டம்

    • இன மொழி உரிமைக்காக குரல் கொடுத்தவர்.
    • அமைச்சராக இருந்து மக்களுக்கான திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் தி.மு.க சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில்,

    தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவைப் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தத்துவத் தலைமையாக தன் வாழ்நாள் முழுவதும் கொள்கைக் கோபுரமாக உயர்ந்து நின்றவர், இன உணர்வும், மொழி உணர்வும், பண்பாட்டுப் பெருமையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அவருடைய எழுத்தாற்றலில் விளைந்த படைப்புகள் அனைத்துமே திராவிட இயக்கத்தின் கருவூலங்கள் நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக இருந்து, இன மொழி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்.

    சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர். கழக ஆட்சிக்காலங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, நிதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக இருந்து மக்களுக்கானத் திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.

    பேராசிரியர் என்ற சொல்லுக்கேற்ப கழகத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் கொள்கை வகுப்பு போல உரைகளை வழங்கி, இனஉணர்வையும் மொழி உணர்வையும் விதைத்து வளர்த்தவர்.

    தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு 'பெரியப்பா' எனும் கொள்கை உறவாக இருந்து, அவர்தம் பொதுவாழ்வுப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லாசிரியராக வழிகாட்டி, நல்ல மதிப்பெண் அளித்துப் பாராட்டியவர் பேராசிரியரின் நூற்றாண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து நடத்தி அவரது பெருமைமிகு பொதுவாழ்வுக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. தலைமை கழக பேச்சாளர் அரங்கநாதன் மாவட்ட அவைத் தலைவர் நசீர் முகம்மது மாவட்ட துணை செயலாளர் கோவி அய்யாராசு மாநகர செயலாளர் சு.ப தமிழழகன் ஒன்றிய செயலாளர்கள் முத்துசெல்வம் கணேசன் சுதாகர் கோ.க அண்ணாதுரை கூகுர் அம்பிகாபதி உதயச்சந்திரன் தாமரைச்செல்வன் நாசர் தியாக சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×