என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டப்படிப்பு"
- கல்வி கற்பதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.
- வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாக கடந்து செல்லவேண்டும். வீணாக்கக்கூடாது.
சென்னை:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்த 82 வயது முதியவர் குருமூர்த்தி. இவர் பாலிடெக்னிக் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கல்வியின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக இவர் பணியில் இருக்கும்போதே 1964-ம் ஆண்டு முதல் முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர அஞ்சல்வழி பட்டயப் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் படித்து வருகிறார்.
இதுவரை பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., என 24 பட்டங்களை பெற்றுள்ளார். அதாவது பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டயப் படிப்புகளும், பணி ஓய்வுக்கு பிறகு 12 பட்டப்ப டிப்புகளும் முடித்துள்ளார். கல்வி கற்பதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் குருமூர்த்தி தனது 25-வது பட்டப்படி ப்பாக எம்.ஏ., போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற படிப்பை படிப்பதற்கு முடிவு செய்தார். அதற்காக மயிலாடுதுறையில் புதிதாக திறக்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து அதற்கான பாடப்புத்தகங்களை பெறுவதற்கு இளைஞரை போல உற்சாகத்துடன் அவர் வந்தார். அவரை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி பாராட்டி கவுரவித்தார்.
இதுபற்றி முதியவர் குருமூர்த்தி கூறியதாவது:-
படிப்பதற்காக நான் செலவு செய்யும் தொகையை செலவாக நினைத்ததே இல்லை. எனது அறிவை வளர்த்து கொள்ளும் விதமாகவே இந்த படிப்புகள் அமைந்துள்ளன. நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவை எனது படிப்புக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. வாட்ஸ் அப், பேஸ்புக்கில் மூழ்கி இன்றைய இளைய தலைமுறையினர் நேரத்தை வீணடித்து வருகின்றனர்.
வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாக கடந்து செல்லவேண்டும். வீணாக்கக்கூடாது. இந்தப் படிப்புகள் என்னை உற்சாக மூட்டி என்றும் இளைஞனாக, மாணவனாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே இளைய தலை முறையினர் கல்வி கற்க அவர்களது நேரத்தை செலவிட வேண்டும். அப்படி பெற்ற கல்வியை மற்றவர்களுக்கும் உதவிட செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
- கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5-வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால், இது அமல்படுத்தப்படும்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- வேலையுடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு பிளஸ்-2 படித்து முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எச்.சி.எல் டெக்னாலஜிஸ்-ல் வேலை வாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிட்ஸ்பிலானி கல்லூரியில் பி.எஸ்.சி (கம்ப்யூட்டிங் டிசைனிங்) பட்டப்படிப்பு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாஸ்தரா பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ. பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக்கழகத்தில் இன்டகிரேட்டடு மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும் வாய்ப்பும் பெற்று தரப்படுகிறது.
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
12-ம் வகுப்பை 2022-ம் ஆண்டில் முடித்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்ணும், 2023-ம் ஆண்டில் முடித்தவர்கள் 75 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும்.
எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த நுழைவு தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.
இந்த படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும்.
இந்த திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம்.
இந்த திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.
- தொழில் பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31-3-2023 அன்றைய தேதியில் 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.
முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர்.
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு.
மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 31-3-2023 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர்.
ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி பிரிவினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயில்ப வராக இருக்கக்கூடாது.
இத்தகுதிகளை உள்ள டக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்க ண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொதுப்பிரிவினர்:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ரூ.300, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் :
எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்- ரூ.600, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றோர் ரூ.1000.
ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது. மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து, விண்ணப்ப படிவத்தை தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒன்றியஅரசின் சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் .
- ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.
திருப்பூர் :
தாட்கோ மூலமாக 10- ம்வகுப்பு மற்றும் 12-ம்வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு B.Sc (Hospitality -amp, HotelAdministration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புசேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வாழ்வாதாரத்தினைமேம்படுத்திக் கொள்ள கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.
சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்ட்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட்கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைய்டு நியுட்ரிஷயன் நிறுவனமானது ஒன்றியஅரசின் சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் .சர்வதேசஅங்கீகாரம் பெற்ற இந்நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்தவர் ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பி.எஸ்சி இளநிலை பட்டப்படிப்பும்,ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. அதேபோன்று பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டு காலை உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் படிப்பும் வழங்கப்படுகிறது.
இதில் சேர விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தமாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம்வகுப்பில்குறைந்தது 45 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆரம்பகாலபி.எஸ்சி படிப்பில் சேருவதற்கு தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் .அத்தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.தேர்வுக்கு வரும் 27.4.2023-ந் தேதிக்குள் விண்ணப்பித்தல் அவசியம்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையத்தில்பதிவு செய்ய வேண்டும். எனவே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் இதுகுறித்து மேலும் தகவல்களை அறிய திருப்பூர் தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோஅல்லது தொலைபேசியிலோ 044-2971112 அனுகி தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தினர் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள்.
- படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.
குஜராத்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. இதனால் மாணவிகள் கல்வி கற்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
தலிபான்களின் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து மீண்ட ஆப்கானிஸ்தான் மாணவி ஒருவர் இந்தியாவில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அந்த மாணவியின் பெயர் ரஷியா முராடி. இவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பொது நிர்வாகம்) படித்தார். இதில் அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதித்து உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனால் ரஷியா முராடி மகிழ்ச்சியுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது
கடந்த ஆண்டு நான் எம்.ஏ முடித்தேன். தற்போது பி.எச்.டி படித்து வருகிறேன். எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த சந்தோஷத்தை எனது பெற்றோருடன் கொண்டாட முடியவில்லையே? என்ற ஏக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெற்றோர்களை பார்த்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி நான் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் சந்தோஷப்பட்டனர். நான் ஆப்கானிஸ்தான் பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே கருதுகிறேன். தலிபான் அரசுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிப்பார்கள். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு படிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கும், சாதனை படைக்க ஊக்குவித்ததற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள். படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்கள் முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும்.
- 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
திருவாரூர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு:-
ஓட்டுநருக்கு உண்டான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்த தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு, அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்.சி. விலங்கியல், தாவரவியல் பயோ வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாதம் ஊதியம் ரூ.15,435 (மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு.
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு 044- 28888060/75/77 அல்லது 7397701801 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் மாணவா் சோ்க்கை தொடங்கியது.
- கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஆகஸ்ட்-4 ஆம் தேதி வரை நேரில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் மாணவா் சோ்க்கை தொடங்கியது.இப்பல்க லைக்கழகத்தில் உள்ள கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு, கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கு 2022 - 23 ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கை தொடங்கப்பட்டது. இதில், துணைவேந்தா் திருவள்ளுவன் முதல் விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் பல்கலை க்கழகப் பதிவாளா்(பொ) சி. தியாகராஜன், கல்வியியல் துறைத் தலைவா் கு. சின்னப்பன், பேராசிரியா் சா. ரவிவா்மன்,துணைப் பதிவாளா் கோ. பன்னீா்செ ல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சோ்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். 04362-226720, 227089 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பதிவாளர் தெரிவி த்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்