என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழிகாட்டுதல்"
- பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி சரியான வழிகாட்டுதலுடன் பயிற்றுவிக்க வேண்டும்.
- மகாலட்சுமி, தலைமையாசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது, நடப்பாண்டு காலாண்டு தேர்ச்சி விகிதம் குறித்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களு டான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர், கல்வித்துறையில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் மேம்படுவதற்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவர்களின் காலாண்டு தேர்வின் தேர்ச்சி விகிதம் குறித்து ஒவ்வொரு தலைமையாசிரியர்களுடன் இன்றைய தினம் விரிவாக கேட்டறியப்பட்டது. இதுமட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மொழிப்பாடங்கள் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி சரியான வழிகாட்டுதலுடன் பயிற்றுவிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் காலை, மாலை சிறப்பு வகுப்புகள், வாராந்திர தேர்வுகள் போன்ற தவறாமல் பள்ளிகளில் நடத்திட வேண்டும். 2023-2024 ஆம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் முதன்மை மாவட்டமாகத் திகழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவசுப்பிரமணியம், மகாலட்சுமி, தலைமையாசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம்.
- டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கிகொள்ள வேண்டும்.
வீட்டில் இருக்கும்போதே கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம், அப்படி இருக்கையில் பயணத்தின்போது இன்னும் சவாலாகவே இருக்கும். ரெயில், பேருந்து, கார் என எதில் பயணம் செய்தாலும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? அவர்களுக்காக அவசியம் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பது பற்றிய எளிய வழிகாட்டுதல் இங்கே...
கைக்குழந்தையுடன் பயணம் செல்லும்போது எதை கொண்டு செல்ல வேண்டும். எதை விட்டுச்செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். அதனால் எப்போது பயணம் மேற்கொண்டாலும் பொறுமை மிக அவசியம். குழந்தைகளுடனான பயணத்தின்பொது அவசர அவசரமாக கிளம்பாமல் அவர்களுக்குத் தேவையானதை மறக்காமல் எடுத்து வைத்தும் கொண்டு முடிந்த அளவு டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும்.
முதலில் குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு பை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பையில் பால் பாட்டில், தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் பால் கொடுப்பதற்கு வசதியாக ஒரு துண்டும், குழந்தைக்கு ஒரு துண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெந்நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சிறிய மற்றும் பெரிய அளவிலான கைக்குட்டைகள், பொம்மைகள், தொப்பி, குடை, டயப்பர் போன்ற அத்தியாவசிய பொருட்களை மறக்காமல் எடுத்து வைப்பது அவசியம். கைக்குழந்தை அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடும் என்பதால் சுத்தம் செய்ய தேவையான பேபி வைப்ஸ் போன்றவற்றையும் கட்டாயம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது தவிர, வழக்கமான ரெடிமேட் அல்லது துணி டயப்பர்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறியதாக ஒரு மருந்து பெட்டி தயார் செய்து, அதில காய்ச்சல், இருமல், சளி, வாந்தி, பேதியை குறைக்கும் மாத்திரைகளை எப்போதும் போட்டு வைத்திருக்க வேண்டும். சில நேரங்களில் அது உங்களுக்கும் கூட உதவும்.
சீரற்ற வானிலை மாற்றத்தை சமாளிக்கவும். நம் ஆரோக்கியத்தை காக்கவும், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற சத்துள்ள பழங்களை ஜூஸ் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளலாம். எதிர்பார்க்காத நேரங்களில் குழந்தைகள் அழுகிற நிலைமை உருவாகும். ஆகையால் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
கைக்குழந்தையுடன் பயணம் செய்யும்போது எப்போது வேண்டுமானாலும் உதவி தேவைப்படலாம். எனவே, செல்போனை முழுமையாக சார்ஜ் போட்டு வைத்திருக்க வேண்டும். கார், ரெயில் போன்றவற்றில் பயணம் செய்யும்போது மழலையர் பாடல்களை குழந்தைகளுக்கு பாடி காட்டலாம். அதை குழந்தைகளும், விரும்புவார்கள்.
இதைத்தொடர்ந்து செய்ய உங்களுக்கு இனிமையான குரல் வேண்டும் என்பதில்லை உங்கள் குரலைக் கேப்பது தான் குழந்தையின் விருப்பம், ஆகவே இதுபோன்ற சில விஷயங்கனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கைக்குழந்தைகளுடன் உங்களது பயணத்தை இனிதாக தொடரலாம்.
- கடந்த மாதம் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால், பலர் குறைந்த நாட்களில் பலன் தரும் கொத்தமல்லி, கீரை சாகுபடியில் ஈடுபட்டோம்.
- கடந்த வாரம் பெய்த மழையால் கொத்தமல்லி விளைச்சல் வழக்கத்தை விட அதிகரித்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், மத்திகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகள் மற்றும் கீரைகளான, புதினா, கொத்தமல்லி உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
சந்தையில் கொத்தமல்லிக்கு ஆண்டு முழுவதும் வரவேற்பு உண்டு. இதனால், இச்சாகுபடி விவசாயிகளுக்குச் சந்தை வாய்ப்பு எப்போதும் இருக்கும்.
கொத்தமல்லி இலையை பொறுத்தவரை சந்தைக்கு வரத்து மற்றும் நுகர்வுத் தேவையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சமாக ஒரு கட்டு ரூ.25 வரை விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு வரத்து அதிகரித்ததால், படிப்படியாக விலை குறைந்து நேற்று ஒரு கட்டு ரூ.2 முதல் ரூ.5 வரை விற்பனையானது. மேலும், வழக்கத்தை விட விற்பனையும் சரிந்தது.
இதனால், போக்குவரத்து செலவு, அறுவடை கூலிக்கு கூட விலை கிடைக்காததால், பல விவசாயிகள் கொத்தமல்லி அறுவடையைத் தவிர்த்து வருகின்றனர். மேலும், விற்பனையாகாத கொத்தமல்லி கட்டுகளை சாலையோரங்களில் வீசி வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறுகையில் கடந்த மாதம் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால், பலர் குறைந்த நாட்களில் பலன் தரும் கொத்தமல்லி, கீரை சாகுபடியில் ஈடுபட்டோம்.
குறிப்பாக கொத்தமல்லியை அதிக விவசாயிகள் சாகுபடி செய்தனர். மேலும், கடந்த வாரம் பெய்த மழையால் கொத்தமல்லி விளைச்சல் வழக்கத்தை விட அதிகரித்தது.
இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்து, விலை சரிந்துள்ளது. விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடி மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பாக முறையான ஆலோசனை மற்றும் வழி காட்டுதல் வழங்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
- குளச்சல் கடலோர பாதுகாப்பு குழுமம் (மரைன் போலீஸ்) தகவல்
- பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் பயிற்சி கால ஊக்க தொகை வழங்கப்படும்.
கன்னியாகுமரி:
குளச்சல் கடலோர பாதுகாப்பு குழுமம் (மரைன் போலீஸ்) விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு வழிகாட்டுதல் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உரிய நிதி ஒப்பளிப்பு அரசாணை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடத்தி முடிக்கப்பட்டது. 9-வது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.
கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் நடத்தப்பட உள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதி உள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்பந்தப் பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலு வலகங்களில் இருந்தும், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவல கங்களில், இருந்தும் மேலும் மீனவர் கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாய விலை கடைகள் ஆகிய இடங்களில் இருந்தும் இலவசமாக பெற்றுக் கொள்ளவும்.
இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து 3 மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
அனைத்து கடலோர மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு, மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் பயிற்சி கால ஊக்க தொகையும் வழங்கப்படும்.
எனவே 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத் தொகையில் 50 சத வீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி, உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
- இந்த நிகழ்வில் 1,135 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உள் புகார்கள் குழு மாணவர்கள் ஆலோசனை குழு மற்றும் வேலைவாய்ப்பு குழு ஆகிய குழுக்கள் இணைந்து ''கல்வி மற்றும் வாழ்க்கை ஒழுக்கத்தின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பிலான வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தி னராக ரெக்சோனா நம்பிக்கை கல்வி பயிற்சியாளர் சுதா, கலந்து கொண்டார்.
மாணவர் ஆலோசனை குழு உறுப்பினர் மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.துணை முதல்வர் மற்றும் உள் புகார்கள் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவிகளின் கல்வி மற்றும் வாழ்க்கை ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். இன்றைய சூழ்நிலையில், மாணவிகள் எவ்வாறு தங்களது கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தன்னை தொழிற்துறையில் நுழை வதற்கு திறன்களை மேற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களது இருதரப்பட்ட வாழ்க்கை சூழலை எதிர்கொள்வதற்கான யுக்திகளையும், நேர்த்திகளையும் பயிற்று வித்தார்.
வேலைவாய்ப்பு குழு பொறுப்பாளர் சங்கீதா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 1,135 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
- இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.
முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
- விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்க தமிழக அரசால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு மட்டும் 5 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 வருடம் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குறைந்த பட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம் பொதுபிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்இதர பிரிவினர், பெண்கள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் இக்கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தில் வருகிற ஜூலை 6-ந் தேதி காலை 10 மணியளவில் இக்கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்நடை பெறவுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் , பழங்குடியினர், சிறுபான்மையினர், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04142- 290116 மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்