search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்புத்துறை"

    • பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
    • மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் சிலர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதில் பட்டாசு சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக அச்சம்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனிடையே குறுகிய சாலை வழியாக தீயணைப்பு வாகனம் நுழைய முடியாததால், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டு தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை இன்று (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை கொண்டாட கடந்த சில நாட்களாகவே அனைவரும் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்கி வைத்துக்கொண்டு தயார் நிலையில் இருந்தனர்.

    இன்று காலை முதலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிக்க தொடங்கி விட்டனர்.. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தீபாவளி பண்டிகை அன்று அனைத்து பகுதிகளிலும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு கொண்டேதான் இருக்கும்.

    இதுபோன்ற நேரங்களில் தீ விபத்து ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. ஆண்டுதோறும் சில இடங்களில் தீ விபத்து ஏற்படுவது தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே, இந்த ஆண்டு தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் முதலே பணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டு, தங்களுக்கான இடங்களில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 800 தீயணைப்பு வீரர்களும், கூடுதலாக வெளி மாவட்டங்களில் இருந்து 21 தீயணைப்பு வண்டிகளில் 300 பேரும் என 1,100 தீயணைப்பு வீரர்கள் தீபாவளி தீ விபத்தை தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் சென்னையில் முக்கியமானதாக கருதப்படும் 64 பகுதிகளில் தயார்நிலையில் உள்ளனர். அதில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 21 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் முக்கிய பஸ் நிலையம், பூங்கா, மண்டபம் போன்ற பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 5 மணி முதலே தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து அதற்கு அடுத்த நாளும் தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடிப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு வரும் 2-ந்தேதி வரையில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தை தடுக்க பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    மேலும், தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறையினர் வினியோகித்துள்ளார்கள். அதன்படி, பாதுகாப்பான முறையில் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • அரசமரம் ஏரி நீர்நிலை பகுதியில் பொதுமக்கள் குளிப்பது துணிகள் துவைப்பது மாணவர்கள் நீர்நிலை பகுதிக்கு செல்ல கூடாது
    • வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டூர்:

    ஜலகண்டாபுரத்தில் பருவமழை பெய்து வருவதால் ஜலகண்டாபுரம் ஏரியில் நங்கவள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் அரசமரம் ஏரி நீர்நிலை பகுதியில் பொதுமக்கள் குளிப்பது துணிகள் துவைப்பது மாணவர்கள் நீர்நிலை பகுதிக்கு செல்ல கூடாது என்றும் நீர்நிலையில் தவறி விழுந்தவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுவது போன்ற தத்ரூப நிகழ்ச்சிகள் நடந்தது

    நாகர்கோவில் :

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை யடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் தயாராகி வருகிறார்கள். பெரும் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று நடந்தது.

    திருப்பதி சாரம் தெப்பக் குளத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்ட னர். இதில் தெப்பக்குளத்தில் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து தத்ரூபமாக ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    குளத்தில் மூழ்கியவரை தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலமாக கட்டி கரைக்கு இழுத்து வந்து மீட்பது எப்படி? என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட வாலிபரை கரைக்கு கொண்டு வந்து ஸ்ட்ரெச்சர் மூலமாக அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வமாக பார்வையிட்டனர். இதே போல் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளிலும் குளங்களிலும் தீயணைப்பு துறையினர் இன்று பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இது குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், மழை நேரங்களில் தண்ணீர் பெருகி வெள்ளம் ஏற்பட்டால் அதிலிருந்து தங்களை தற்காத்து கொள் வது மிகவும் அவசியமாகும்.

    அதற்கு வீட்டில் தண்ணீரில் மிதக்கக்கூடிய கேன், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தால் அவற்றின் மீது தொங்கியவாறு வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றார்.

    • 7 அடி நீள கருநாகப்பாம்பு வெளியே வந்து படமெடுத்து ஆடியது.
    • அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாம்பை வீட்டைவிட்டு வெளியேற்ற போராடினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பு தெற்குதெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி(49). தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார். நேற்றுஇரவு வேலை முடித்து தனது வீட்டிற்கு வந்த முத்துலட்சுமி சமையல் அறையில் சமையல் செய்தவற்காக பாத்திரங்களை எடுத்தார்.

    அப்போது திடீரென 7 அடி நீள கருநாகப்பாம்பு வெளியே வந்து படமெடுத்து ஆடியது. இதைபார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாம்பை வீட்டைவிட்டு வெளியேற்ற போராடினர். ஆனால் நீண்டநேரமாக சமையல் அறையில் படமெடுத்து ஆடிய கருநாக பாம்பு சுமார் அரைமணிநேரத்திற்கு பின்பு அங்கிருந்து வெளியேறியது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் பாம்பு வெளியேறிச்சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்தனர்.
    • பொள்ளாச்சி ரோடு, பூ கடைக்கார்னர்,தினசரி மார்க்கெட், தாலுகா ஆபீஸ்ரோடு மற்றும் உடுமலை ரவுண்டானா பகுதிகளில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

     தாராபுரம்:

    தாராபுரம் தீயணைப்பு துறை நிலை அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்புத்துறை ஊழியர்கள் தீபாவளி பண்டிகை குறித்து விபத்தில்லா பட்டாசை பயன்படுத்த வேண்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தாராபுரம் கடைவீதி பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கி கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்தனர்.

    அப்போது பொள்ளாச்சி ரோடு, பூ கடைக்கார்னர், தினசரி மார்க்கெட், தாலுகா ஆபீஸ் ரோடு மற்றும் உடுமலை ரவுண்டானா பகுதிகளில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. துண்டு பிரசுரத்தில் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் தன் குழந்தைகளை தங்கள் கண்முன்னே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வாளிகளில் நிறைய தண்ணீர் மற்றும் மணல் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட ஊதுபத்தி உபயோகத்தில் பக்கவாட்டில் பட்டாசு கொளுத்துவது நல்லது. அவ்வாறு கொழுத்தும்போது முகத்தை திருப்பியவாறு கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு நெறிமுறைகள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது. 

    • குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.ஒன்றிய க்குழு உறுப்பினர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில்பேரிடர் மாவட்ட பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் திருமறை செல்வன் நன்றி கூறினார்.

    ×