என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறுப்பேற்பு"

    • சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக டாக்டர்.மணி பணி மாற்றம் செய்யப்பட்டார்.
    • பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக டாக்டர்.வள்ளி சத்தியமூர்த்தி முதல்வராக நியமிக்ககப்பட்டார்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையின் டீன் மற்றும் முதல்வராக டாக்டர் மணி பணியாற்றி வந்தார். அவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் வள்ளி சத்திய மூர்த்தி முதல்வராக நியமிக்ககப்பட்டார்.

    இதை தொடர்ந்து அவர் மருத்துவ கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

    முதல்வராக பொறு ப்பேற்ற டாக்டர் வள்ளி சத்தியமூர்த்திக்கு கல்லூரி ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்து வர்கள், மாணவர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரி வித்தனர்.

    • மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்வேன்
    • விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பழனி பொறுப் பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்டவிழுப்புரம் மாவட்ட கலெக்டராக பழனி பொறுப் பேற்றுக் கொண்டார்.

    விழுப்புரம்,:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பழனி பொறுப் பேற்றுக் கொண்டார்.

    விழுப்புரம் மாவட்டத்தின் புதிய கலெக்டர் பழனி நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:  புதியதாக பொறுப்பேற்க உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், பொது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    அதனடிப்படையில், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், விளிம்பு நிலை மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்அ ப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவளம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சிவா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கானா நாட்டின் வர்த்தக ஆணையராக மேலூர் தொழில் அதிபர் அருண் பெரியசாமி பொறுப்பேற்றார்.
    • இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சூரக்குண்டுவைச் சேர்ந்த தொழிலதிபர் பெரியசாமி. இவரது மகன் தொழிலதிபர் அருண்ராஜா. இவர் இந்திய-ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சிலில் கானா நாட்டின் வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஐ.இ.டி.ஒ., என்.ஆர்.ஐ. கவுன்சில் அவார்ட்ஸ், ஜி.ஐ.ஒ. மாநாட்டில் இந்திய- கானா வர்த்தக ஆணையராக அருண்ராஜா பெரியசாமிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் டெல்லி சென்று கானா துணை தூதர் குவக் ஆஸ்மாக் செர்மேக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    கானாவில் உள்ள அக்ராவில் உலக தினை தினம் கொண்டாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரைவுப்படுத்த வர்த்தக ஆணையர் அருண் ராஜா பெரியசாமி மதுரையில் உள்ள மீனாட்சி கிரானைட் குழும இயக்குநர் மற்றும் வணிக மற்றும் கல்வி துறையின் பல்வேறு பங்குதாரர்கள், கானா வேளாண்மை துணை அமைச்சர் யாவ் பிரிம்பாங் அடோ மற்றும் கானாவுக்கான இந்திய உயர் ஆணையர் சுகந்த் ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெ ழுத்திட்டனர்.

    வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண் பெரியசாமி கூறியதாவது:-

    மதுரையில் இந்திய- கானா அலுவலக திறப்பு விழா மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த அலுவலகம் இரு நாட்டுக்கும் வர்த்தக பாலமாக இயங்கும். இதன் மூலம் தொழில் வளத்தை உயர்த்த பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் மாவட்ட ஆவின் தனி அதிகாரியாக கலெக்டர் பொறுப்பேற்றார்.
    • கடந்த ஜனவரி 4-ந்தேதி சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகம் ஸ்ரீவில்லி புத்தூரில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ஆவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் 17 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் 2021-22-ல் 2 மேலாளர்கள், 5 துணை மேலாளர்கள், 8 டிரைவர்கள் உள்பட 25 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில் இந்த பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட பால்வளத்துறை சார்பு ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு 2022ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்தார்.

    அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 4-ந்தேதி சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன் பின்னர் மார்ச் 16-ந்தேதி ஆவின் நிர்வாக குழு கலைக்கப்படுவதாக பால்வளத்துறை ஆணையர் அறிவித்தார். இந்த நிலையில் ஆவின் தனி அதிகாரியாக மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    • கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த குமார் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காரமடை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.

    காரமடை காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்ெபக்டராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செந்தில்குமாருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் இப்ராஹிம், விஜயராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • திருவளர்செல்வி ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
    • கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த திருவளர்செல்வி, ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த பாலமுரளி திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பாலமுரளி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    • கல்லூரியில் உதவிப் பேராசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.
    • 2007ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தாா். அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சாமிநாதன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா். இவா் நாமக்கல் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக் கல்லூரியில் முதுகலை கால்நடை அறிவியல் பட்ட மேற்படிப்பு பயின்று, அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.

    கடந்த 2001ல் தமிழக காவல் துறையில் நேரடி துணை காவல் கண்காணிப்பாளராக பணியில் சோ்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணியாற்றினாா். பின்னா் சென்னை அண்ணாநகா் உதவி ஆணையராகப் பணிபுரிந்து 2007ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா்.

    இதையடுத்து 2012ல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று கோவை மாநகர துணை ஆணையராக பணிபுரிந்தாா். பின்னா் மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா், சென்னை போக்குவரத்து துணை ஆணையா், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை, இதைத்தொடா்ந்து 2021 முதல் பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷர்மிளாவுக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
    • கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை,

    தமிழகம் முழுவதும் அண்மையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்ய தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வந்த ஷர்மிளா கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை மாவட்ட வருவாய் அலுவராக பதவி வகதித்து வந்த லீலா அலெக்ஸ் சென்னை வெளிவட்ட சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனிடையே கோவை மாவட்ட வருவாய் அலுவலராக ஷர்மிளா இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்று கொண்டார்.
    • அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பணி நிறைவு பெற்று சென்றார்.

    அதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அம்மாபேட்டை, பவானி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இன்று அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.

    அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, தனபால் உள்ளிட்ட போலீசார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

    • செல்வம் பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார்.
    • ரசேகர் குறிஞ்சிப்பாடி இன்ஸ் பெக்டராக மாறுதல் செய்யப் பட்டார்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்வம், துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார். அதனைத் தொடர்ந்து, சென்னை உளவுத்துறையில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வீரசேகர் குறிஞ்சிப்பாடி இன்ஸ் பெக்டராக மாறுதல் செய்யப் பட்டார். இவர் நேற்று குறிஞ்சிப் பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் வீரசேகருக்கு, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர் 

    • குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளாராக சரவணன் பொறுப் பேற்றுக்கொண்டார்.
    • இவர் இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளாராக சரவணன் பொறுப் பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குமாரபாளையம் நகராட்சி தலைவர் சஷ்டி விஜயகண்ணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதியதாக பொறுப்பேற்று கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு போலீசார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    கோவை,

    கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த மாதம் 7-ந் தேதி ரேஸ்கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலியாக இருந்த கோவை சரக டி.ஐ.ஜி. பணியிடத்திற்கு, திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    புதியதாக பொறுப்பேற்று கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    ×