என் மலர்
நீங்கள் தேடியது "அன்னாபிஷேகம்"
- சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பக்தர்களுக்கு இந்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பெரியபாளையம் அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அனைத்து உயிரினங்களுக்கும் சிவ பெருமான் உணவு அளித்து காப்பதற்கு அடையாளமாக அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அகத்தீஸ்வரர் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளாக அன்னாபிஷேகம் நடை பெறாமல் இருந்தது. எனவே அன்னாபிஷேக விழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி நேற்று சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூலவர் காய்கறிகள் மற்றும் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இரவு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு இந்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன் உள் ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
20 ஆண்டுக்கு பிறகு அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் நடந்தது
- கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமிஅன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமியான இன்று குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி இன்று காலையில் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து தீபாராதனையும்நடந்தது.பின்னர்எண்ணை, பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம்மற்றும் புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன்பின்னர் மூலவரான குகநாதீஸ்வர ருக்கு100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னத்தால் அன்னாபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
- ராஜபாளையம் கருப்பஞானியார் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.
- 25 கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் சாலியர்களுக்கு பாத்தியப்பட்ட கருப்பஞானியார் சுவாமி கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
கருப்பஞானியார் மற்றும் பொன்னப்பஞானியார் சுவாமிகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் 20 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கருப்பஞானியார் சுவாமிக்கு 15 கிலோ எடையிலான காய்கறிகள் மற்றும் பழங்களில் அலங்காரமும், பொன்னப்பஞானியார் சுவாமிக்கு 25 கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.
அலங்காரம் செய்த பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 8 மணிக்கு மேல் சுவாமிகள் மீது சாத்தப்பட்ட சாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பூஜைக்கு பின்னர் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் வைத்தீஸ்வரன், தர்மகர்த்தா ஞானகுரு செய்திருந்தனர்.
- மதுரையில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.
மதுரை
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று மற்றும் இன்று அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. மதுரை நகரில் உள்ள பெரு ம்பாலான கோவில்களில் இன்று காலை அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு நன்மை தருவாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 110 படி சாதம் தயாரிக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் களைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சாதத்தால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதே போல் நகரில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான சிவன் கோவில்களில் இன்று காலையிலேயே அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.
- செப்பரை அழகிய கூத்தர் கோவிலில் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
- மூலவருக்கு16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
நெல்லை:
பாளை ராஜவள்ளிபுரம் செப்பரை அழகிய கூத்தர் கோவிலில் நேற்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக மூலவருக்கு மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தயிா், தேன், பஞ்சாமிருதம், இளநீா், பன்னீா், வீபூதி மற்றும் சந்தனம் போன்ற 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடா்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்று காய்கனி, அன்ன அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிறைவாக நட்சத்திர ஆரத்தி, கும்பஆரத்தி மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
பின்னா் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை கொடை பிடிக்க மேளதாளங்களுடன் தாமிரபரணி நதிக்கரைக்கு எடுத்துச் சென்றனா். அங்கு நதிக்கு அா்ச்சனை அபிஷேகங்கள் செய்து கொண்டுவந்த அன்னத்தை நீாில் சமா்பித்தனா். மீண்டும் கோவிலுக்கு வந்து அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அழகிய கூத்தருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஆண்டுதோறும் தமிழ் மாதத்தில் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமியில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். வருடத்தின் ஒரு முறை இந்த வழிபாட்டை செய்வதின் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சி னைகளிலும் விடுபடலாம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
அன்னத்தால் சாமிக்கு நடைபெறும் அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து அன்னாபிஷேகமும் நடந்தது. அன்னாபி ஷேகத்தில் கவீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை சோமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஆவல்நத்தம் காசிஸ்வர பசவேஸ்வர சிவகுமார சாமி கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது.
கிருஷ்ணகிரி போலீஸ் குடியிருப்பில் உள்ள முத்து விநாயகர் துர்க்கையம்மன் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஸ்ரீநகரேஸ்வர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.
- அன்னாபிஷேகத்திற்கு வைக்கப்பட உணவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது
காவேரிப்பட்டணம்.
காவேரிபட்டினம் தென்பெண்ணை ஆற்றில் ஓரம் அமைந்துள்ள ஆரிய வைசிய சமூகத்தினரின் ஸ்ரீ நகரேஸ்வரர் ஆலயத்தில் பாலாஜி ஜூவல்லரி அறங்காவலர் ரமேஷ் குடும்பத்தினர் சார்பில் ஸ்ரீநகரேஸ்வர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல் காவேரிபட்டி னம் சக்தி விநாயகர் ஆலயம் அருகில் உள்ள விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது
கோட்டை ஜல கண்டேஸ்வ ரர் கோவிலில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
பன்னீர்செல்வம் தெருவில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது , அனைத்து கோவில்களிலும் ஈஸ்வரனை சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகத்திற்கு வைக்கப்பட உணவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
- ஆதி அண்ணாமலையார் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி சிவபெரு மானுக்கு அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
- அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கூடலூர்:
கூடலூர் அருகே சுருளி அருவி பகுதியில் ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ளது, இந்த கோவிலில் பவுர்ணமியை ஒட்டி நேற்று சிவபெரு மானுக்கு அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக மூலவருக்கு தண்ணீர், பசும்பால், இளநீர், அருகம்புல் சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடை பெற்றது. பின்னர் சிவபெருமான், நந்தி சிலை மீது சாதத்தை பக்தர்கள் அன்னாபிஷேகம் செய்தனர்.அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் சுருளி அருகில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.
இதை அடுத்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சியில் கூடலூர், கம்பம், உத்தம பாளையம், சின்னமனூர், சுருளிப்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிவபெருமானுக்கு அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேக விழா நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் அருகே உள்ள மடவளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோவில்களில் வருடாந்திர ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவபெருமானுக்கு அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவில் கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்தை சேர்ந்த தோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய கோவிலின் குலத்தவர்களும், பக்தர்களும் மடவளாகம், பாப்பினி, பச்சாபாளையம், காங்கயம் உள்பட சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும், பக்தர்களும் திரளாக கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக தலைவர் எஸ்.தங்கமுத்து, அன்னதான கமிட்டி நிர்வாகி பாலசுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர். இக்கோவில்களின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- லஷ்மி வராஹருக்கு 1008 கலசாபிஷேகம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வாலாஜா:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி மூன்று நாட்கள் மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் தொடங்கி நடைபெற்று வந்தது.
அதன்படி நேற்று முன்தினம் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு வேறு எங்குமே இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக ஓளஷத பிரசாதமாக வழங்கப்பட்டது.முன்னதாக கோ பூஜை மற்றும் கணபதி பூஜையுடன் ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம் நடத்தப்பட்டு ஸ்ரீ லஷ்மி வராஹருக்கு சிறப்பு பூஜைகளுடன் 1008 கலசங்களில் நிரப்பபட்டிருந்த புனித நீர் மூலம் கலசாபிஷேகமும் நடைபெற்றது.
அபிஷேக பூஜைகளின் அபிஷேக தீர்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் இலவச ஔஷத பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம், கலசாபிஷேகம், மூலவர்ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் அன்னாபிஷேகம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.
கடந்த 26-ம்தேதி முதல் இன்று 28-ம்தேதி முடிய ஸ்ரீ கார்த்தவீர்யார் ஜூனருக்கு கைவிட்ட சொத்துக்கள், களவு போன பொருள்கள், இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கவும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், தொலைந்த பொருள்கள் திரும்ப கிடைக்கவும் வேண்டி லட்ச ஜப மஹா யாகம் நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
- காலை முதல் மாலை வரை பக்தி சொற்பொழிவுகள் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீதனையும் நடக்கிறது. பின்னர் 8.30 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீதனையும், விளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை முதல் மாலை வரை பக்தி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள்.
- சிவபெருமானை அலங்கரிக்கும் அன்னாபிஷேக சோறை கண்டாலே சொர்க்கம்தான்.
நிரஞ்சனா சிவலிங்கத்திற்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு இந்த பிறவியில் எண்ணற்ற புண்ணியங்கள் சேர்ந்து, தடைகள் விலகி சிறப்பு பெறுவர்.
இந்த பிறவியில் மட்டும் அல்லாமல் இனி வரும் பிறவிகளிலும் மாபெரும் இராஜயோக அந்தஸ்தை பெறுவார்கள் – சொர்க்கம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மற்றவர்களின் பசியை போக்க இறைவன் மறைமுகமாக நமக்கு அன்னதானத்தின் மகிமையை உணர்த்துகிறார். அத்துடன் என்றென்றும் நமக்கு உணவு வழங்கிடும் சிவபெருமானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அரிசி சாதத்தை படைத்து, அந்த அரிசி சாதத்தின் நிறமான வெண்மையை போல், இறைவன் மீது நாம் வைத்திருக்கும் பக்தியும், அன்பும் தூய்மையானது என்பதையும் அன்னாபிஷேகத்தின் மூலமாக இறைவனுக்கு தெரிவிக்கிறோம்.
ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள். சிவபெருமானுக்கு அன்னாபிஷேகத்தில் நாம் சமர்பிக்கும் அரிசி சாதத்தில் நமது பெயரும் இணைந்திருப்பதால், அந்த அபிஷேக அன்னத்தை சாப்பிடும் நமக்கு கோடி புண்ணியங்கள் சேருகிறது. சொர்க்கம்போல அந்தஸ்தான வாழ்க்கை நமது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும். அதனால்தான் சொல்வார்கள், "சோறு கண்ட இடம் சொர்கம்" என்று. அதாவது, சிவபெருமானை அலங்கரிக்கும் அன்னாபிஷேக சோறை கண்டாலே சொர்க்கம்தான்." அத்துடன் அந்த அன்னத்தை பிரசாதமாக சாப்பிடுவதற்கு நாம் எத்தனையோ பாக்கியம் செய்திருக்க வேண்டும். வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவர்களும், சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம். சிவனுக்கு அன்னபிஷேகம் செய்யும் நாளன்று, சிவலாயத்திற்கு சென்று, சிவபெருமானுக்கு செய்யப்படுகிற அன்னாபிஷேகத்தை கண் குளிர தரிசித்து ஈசனின் அருளை பெற்றிடுவோம்.
"வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய் யானும்
அதுவே வேண்டின் அல்லால் வேண்டும்
பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே"