என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மறுசீரமைப்பு"
- 3-வது மிகப்பெரிய ரெயில் முனையமாக தாம்பரம் ரெயில் நிலையம் உள்ளது.
- தாம்பரம் ரெயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.
சென்னை:
சென்னையின் 3-வது மிகப்பெரிய ரெயில் முனையமாக தாம்பரம் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு தினமும் 2 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனால், எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு அடுத்த படியாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் ரெயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படத் தொடங்கி உள்ளன. இனி சென்னைக்கு புதிதாக அறிவிக்கப்படும் எந்த ரெயிலாக இருந்தாலும் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்று தெரிகிறது.
அந்த அளவிற்கு தாம்பரம் ரெயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.
ஆனால் சென்ட்ரல், எழும்பூர் போல தாம்பரம் ரெயில் நிலையத்தில் மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த நிலையில், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.1000 கோடி செலவில் உலகத் தரத்தில் மறுசீரமைக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதன்மூலம், இந்த ரெயில் நிலையத்தில் கழிவ றைகள், டிஜிட்டல் பல கைகள், எஸ்க லேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள், வேளச்சேரி சாலை, ஜி.எஸ்.டி. சாலை என இருபக்கமும் பிர மாண்ட முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், நடைமேடைகள் அனைத்தும் உலக தரத்தில் சீரமைக்கப்பட உள்ளது.
தாம்பரம் ரெயில் நிலையத்தின் உள்நுழைவு, வெளியேறும் பகுதி, ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி, வேளச்சேரி சாலையில் ரெயில் நிலையத்தின் வெளியேறும் பகுதி, உள்ளே வரும் பகுதி என எல்லாமே மிக அகலமாக மாறுகிறது.
மேலும் பசுமை பூங்காக்களும் அமைக்கப்பட உள்ளது. ரெயில் நிலையத்தில் 6 அடுக்கு கட்டிடங்களும் கட்டப்பட உள்ளன. மேலும் பன்னடுக்கு வாகன நிறுத்தும் வசதியும் அமைக்கப்படுகிறது.
இந்த திட்டம் 5 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் தொடங்கப்பட உள்ளது.
- 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
சென்னை:
மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு பாராளு மன்ற தேர்தல் முடிந்ததும், புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அப்போது தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026-ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
அப்போது உத்தரபிரதேசத்துக்கு 11 பாராளுமன்ற தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் 8 பாராளுமன்ற தொகுதிகள் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் தற்போது இருக்கும் தமிழக எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 31 பாராளுமன்ற தொகுதிகளாக மாறலாம். 42 தொகுதிகள் உள்ள ஆந்திரா, தெலுங்கானாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறையலாம்.
இதேபோல் கேரளாவிலும் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 20-ல் இருந்து 12ஆக குறையலாம். கர்நாடகாவில் பாராளுமன்ற தொகுதிகள் 28-ல் இருந்து 26 ஆக குறையலாம்.
தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கமே, ஒவ்வொரு தொகுதியிலும், ஓரளவு சமமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வது தான். அப்போதுதான் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும்.
தொகுதி மறுவரையால் உ.பி.க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்துக்கு 4 தொகுதிகளும், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் அதிகரிக்கலாம்.
தொகுதி வாக்காளர்கள் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் தற்போது ஒரு எம்.பி. 30 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். ஆனால் தமிழகத்தில் ஒரு எம்.பி. 18 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். தொகுதி மறுவரையறைக்கு மத்திய அரசு கடந்த 1976-ம் ஆண்டு தடைவிதித்தது. இந்த தடை தற்போது 2026-ம் ஆண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடை காரணமாக பாராளுமன்றத்தில் சம நிலையற்ற பிரதிநிதித்துவம் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தகுதியான கட்டிட கலைஞர், சிவில் என்ஜினீயரை கொண்ட நிறுவனங்கள் பங்கேற்கலாம்
- சென்னையில் 10 ஏரிகளை ரூ.100 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்வதற்கான வடிவமைப்பு போட்டியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது.
சென்னை:
மழை நீரை சேகரித்து குடிநீர் ஆதாரத்தை உருவாக்கி தருவதோடு, நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவதில் ஏரிகளும், குளங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் சென்னையில் ஏரிகளில் வீடுகள் கட்டுவதும், குப்பைகள் கொட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் சென்னையில் ஏரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 20 ஏரிகள் உள்ளன. இவற்றில் பல ஏரிகள் ஆக்கிர மிக்கப்பட்டிருப்பதோடு குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளன. இதனால் ஏரிகளின் பரப்பளவு சுருங்கி வருவதோடு சென்னையில் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
சென்னை நகரின் குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையில் சென்னையில் ஆக்கிரமிப்புகள் போக எஞ்சியுள்ள ஏரிகளையாவது முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சென்னையில் 10 ஏரிகள் ரூ.100 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான 'லேக் பிரண்ட் ரீ கனெக்ட்' எனப்படும் ஏரி வடிவமைப்பு போட்டியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல், கொளத்தூர் ஆகிய ஏரிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இந்த ஏரி கள் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், பராமரிப்பு இல்லாததாலும் அதன் கட்டமைப்பை இழந்துவிட்டன.
எனவே இந்த ஏரிகளும், அதன் முகப்பு பகுதிகளும் சீரமைக்கப்படுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒரு தகுதி வாய்ந்த கட்டிட கலைஞர், இயற்கை சார்ந்த கட்டிட கலைஞர், சிவில் என்ஜினீயர் ஆகியோரை கொண்டிருப்பதுடன் மற்ற துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு ஏரிக்கான வடிவமைப்புகளை உருவாக்கி வருகிற ஏப்ரல் 17-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின் முடிவுகள் வெளியான பிறகு திட்டங்களுக்கான டெண்டர் வருகிற ஜூன் மாதம் இறுதி செய்யப்படும்.
இந்த ஏரிகள் அனைத்திற்கும் பொதுவாக இருக்க வேண்டிய சில அம்சங்களில் திறந்த வெளிகளும் அடங்கும். தற்போதைய ஏரியின் தன்மை, நிலத்தின் அளவு, சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்றதா என ஆய்வு செய்யப்படும். ஏரி அமைப்பு, முகப்பு தோற்றம், பறவைகளுக்கான வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் ஆகிய அனைத்தும் இதன் கட்டமைப்புகளில் ஒரு பகுதியாக இருக்கலாம்.
நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் இடம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், ஏரியின் எல்லை மேம்பாடு, தூய்மையான கரை பகுதிகள், தோட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், வாகன நிறுத்தும் வசதிகள், ஆம்பி தியேட்டர்கள், உணவகம், நீர் விளையாட்டுகள், மீன்பிடிதளம், விளையாட்டு பகுதி பொது வசதி, படகு சவாரி போன்ற வடிவமைப்புகளும் இடம் பெற வேண்டும். இந்த ஏரிகள் பொழுதுபோக்கு மற்றும் பொருளாதார சேவைகளுக்கான வாய்ப்பையும் கொண்டிருக்க வேண்டும்.
இந்த ஏரிகளில் தண்ணீ ரை சேமித்து வைப்பதன் மூலம் சென்னையின் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். மேலும் கோடை காலத்தில் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.
இந்த போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஏரியின் தனித்துவமான இடம் மற்றும் இயற்கை அம்சங்களை கருத்தில் கொண்டு வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
- தொய்வின்றி பணிகள் நடைபெற ஆவண செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை
கன்னியாகுமரி:
தமிழக காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது :-
தேங்காப்பட்ட ணம் துறைமுக கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்ய சட்டமன்றத்தி லும், தொடர்ந்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்தும், மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியதன் அடிப்படையில் துறைமுக கட்டமைப்பை சீரமைக்க மூன்று கட்டங்களாக ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏற்கனவே அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு பக்கமுள்ள பிரதான அலைத்தடுப்பு சுவரை 200 மீட்டர் நீட்டிப்பு செய்யவும், சேதமடைந்துள்ள முகப்பு பகுதியை சீரமைக்கவும் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.77 கோடி நிதி ஒதுக்கி அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு பிப்ரவரியில் – தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.60 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
2021 அக்டோபரில் நடைபெற்ற 11 –வது மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில், மத்திய நீர் ஆற்றல் ஆராய்ச்சி நிலையத்தால் அளிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை யின்படி துறைமுக வடிவமைப்பு மற்றும் அலை அமைதிக்கான கணிதவியல் ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிரதான அலை தடுப்பு சுவரை 633 மீட்டர் நீட்டிப்பு செய்ய வேண்டும் என பரிந்து ரைக்கப்பட்டது.அதன் மதிப்பீடு ரூ.193 கோடி என தெரி விக்கப்பட்டது.
அதன்பிறகு நடைபெற்ற 13-வது மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் துறைமுக கட்டமைப்பை மறு சீரமைக்க 60 கோடி மற்றும் 193 கோடி என மொத்தம் 253 கோடிக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் மீன்பிடி துறைமுக கட்டமைப்பை மறு சீரமைக்க தற்போது தமிழக அரசால் கடந்த 13-ந் தேதி ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போர்க்கால அடிப்படையில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணி ஆணை வழங்கி தொய்வின்றி பணிகள் நடைபெற ஆவண செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
அரசாணை பிறப் பித்ததற்காக தமிழக முதல்வர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆகியோருக்கும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- ஜூலை 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது.
- பள்ளியில் பயின்ற 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13-ந் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி ஜூலை 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வளாகங்கள் முழுவதும் சேதமடைந்தது 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களும், காவல்துறை வாகனங்களும், தீயில் கருகி சாம்பலாகி போனது. பள்ளியில் உள்ள அலுவலகம் வகுப்பறைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு சேதம் அடைந்தது. பிறகு போராட்டக்காரர்களை விரட்டி அடித்து பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. பின்னர் இந்த வழக்கு சி பி சி ஐ டி மாற்றப்பட்டது.
பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை தனிப்படை அமைத்து 350 -க்கும் மேற்பட்டவர்களை இதுவரை கைது செய்துள்ளனர். இந்த கலவரத்தால் பள்ளியில் பயின்ற 2000 -க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது மாணவர்களின் பெற்றோர் தரப்பில் பள்ளியை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் பத்து நாட்களுக்குள் சக்தி மெட்ரிக் பள்ளியை சீரமைத்து திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிப்பிரிவு அதிகாரியை நியமனம் செய்து அவர் தலைமையில் பள்ளியை 45 நாட்களுக்குள் சீர் அமைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் 68 நாட்களுக்குப் பிறகு பள்ளி சீரமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதலே சீரமைக்கும் பணி தொடங்கியது பள்ளி கட்டிடங்கள், சேதம் அடைந்த பேருந்துகள், சேதமடைந்த மரங்கள், பள்ளியில் உள்ள சேதமடைந்த பொருள்கள், என அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- மறுசீரமைக்கப்பட்ட வாக்குசாவடிகளின் பட்டியலை ராமநாதபுரம் கலெக்டர் வெளியிட்டார்.
- வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மறு சீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் பட்டியலை வெளியிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் 303 வாக்குச் வாக்குச்சாவடிகளும், திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச் வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 336 வாக்குச் வாக்குச்சாவடிகளும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 385 வாக்குச் வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1370 வாக்குச்சாவடிகள் உள்ளன.
நேற்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரிக்கவும், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.
மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரப்பெறும் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய முறையில் பரிசீலனை செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் சேக்மன்சூர், வட்டாட்சியர்கள் கார்த்திகேயன் (தேர்தல்), முருகேசன (ராமநாதபுரம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.
- திருப்பூர் மாவட்டத்தில் 908 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 260 நடுநிலைப்பள்ளிகளில் கடந்த வாரம் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழுக்கள் செயல்பாட்டை துவக்கியுள்ளன.
திருப்பூர் :
கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி அனைத்து குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் செயல்பாடின்றி உள்ளது.உள்கட்டமைப்பு வசதி உட்பட எல்லா வகையிலும் அரசு பள்ளிகளை தன்னிறைவு பெறச்செய்ய தமிழகம் முழுவதும்அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 908 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,260 நடுநிலைப்பள்ளிகளில் கடந்த வாரம் மறு சீரமைப்பு செய்யப்பட்டமேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டை துவக்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் 89 அரசு, நகராட்சி உயர் நிலைப்பள்ளிகள், 76 உயர் நிலைப்பள்ளிகள் எனமொத்தம் 165 பள்ளிகளில் மேலாண்மை குழு பிரதிநிதிகள் பதவியேற்றனர்.இதனால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,333 அரசு, நகராட்சி பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழுக்கள் செயல்பாட்டை துவக்கியுள்ளன.
அவ்வகையில் திருப்பூர் பழனியம்மாள் பள்ளியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழு கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமைவகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக ராஜேஸ்வரி, துணை தலைவராக விமலா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி பிரதிநிதி, பெற்றோர் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஞ்சப்பா, கே.எஸ்.சி., ஜெய்வாபாய் பள்ளிகளிலும், மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாரம் ஒருமுறையாவது பள்ளியை பார்வையிட வேண்டும். மாதம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். பள்ளியின் தற்போதைய நிலை, தேவையான வசதிகள் குறித்து ஆலோசிக்கவேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசு, தன்னார்வலர்கள், தங்களது சுய பங்களிப்பு மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்