search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுதானியங்கள்"

    • 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
    • முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலம் வேதாரண்யம் வட்டாரத்தில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா வட்டார இயக்க மேலாண்மை அலுவ லகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு வட்டார இயக்க மேலாளர் அம்பு ரோஸ்மேரி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வேதாரண்யம் வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், தோப்புத்துறை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி மற்றும் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரித்த ஊட்டச்சத்து நிறைந்த 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தி வைத்திருந்தனர்.

    பின்பு, ஊட்டச்சத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    • ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் தொடங்கி வைத்தார்
    • விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு

    கன்னியாகுமரி :

    உலக சுகாதார நிறுவனம் 2023-ம் ஆண்டை சிறுதானி யங்கள் ஆண்டாக அறி வித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய சுகாதார நிறுவனமும் சிறுதானிய கழகமும் இணைந்து சிறுதானிய உணவினை

    உ ட்கொள்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு பகுதிக ளில் சிறுதானியங்கள் பற்றிய கண்காட்சி, உணவு திருவிழா மற்றும் நடை பயணம் போன்ற நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கன்னியாகுமரியில் இன்று காலை கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சிறுதானியங்கள் விழிப்புணர்வு நடைபயணம் நடை பெற்றது.

    திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இருந்து இந்த நடை பயணம் தொடங்கியது. இந்த நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூ ராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கி னார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ.சேதுரா மலிங்கம் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு சிறுதானிய விழிப்புணர்வு நடைபயணத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் தி.மு.க. பிரமுகர் டாக்டர் சுந்தர்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு சின்ன துரை மாணவ -மாணவிகளுக்கு நிலக்கடலை, சுண்டலை வழங்கி துவக்கி வைத்து பேசினார்.
    • தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடைவேளையின் போது சிறுதானிய உணவுகள் மற்றும் பயறு வகைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் பாஸ்கரன், சக்கரபாணி, தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு சின்ன துரை மாணவ -மாணவிகளுக்கு நிலக்கடலை, சுண்டலை வழங்கி துவக்கி வைத்து பேசினார்.

    தினமும் உடலுக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது. சிறுதானியங்கள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன என்றார்.

    முடிவில் கலை ஆசிரியர் அன்புமணி நன்றி கூறினார்.

    • சிறுதானிய பயன்பாடு அவசியம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு கோத்தகிரியில் நடந்தது.
    • கேழ்வரகு , வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் அபரிவி தமான சத்துக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அரவேணு,

    உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் சிறுதானிய பயன்பாடு அவசியம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு கலை நிகழ்ச்சிகள் கோத்தகிரியில் உள்ள தனியார் மண்ட பத்தில் நடந்தது.

    கருத்தரங்கில் எதிர்கா லத்தில் உணவும், தண்ணீரும் பற்றாக்குறை ஏற்படும் சூழலிலும் சிறுதானியங்கள் தான் நம்மை பாதுகாக்கும் உணவாகும் என வலியுறுத்தப்பட்டது.

    மனிதருக்கு தேவையான சரிவிகித உணவை புஞ்சை தானியங்களான பயிர்கள் மட்டுமே தர முடியும். இதனை உற்பத்தி செய்ய குறைந்த அளவே தண்ணீர் போதுமானது. மேலும் சிறுதானியங்கள் பருவ கால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கி வளரும் தன்மை கொண்டதாகும்.

    கேழ்வரகு , வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் அபரிவி தமான சத்துக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு அவசியமான உணவாகும். உடல் நரம்புகளுக்கு சக்தியை அதிகரித்து இதயம் சம்பந்தமான நோய்கள், வாய்ப் புண், வயிற்றுப்புண், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவைக்கு சிறுதா னியங்கள் நிவாரணியாகவும் விளங்குகிறது.

    துரித உணவு மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக உலகத்தில் 50 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளாக இருப்பதாகவும், 50 சதவீதம் தாய்மை பேறு அடையக்கூடிய வயதில் உள்ள பெண்களில் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வறிக்கை கூறுவதாக கருத்தரங்கில் தெரிவிக் கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.

    • விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம், செயல்பாடுகள் குறித்த தொழில்நுட்ப பயிற்சி.
    • சிறுதானியங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்ட உயிர் உரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கோடங்குடி ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செயல்பாடுகள் பற்றிய தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமை தாங்கினார்.

    வேளாண்மை துணை அலுவலர் பிரபாகரன், வேளாண்மை உதவி அலுவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் வரவேற்றார். சிறுதானியங்கள் மற்றும் பயிர் நுண்ணூட்டம் உயிர் உரங்கள் பயன்பாடுகள் குறித்த கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதனை விவசாயிகள் கண்டு களித்தனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் மதுமனா செய்திருந்தார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    • வேளாண்மை அலுவலா்கள் செல்விசுஜி, சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • வினோத்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் (அட்மா திட்டம்) பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    திருப்பூர்:

    சத்துமிகு சிறு தானியங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திட்ட விளக்க பிரசார வாகனங்கள் அவிநாசி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டன.

    பொதுமக்களிடம் சத்துமிகு சிறு தானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு உற்பத்தி குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அவிநாசி வட்டார ஊராட்சிகளுக்கு வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதைத் தொடா்ந்து, அவிநாசி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மூன்று பிரசார வாகனங்களை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் தலைவா் சின்னக்கண்ணான் என்ற ஆறுமுகம், பேரூராட்சி மன்ற உறுப்பினா் சிவபிரகாஷ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

    வேளாண்மை அலுவலா்கள் செல்விசுஜி, சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி அலுவலா்கள் சின்னராஜ், நாகராஜ், தினேஷ், சம்பத்குமாா், வினோத்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் (அட்மா திட்டம்) பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    • மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பாக மானியத்துடன் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தவும், நடப்பு தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், பல்வகை பயிர் சாகுபடியை ஊக்குவித்திடவும், பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு நெல் உற்பத்தி திறனை அதிகப்படுத்திடவும், டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.16 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நெல் சாகுபடியை ஊக்குவித்திட 50 சதவீதம் மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் மானியத்தில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு பயனாளிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. மற்றும் ½ மூட்டை பொட்டாஷ் ஆகிய உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பாக பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதம் மானியம், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. உழவன் செயலி மூலம் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதற்காக அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் குறுவை தொகுப்பு திட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×