search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஐ.ஜி. ஆய்வு"

    • நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரிக்க உத்தரவு
    • குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர அறிவுறுத்தினார்

    கலவை:

    ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று உத்தர விட்டார்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடன் இருந்தனர்.

    • அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டார்
    • போலீசார் உடனிருந்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது அலுவலகத்தில் பின்பற்றப்படும் அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

    மேலும் புகார் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தார்.

    பின்னர் வழக்கு சம்பந்தமான கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    பொது மக்களிடையே நற்பெயர் பெறும் வகையில் அன்பாகவும், மரியாதையுடனும் பழகி பணிசெய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, மங்கையர்கரசி, ஷாகின் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 போலீஸ் நிலையங்களுக்கான ஆய்வு பணி திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
    • சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணி மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வரம்பன் மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 போலீஸ் நிலையங்களுக்கான ஆய்வு பணி திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    ஆய்வு

    சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணி மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வரம்பன் மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், எலச்சிபாளையம், மல்ல சமுத்திரம், மொளசி, பள்ளிபாளையம் வெப்படை ஆகிய போலீஸ் நிலையங்களை தணிக்கை செய்யும் விதமாக சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் மற்றும் 8 இன்ஸ்பெக்டர் களிடம் ம் போலீஸ் நிலைய பதிவேடுகளையும் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

    • வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு
    • திருட்டை தடுக்க கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

    ஆரணி:

    ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ளதுணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரகடி.ஐ.ஜி.முத்துசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஆரணி சரகத்துக்கு உட்பட்ட ஆரணி டவுன், ஆரணி தாலுகா, களம்பூர், சந்தவாசல், கண்ண மங்கலம், ஆரணி மகளிர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வழக்கு களை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து ஆரணி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆரணி காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அனைத்து வியாபாரி களையும் அழைத்து பொதுவான ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல் துறை முடிவு செய்யும், மேலும் பைக் திருட்டு குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.

    அப்போது ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந் திரன் உடன் இருந்தார்.

    • சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆய்வு செய்தார்.
    • தொடர்ந்து அவர் ஆன்லைன் மூலம் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் துறை டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் ஆன்லைன் மூலம் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

    இந்த நிலையில் பச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக ஓமலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் குவிந்து காத்திருந்தனர். அப்போது முன்னதாக சென்ற சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால், அவர் மக்களிடம் மனுக்களை வாங்காமல் சென்றதால், பொதுமக்கள் அனைவரும் அங்குமிங்கும் சுற்றி அலைந்தனர்.

    இதனிடையே ஆன்லைன் கலந்துரையாடல் முடித்து வெளியே வந்த டி.ஐ.ஜி ராஜேஸ்வரி காரில் ஏறி புறப்பட்டார். அப்போது அங்கு கூடிநின்ற இளைஞர்களை அழைத்து, அவர்களிடம் இருந்த மனுக்களை பெற்றுகொண்டார்.

    தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதாவிற்கு உத்தரவிட்டார்.

    அந்த புகார் மனுவில் பச்சனம்பட்டியை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் அரசு சார்பில் செய்யப்படும் எந்த ஒரு திட்டப்பணிகளையும் செய்ய விடாமல் தடுக்கிறார். மேலும், அக்கம் பக்கம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.

    அப்போது கோப்புகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ்வரய்யா (தலைமையிடம்), சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜாகுமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • மோப்ப நாய் படை பிரிவினை பார்வையிட்டார்.
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    தேசிய பேரிடர் மீட்புப் 4 படை பிரிவில் புதிதாக பதவி ஏற்றுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் தென் மண்டல டி.ஐ.ஜி ஜி.எஸ்.சவுவ்கான் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவை பார்வையிட்டார்.

    படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேரிடர் மீட்புப் பணியில் உதவும் மோப்ப நாய் படை பிரிவினை பார்வையிட்டார். மோப்ப நாய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றது.

    தற்போது மீட்பு பணிக்கு உதவும் வகையில் 2 நாட்டு நாய்கள் பயிற்சியில் உள்ளது அதன் பயிற்சி முறைகளை கேட்டறிந்தார் பின்பு பேரிடர் மீட்புப் உபகரணங்களை ஆய்வு செய்தார்.

    மேலும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் கதிரியக்க வியல் துறையின் சார்பில் வீரர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதனையும் பார்வையிட்டார்.பின்பு முத்துகாடு படகு குழாம் அருகில் மீட்பு படை வீரர்களுக்கு நடைபெற்று வருகிறது.

    அதனையும் பார்வையிட்டு வீரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் உடன் படை பிரிவின் சீனியர் கமான்டன்ட் ரேகா நம்பியார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×