என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பவுர்ணமி பூஜை"
- 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- நாளை வரை நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.
திருவேற்காடு:
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறைமணி காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் நேற்று முதல் 3 நாட்கள் நிறைமணி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கோவில் கருவறை மற்றும் முன்பகுதியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பந்தல் முழுவதும் தோரணமாக கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.
இந்த தோரணங்களை பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும்.
இயற்கை வளங்கள் பெருக வேண்டும். விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது.
சுமார் 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) வரை இந்த நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.
கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.
இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. நிறைமணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காட்சி அளித்தது.
பக்தர்கள் நிறைமணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- ஐப்பசி பவுர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
- அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வம், பாதிரிப்பூ ஆகியவற்றால் அர்ச்சிக்க வேண்டும்.
ஐப்பசி பவுர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
எந்த நிறத்தில் வேண்டுமானாலும் ஆடை சார்த்தலாம்.
அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வம், பாதிரிப்பூ ஆகியவற்றால் அர்ச்சிக்க வேண்டும்.
மிளகு சாதம், கரும்புச்சாறு இவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
இந்த பூஜை செய்வதன் மூலம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
ஐப்பசி பவுர்ணமியில் லட்சுமி விரதமும் மேற்கொள்வார்கள்.
கார்த்திகை மாத பவுர்ணமியன்று பூப்போட்ட ஆடையும், ருத்திராட்ச மாலையும் அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
வெண் பொங்கல், நெய் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
அனைத்து நலன்களையும் பெற்றுத் தரும் பூஜையாக இது நம்பப்படுகிறது.
- ஆவணி மாத பூஜையில் நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி வைடூரிய ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
- புரட்டாசி பவுர்ணமியில் உமாமகேஸ்வர விரதமும் மேற்கொள்வது சிறப்பானது.
ஆவணி மாத பூஜையில் நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி வைடூரிய ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
நாட்டுச் சர்க்கரையால் அபிஷேகம் செய்து, நெய் சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
இந்த பூஜை செய்வதன் மூலம் கடன் தொல்லைகள் தீர்ந்து நன்மை பெறலாம்.
ஆவணி பவுர்ணமியில் ரட்சா பந்தனமும் விசேஷமானது.
புரட்டாசி பவுர்ணமி அன்று அம்மனுக்கு நான்கு வண்ணங்களில் ஆடையும், பிரவாள ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்தல் வேண்டும்.
மல்லிகைப் பூவால் அர்ச்சிப்பது சிறப்பானது.
நைவேத்தியம் - இளநீர்.
இந்த பூஜையின் பலனாக சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.
புரட்டாசி பவுர்ணமியில் உமாமகேஸ்வர விரதமும் மேற்கொள்வது சிறப்பானது.
- ஆனி மாத பவுர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவிக்க வேண்டும்.
- ஆனி மாதப் பவுர்ணமியில் சுமங்கலிகள் சாவித்திரி விரதம் அனுஷ்டித்து மாங்கல்ய பலம் அடையலாம்.
வைகாசியில் விசாக நட்சத்திரத்துடன் கூடிய வைகாசி விசாகமும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.
ஆனி மாத பவுர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவிக்க வேண்டும்.
வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை செய்து முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம்.
ஆனி மாதப் பவுர்ணமியில் சுமங்கலிகள் சாவித்திரி விரதம் அனுஷ்டித்து மாங்கல்ய பலம் அடையலாம்.
ஆடி பவுர்ணமியில் சிவப்பும், மஞ்சளும் கலந்த ஆடை சார்த்தி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்தல் வேண்டும்.
பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அறுகம்புல்லாலும் அர்ச்சிப்பது சிறப்பானது.
அன்றைய தினம் அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது சிறப்பானதாகும்.
இந்த பூஜையால் புண்ணிய கதி கிட்டும்.
ஆடி மாதத்தில் வடநாட்டில் வட சாவித்திரி விரதம், கோபத்ம விரதம் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.
- இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும்.
- இப்பூஜையால் பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம்.
சித்திரை மாத பவுர்ணமி அன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும்.
சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பவுர்ணமி என்றால் மிகவும் விசேஷம்.
வைகாசி பவுர்ணமியில் அம்மனுக்கு நீலநிற ஆடையும், தங்க ஆபரணமும் அணிவித்து அலங்கரிக்க வேண்டும்.
சந்தனாபிஷேகம் செய்வது சிறப்பு.
எலுமிச்சை சாதம், சீரகமும், சர்க்கரையும் கலந்த சாதம், விளாம்பழம் இவற்றை அம்பிகைக்கு படைத்து வழிபட வேண்டும்.
இப்பூஜையால் பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம்.
- தையில் பூசத்தன்றும், மாசியில் மாசி மகத்தன்றும், பங்குனியில் உத்திரத்தன்றும் பொதுவாக பவுர்ணமி தினம் வரும்.
- பவுர்ணமி பூஜை பொதுவாக பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது.
பவுர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது.
திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.
சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்றும், வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும், ஆனியில் மூல நட்சத்திரத்திலும்,
ஆடியில் உத்திராட நட்சத்திரத்திலும், ஆவணியில் அவிட்ட நட்சத்திரத்திலும், புரட்டாசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும்,
ஐப்பசியில் அசுவினி நட்சத்திரத்திலும், கார்த்திகையில் கிருத்திகையிலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்திலும்,
தையில் பூசத்தன்றும், மாசியில் மாசி மகத்தன்றும், பங்குனியில் உத்திரத்தன்றும் பொதுவாக பவுர்ணமி தினம் வரும்.
ஓரிரு மாதங்களில் ஒருநாள் முன், பின்னாகவும் வருவதுண்டு.
- சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
- 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள். கடந்த 23-ந்தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பிரதோஷம் மற்றும் தை பவுர்ணமி, தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதி காலை 2 மணி முதல் சென்னை, கோவை, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு தொலை தூர ஊர்களில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
இதையடுத்து இன்று காலை 6.15 மணியளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தாணிப்பாறை வழுக்கல் அருவியில் ஆனந்த குளியலிட்டனர்.
இன்று தை பௌர்ணமி தைப்பூசத்தையொட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகம் முடிந் ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
- அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- நிகழ்ச்சியின்போது மழை வேண்டி 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
புளியங்குடி:
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு புரட்டாசி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பவுர்ணமி நாளில் சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா புரட்டாசி மாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழி வாற்றினார்.
தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், பஞ்சா மிர்தம் சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலா பிஷேகம் நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிர மணியர், வள்ளி, தெய்வா னை பதினெட்டா ம்படி கருப்பசாமி, பவானி, பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடை பெற்றது.
தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தன காப்பு, அலங்காரம் செய்ய ப்பட்டு பெரிய தீபா ரா தனை காண்பிக்கப்பட்டது.
இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் சிறப்பு அன்ன தானம் வழங்க ப்பட்டது. இதில் திரளான பக்த ர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- உலக மக்களின் நலன் வேண்டி ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு குபேர பூஜை, நவகிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை உள்ளது. இந்த சபை சார்பாக உலக மக்களின் நலன் வேண்டி ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு குபேர பூஜை, நவகிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதனை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
இந்த பூஜையில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பையா, தமிழரசி மற்றும் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர்.
இதற்கு முன்பாக கோவிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்கப்பட்டு பவுர்ணமி கோபூஜை நடந்தது. நிறைவாக யாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- மக்கள் நன்மைக்காக, மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
- திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடினர்.
புளியங்குடி:
புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் ஆனி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.
- முப்பெரும் தேவியர் அம்மனுக்கு 27வகை அபிஷேகம் நடந்தது.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் தை மாத பவுர்ணமி பூஜை சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.
இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா தைப்பூசம், தை மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
மாலை 7 மணிக்கு முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்பட 27வகை அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்று காளி, நாகக்காளி சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன், மாகாளியம்மன், பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- பழமை வாய்ந்த ஸ்ரீ துரோபதி அம்மன் கோவிலில் ஆருத்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இச்சிறப்பு பூஜை களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், களர்பதி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ துரோபதி அம்மன் கோவிலில் ஆருத்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு பாலாபிஷேகம், பன்னீரபிஷேகம், சந்தன பிஷேகம் தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்தும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பலித்தன. இச்சிறப்பு பூஜை களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, அதிமுக பிரமுகர் பூபதி, கோவில் தர்மகர்த்தா கோவிந்தராஜ், ஊர் மூப்பர் சீனிவாசன், ஊர் நாயக்கர் கணேசன், ஊர் கவுண்டர் அண்ணாமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி ஏற்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்