என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவல் துறை"
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
சென்னை:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 129 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை மற்றும் விரல்ரேகைப் பிரிவு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக்காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல்படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும் மற்றும் விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணிபரிந்து வரும் எஸ்.மந்திரமூர்த்தி, முன்னணி தீ அணைப்போர் 7807 மற்றும் ராமச்சந்திரன், தீ அணைப்போர் 8229 ஆகிய இருவரும் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி இரவு தாமிரபரணி ஆற்றின் கரையில் வெள்ளம் புகுந்த கிராமங்களில் இருந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், மற்றும் மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இருவருக்கும் "தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்" வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
- எவ்வளவு தேடியும் அவரால் தனது மொபைல் போனை கண்டறிய முடியவில்லை.
- புகார் கொடுத்த குமாரை அதிரச் செய்யும் வகையில் பதில் அளித்தார்.
உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 91 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கனௌர். பாஹதுர்கார் காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் இந்த கிராமத்தை சேர்ந்தவர் குமார். கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்கச் சென்ற இடத்தில் தனது மொபைல் போனை குமார் தவறவிட்டுள்ளார். எவ்வளவு தேடியும் அவரால் தனது மொபைல் போனை கண்டறிய முடியவில்லை.
இதன் காரணமாக காவல் நிலையம் விரைந்த குமார் தனது மொபைல்போன் காணாமல் போனதை கூறி, அதனை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார். மொபைல் போனை பறிக்கொடுத்த குமார் மனவேதனையில் கூறிய புகாரை முழுமையாக கேட்டுக் கொண்ட போலீஸ் அதிகாரி, இறுதியில் புகார் கொடுக்க குமாரை அதிரச் செய்யும் வகையில் பதில் அளித்தார்.
மொபைல் பறிக்கொடுத்த குமாரிடம் அதனை சீக்கிரம் கண்டுபிடிக்கலாம் என்று கூறுவதற்கு பதில் போலீஸ் அதிகாரி- முதலில் கடைக்குச் சென்று சூடான பாதுஷா அல்லது ஜிலேபி ஆகியவற்றில் ஒரு கிலோ வாங்கி வருமாறு கூறினார். இனிப்பு வாங்காமல் போலீசார் புகாரை பதிய மாட்டார்கள் என்று உணர்ந்தவராக மொபைலை பறிக்கொடுத்த குமார் இனிப்பு கடைக்கு சென்று ஜிலேபி வாங்கி வந்தார்.
குமார் வாங்கி வந்த ஜிலேபியை பெற்றுக் கொண்ட போலீசார், அதன்பிறகு மொபைல் போன் காணாமல் போனதை பதிவு செய்து கொண்டனர். முன்னதாக இதே மாதத்தில் காவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது உருளைக் கிழங்குகளை லஞ்சமாக பெற்றதற்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
- அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.
- இரு தரப்பு பிரதிநிதிகளை கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
போக்குவரத்து கழக தொழிலாளர்கள், போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், " இருதரப்பு அலுவலர்கள், தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
தமிழகம் முழுவதும் காவல் துறையினர் திட்டமிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.
காவல் துறை முழுவதுமாக ஒன்றிணைந்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் விதி மீறல்களை தடுப்பதாக தொடங்கி இருப்பது நல்ல அறிகுறி அல்ல" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் (Racing)-ஈடுபட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நபர்கள் சென்ற மாதம் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரக்கூடிய பண்டிகை நாட்களை பாதுகாப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்திட பெதுமக்கள் அனைவரையும் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- கொலை செய்த இளைஞர் இயல்பாக காணப்பட்டார்.
- கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது.
டெல்லியின் வெல்கம் ஜந்தா மஸ்தூர் காலனியில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்த 17 வயது இளைஞர் கொடூரமாக தாக்கி அவரை கத்தியால் குத்தி கொன்றார். 55 முறை கத்தியால் குத்து வாங்கிய நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவரிடம் இருந்து 350 ரூபாயை எடுத்துக் கொண்ட இளைஞர், அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை நோக்கி நடன அசைவுகளை செய்துகாட்டி, அங்கிருந்தவர்களையும் மிரட்டினார். இவரின் செயல்கள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
மேலும் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை கொண்டு கொலை செய்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது கொலை செய்த இளைஞர் இயல்பாக காணப்பட்டதோடு, இரவு உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.
"கைது செய்யும் போது நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்த இளைஞன் தான் செய்த தவறை எண்ணி வருத்தம் கொள்ளாமல், பதட்டமின்றி காணப்பட்டான். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையிலேயே அந்த இளைஞனை பிடித்துவிட்டோம். மேலும் நாங்கள் அவனை பிடிக்கும்போது, இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்," என்று வடகிழக்கு பகுதிக்கான துணை காவல் ஆணையாளர் ஜாய் டிர்கி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் தான் கொலை செய்த நபர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பிரியாணி சாப்பிட பணம் இல்லாததால் கொலை செய்தேன் என்று தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
- புகார் கொடுக்க வரும் மனுதாரர்களுக்கு வழிகாட்ட வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், எளியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை நாடக்கூடிய அரசாகும். காவல் நிலையத்தை நாடி வரும் சாமானியர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்."
"ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களுக்கு வழிகாட்ட வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வரவேற்பாளர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். அவர்களை மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கை ஏற்படும்," என்று தெரிவித்தார்.
- மின் ஊழியருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- போலீசார் மின் ஊழியர் உமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தின் ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில், பாப்பையா என்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சாலைப் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த உமா என்கிற மின் ஊழியரை காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், போக்குவரத்து விதியை மீறியதால் மின் ஊழியருக்கு ரூ.135 அபராதம் விதித்துள்ளார்.
இதனால், மின் ஊழியருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அபராதம் விதித்த ஆத்திரத்தில் நேராக அருகில் இருந்த காவல் உதவி மையத்தின் மின்கம்பத்தில் ஏறிய மின் ஊழியர் உமா மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் ஊழியரின் இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை சரி செய்தனர்.
இதைதொடரந்து, போலீசார் மின் ஊழியர் உமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு கிலோவுக்கு கீழாக கஞ்சா வைத்திருப்பவர்கள் உடனடி ஜாமீனில் தப்பிக்க சட்டம் வழிவகை செயதுள்ளது.
- கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி:
மது குடிக்கும் பழக்கத்தால் ஒருபுறம் இளைய தலைமுறை தள்ளாடி கொண்டிருக்க கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளால் மாணவர் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் திருச்சி மாநகரில் தினமும் ஓரிரு கஞ்சா வழக்குகள் மட்டுமே பதியப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கும் கும்பல் அதிகம் பிடிபடுகிறது.
ஆனால் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்யும் புள்ளிகள் எளிதில் தப்பி விடுகிறார்கள்.
சமீபத்தில் திருச்சி மாநகரில் கஞ்சா வழக்கில் திருச்சி ராம்ஜி நகர் புது காலனி பகுதியைச் சேர்ந்த முழுமதி என்ற 60 வயது மூதாட்டி பிடிபட்டார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதேபோன்று 110 கிராம் கஞ்சாவுடன் சுசிலா என்ற 43 வயது பெண்மணியும் போலீஸ் பிடியில் சிக்கினார்.
இருவரும் குறைந்த அளவு கஞ்சா வைத்திருந்ததாக உடனடி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பொன்மலைப்பட்டி கீழ உடையார் தெருவை சேர்ந்த பிராங்கிளின் ஜோசப் 28 என்ற இளைஞர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் சிக்கினார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இவ்வாறு கஞ்சா விற்பனையில் பிடிபடும் நபர்களில் வெகு சிலரே ஜெயிலுக்கு செல்கிறார்கள். ஒரு கிலோவுக்கு கீழாக கஞ்சா வைத்திருப்பவர்கள் உடனடி ஜாமீனில் தப்பிக்க சட்டம் வழிவகை செயதுள்ளது. . இதனால் அவர்கள் மறுபடியும் களத்துக்கு வந்து விடுகிறார்கள்.
இவ்வாறு கஞ்சா விற்பனையில் பிடிபடும் பெரும்பாலானவர்கள் திருச்சி ராம்ஜி நகர் பகுதியை மையமாக கொண்டு வசிப்பவர்களாக இருக்கின்றனர்.
திருச்சி மாநகரில் பல இடங்களில் கணவன் மனைவி, குழந்தை குட்டிகள் என குடும்ப தொழிலாக, கூட்டுத் தொழிலாக செய்கின்றனர். இந்த கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையில் கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள.
செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினால் வாடிக்கையாளரை தேடிச் சென்று கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சப்ளை செய்யப்படுகிறது. இதற்கு போலீசார் கடிவாளம் போட்டுவிட்டதால் கஞ்சா விற்பனை ஏஜெண்டுகள் புதிய யுக்திகளை கையாள தொடங்கியுள்ளனர்.
காந்தி மார்க்கெட் போன்ற தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் சாதாரண இட்லி கடைகள், தள்ளுவண்டியில் பழம்விற்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் கஞ்சா பொட்டலங்கள் சப்ளை செய்து அவர்கள் மூலமாக விற்பனை ஜோராக நடத்தும் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன.
திருச்சி மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரை 118 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசம் இருந்து 51.9 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் 3 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கஞ்சா வேட்டை தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்ய பிரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது;-
திருச்சி மாநகருக்கு பெங்களூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுகிறது. பஸ்கள் மற்றும் கார்களில் கடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக 32 இடங்களை ஹாட் ஸ்பாட் ஆக அடையாளம் கண்டு 24 மணி நேரமும் ரோந்து போலீசார், ஹைவே பேட்ரோல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் திருச்சி மாநகரில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு கிளப்புகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் மட்டும் 755 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் 29 பேருக்கு சரித்திர பதிவேடு திறக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 4 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆன்ட்டி டிரக்ஸ் கிளப்புகளில் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், போதை மீட்புமைய பணியாளர்கள், மனநல மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதில் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பவர்கள் மீட்கப்படுகிறார்கள். தொடக்க நிலையில் இருப்பவர்கள் அடிமை ஆவதற்கு முன்பாக அந்த மாய வலையில் இருந்து மீட்கப்படுகிறார்கள்.
மாநகரப் பொருத்தமட்டில் குடிசை பகுதிகள் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில் அதிகம் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கஞ்சா கிடைக்காத பட்சத்தில் ஒரு சில இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் வழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இது மிகவும் அபாயகரமானது. இதனை விற்பனை செய்யும் நபர்கள் மருந்து கடைகளுக்கு சென்று வலி மாத்திரைகளை வாங்கி அதை பொடியாக்கி வேறு சில போதை வஸ்துக்களை கலந்து ஊசியாக விற்பனை செய்கிறார்கள்.
இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் மருந்து கடை விற்பனையாளர்கள் தரப்பிலும் சிலரை பங்கேற்க வைத்தோம். மருத்துவர்களின் குறிப்பு இல்லாமல் போதை அளிக்கும் மருந்துகளை மாத்திரைகளை விற்பனை செய்தால் உரிமத்தை ரத்து செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும் கஞ்சா விற்பனையில் அதிகம் ஈடுபடும் பகுதியில் மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை செய்யவும் கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் பெரும்பாலும் மதுவுடன் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் நிதானம் இழந்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பல கொடூரங்களை அரங்கேற்றுகிறார்கள். ஆகவே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
- போதைப்பொருள்லிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.காங்கயம்- தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்தும், போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கயம் போலீசார், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- 16 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் உள்ளன.
- முன்பணமாக ரூ.1,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 33 வாகனங்களுக்கான பொது ஏலம் ஜூன் 19 -ந் தேதி நடைபெறுகிறது. இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 33 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம், திருப்பூா் நல்லிக்கவுண்டன் நகரில் (திருநகா்) உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஜூன் 19 ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் நுழைவுக்கட்டணம் ரூ.100 மற்றும் முன்பணமாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஜூன் 18 ந் தேதி மாலை 5 மணி வரை பதிவுசெய்து ரசீது பெற்றுகொள்ளலாம்.
ஏலம் எடுத்தவுடன் அதற்குண்டான முழுத்தொகை மற்றும் ஜிஎஸ்டி வரி இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் ரொக்கமாக செலுத்த வேண்டும். மேலும் ஏல ரசீது எந்தப் பெயரில் பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் பங்கேற்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தை 95668 88041, 86374 94589 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பரோலில் சென்ற கைதிகளை கைது செய்யும்படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
- 23 பேர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரும்பி வந்துள்ளனர்.
2021-ம் ஆண்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவியபோது, உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹார்பூர் மாவட்டத்தில் உள்ள சிறையில் நெரிசலைக் குறைக்க உயர்மட்டக் குழுவின் உத்தரவின் பேரில் சிறிய குற்றங்களுக்காக அடைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் வயதான கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பரோலில் சென்ற 16 கைதிகள் திரும்ப சிறைக்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், பரோலில் சென்ற கைதிகளை கைது செய்யும்படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் மிஜாஜி லால் கூறியதாவது:-
சிறையில் கைதிகள் 39 பேர் பரோலில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த மே மாதம் திரும்பி இருக்க வேண்டும். இதில் 23 பேர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரும்பி வந்துள்ளனர். இருப்பினும் 16 கைதிகள் இன்னும் சிறை திரும்பவில்லை. அவர்களது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டுள்ளோம். ஆனாலும் இன்னும் சிறை திரும்பவில்லை. அதனால், 16 பேரையும் கைது செய்ய காவல் நிலையங்களுக்கும் காவல் கண்காணப்பாள்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்