search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கராத்தே போட்டி"

    • மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது.

    நடிகர் சூர்யாவின் மகன் தேவ், கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் தங்களிடம் கராத்தே பயின்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், பங்கேற்ற சூர்யாவின் மகன், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றார். மகன் தேவ்-ன் சண்டை காட்சியை நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் மொபைலில் வீடியோ எடுத்தனர்.

    இதில் மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. அதில் நடிகர் சூர்யா மகன் தேவ்-ம் பிளாக் பெல்ட் பெற்றார்.

    • காளையார்கோவிலில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கிராமத்தில் கியோசி இஷின்ரியூ கராத்தே கோபுடோ அசோசியேஷன் சங்க கூட்ட அமைப்புகள் நடத்தும் மாவட்ட அளவி லான சிறப்பு கராத்தே பயிற்சி மற்றும் போட்டிகள் தனியார் மகாலில் கராத்தே மாஸ்டர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    இந்த போட்டியினை சிவகங்கை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். கராத்தே சிறப்பு பயிற்சியாளர் சண்முகவேல், அகில இந்திய கராத்தே சங்க கூட்ட மைப்பு தலைவர் நாக ராஜன், கேரளாவைச் சேர்ந்த டெக்னிசியன் மற்றும் திருநெல்வேலி மாஸ்டர் மணி, தாயிசி மாஸ்டர் கணேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.

    இந்த போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாவட்டத்தில் இருந்து 17-க்கு மேற்பட்ட பள்ளி களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்லக்கண்ணன், நவநீதன், மாவட்ட பாசறை இணை செயலாளர் சதீஷ், கண்ண தாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்துராஜா, பூமி, அம்மா பேரவை செல்ல சாமி, தே.மு.தி.க. சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர்.

    • 14 வயதுக்கு உட்பட்ட கட்டா, குமித்தே போட்டிகளில் மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியைச் சேர்ந்த மாணவி கத்தீஜா முதல் பரிசு
    • போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் தில்லை செல்வம் பாராட்டினார்

    நாகர்கோவில், 

    மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கராத்தே போட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட கட்டா, குமித்தே போட்டிகளில் மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியைச் சேர்ந்த மாணவி கத்தீஜா முதல் பரிசையும், மாணவி பிரித்தீ 2-ம் பரிசையும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவிகள் சங்கீஷா கராத்தே குமித்தே போட்டியில் 2-ம் பரிசையும், சரணிஷா குமித்தே போட்டியில் 2-ம் பரிசையும் கட்டா பிரிவில் 3-ம் பரிசையும் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் கட்டா, குமித்தே போட்டிகளில் மணவன் ராகவ் முதல் பரிசை வென்றார். போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் தில்லை செல்வம், இயக்குனர்கள் முகிலரசு, ஆடலரசு, முதல்வர் தீபாசெல்வி, ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், ஆனிரீனா, சேவியர், வனிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் முத்தரசி, ஓசான்யா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆவடி:

    திருவள்ளூர் மாவட்ட அளவிலான 26-ம் ஆண்டு கராத்தே போட்டி திருநின்றவூர் ஜெயா கலை கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வயது அடிப்படையில் 70- பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    முன்னதாக சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் மற்றும் ஜெயா கல்வி குழும தலைவர் பேராசிரியர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்று போட்டியை கண்டுகளித்தனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் உதவித்தொகை வழங்கினர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சி. ஆர். பி. எப். டி.ஐ.ஜி. எஸ்.ஜெயபாலன், திருவள்ளூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எஸ்.மூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

    மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஏற்பாடுகளை கராத்தே தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன், செயலாளர் தக்ஷிணா மூர்த்தி, தலைவர் ராஜா, சேர்மன் லட்சுமி காந்தன், துணை செயலாளர் ஏ. ரமேஷ்குமார், பொருளாளர் தனசேகர், மற்றும் பயிற்சியாளர்கள்,டி. தியாகராஜன், எஸ்.தீபன், டி.ஏமலதா, ஆர்.சித்ரா, சந்தோஷ் குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • பெங்களூரில் நடந்தது
    • பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

    கலவை:

    பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்பூ மற்றும் கராத்தே போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு முதல் மற்றும் 2-ம் இடம் பெற்றனர்.

    மாஸ்டர் கோட்டிஸ்வரன் தலைமையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ரோட்டரி தலைவர் பரத்குமார் ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபி மற்றும் கிரான்ட் மாஸ்டர் லீ ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்
    • 5 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட வீரர்கள் சுமார் 1000 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு டேனியல் ஸ்போர்ட்ஸ் அகடாமி கராத்தே சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் கடந்த 3 நாட்க ளாக நடைபெற்றது.

    இந்த போட்டியில் கத்தார், துபாய், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றனர். மேலும் 3 பிரிவுகளில் இந்த போட்டி நடை பெற்றது.

    5 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட வீரர்கள் சுமார் 1000 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரி சளிப்பு விழா நடை பெற்றது.

    இதில் சிறப்பு விருந்தி னராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பரிசு கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் நாகர் கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், சி.எல்.ஜோ, பொன்ஜெஸ்லி கல்லூரி முதல்வர் பொன்.ராபர்ட் சிங் மற்றும் சங்க தலைவர் சுந்தர், செயலாளர் சண்முகம், பொருளாளர் பிரேம் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாணவ, மாணவிகள் அனைவரும் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையை கற்றிட வேண்டும்.
    • வெற்றி கோப்பை பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி, 

    தேசிய அளவில் சேலத்தில் கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

    இதில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் திருமலை வாசன் 11 வயதிற்கு உட்பட்ட வர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் முதல் இடத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவரை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி பாராட்டினார். அவர் பேசுகையில் தற்காப்பு கலை என்பது கடினமான சூழ்நிலையில் தங்களை தற்காத்து கொள்ளவும், மன திடத்தை வலுப்படுத்தவும், ஒருமுகப்படுத்தவும் செய்யும். ஆகவே மாணவ, மாணவிகள் அனைவரும் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையை கற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    வெற்றி கோப்பை பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கப்பட்டது. இதே போல பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற பாரத் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா, கராத்தே பயிற்சியாளர் மாரியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி னார்கள்.

    • பரமக்குடியில் தென்னிந்திய கராத்தே போட்டி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை தத்துக்குமார், முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் யூனிக் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி அண்ட் கிறிசின் கான் சித்தோரியோ கராத்தே பள்ளி சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 8 வயது முதல் 21 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆயிரவைசிய சபைத் தலைவர் ராசி.என்.போஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் எஸ்.கே.பி.லெனின்குமார், ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தனர். கியோசி ரவி மற்றும் மாஸ்டர் கியோசி ராமமூர்த்தி, மாஸ்டர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்பட 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை தத்துக்குமார், முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடைப்பெற்றது.
    • 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    தருமபுரி,

    தருமபுரி அருகே தனியார் மண்டபத்தில் 41-வது தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடைப்பெற்றது.

    இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என 6 வயது முதல் 23 வயது வரை பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக அலுவலர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    • அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி வருகிற 28-ந்தேதி கோவாவில் நடைபெற உள்ளது.
    • தேர்வு பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பாராட்டினர்.

    விளாத்திகுளம்:

    அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி வருகிற 28-ந்தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான வீரர்களை சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் தேர்வு செய்தார். இதில் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியை சேர்ந்த கிருத்திக் சர்வான், நளீன் கிரிஷ், ஹர்ஷத் ராஜ், சமர்ஜித், மிதுலா, ரவிசங்கர், பிரகதீஸ், சொகித், கிருஷ், ஆதேஷ், நவீன், டெனில்சன், தினேஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தாளாளர் விமராஜ், செயலாளர் சுப்பா ரெட்டியார், இயக்குனர் இந்திரா ராமராஜூ, முதல்வர் ஆபிரகாம் வசந்தன், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.

    • பரமக்குடியில் தேசிய கராத்தே போட்டி நடந்தது.
    • இதில் வெண்கலம் வென்ற சிறுமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த குருநாதன்-கவிதா தம்பதியின் 10 வயது மகள் அனுஸ்ரீ. இவர் கடந்த வாரம் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். அதேபோல் 10 வயது சிறுவன் வசந்த் மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். பதக்கங்கள் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய இருவருக்கும் ஸ்பார்க் கராத்தே அமைப்பு சார்பில் மாலை, சால்வை அணிவித்து மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்கள் வென்ற சிறுவர்-சிறுமிக்கும், பயிற்சியாளர்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • ஹிரோஷிஹா கராத்தே ‘சாம்பியன் ஷிப்’ -2022 போட்டி நடைபெற்றது.
    • போட்டிக்கான ஏற்பாடுகளை வாரியர்ஸ் கராத்தே அகாடமி ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள 'நிப்ட் டீ' கல்லூரியில் திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஹிரோஷிஹா கராத்தே 'சாம்பியன் ஷிப்' -2022 போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்–சூர் கபடி சங்க பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் போட்டிகளை தொடங்கி வைத்தார். நிப்ட் டீ கல்லூரி நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் மற்றும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மேலாளர் சிவகுமார் கலந்துகொண்டனர்.

    திருப்பூர் மாவட்டததில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட 2-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஹிரோஷி ஹா கராத்தே சாம்பியன்ஷிப் 2022 ஓவர் ஆல் போட்டியில் முதல் இடத்தை காங்கயம் விவேகானந்தா அகாடமி பள்ளியும், 2-ம் இடத்தை அவினாசி நாச்சம்மாள் வித்தியாவாணி பள்ளி அணியும், 3-ம் இடத்தை திருப்பூர் ஏ.வி.பி.டிரஸ்ட் பள்ளியும் பிடித்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை வாரியர்ஸ் கராத்தே அகாடமி ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை வாரியர்ஸ் கராத்தே அகாடமி ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    ×