என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரதிநிதிகள்"
- பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727 உள்ளனர்.
- இந்த வாக்காளர் பட்டியல் அங்கிகரிக்கப்பட்ட அனைத்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.
சீர்காழி சட்டமன்ற தொகுதியில் (தனி) ஆண் வாக்காளர்கள் 120559, பெண் வாக்காளர்கள் 122424, திருநங்கைகள் 8 என மொத்தம் 242991, பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727, திருநங்கை 3 என மொத்தம் 264409 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனை த்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.
அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன்,ம ண்டல துணை வட்டாட்சியர் பாபு, அ.தி.மு.க சார்பில் சுரேஷ்குமார், வக்கீல் தியாகராஜன், தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், நெடுஞ்செ ழியன், சரவணன், காங்கிரஸ் கட்சி சார்பில் மோராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜயரெங்கன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.
- பலத்த போலீஸ் பாதுகாப்பு
- 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி பதவிக்கு 5 உறுப்பினர்களை 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்கு 7 உறுப்பினர்களை குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டு உறுப்பினர்கள், 4 நகராட்சி யில் உள்ள 98 வார்டு உறுப்பினர்கள், 51 பேரூராட்சியில் உள்ள 826 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்வார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங் கத்திலும், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலக கட்டிட முதல் மாடியில் அமைந்து உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்திலும் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது.
மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவல கத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் 51 பேரூராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் வாக்குகளை பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் 3 பேர் வாக்களிக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது.
வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், குளச்சல், பத்ம நாபபுரம், கொல்லங்கோடு, குழித்துறை நகராட்சி மற்றும் 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் நாஞ்சில் கூட்டரங்கத்தில் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்களிக்க வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களுக்கான அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்தனர்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் 5 வாக்குகளும், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 7 வாக்குகளையும் செலுத்தினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடக்கிறது.வாக்கு பதிவு மையத்திற்குள் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வாக்கு பதிவு முடிந்ததும் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்தின் முதல் மாடியில் அமைந் துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் வாக்குகள் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு வெற்றி பெற்றவர்கள் விபரம் தெரியவரும். திட்டக்குழு தேர்தல் நடைபெற்றதை யடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழைய கட்டிட அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
- 28-ந் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும்
கோவை,
கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
இதில் கோவை மாவட்டத்திற்கு ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பின்னர் இந்த 18 பேரும் வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுப்பர்.
இன்று நடந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்-17 மாநகராட்சி கவுன்சிலர்கள்-100 மற்றும் 7 நகராட்சிகளில் உள்ள 198 கவுன்சிலர்கள், 33 பேரூராட்சிகளில் உள்ள 513 கவுன்சிலர்கள் என மொத்தம் 825 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சியில் தலா ஒன்று, காளியூர் பேரூராட்சியில் ஒன்று என மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. எனவே 822 கவுன்சிலர்கள் ஓட்டு போட போட்ட உள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழைய கட்டிட அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
தேர்தல் முடிக்கப்பட்டு இன்று மாலை பதிவான வாக்குகள் எண்ணப்படும். 28-ந் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
- எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:
உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.
இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.
ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.
- குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தலையீட்டை எவ்விதத்திலும் அனுமதிக்க கூடாது.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளே செயல்படுத்த வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாக கூட்டமைப்பின் செயல்பாடுகளை சரியான வகையில் வழிநடத்திடவும், கிராம ஊராட்சியால் அளிக்கப்பட வேண்டிய சேவைகள், நிறைவேற்ற வேண்டிய கட்டாய கடமைகள், விருப்பக் கடமைகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்திடுவது குறித்து எடுத்து கூறப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கணவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தலையீட்டினை எவ்விதத்திலும் அனுமதிக்க கூடாது.ஊராட்சி மன்ற நிர்வாகத்தினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளே செயல்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பொன்னியின்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.
- முடிவில் பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா நன்றி கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றுப் பேசினார். தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், து.செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக தலைமை பேச்சாளர்கள் போடி காமராஜ், பேர்ணாம்பட்டு ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, முன்னாள் எம்பி பரசுராமன், மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் இறை கார்குழலி, மாவட்ட நிர்வாகிகள் இறைவன் , அண்ணா, மணிமாறன், புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி, செல்வராஜ், உலகநாதன், முரசொலி, செல்வகுமார், பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், நீலகண்டன், சதாசிவம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன், தஞ்சை மாநகர நிர்வாகிகள் உஷா, காளையார் சரவணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வரகூர் காமராஜ், செந்தமிழ் செல்வன், கமலா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா நன்றி கூறினார்.
- இரயுமன்துறை பகுதியில் புதிதாக சீரமைக்கப்படவுள்ள 630 மீட்டர் நீளமுள்ள மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவரின் தொடக்கப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.
- தங்கதடையின்றி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவர் பணியினை மேற்கொண்டிடவும்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்குட் பட்ட பகுதிகளில் நடை பெற்றுவரும் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி யினை கலெக்டர் அரவிந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடலோர பகுதிகளில் வசிக் கும் மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-
தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்திற்குட்பட்ட இரயுமன்துறை பகுதியில் புதிதாக சீரமைக்கப்படவுள்ள 630 மீட்டர் நீளமுள்ள மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவரின் தொடக்கப்பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.
தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
இந்த ஆய்வின்போது தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பயனீட்டாளர்களால் உடனடியாக தங்கதடையின்றி தேங்காப்பட்ட ணம் மீன்பிடி துறைமுக மேற்கு பக்க அலைத்தடுப்பு சுவர் பணியினை மேற்கொண்டிடவும், தற்போது மணல் அகழ்வு பணிக்காக கொண்டு வரப் பட்டுள்ள மணல் அகழ்வு இயந்திரத்திைன மாற்றி உடனடியாக ராட்சத மணல் அகழ்வு இயந்திரத்தினை வைத்து மணல் அகழ்வு பணி மேற்கொண்டிட மீனவ பிரதிநிதிகள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
அதன் அடிப்படையில் மேற்படி பணிகளை விரைந்து முடித்திட செயற்பொறியாளர் மீன்பிடி துறைமுக திட்டக்கோட்டம், நாகர்கோவில் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
ஆய்வின்போது பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டாக்டர் அலர்மேல்மங்கை, துணை இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) காசிநாதபாண்டியன், மீன் பிடி துறைமுக திட்டக் கோட்ட செயற்பொறியாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை குளச்சல் உதவி இயக்குநர், தேங்காய்பட்ட ணம் மீன்பிடி துறைமுக திட்ட உபகோட்டம் உதவி செயற்பொறியாளர், கிள்ளியூர் தாசில்தார், தூத்தூர் மண்டல பங்குத் தந்தையர்கள், தேங்காப்பட் டணம் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்க உறுப்பினர்கள், மீனவ பிரதிநிதிகள், பயனீட்டாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நகர செயலாளர் சண்முக சுந்தர் வரவேற்றக, நகர அவைத்தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார்.
- மேல் அமைப்பு பிரதிநிதிகள், வார்டு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நகரம், ஒன்றியம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் டி.சி.சண்முக சுந்தர் வரவேற்றார். நகர அவைத்தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார்.
இதில் முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் கோபால், முன்னாள் எம்.பி ராஜமாணிக்கம், அமைப்புச் செயலாளர் சிங்காரவேல், ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி வெற்றிவேல், வடக்கு ஒன்றிய பொருளாளர் அ.க. வெற்றிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் முன்னாள் நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் வடக்கு சுமித்திரா, ரவி, மதிவாணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதேவி இளங்கோவன், வடக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட, நகரம் சார்பில் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மேல் அமைப்பு பிரதிநிதிகள், வார்டு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்டவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர்க் கழக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க.15-வது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
தி.மு.க. 15-வது பொதுத்தேர்தலில் பேரூர்க் கழகத்தேர்தலில் தேர்ந்ெதடுக்கப்பட்ட பேரூர்க் கழக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் விவரம் மாவட்டவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 1 என்பது அவைத்தலைவரையும்,2 செயலாளரையும்,3 – துணைச் செயலாளரை (பொது)யும்,4 துணைச் செயலாளரை (ஆதிதிராவிடர்)யும்,5- – துணைச் செயலாளரை (மகளிர்)யும்,6 – பொருளாளரையும்,7 – மாவட்ட பிரதிநிதிகளை(இருவர்)யும்,8 ஒன்றிய பிரதிநிதிகளை(ஐவர்)யும் குறிப்பிடும்.
திருப்பூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
திருப்பூர் கிழக்கு மாவட்டம், ஒன்றியம் தாராபுரம், பேரூர்: சின்னக்காம்பாளையம்- 1.சி. சுப்பிரமணியம் 2. ரா.பன்னீர்செல்வம் 3. என். பூபதி 4. எம்.காளிமுத்து 5.என். சாந்தி 6.ஆர். கதிர்வேல் 7.மா. கனகராஜ், ஈ.நாட்டுத்துரை 8. க.ரத்தினசாமி, பி.காளியப் பன், கே.சம்பத்குமார், எம்.ஜெயக்குமார், கே. மகேஸ்வரன். பேரூர்: கொளத்துப்பாளையம் 1. எம். புவனேந்திரன் 2. கே.கே.துரைச்சாமி 3. பி. சிவக்குமார் 4. கே. குப்புசாமி 5.பி.முத்துமணி 6. பி. கிருஷ்ணமூர்த்தி 7.பி. ரத்தினசாமி, ந. ஜெயக்குமார் 8.ஆர். ஹரிஹரகிருஷ்ணன், ந. சிவசண்முகம், கே. செந்தில்குமார், சி.காளிதாஸ், டி. சிவராஜ்.
மூலனூர் ஒன்றியம் -பேரூர் மூலனூர் -1. சி.விஸ்வநாதன் 2. க.தண்டபாணி 3.ப. செந்தில்குமார் 4. பி. பாலசுப்பிரமணி 5. அ.உமாதேவி 6. கு.செல்லமுத்து 7.பி.அர்ச்சணசாமி, சா.ஜெகதீஸ்வரன் 8. எஸ்.சங்கர், மு. கந்தசாமி, செ. மதன்குமார், கு. சசிக்குமார், வி. செல்லத்துரை.
பேரூர்: கன்னிவாடி- 1.கே. எஸ். சீரங்கராயன் 2. கோ.சுரேஷ் 3. வி. பொன்மதன் 4. எஸ். சுந்தரம் 5. எம்.கலைமதி 6. ஆர்.சுப்பிரமணி 7.பி.வடிவேல், சி.பெரியசாமி 8. கே. வெள்ளைசாமி, எஸ். கிரிகுமார், வி.எஸ். ராமசாமி, எஸ்.நல்லசிவம், எஸ்.முருகேசன்.
ஒன்றியம் குண்டடம் மேற்கு ,பேரூர் ருத்ராவதி- 1.என். கண்ணகுமார் 2. எஸ். அன்பரசு 3. டி. பிரபாகரன் 4. எஸ். பிரகாஷ் 5. எல். மோகனசெல்வி 6. பி. சிவசுப்ரமணியன் 7. என். நந்தகோபால், எஸ். எம். தங்கவேல் 8.எம். கோபிநாத், கே.சண்முகசுந்தரம், பி.தனசேகரன், கே.பாலசுப்பிரமணியம், என். ராமசாமி.
ஒன்றியம் வெள்ளக்கோவில்- பேரூர் முத்தூர்- 1.கே. பழனிசாமி 2. கு. குப்புசாமி 3. ஆர். வீரக்குமார் 4. க.சுப்பிரமணி 5.எஸ்.தங்கமணி 6. எ.சுப்பிரமணி 7.மு.க.அப்பு. எஸ். பௌதியப்பன் 8.பி.ராஜேந்திரன், வி.சம்பத், எ. கோவிந்தராஜ், வி.எஸ். சுப்பிரமணி, எஸ்.ஜெகதீஸ்வரன்.
ஒன்றியம்ஊத்துக்குளி வடக்கு -பேரூர் குன்னத்தூர்- 1.கே.சி. பூவராகவன் 2.சி. சென்னியப்பன் 3.டி.எஸ். கோபாலகிருஷ்ணன் 4.கு.சுப்பிரமணியம் 5.எஸ். அன்புச்செல்வி 6. மு.இளங்கோ 7. எஸ். கே. முருகசாமி, கே.எ. இளங்கோவன் 8.சி.எம். கருப்புச்சாமி, கே.ஜி. சோமசுந்தரம், தி. தீபா , சி.ராஜ்குமார், ம.ராஜேஸ்வரி.
ஒன்றியம் ஊத்துக்குளி தெற்கு- பேரூர் ஊத்துக்குளி- 1.மா.தெய்வசிகாமணி 2. கே. கே. இராசுக்குட்டி 3. டி.ராஜேந்திரன் 4. எம். கைத்தான் 5.கா.வாசுகி 6. சி.பி. செல்வராஜ் 7. ஆ.கோபால்ராஜா, மெ. ரமேஷ்குமார் 8.சு. செந்தில்குமார், கு.ராமசாமி, கா.பாலசுப்பிரமணி, ப.ரவிச்சந்திரன், எம். வரதராஜன்.
திருப்பூர் தெற்கு மாவட்டம் -ஒன்றியம் மடத்துக்குளம் மேற்கு- பேரூர் மடத்துக்குளம்- 1.ஆர். மாரிமுத்து 2. என். பாலகிருஷ்ணன் 3. டி. கௌதமன் 4. கே.ஆறுமுகம் 5. வி. கனகபூரணி 6. எஸ்.டி.ஏ. வதூத் 7. டி. ரங்கநாதன், கே. பாலதண்டபானி 8. ஏ. சதாசிவம், எம். கே. சிவக்குமார். ஆர். துளசிமணி, ல. பாலசுப்பிரமணியன், என்.கார்த்திக்ராஜா,
ஒன்றியம் - மடத்துக்குளம் மத்திய- பேரூர் கணியூர்- 1. எம். சாகுல் அமீது 2. ஏ. பாலகிருஷ்ணன் 3. என். சங்கர் 4. பி. முத்துக்கிருஷ்ணன் 5. இ. பரமேஸ்வரி 6. கே.கமாலுதீன் 7. கே.எம். இம்தாதுல்லா , வி. பஞ்சலிங்கம் 8. எஸ்.சாரங்கபாணி, கே. கிருஷ்ணன், எஸ்.மதிவாணன், கே.செல்வராஜ், டி.நாகராஜ் .
ஒன்றியம் மடத்துக்குளம் கிழக்கு- பேரூர் : குமரலிங்கம்- 1. கே.அழகர்சாமி 2. எம். ஆச்சிமுத்து 3. சி. ராஜேஷ்கண்ணன் 4. டி.சரவணன் 5. வி.கார்த்திகா 6. ஏ.லியாகத் அலி 7. ஏ.செங்கமலை, பி. முகமது ரபி, 8. பி. மகுடீஸ்வரன், கே.நடராஜன், டி. செந்தில்குமார், டி. மணிவண்ண ன், ஏ.சாகுல் அமீது.
பேரூர்சங்கராமநல்லூர் -1.டி.ஆசைத்தம்பி 2. ஆர்.ஏ. சாதிக்அலி 3. என். முத்துக்கிருஷ்ணன் 4. பி. முருகன் 5. ஏ. மீனாட்சி 6. எஸ். வெள்ளியங்கிரி 7. ஆர்.ராஜேந்திரன், கே.கணகுராஜ் 8. டி.முத்துவேல், ஏ. பழனிச்சாமி, பி. முத்துகிருஷ்ணன், எஸ்.ராஜமாணிக்கம், கே. கிருஷ்ணசாமி
ஒன்றியம்உடுமலைப்பேட்டை மேற்கு- பேரூர் தளி -1. ஏ. சம்சுதீன் 2. வி. உதயகுமார் 3. கே. திருமூர்த்திராஜ் 4. டி. ராதாகிருஷ்ணன் 5. கே. வீரம்மாள் 6. கே.சுப்பிரமணியன் 7. எஸ். செல்வராஜ், ஆர். ஆனந்ராஜ் 8.ஏ. ஆதம்சையது அபுதாகீர், எஸ். தேவராஜ், ஏ. ராமானுஜம், ஏ.ராமசாமி, எம்.சின்னராஜ்.
- கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத்துறை, தோட்டகலைத்துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
- விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத்துறை, தோட்டகலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்